என்னைத் தந்தேன் வேரோடு 16(5)

அருகிலிருந்த வேரியின் tab பார்வையில் பட்டது,

ஃபோட்டோஸ் பார்க்கலாம்.

டேபை எடுத்து ஃபோட்டோஸ் பார்க்கத் தொடங்கினாள்.

சிறிது நேரம் சென்றது,

Fbபார்க்கலாமா?

Fbயில் நுழைந்தாள் வேரி தன் எஃப் பி அக்கவ்ண்டை லாக் அவுட் செய்யாமல் க்ளோஸ் செய்திருப்பாள் போல வேரியின் அக்கவ்ண்ட் ஓப்பனானது.

அதை லாக் அவ்ட் செய்துவிட்டு இவளதை ஓப்பன் செய்யலாம் என நினைத்து லாக் அவுட்டை தொட்டால் அது தவறுதலாக அருகிலிருந்த மெசேஜ் பாக்ஸில் பட்டு அது திறந்தது.

அச்சோ, வேர்ஸோட பெர்சனல் என நினைத்து இவள் அதை மூட நினைத்த நேரம் கண்ணில் பட்டது அந்த பெயர் வெரோனிகா சத்யா,

தன் பெயரில் தானே தனக்கு செய்திகள் அனுப்பிக் கொள்கிறாளா வேரி? ஏன்? எனி சைக்காலஜிகல் இஷ்யூஸ்? அதுதான் கவினுக்கும் வேரிக்கும் இடையில் நின்று உறுத்துகிறதோ?

இப்படி மிர்னுவுக்கு தோன்றிவிட இவள் அதைப் படித்துப் பார்ப்பது தங்கைக்கு உதவ கூடும் என வாசிக்க ஆரம்பித்தாள்.

வியனின் மொத்த குடும்பத்தையும் குற்றவாளியாக்கி, அந்த சதி மெசேஜ்கள் மிர்னாவிற்கு படிக்கக் கிடைத்தது.

வேரிக்கும் கவினுக்கும் இடையில் என்னவாகி இருக்கும் என  புரிந்தது மிர்னாவிற்கு.

கதவு மென்மையாய் தட்டப்படும் சத்தம்.

“அத்தான், ஒரு நிமிஷம்”

tabபை இருந்த இடத்தில் வைத்தாள்.

கதவை திறந்தாள்.

“அதெப்படி நான்தான்னு தெரியும்?” கவின் நின்றிருந்தான்.

“ம், உள்ள தூங்கிறது உங்க குல்ஸாச்சே கோ பமா அவட்ட சீனை போட்டாலும் தூங்கினதும் லுக்விட்டுட்டு போகலாம்னு பார்த்திருப்பீங்க,  மத்தபடி மிஹிர் இந்த நேரத்துல எதுக்காகவும் வரமட்டாங்க, உங்க தம்பினா மொபைல்ல கால் செய்து வெளிய வான்னு சொல்லுவாங்க” இவள் பதிலில்

சின்னதாய் புன்னகைத்தான்.

“அவ பால் குடிக்காம தூங்க வந்துட்டா”

“சோ மத்தபடி எதுக்காகவும் வரலைன்னு சொல்றீங்க, நம்பிட்டோம்”

அவனிடம் அதே புன்னகை.

றுநாள் காலை பயிற்சி முடிந்து மிர்னா வரும் போது வேரி பால்கனியில் நின்று தன் ஈர முடியை காய வைக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள் .

பார்வை படும் தூரத்தில் வரவேற்பறையில் கவின் தன் லேப்டாபில் தலை நுழைத்திருந்தான்.

“ஹலோ அத்தான் குட்மானிங், நீங்க இப்படி லேப்டாப்ப பார்க்கிற மாதிரிதான் வேர்ஸை லுக்விடணும்னு அவசியம் இல்ல, நேருக்கு நேராவே சைட் அடிக்கலாம்,   உங்களுக்கு கல்யாணம் ஆகிட்டு” இவள் சொல்லிக் கொண்டே வர,

“வாங்க வாயாடி மேடம், குட்மானிங், இன்னைக்கு முதல்  போணி உங்களுக்கு நான்தானா?”

“ம், எல்லாம் என் நேரம்,  நல்லெண்ணத்தோட உங்க ரைட்ஸை உங்களுக்கு சொல்லிக் கொடுத்தா, இப்படியா வாயாடிப் பட்டம் கட்டுவீங்க, போங்க உங்க குல்ஸ் கொஞ்ச நேரம் உங்களுக்கு கிடையாது”

என்றபடி தங்கையை தோளோடு பிடித்து தள்ளிக் கொண்டு தன் அறைக்குள் நுழைந்தாள்.

கதவைப் பூட்டி உட் தாட்பாழிட்டாள்.

“இது என்ன விளையாட்டு மிர்னு”

“ம், ஒளிஞ்சு பிடிச்சு, அந்த மெயிலை நீ ஒளிச்சு வச்சுருக்க, அதை நான் பிடிச்சு வச்சிருக்கேன்”

“எ…எந்த மெயில்?”

“உன் அக்கா நான்”

“அது,உனக்கு இப்ப வேண்டாம் மிர்னு,  ஒலிம்பிக் முடியட்டும், ப்ளீஸ்” வேரி இன்னுமே தடுமாற்றமாய் கெஞ்ச,

“அந்த மெயிலால ப்ரச்சனை எனக்கு இல்லை, உனக்குதான் எனக்கென்ன? நேத்தே அதைப் பார்துட்டேன், காலைல எதுலயாவது சொதப்புனனான்னு மிஹிர்ட்ட கேளு,

இன்னைக்கு ப்ராக்டீஸ்ல என் ஹைட் 2.4 ஃபீட், ஒலிம்பிக்ல இதை செய்தேன்னா நியூ வேர்ல்ட் ரெக்கார்ட், என்னோட ரெக்கார்டை நானே 6த் டைம் ப்ரேக் பண்ணுவேன்,

ஆனா நீயும் அத்தானும் எப்படி உட்கார்ந்துகிட்டு இருக்கீங்க? அதனால எனக்குன்னு பார்த்துட்டு நீ  இந்த நேரத்துல கஷ்டபட தேவையில்ல”

அடுத்த பக்கம்