என்னைத் தந்தேன் வேரோடு 16(4)

“அதெல்லாம் போதாது, நீ ரொம்ப டயர்டா இருக்க, வா வா வந்து படு”

“அவ இவ்ளவு கூப்டுறால்ல, போ, தூக்கம் வரலைனா போய் பேசிகிட்டாவது இரு, எத்தனை நாள் கழிச்சு பார்க்கிற, உன் சிஸ்டர்தான?” கவின் சொல்ல மறு வார்த்தை இன்றி மிர்னாவுடன் நடந்தாள் வேரி.

தங்களுக்கான அறைக்குள் தங்கையுடன் தனிமை கிடைத்ததும் குடைந்து எடுத்துவிட்டாள் மிர்னா.

“எனக்கு நல்லா தெரியும் ,எது எப்படி ஆனாலும் அத்தான் உன்னை தனியா விடுற ஆளே கிடையாது, எதோ சரி இல்லை”

“என்ன நீ?”

“முதல்ல நீ உன் சொத்தை எனக்காக விக்கனும்னு சொன்னப்பவே, உனக்கு கவின் மேல முழு நம்பிக்கை இல்லாம தான் அதை அப்பவே வித்றனும்னு நினைக்கிறியோன்னு தோணிச்சு

“அதான் உங்க ரெண்டு பேருக்கும் அண்டர்ஸ்டாண்டிங் நல்லா வர வரை நான் அத்தான்ட்ட கூட பேசலை,  பட் இப்ப வந்திருக்கப்ப நல்லாதான இருந்தீங்க, அதுக்குள்ள என்ன ஆச்சு?” மிர்னா திறந்த மனமாய் விசாரிக்க,

ஐயோ, அவ்ளவு கரெக்டா அப்ப கண்டுபிடுச்சிருக்கியே இப்ப என்னல்லாம் செய்வியோ, டென்ஷனானாள் வேரி.

“அது ஒரு”

“நீ கன்சீவா இருக்கிறப்ப உன்னை இங்க கூட்டிட்டு வந்திருக்கணும்னு அவசியமே கிடையாது, ஸ்டில் அத்தான் கூட்டிட்டு வந்து இப்படி என்ட்ட தனியாவிட்டுட்டு போனாங்கன்னா என்ன அர்த்தம்?”

வேரியே இப்படி ஆராயவில்லையே, முதலில் அம்மாவுடன் விட்டுப் போனான் இப்பொழுது மிர்னாவுடன், எதற்காம்?

“நிஜமாவே இதுக்கெல்லாம் காரணம் இருக்கும்னு எனக்கு தோணல” வேரி சொல்ல,

“போ, என்ன குடும்பம் நடத்துன நீ? வியனை நான் பார்த்துருக்கேன், சும்மால்லாம் எங்காவது விட்டுட்டு போயிரமாட்டாங்க” மிர்னாவின் வாதத்தில்

வேரிக்கு கேட்க சந்தோஷமாக இருந்தது. மிர்னுவுக்கு தன்னவன் மேல்தான் என்ன ஒரு புரிதல்.

வேரி மனம் வாடியது இப்பொழுது

அந்த புரிதல் தனக்கு ஏன் இல்லாமல் போனது?

இத்தனைக்கும் வியன் மிர்னாவை திருமணம் செய்ய விரும்புவதாக இன்னும் இவளிடம் வெளிப்படையாக சொல்லக்கூட இல்லை,

கவினோ இவளை மணம் முடித்து அவன் காதலை குழந்தையாய் இவள் வயிற்றில் சுமக்கிறாள்.

“உனக்கு என் மேல எதாவது கோபமா வேர்ஸ்? என் கூட இருந்தா உனக்கு அது தெளிவாயிடும்ங்கிற மாதிரி எதாவது?

அன்னைக்கு கூட நீ ஃபோன்ல என்ட்ட சம்பந்தமே இல்லாம கோபப்பட்ட, நீலாம்மா இங்க வந்தது கவின் வியன் யாருக்கும் தெரியாது,  இருந்தும் உனக்கு மட்டும் எப்படி தெரிஞ்சிது, அதுக்காக ஏன் கோபம்?”

வேரிக்கு ஏதோ புரிவது போலவும் இருந்தது. புரியாமலும் குழப்பியது.

“ஹேய் பிறந்தப்பதான் நான் உனக்கு ஜூனியர், பட் இப்ப நான் சீனியர்னு நீ ஃப்ரூவ் செய்ற பாரு,

ஹஸ்பண்ட் அண்ட் வைஃப்க்கு இடையில என்னனு யாரும் கேட்க கூடாது,

அதோட நீயும் நானும் ஆசைப்பட்டால் கூட இன்னும் கொஞ்ச நாள் பிறகு இப்படி ரெண்டு பேருமா தனியா தங்கவே முடியாது,

சோ நல்லா என்ஜாய் பண்ணுவோம், உங்க அத்தான் எங்கயும் ஓடிட மாட்டார், என் கூட தான் கடைசி வரை இருப்பார், இப்ப எனக்கு தூக்கம் வருது,அங்க கனவுல கவின் எனக்கு வெயிட்டிங்” திரும்பிப் படுத்தாள் வேரி.

வராது என்று எண்ணிய தூக்கம் பயண அலுப்பு காரணமாக உடனே அவளை தழுவிக் கொண்டது.

தூங்கும் தங்கையை சில நிமிடங்கள் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் மிர்னா.

மணி 8 என்றது கடிகாரம்.

இது மிர்னா தூங்கும் நேரம் இல்லையே,

எழுந்து கதவை திறந்து பார்த்தாள்.

ஆண்கள் மூவரும் ஹாலில் அமர்ந்து எதோ பேசி சிரித்துக் கொண்டிருந்தனர்.

மூவரும் அவளுக்கு ஒவ்வொரு வகையில் நெருக்கமானவர்கள் என்றாலும் ஏனோ அவர்களுக்கு மத்தியில் இவள் மட்டும் ஒற்றை பெண்ணாக உட்கார சற்று வித்யாசமாக தோன்ற

வெளியே செல்லாமலே அறைக் கதவை மூடிக் கொண்டாள்.

என்ன செய்யலாம்?

அடுத்த பக்கம்