என்னைத் தந்தேன் வேரோடு 16(3)

து இரண்டு படுக்கை அறை கொண்ட ஃப்ளாட்.

ஒரு அறை கவின் தம்பதிக்கும் மற்றொன்று மிர்னாவிற்கும் கொடுத்துவிட்டு ஹாலை  வியனும் மிஹிரும் பகிர்ந்து கொள்ளலாம் என திட்டம்.

ஆனால் கவினோ பெண்கள் ஒரு அறையிலும் ஆண்கள் மறு அறையிலும் தங்கலாம் என்று சொல்லிவிட்டான்.

கவினின் கோபத்தின் அளவு புரிகின்றது வேரிக்கு. தாய்வீட்டிலும் இவளை விட்டு விலகிப் போனான். விசா ஏற்பாடு செய்ய என்றாலும் இவன் தான் அதற்கு போகவேண்டும் என்று என்ன அவசியம்?

இவள் தவறுக்கு இந்த தண்டனை வேண்டும்தான்.

கவின் இதைத்தான் விரும்புகிறான் என்றால் முறுமுறுக்காமல் இவள் இந்த துன்பத்தை  ஏற்றுக்கொள்ள போகிறாள்.

ஆனால் இந்த நாட்களில் இவள் உடல் உபாதைகள் மிர்னாவிற்கு தெரியாமல் மறைப்பதில் இவளுக்கு சாமர்த்தியம் தேவை.

அதோடு இப்பொழுது அந்த மெயிலைப் பற்றி கவினிடம் பேச தேவையான தனிமைக்கு என்ன செய்வதாம்?

இரவு உணவு முடிந்தபின் கவினிடம் வந்து பரிதாப முகத்தோடு நின்றாள் வேரி. “எனக்கு உங்கட்ட கொஞ்சம் பேசணும்”

அத்தனை சிறிய வீட்டிற்குள் ஒருவருக்கும் தெரியாமல் கவினிடம் இதை எப்படி கேட்க,

ஆக அருகில் மிர்னா இருக்கும் போதுதான் இப்படி ஒரு கோரிக்கையை வைத்தாள் வேரி.

“இதுக்குதான் அத்தான் சொல்றேன், நீங்க அவ கூட இருங்க, நாங்க சமாளிச்சுபோம்” மிர்னா சொல்ல

“ஹேய், அதெல்லாம் கிடையாது,என்ட்ட இருந்து தப்பிசுகிடல்லாம்னு நினைக்காதே, நான் உன் கூடதான்” வேரி எதையோ சொல்லி சமாளித்து வைக்க,

ஒரு அறைக்குள் மனைவியை அழைத்துக் கொண்டு வந்தான் கவின்.

“கொஞ்சம் வெயிட் செய்திருந்தன்னா யாருக்கும் வித்யாசமா தோணாம நானே வந்திருப்பேன், சரி சொல்லு, அந்த மெயில் பத்திதான?”

“ம்”அந்த மெயிலை ஓபன் செய்து அவனிடம் படிக்க கொடுத்தாள் தன் tabல்,

சற்று நேரம் அமைதியாய் அதை பார்த்திருந்த கவின்,

“இதுல ஒரு காபி எனக்கு வேணுமே, எடுத்துக்கலாமா?”

“ப்ளீஸ்பா இப்படில்லாம் தயவு செய்து கேட்காதீங்க, உங்களை என்னால, சாரி நான் தப்பா நினச்சதுக்கு சாரி”

அழுகை வந்தது இவளுக்கு.

“தயவு செய்து அழாத, அது இன்னும் அதிகமா என் மனசை கஷ்டபடுத்துமே தவிர”

அவன் பேச்சை பாதியில் நிறுத்த இவள் அழுகையை முழுதாக நிறுத்திவிட்டாள்.

இப்ப தானே பொறுமையா காத்துட்டு இருப்பேன்னு மனசுக்குள்ள உறுதி எடுத்துட்டு வந்தேன்,

“எனக்கு ஒன்டே டைம் கொடு இந்த மெயிலை பத்தி விசாரிச்சுட்டு என்ன செய்யலாம்னு சொல்றேன், உன்ட்ட சொல்லாம எதையும் செய்ய மாட்டேன்”

“தேங்க்ஸ்”

“கவனாமா இருமா”

“உங்க கூடதான இருக்கேன்,அப்புறம் என்ன?”

“ம், சரி தான்”

“நீ சீக்கிரம் படு, ஜெட் லாக் வேற இருக்கும்” கவினுடன் பேசியபின் ஹாலில் வந்து அமர்ந்திருந்த வேரியை அழைத்தாள் மிர்னா.

“ம், அப்டில்லாம் இல்ல, பகல் முழுக்க தூங்கியிருக்கேனே” வேரிக்கு கவினின் முகத்தையாவது  பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும் போல் இருக்கிறது.

அவனின்றி தூக்கம் வரும் என்று தோன்றவில்லை.

அடுத்த பக்கம்