என்னைத் தந்தேன் வேரோடு 16(2)

“கரெக்டா சொன்னீங்க மாப்ள” ஹைஃபை கொடுத்தனர் வியனும் மாலினியும்,

தலை சுற்றிவிட்டது வேரிக்கு,

“ரொம்ப பேசுறீங்க, இருக்கட்டும் இருக்கட்டும் இதுக்கெல்லாம் சேர்த்து அங்க மிர்னுட்ட போட்டு கொடுக்கேன்”

“அஹம் அஹம் துணிந்தவனுக்குத்தான் தூக்கு மேடை, காலில் விழ தெரிந்தவனுக்கோ முக்காலம் பொற்காலம்” கண்சிமிட்டினான் வியன்.

ஓங்கி ஒன்று வைத்தான் அவன் முதுகில் கவின் ”போடா, போய் முதல்ல கல்யாணம் செய்ய வழியப் பாரு, அப்புறமா…”

“கால்ல விழ வழி பாக்கலாம்னு சொல்றியோ, அதுவும் கரெக்டுதான், பைத வே, எப்படி எஃபெக்டிவா கால்ல விழுறதுன்னு கொஞ்சம் டிப்ஸ் கொடு, யூஸ்ஃபுல்லா இருக்கும்”

“விழுந்து விழுந்து எழும்ப அவர்லாம் ஒன்னும் உங்கள மாதிரி கிடையாது” வரிந்து கட்டிகொண்டு வந்தாள் வேரி,

“ஓ,விழுந்தவன் எழுந்தாதான திருப்பி திருப்பி விழ வேண்டி இருக்கும், அது எனக்கு தோனவே இல்லையே, பாய்ன்ட் நோட்டட், பிர்லியண்ட் மை ப்ரதர், சூப்ப்ர் டெக்னிக், ஐ’ம் ப்ரவ்ட் ஆஃப் யூ”

“போங்க, அவரைப் பத்தி இனி ஏதாவது சொன்னீங்க” வேரி சிணுங்கி கொண்டு இருக்கும் போதே,

“ஹனி டால், மை குட்டி பப்பு, எப்ப வந்தீங்க ஊர்ல இருந்து? ஹையோ, எவ்ளவு க்யூட்டாகிட்டீங்க” கொஞ்சியபடி வந்து மருமகளை அணைத்தார் நீலா.

தம்பதி சகிதமாக வந்து சேர்ந்திருந்தனர் அவர்கள் தங்கள் ரியோ அலுவலகத்திலிருந்து.

“ஹை அத்தை “ குழந்தையாக குதுகலித்தது வேரிதான்.

கூடவே கவின் இவள் தவறை யாரிடமும் சொல்லவில்லை என புரிகின்றது வேரிக்கு,

சிலுவையில் நின்றாலும் என் நலனைத்தான் நினைப்பாயோ?

வியனுக்கு அவன் அம்மாவின் வருகை வேறுவிதமாய் உற்சாகம் தந்தது.

இம்முறை தன் அன்னையைக் கண்டு வியன் உணர்ச்சிவசப்படவெல்லாம் இல்லை. இன்னும் கொஞ்ச நாள், இப்ப போயிடும்.

அடுத்து பெரியவர்களை அங்கு தங்க செய்துவிட்டு, ஒலிம்பிக் வில்லேஜை நோக்கி சென்றனர் இளையவர் மூவரும்.

மிர்னாவிற்கு அத்தனை பேரும் குறிப்பாக அவள் பேற்றோர் ரியோ வந்திருப்பது தெரியாது.

கல்யாணதிட்டத்தை கண்டுபிடித்து விடுவாள் என்று காரணம் சொல்லிக் கொண்டாலும், போட்டி இத்தனை அருகில் இருக்க மனதை அசைக்கும் எந்த காரியங்களும் அவளுக்கு தெரிய  வேண்டாம் என வியன் உட்பட அனைவரும் நினைத்ததே காரணம்.

வியன் இதற்கு மேலும் திருமணத்தை தள்ளிப் போட தயாராயில்லை.

போட்டி முடிந்ததும் திருமணத்தை நடத்திவிட வேண்டும் என்று ஆசைப் பட்டான். மிர்னாவிற்கும் அத்தகைய ஆசை இருக்கும் என்பது அவன் எண்ணம். ஆனால் அதைப் பற்றி அவள் மனதில் இப்பொழுதுக்கு ஒரு சிறு நினைவை கூட கொண்டு வர அவன் விரும்பவில்லை.

ஒலிம்பிக் அவளைப் பொறுத்தவரை ஒரு யுத்தம். அதை அவள் முடிக்கட்டும்.

அதன் பின் முழு வாழ்நாளும் இருக்கிறதே இருவருக்கும். ஆக ஒலிம்பிக் முடியவும் திருமணம் பற்றி மிர்னாவிடம் பேசப் போகிறான். அவள் சம்மதித்தால் உடனே திருமணம்.

இல்லை எனில் அவள் விரும்பும் நாளில் அது நடக்கும் என்று திட்டமிட்டு இருந்தான். ஆனால் அவன் புரிந்து வைத்திருந்த வரை தம்பதி சகிதமாகத்தான் இனி இங்கிருந்து அவர்கள் கிளம்புவார்கள்.

எது எப்படி ஆயினும் மிர்னாவைப் பொறுத்தவரை மிக முக்கியமான இந்த ஒலிம்பிக் நிகழ்விற்கு அவள் பெற்றோர் வரவேண்டும் என்ற எண்ணம் வியன் குடும்பத்தில் அனைவருக்கும் இருந்ததால் அனைவரையும் இங்கு கூட்டிச் சேர்த்தாயிற்று.

வேரிக்கும் இது தெரியுமாதலால் அவளும் எதையும் மிர்னாவிடம் பேசப்போவதில்லை என்ற முடிவுடன் தான் மிர்னாவை காணச் சென்றாள்.

“ஏய்ய்ய்ய்” க்யூட்டா ஒரு குட்டி கங்காரு வந்துருக்குது” வேரியைப் பார்த்தவுடன் துள்ளிக் குதித்தபடி வந்து அணைத்துக் கொண்டாள் மிர்னா.

“செம அழகா இருக்க வேர்ஸ்“ தங்கையின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள் . “பார்த்தாலே கொஞ்சம்ணும் போல இருக்கு, நீயே பாப்பா மாதிரிதான் இருக்க, பஞ்சு பாப்பா”

“போ நீ, அழகா இருக்கன்னு சொன்னதால அடிக்காம விடுறேன், என்னைப் பார்த்து கங்காருன்னு சொல்லிட்ட, உன் வியன் கூட சேர்ந்துகிட்டு நீயும் என்னை திட்டம் போட்டு கலாய்க்கிறியா?”

உன் வியனா? வியனைப் பார்த்தாள் மிர்னா. அதில் காதல் வாசம். நீயும் அப்டிதான் சொன்னியா பி கே?

“அண்ணியர் திலகமே இப்படி அடிப்படை அஸ்திவாரத்திலேயே சென்று ஆப்பு அடிக்க கூடாது, பாவம் வியன், சிறியவன், இடப்பக்கம் இருப்பது உங்கள் அறை தாங்கள் சென்று சற்று நேரம் ஓய்வெடுங்கள்” வியன் விளையட்டு போல் கவனப் படுத்தினான்,

வேரிக்கு தான் உளறி இருப்பது இப்போதுதான் புரிகிறது.

“வாங்கத்தான் வாங்க, இப்படி நீங்க என் கையில் வந்து மாட்ற நாளுக்காகத்தான் நான் இத்தனை நாளா வெயிட் செய்துஃபையிங், உங்களை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனிச்சுஃபையிங், என் சமையல்ல இருந்து நீங்க இந்த தடவை  நோ எஸ்கேப்ப்பிங்”

மிர்னா கவினை வரவேற்க,

முகபாவத்தில் விழி மொழியில் மன்னிப்பு வேண்டினாள் வேரி தன் கொழுந்தனிடம்,

‘இதுக்குல்லாம் போய், போங்கண்ணி’ என்றான் அவனும் மொழி இன்றி.

அடுத்த பக்கம்