என்னைத் தந்தேன் வேரோடு 16(17)

ஒரு இன்ஸ்டிங்ட்ல நான் பின்னால பார்கிறப்பதான் மின்னி உன்னை பின்னால இருந்து தள்ளுனது, கூட்டத்துல எனக்கு உன்னை தள்ளுன அவ கை மட்டும்தான் தெரிஞ்சிது, அதுல இருந்த எங்க எங்கேஜ்மென்ட் ரிங்,

முதல் வேலை உன்னை காப்பாத்தணும் அப்புறம் அவள கவனிச்சுகிடலாம்னு ,

அதுக்கு பிறகுதான் ஏதென்ஸ்ல இருந்து நடந்த எல்லாத்துக்கும் இவள்தான் காரணம்னு தெரிஞ்சிது,

நாம ட்ரெக்கிங் போகபோறது அவளுக்கு நான் சொல்லி முன்னமே தெரியும், அவ ப்ளான் செய்து வந்து உன் ரோப்பை கட் செய்துட்டு, அதுக்கு பிறகுதான் ஏதென்ஸ் வந்த மாதிரி வந்து நம்மை ஏமாத்தி இருக்கா,

பார்ட்டிக்கு அவ வந்ததே அங்க வச்சு உனக்கு எதையாவது பாய்சன்டா தரணும்னுதான், உனக்காக வியன் ஜூஸ் தேடுறதை கவனிச்சுட்டு அவர்கைல பாய்சன்ட் ஜூஸ் கிடைக்கிறமாதிரி செய்திருக்கா,

மாட்டிக்காம உன்னை கொன்னுட்டு, அப்புறம் வந்து என் கூட மனசாட்சி உறுத்தாம குடும்பம் நடத்தலாம்னு நினைச்சிருக்கா பாரு,

விஷயம் தெரிஞ்சப்ப என்னால தாங்கவே முடியல.

“அவட்ட காரணம் கேட்டா, நான் உன்னை மிர் னு கூப்டுவேன், நீ அவள மிர் னு கூப்டுற, என்னைய நீ முத நாள்ல இருந்து நீ போன்னு பேசல, ஆனா அவளை அப்படித்தான் பேசுற,

எப்ப ஃபோன் செய்தாலும் அவ கூட ட்ரெய்னிங்ல இருக்கேன்னு சொல்றன்னு லூசு மாதிரி பேசுகிட்டே போறா,

இத்தனைக்கும் வியனுக்கும் உனக்கும் கல்யாணம் நடக்கப் போகுதுன்னு அவளுக்கு நல்லாவே தெரியும்.

.அப்பவே வார்ன் செய்துட்டு எங்கேஜ்மென்டை ப்ரேக் செய்துட்டேன், எல்லா எவிடன்ஸும் என்ட்ட இருக்குது மிர்னாவுக்கு எப்ப என்ன ஆனாலும் நீதான் முதல்ல அரெஸ்டாவன்னு சொல்லியிருந்தேன்,

போலீஸ்ட்ட போயிருவேன்னு சொன்னதும் அடங்கிட்டா,

உங்களைவிட்டு விலகியே இருக்கனும்னு சொல்லி இருந்தேன், போலீஸ் ஜெயில்னதும் ரொம்ப மிரண்டு போய் அழுதா, அதான் கொஞ்சம் இரக்கபட்டு விஷயத்தை வெளிய சொல்லாமவிட்டேன்,

ஆனா அது இவ்வளவு ப்ரச்சனையாகும்னு நான் எதிர்பார்க்கல,

அவ கல்யாணம் நின்னு போக நீதான் காரணம்னு அவளுக்கு பயங்கரமா ஆத்திரமாகி இருக்குது, அப்படி இருக்கப்ப நீ மட்டும் கல்யாணம் செய்றதான்னு ஒரு குரோதம், குறுக்குப்புத்தி,

அந்த டைம்தான் வியன் பெர்த் டேக்காக நீங்க திருநெல்வேலி போனது,

அப்ப நான் டில்லி போயிருக்கேன்னதும், நீங்க என் கூட இல்லைனு யோசிச்சு அதான் எனக்கு தெரியாம உங்களை அட்டாக் செய்ய ஆப்ட் டைம்னு உங்களை ஒரு டிடெக்டிவ் ஏஜென்சி மூலமா ட்ராக் செய்திருக்கா,

ஆக்சிடெண்டல் டெத் மாதிரி திருநெல்வேலில எதாவது ஏற்பாடு செய்யலாமான்னு யோசிச்சிருக்கா, அந்த டிடெக்டிவ் ஏஜென்சில கல்யாண விஷயம்னு சொல்லி இருப்பா போல,

அதனால அவங்க ஃபமிலி ஆங்கிள்ள நிறைய துருவி இருக்காங்க, அந்த லேண்ட் இஷ்யூ தெரிய வந்திருக்கு,

ஏற்கனவே ஓரளவு உங்க ஃபமிலி விஷயங்கள் உன் கூட அவ தங்கி இருக்கிறப்ப உன் மூலமாவே அவளுக்கு தெரியும்,

அதனால வேரி மூலமா வியன் குடும்பத்தை தெருவுக்கு கொண்டு வந்துட்டா, நெட் நெட் வேரிக்காக, வியனுக்காகன்னு எல்லா வகையிலும் கஷ்டபடப் போறது நீயா தானே இருக்கும் அப்படின்னு நினைச்சிருக்கா,

மர்டர் செய்தா எப்படியும் என்னால ப்ரிசனுக்கு போயிருவோம் அதுக்கு இது நல்ல வழின்னு அவளுக்கு தோணிட்டு,

அதான் வேரிக்கு அந்த  மெசேஜஸ், மின்னி உன் கூட FB ல ஃப்ரெண்ட்னு இருந்ததால வேரி ஐடிய ஈசியா கண்டு பிடிச்சி இப்படி செய்திருக்கா,

அந்த விஷயம் அவ எதிர்பார்த்த மாதிரி வெடிக்கல, இதுல நீ ஒலிம்பிக் வேற வின் செய்றதான்னு இன்னைக்கு இப்படி செய்திருக்கா,

மர்டர் செய்தாதான மாட்டிக்க வேண்டி இருக்கும்னு அவ கோபத்தை இப்படி காமிச்சிருக்கா போல,

இன்னைக்கு உன் ஈவென்டுக்கு முன்னால அவள க்ரவ்ட்ல பார்த்த மாதிரி இருந்துது, அப்பவே அவளை கால் செய்து வார்ன் செய்தேன்,

நான் உங்களதான் பார்க்க வந்தேன், உங்கள பார்க்காம இருக்க முடியலைனு அழுதுட்டு, இங்க உன்னை டிஸ்டர்ப் செய்திருக்கா, பக்கா கிரிமினல்,

எனக்கு டவ்ட் ஆகி அவளை தேடிப் போனேன், மாட்டிகிட்டா, இதுக்கு மேலயும் போலீசுக்கு போகாம இருந்தால் சரி இல்லைனு எனக்குப் படுது,

ஐம் வெரி சாரி, ஒருவகையில இது எல்லாத்துக்கும் நானும் காரணமாயிட்டேன்,

அதுவும் மின்னிதான் இவ்ளவும் செய்றான்னு தெரிஞ்சும் அவ மேல இரக்கப்பட்டு உங்கட்ட சொல்லாம இருந்தது உங்களுக்கு நான் செய்த நம்பிக்கை துரோகம்,

அடுத்த பக்கம்