என்னைத் தந்தேன் வேரோடு 16(18)

அதுக்கு லீகலி எனக்கு என்ன பனிஷ்மென்ட் உண்டோ அதை நான் அனுபவிக்க போறேன், அஸ் அ ஃப்ரெண்ட் நான் உன்னையும், நீ என் மேல வச்சிருந்த நம்பிக்கையையும் ஒருவகையில் ஏமாத்திட்டேன்னு இப்ப தோணுது,

நீ எனக்கு என்ன பனிஷ்மென்ட் குடுத்தாலும்  ஏத்துகிறேன்”

மிஹிரைப் பொறுத்தவரை அவன் முடிவெடுத்துவிட்டான் என்பது மிர்னாவிற்கு தெளிவாக புரிகின்றது.

“நான் மின்னிய பார்க்கனும்” மிர்னா சொல்ல,

ப்ரைவேட் செக்யூரிட்டி குழு ஒரு வாகனத்தில் பின் தொடர கவினும் வியனும் மிர்னாவும் ஒரு காரில்

செல்லும் வழியிலேயே வியன் சொன்னான்,

‘அது ஒரு வாட்டர் கன் மாதிரிதான், டாய்ங்க்றதால ஈசியா வென்யூக்குள்ள கொண்டு வந்துட்டாங்க போல,

மின்மினி அப்பா கெமிகல்ஸ் பிஸினஸ்தான, அவங்களோட ஆர்&டி செக்க்ஷன் ஆக்சிடெண்டலி ஒரு கெமிகல் டெவலப் செய்துருப்பாங்க போல, இன்விசிபிள் லிக்யூட்,

காத்துபட்டு ஃப்யூ செகண்ட்ஸ்ல எவாப்ரேட்டும் ஆகிடும், உன் அட்டென்ஷன் ஸ்லிப் ஆகும்ன்ற மாதிரி, ஏதோ சின்னப்பிள்ளத்தனமா செய்துட்டாங்க”

“ஓ”

“என்னமா?”

“எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு வியன், மிஹிரும் மின்னியும் பிரிய நான்தான் எதோ ஒருவகையில காரணமாயிட்டேன்”

“அப்படியெல்லாம் நினைக்காத மினு, எதையும் பார்க்கிறவிதமும்  ஹன்டில் பண்றதும் அவங்கவங்க சாய்ஸ், இதுக்கு அடுத்தவங்க எப்படி பொறுப்பாக முடியும்?”

“இல்ல, எனக்கு உங்க மேல எந்த அவநம்பிக்கையும் இல்லாதப்பவே ஃபில் மேல எரிச்சல் வந்துச்சுல்ல”

“அதை நீ எவ்வளவு அழகா ஹேண்டில் செய்த”

“பட், அப்பவே இதே மாதிரிதான் மின்னிக்கு இருக்கும்னு நான் யோசிச்சிருகணுமே, அடுத்து மின்னி நம்ம ஈவன்ட்ஸுக்கு வராதப்ப நான் அலெர்ட் ஆகியிருக்கணும்” இவள் புலம்ப,

அதற்குள் இவர்கள் வர வேண்டிய ஹோட்டல் வந்திருக்க

இவளுக்காக காத்திருந்தது மின்மினியின் அப்பா.

தொடரும்…

One comment

Leave a Reply