என்னைத் தந்தேன் வேரோடு 16(16)

“மின்னிய ஹீல் ப்ண்ணுங்க, ப்ளீஸ், அப்படியே இங்க சுத்திகிட்டு இருந்தாரே உங்க சிஷ்யர் ஒருத்தர் அவரை நம்ம பக்கமா பார்சல் பண்ணுங்க”

வானத்தைப் பார்த்து மானசீகமாக அப்ளிகேஷன் அனுப்பிக் கொண்டிருந்தவள் அரங்கத்தின் ரிதமில்லாத பெருத்த கரகோஷம் மற்றும் இயல்பிற்கு வித்யாசமான சத்தத்தில் வானம் பார்த்திருந்த தலையை இறக்க,

எதிரிலிருந்த பெரிய டி வி திரை கண்ணில் பட்டது, அதில் இவள், இவள் முன் ஒரு கால் முழந்தாளிட்டு வியன்,

சட்டென குனிந்து தன் முன் பார்த்தாள்.

“I love you Mirnu, I love you as always, Will you marry me?” அவன் வார்த்தைகளில்

இவளது இடக்கை அதுவாய் அவள் வாய் மேல் அமர

ஒரு கணம் சந்தோஷப் பிளம்பாய் அவள், மறுகணம் வெட்கம் வெட்கம்,

எந்திரிடா பி.கே, மானத்தை வாங்குறியே,

வியன் இன்னும் அப்படியே,

“எந்திரிங்க, ப்ளீஸ், எல்லாரும் பார்க்காங்க”

வெட்கமும் ஆசையுமாய் அவள் குரல்,

“பதில் சொல்லு,எந்திரிக்கிறேன்”

“ஐ, வில்”

எழுந்தவன் இவள் கரம் பிடித்து அதில் ஒரு மோதிரத்தை அணிவித்தான்.

“கல்யாணத்தை எப்ப வச்சுகிடலாம், இன்னைக்கு ஈவ்னிங்? இல்லைனா நாளைக்கு?” சாக்லேட் வேணுமா, இல்ல ஐஸ்க்ரீமா என்பது போல் சாதரணமாய் வியன் கேட்க

“ஈவ்னிங் வர இன்னும் 3 அவர்ஸாவது இருக்குமே, ஏன் அவ்ளவு போஸ்ட்போன் செய்யணும்? வாரினாள் மிர்னா. என்ட்டயேவா??

“இல்ல, இங்க மெடல் செர்மனி எல்லாம் முடிஞ்சு கிளம்ப அந்த டைம் போயிடும், அதான்” அவன் பதில்.

வாய் நீண்டு போச்சு, ஹான்,

“இப்படி ஒரு இடஞ்சலா? அதுக்கு, நீங்க பாஸ்டர் யாரையாவது கூட்டிட்டு வந்திருந்தீங்கன்னா, இப்பவே இங்கயே கல்யாணம் செய்திருக்கலாமே” இது எப்டி இருக்கு?

“அதையும் தான் ட்ரை பண்ணேன், உங்கள பார்த்து எல்லோரும் ஒலிம்பிக்ல கல்யாணம் செய்ய ட்ரை பண்ணாங்கன்னா நிலமைய சமாளிக்க முடியாதுன்னு சொல்லி ஒத்துக்க மாட்டேன்டாங்க, ப்ரபோஸ் செய்ய பெர்மிஷன் வாங்கவே பெரிய கஷ்டமாகிபோச்சு”

அப்பொழுதுதான் அவன் கிண்டலாக இல்லாமல் உண்மையாகவே சொல்லிக்கொண்டு இருக்கிறான் எனபதே அவளுக்கு புரிந்தது.

“பால்கொழுக்கட்டை பி.கே, இப்ப புயல் காத்து பி.கே வா ஆகி போச்சே

“என்ன முழி இது, பால்கொழுக்கட்டை பி.கே, புயல் காத்து பி.கே வா ஆகிபோச்சேன்னு யோசிக்றியோ, இதுக்கே இப்டினா, இன்னும் எவ்ளவு இருக்குது?” கண்சிமிட்டினான்,

திக்கென்றது பெண் உளம், புயலாய் ஒரு ஆனந்த மாருதம். சரி இல்லை இது என்றது அவள் குணம்.

“சரி,சரி, இப்பவே இவ்ளவு டென்ஷனாகாத, அதத அப்பப்ப பார்த்துகிடலாம், இப்போ முதல் புயல் நாளைக்கு நடக்ற நம்ம கல்யாணம், அதைப் பத்தி மட்டும் டென்ஷனாகிக்கோ”

முறைத்தாள்.

“என்னமா?”

“எங்கம்மா அப்பாட்ட பேசணும், இவ்ளவு அவசரப்பட்டா எப்படி?”

“இவ்ளவுதான இங்கதான் இருக்காங்க, மெடல் செர்மனி முடிஞ்சதும் எல்லோரையும் பார்க்கலாம்”

“ஆங், இன்னும் என்ன வம்பெல்லாம் செய்து வச்சிருக்கீங்க?”

“மொத்த வாழ் நாளும் இருக்குது அத ஒன்னொன்னா பார்த்துக்கோ”

“இப்ப முதல்ல மின்னியையும் மிஹிரையும் பார்க்கணும்”

“ம்,கூட்டிட்டு போறேன்”

மெடல் செர்மனி முடிந்து அரங்கத்தை விட்டு வெளியேறும் வழியில் காத்திருந்தான் மிஹிர்.

“சோ மிஹிர் இதெல்லாம் உங்களுக்கு முன்னமே தெரியும்” மிர்னா தன் யூகத்தை கேட்டாள்.

“சாரி மிர், எனக்கு அந்த போட் இன்சிடென்ட்லதான் தெரியும், ட்ரோலர் ல ஏறும்போதே புர்கால பொண்ணை பார்த்ததும் கொஞ்சம் உறுத்தலா இருந்தது,

அந்த பொண்ணுவேற என் பார்வையை வித்யாசமா அவாய்ட் செய்ற மாதிரி தோணிச்சு, கூட்டம், எல்லாரும் ஒன்னுபோல தண்ணிய பார்த்துட்டு இருந்தோம்,

அடுத்த பக்கம்