என்னைத் தந்தேன் வேரோடு 16(15)

இப்பொழுதுக்கு எதற்காகவும் இவள் போட்டி ஸ்தலங்களுக்கு வராத மின்மினி,

விளையாட்டுகாக என்றாலும் மின்மினியை தவிர்த்து பேசும் மிஹிர்.

இவளுக்கு ஒஃபிலியாவின் மீது ஏற்பட்ட பொறாமையின் நினைவு இத்தனைக்கும் காரணம் என்னவாயிருக்கும் என்பதை புரிய வைக்கிறது.

மின்மினி,

ஒற்றைப்பெண், தனியாய் வளர்ந்தவள், எதையும் பகிர்ந்து வழக்கம் இல்லாதவள், பகிர பழக்கப்பட்டவர்களே தன்னவனின் பெண் நட்பில் தடுமாறிப் போவதில்லையா??

இது இவள் தன் சொந்த அனுபவத்தில் உணர்ந்து அறிந்த விஷயம் அல்லவா??

இவள் அதை முளையில் கிள்ளி எறிந்துவிட்டாள்.

மின்னி அதை பயிர் செய்து அறுவடை செய்கிறாள் போலும்,

முன்பே இவள் மின்னி விஷயத்தை ஏன் யோசிக்காமல் போனாள்??

இதற்கு மருந்தும் தீர்வும் இவளுக்குத் தெரியும்,

ஆனால் அதை மின்னிக்கு கொடுக்கும் முன் நிலை எல்லை கடந்துவிடக்கூடாதே???.

இவளை மின்னி சுட எவ்வளவு நேரம் ஆகும்? சுடுவதாய் இருந்தால் இதற்குள் செய்திருக்க மாட்டாளா?? ஆனால் தன்னைத்தானேயோ, மிஹிரையோ அழித்துக் கொண்டுவிட்டால்??

வியனை நோக்கி ஓடினாள்.

“மிஹிர் எங்கயாவது மின்னி கூட இருப்பாங்க, situation out of control போகாம பார்த்துகோங்க”

ஒரு நொடி இவளைப் பார்த்த அவன்,  தன் மொபைலில் மிஹிரை அழைத்தபடி வேகமாக தன்னிடத்தை விட்டு வெளியேறினான்,

God be with you மிர்னு.

இந்த சிஸர்ஸ் முறை எல்லா நேரமும் வாய்க்கும் என்று சொல்வதற்கு இல்லை. அதில் அதிக உயரமும் தாண்ட முடியாது,

மேலும் சென்ற முறை மின்னி இவளை வழக்கம் போல் பாரின் ஓரத்தில் குறிபார்த்ததால், விதம் மாற்றி நடுவில் தாண்டிய  இவள் முயற்சி பாதிக்கப்படவில்லை, ஆனால் இம்முறை மின்னி இவளை நடுவில் எதிர்பார்த்து குறிபார்த்தால்??

இவளுக்கு இப்படி ப்ரச்சனை நேர்கிறது என்று சாட்சி காண்பிக்க கூட எதுவுமில்லை என்பதால் பிறருக்கு புரிய வைப்பதற்கு மனம் செலவழிப்பதைவிட போட்டியில் ஜெயிப்பதில் கவனம் செலுத்த வேண்டிய தருணம்.

ஆக அடுத்த இவளது முறைக்கு மிஹிர் இன்னும் திரும்பி வந்திருக்காத நிலையில் ஆல் ஆர் நத்திங் ஆப்ஷனை தேர்ந்தெடுத்தாள்.

சக போட்டியாளர்கள் அனைவரும் இதுவரை தாண்டி இருக்கும் உயரத்தைவிட அதிக உயரத்தை இவள் தாண்ட முயல வேண்டும். தாண்டிவிட்டால் தங்கம் இவளுக்கு. இல்லையெனில் வெறும் கையுடன் வெளியேற வேண்டும். நாக் அவுட்

இந்த முறை இவளது வழக்கமான பாணியான ஃபாஸ்பரி ஃப்ளாப் தான் முயற்சி செய்ய வேண்டும்.

தாண்ட வேண்டிய உயரத்தை தாண்ட உதவும் என்பதோடு, சென்ற முறைக்கு எதிர்பதமாக பாரின் ஓரத்தில் இவள் தாண்டும் போது, நடு பகுதியை குறிபார்த்து வரும் அந்த பொருளிடமிருந்து தப்பிக்க வகை செய்யும், முடிவு செய்து கொண்டாள் மிர்னா.

மிஹிரும் வியனும் அங்கு எதாவது செய்திருப்பார்கள் மின்னியை தடுக்க என நம்புவோம்,

ட்ராக்கின் தொடக்கத்தில் நிற்கிறாள்.

அம்மச்சி ஞாபகம் வருகிறார்,

எத்தனை பேரோட கனவு இது,

வியன் அவன் அம்மா அருகில் கண்மூடி தவிப்போடு அமர்ந்திருந்த காட்சி கண்ணில் தெரிகிறது,

எத்தனை தியாகங்கள் இதற்காக,

மனதில் கிண் என ஏறுகிறது பதற்றம்,

Shut up M.M,  just இது ஒரு கம்பு குச்சி,

க்ளாப், க்ளாப், க்ளாப்,

ரிதம் மாறாமல் பார்வையாளர்களின் கரவொலி,

1,2,3,4,5,6,7,8,9,10,11 ஜே போல் வளைந்து, காற்றில் எழுந்து, பாரை தாண்டி, பிழையின்றி ஃபோமில் விழுந்தாள்.

ஹேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய், அதிர்கிறது அரங்கம்,

“ஹீரோ சார், சும்மா சொல்லக்கூடாது என்ன ஒரு ride , adventurous, fun, perfect” வானத்தைப் பார்த்துக் கொண்டாள் மிர்னா.

அடுத்த பக்கம்