என்னைத் தந்தேன் வேரோடு 16(14)

“நெக்ஸ்ட் அட்டெம்ப்ட்டுக்கு அடுத்த அட்டெம்ப்ட் நீ போறப்ப நான் திரும்பி வந்திருக்கலைனா ஆல் ஆர் நத்திங் ஆப்ஷன் போ, மறந்திராத, ஆல் த பெஸ்ட்” கடகடவென வெளியேறத் தொடங்கினான் மிஹிர்,

அடுத்த முறை அவள் வாய்ப்பு வரும்போது மிஹிர் வந்திருக்கவில்லை.

இந்த முறை இவள் தவறவிட்டால்,  தவறிய முயற்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்க, நெக் டு நெக்காக வரும் அந்த ரஷ்யன் அத்லீட் இவளை தங்கத்திற்கு தகுதி அற்றவளாக ஆக்கிவிடும் சாத்தியம் 99%.

என்ன செய்யலாம்?

தாண்டும் விதத்தை மாற்றினால் நிலைமையை சமாளிக்கலாமோ?

ஆனால், இப்படி கடைசி நிமிடத்தில் இவள் பாணியை மாற்றினால் அது ஒழுங்காய் வாய்க்குமா??

தோல்வி என்பது தோல்வி இல்லை, தோற்றால் தாங்கமுடியாது என்ற வலிதான் தோல்வி.

கமான் எம் எம், அது ஒரு கம்பு குச்சி, பாம்பு பூச்சி கூட கிடையாது, தாண்டறதும் தாண்டாம போறதும் ஒரு பெரிய விஷயமா, just hit it, enjoy doing it,

ஃபாஸ் பரி ஃப்ளாப் என்ற முறையை அதாவது தாண்ட வேண்டிய பாருக்கு முதுகை காட்டி தாண்டும் இப்போதைய முறையை விட்டு, பழைய கால முறையான ஸிஸர்ஸ் முறை அதாவது முகம் பாரை பார்த்திருக்கும் நிலையில் தாண்டுவது என முடிவு செய்தாள்.

இந்த ஸிஸர்ஸ் முறையில் பாரை இவள் தாண்டும் இடம் அதன் நடுப் பகுதியாக இருக்கும்.

இப்போதைய ஃபாஸ் பரி ஃப்ளாப் முறையில் தாண்டினால் பாரின் ஓரப்பகுதியில் தாண்ட நேரிடும். அப்படி ஓரத்தில் இவளை குறிபார்த்து பீய்ச்சப்படும் அந்த திரவம் இம்முறை ஏமாந்துவிடுமல்லவா?

ஆனால் இப் பழைய கால முறையில் இவளுக்கு பயிற்சி கிடையாது என்பதோடு, இதில் ஃபாஸ் பரி ஃப்ளாப் முறை அளவுக்கு உயரம் போகவும் முடியாது.

இருந்தாலும் அது மிர்னாவிற்கு இப்பொழுதுக்கு உதவியது.

ஆம் தாண்ட வேண்டிய உயரத்தை தாண்டி உலகத்தை அதிசயிக்க செய்தாள். இழப்பு எதுவும் நேராமல் அப்போதைக்கு போட்டியில் தன்னை தக்கவைத்தாள்.

ஹேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய், அரங்கம் ஆரவரிக்க,இது எவ்ளவு சாத்தியமில்லாத ஒன்று என புரிந்தவர்கள் கொண்டாடுகிறார்கள்.

கமெண்டரி பாக்ஸின் மொத்த பேச்சும் புகழாரமும் மிஸ் ஜயல் ஜெயல் ஜேயல், என அவளது சர்நேம் துடிக்க

சிந்தனையோடு தன் வெயிட்டிங் ப்ளேசை நோக்கி நடந்தவள் மீது வந்து விழுகிறது ஒரு கூட்ட கரப்பான் பூச்சிகள்.

எதோ வெறுத்துப்போன பிற நாட்டு ரசிகரின் ஆவேசம், அவரைத் தேடி ஓடும் காவலர்கள். எதுவும் கவனம் கவரவில்லை மிர்னாவிற்கு.

தரையில் விழுந்துவிட்டவை தவிர இன்னமும் தன் மீது அமர்ந்திருந்த கரப்புகளை இயல்பாய் தட்டிவிட்டு நடந்தாள்.

மனதில் குழந்தை ரியாவின் முகம், அவளிடம் பூச்சிக்கு இவள் பயப்படுவது போல் காண்பித்த அந்த விளையாட்டு ஞாபகம் வருகிறது.

கரப்பானை பார்த்தாலே வெகு நேரம் இயல்புக்கு வர முடியாது என காண்பிக்க இவள் தொடர்ந்து நடுங்கிக்கொண்டு இருந்தது ஞாபகம் வருகிறது.

அதை நம்பிய ரியாவின் முகம். இப்பொழுது தன்னுள் சிரித்துக் கொண்டாள்.

சட்டென எதோ புரிகிறது.

ஏன் புரிந்தது எப்படி புரிந்தது என காரணபடுத்த முடியவில்லை எனினும் புரிந்துவிட்டது.

அநத பூச்சி நிகழ்ச்சி தெரிந்த மூவரில் ரியாவிற்கும் வியனுக்கும் இவள் பயப்படுவது போல் நடித்தாள் என பின்னால் விளக்கி இருக்கிறாள்.

அந்த விளக்கம் இவள் சொல்லாத நபர் மிஹிர்,

அப்படியானால்??

நடந்த ஒவ்வொரு கொலை முயற்சியிலும் இவள் அருகில் இருந்தது மிஹிர்தான்.

ஆனால்??

மிஹிர் எப்பொழுதும் இவளை காப்பாற்றவே முயன்றிருக்கிறான்.

அதுவும் அந்த படகு நிகழ்ச்சியில் அவன் இவளை காப்பாற்ற தன் உயிரையே பணயம் வைத்தான், அன்று அவளை காப்பாற்ற அவன் காட்டியது வெறி, மகா அசுரத்தனம் அது,

முடிச்சுகள் படபடவென அவிழ்ந்தது மிர்னாவின் மனதில்.

இவள் எதற்குமே பயப்படாதவள் என்பது இத்தனைக் காலத்தில் மிஹிருக்கு அத்துப்படி ஆயிற்றே,

இதை செய்வது யாரென்று புரிந்துவிட்டது!!!!

இப்பொழுதெல்லாம் அவ்வப்போது தனியாக வாக்கிங் போகும் மிஹிர், இவளோடு பயிற்சியில் ஈடுபட்ட பின் அதற்கும் மேலாக எதற்கு இந்த வாக்கிங்?

முன்பானால் மின்னியோடு அலைபேசியில் அடைக்கலமாவதல்லவா மிஹிர் வழக்கம்.

மின்னி!!!!

அடுத்த பக்கம்