என்னைத் தந்தேன் வேரோடு 16(13)

ன்று மிர்னாவிற்கு ஃபைனல்ஸ்.

இதுவரை நடந்த சுற்றுகளில் மூன்று முறை தன் சாதனையை தானே முறியடித்து இருந்தாள் மிர்னா. எது எப்படி ஆயினும் இன்றைய போட்டி முடிவுக்கு எதுவும் ஈடாகாது.

அவள் முறை இது.

ஓடுகளத்தின் ஆரம்பத்தில் நின்றாள். தூரத்தில் தெரிந்த மிஹிரையும் வியனையும் பார்த்தாள். டி வியில் மூவி பார்ப்பவர்கள் போல் இயல்பாய் அமர்ந்திருந்தனர் அவர்கள்.

இதில் தான் உன் மொத்த முயற்சியின் பலன் அடங்கி இருக்கிறது என்ற நினைப்பை அவளுக்கு வராமல் இருக்க செய்ய, it’s just another day ங்கிற மனநிலையில் அவள் நிலைக்க இப்படி படு இயல்பாய் அவர்கள்.

ஆனால் ஸ்டேடியத்தின் பெரிய மெகா டிவி திரையில் மிர்னாவைப் பார்த்து உலக பார்வையாளர்களே ஒருவித அமைதிகாத்தனர்.

உப்!

பாரைப் பார்த்தாள் மிர்னா.

வலதுகாலை பின்னால் வைத்து வலது கையை முன்னால் நீட்டி, மீண்டும் பாரின் மீது ஒரு பார்வை. மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டாள்.

ஃபாஸ்பரி ஃபாப் முறையில் குதிக்க தேவையான ஜே ஷேப்பில் ஓடி வரத்தொடங்கினாள்.

முதல் மூன்று எட்டுகளின் நீளம் சற்று குறைவு. பின் நீள நீள காலெட்டுகள். கடைசி காலெட்டு கொஞ்சம் குறுகும். மொத்தம் 11 எட்டுகள் இவள் ஓட வேண்டும்.

முழு வேகம், பெர்ஃபெக்ட் கோணம் 7,8,9,10, பாருக்கு அருகிலிருந்த வெள்ளை கோட்டை கடந்தாள்.

அதே நேரம் பாருக்கு பாதி முதுகாட்டும் வண்ணம் திரும்புகிறாள்,

11 வலது கை நீள தொடங்க, காற்றில் எம்பி எழுந்தாள். சுகம் சுக ப்ராவாகம்.

வலக்கை பாரை கடக்கிறது. தலை கடக்க தொடங்க, முட்டுக்கு கீழான கால்கள் இரண்டையும் கீழ் நோக்கி இறக்க,

அது தந்த நெம்பு விசையில் முதுகு பாரை கடக்க,

இப்பொழுது கால்களை நேராக நீட்டி, இடகால் சற்று முன்னும் வலகால் சற்று பின்னும் பாரை கடந்து கொண்டிருக்க, கால்களை மேல் நோக்கி உயர்த்தினால்

‘சிலீர்’ எதோ ஒரு திரவம் இவள் முகத்தில் மோதுகிறது. ஷ், ஆ,உடல் அனிச்சை செயலாய் தன்னை குறுக்க பாரை கடக்கவேண்டிய விதத்தில் கடக்காமல் பாதை மாறுகிறது கால்கள்.

வலகாலின் குதிகால் பாரை தட்டுவது புரிகிறது. ஆடும் பாரின் மீது கண்கள் வைத்தபடி முதுகை தரைக்கு காண்பித்தபடி வந்து விழுகிறாள் ஃபோமில்.

ஆடிய பார் ஆடியதோடு சரி. விழவில்லை.

ஹேய்ய்ய்ய்ய்ய்ய்” அதிர்கிறது ஆடிட்டோரியம்.

முகத்தை தொட்டுப் பார்த்தாள் எந்த ஈரமும் இல்லை. சுற்றுமுற்றும் பார்த்தாள். எதுவும் வித்யாசமாக இல்லை.

விளையாடும் நேரத்தில் அவளது முந்தைய உயரம் தாண்டுதலை டிவி யில் பார்க்கும் வழக்கம் இல்லாதவள் மிர்னா.

ஆனால் இன்று நிமிர்ந்து பார்த்தாள். அவள் முகம் சுழித்தல் உடல் குறுக்கல் எல்லாம் ரிப்ளேயில் தெரிகிறது, ஆனால் எத்திரவ வீச்சும் பதிவாகவில்லை.

ஹான்??

வியனையும் மிஹிரையும் பார்க்கிறாள். அடுத்து என்ன செய்ய? ப்ரச்சனை அவர்களுக்கு புரிந்திருக்குமா??

வியன் இவள் முகத்தைப் பார்த்தபின் முகம் மாறுகிறான். இவளுக்கு எதோ ப்ரச்சனையாய் இருக்கிறது என்று புரிந்துகொள்ளும் முக பாவம்.

ஆனால் மிஹிர் இவள் பார்க்கும் போதே ஒருவித டென்ஷனில்,

அப்படியானால் மிஹிருக்கு ப்ரச்சனை புரிகிறதா?

ஆனால் இப்பொழுது என்ன செய்ய வேண்டும்??

மிஹிரின் கண்கள் வேறு எங்கோ பார்க்கிறது. இவளுக்கு எந்த குறிப்பும் தரவில்லை அவன்.

காத்திருந்தாள்.

இன்னும் சில நிமிடங்களில் இவள் முறை.

மிஹிரைப் பார்க்கிறாள்.

“கோ அகெட்“ என உதடசைக்கிறான்.

அப்படியானல் அவளுக்கான திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை.

அப்படியானால் நடந்தது என்ன?

“லீவ் இட், பின்னானவைகளை மறந்து முன்னானவைகளை நோக்கி ஓடு எம் எம்

இது மிர்னாவின் இரண்டாவது அட்டெம்ப்ட், flawless என்றுதான் இருந்தது தொடக்கம்.

இம்முறை தலை பாரை கடந்து கொண்டிருக்கும்போதே, ‘சிலீர்’

அன்னிச்சை செயலாய் இவள் உடல் திசை மாற, மிர்னாவிற்கு முன்பாக தரை தொட்டது பார், foul

“ஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்” சந்தோஷமாய் தொடங்கி ஏமாற்றமாய் முடிக்கிறது கூட்டம்.

வியன் எழுந்து நின்று இவளை ஆராய்ச்சியாய், ஊக்குவிப்பதாய் பார்ப்பது புரிகிறது. மிஹிர் முகத்தில் அதிர்ச்சி.

அடுத்த அட்டெம்ட்டில் இதே கதை தொடர்ந்தால் தங்கபதக்கம் கனவாகிவிடும்.

மற்ற பதக்க வாய்ப்பு மட்டுமே மிச்சமிருக்கும், அதோடு மூன்று அட்டெம்டுகளில் தொடர்ந்து தவறினால் போட்டியை விட்டு வெறும் கையுடன்தான் இவள் வெளியேற வேண்டும்.

மிஹிர் எதோ சொல்லத் தொடங்குவது புரியவும் அவன் அருகில் ஓடினாள்.

அடுத்த பக்கம்