என்னைத் தந்தேன் வேரோடு 16(11)

“ப்ளீஸ் உள்ள வந்து டிக்கெட் எடுத்து கொடுத்துடுங்களேன், எனக்கு இங்க டைரக்க்ஷனும் தெரியல, லாங்குவேஜும் புரியல” இவள் கோர,

“வாங்க”

அந்த கிருபாவின் பின் தூரத்தில் தெரிந்த டிக்கெட் பூத்தை நோக்கி நடந்தாள் வேரி.

“3.50 ரேஐஸ், எல்லா ஷ்டேஷனுக்கும் ஒரே ஃபேர்தான் போல” கிருபா சொல்ல

வேரி டிக்கெட்டை கையில் எடுத்தாள்.

“இங்க இருந்து காவ்யா 4த் ஸ்டேஷன், லைன் 4ல வரும் ட்ரெய்ன்ல ஏறுங்க, ரைட் சைட்ல இருக்கிற ட்ராக்கா இருக்கும்”

“ரொம்பவும் தேங்க்ஸ் கிருபா, நீங்க இல்லனா நான் எப்படி சமாளிச்சிருப்பேன்னே தெரியலை”

கிருபாவின் கைகளைப் பிடித்துக் கொண்டாள் வேரி.

“ஹலோ 21 9 81255906 ங்கிற நம்பர்ல இருந்து  காவ்யா, ஒலிம்பிக் வில்லேஜ் குவார்ட்டஸ் 207 க்கு டாக்ஸி புக் செய்துருந்தாங்களே, பசஞ்சர் நேம் வெரோனிகா, அவங்க ட்ராப் எங்க புக் செய்துருந்தாங்கன்னு சொல்ல முடியுமா ப்ளீஸ்?” போர்சுகீசில் கேட்டான் கவின்.

“…..“

“அவளுக்கு உதவி தேவை”

“…..“

“நான் அவ ஹஸ்பண்ட்தான்”

மறுப்புடன் எதிர் முனை இணைப்பு துண்டிக்கப்பட, அடுத்த இரண்டாம் நிமிடம் காவல் நிலையத்தில் கவின்.

One of the directors’ of group M என்ற அவனது அறிமுகம் மரியாதையை தர உதவி தானாக வந்தது.

“அவங்கள ரெடிமர்ஸ் ஹோம்ல ட்ராப் செய்தேன், அவங்க மொபைல் என் டாக்ஸில இருக்கிறதையே இப்ப நீங்க சொன்ன பிறகுதான் பார்க்கிறேன்”

அவளை டிராப் செய்த டாக்ஸி டிரைவர் விபரம், டாக்ஸி நிறுவனத்தால் தரப்பட, அந்த டிரைவரை தொடர்பு கொண்ட போது அவர் இப்படி சொன்னார்.

அடுத்த நிமிடம் கவின் காரில் அந்த ரெடிமர்ஸ் ஹோமை நோக்கிப் பறந்தான். காவல் துறையும் உதவிக்கு உடன் வந்தது.

ப்பொழுதுதான் வெளிச்சத்தில் கிருபாவின் முகம் பார்த்தாள் வேரி. எதோ வித்யாசம், இயல்பாக இல்லை, என்னது?

“இதுல்லாம் என்னங்க, எல்லோரும் செய்றதுதான? இவ்ளவு பயந்த டைப்பா இருக்கீங்க, ஏன் தனியா வந்தீங்க? அங்க ஸ்டேஷன்கு உங்கள பிக் அப் செய்ய யாரையாவது வரச் சொல்லுங்க, என் மொபைலை யூஸ் பண்ணிக்கோங்க“ அந்த கிருபா சொல்ல,

“ரொம்ப தேங்க்ஸ், என் ஹஸ்பண்ட் அங்க ரொம்ப டென்ஷனா தேடிகிட்டு இருப்பாங்க” இன்னும் கொஞ்ச நேரம்தான், உன்ட்ட வந்திருவேன் கவின், மானசீகமாக தன்னவனுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாள்.

மொபைலை நீட்டினாள் கிருபா ”ஓ, உங்களுக்கு கல்யாணம் ஆகிட்டா? வாய்ஸை வச்சு ரொம்ப சின்ன பொண்ணுணு நினைச்சேன்”

கிருபாவின் இந்த பதிலில் அதிர்ந்து போனாள் வேரி. தன் வயிறை குனிந்து ஒரு முறை பார்த்துக் கொண்டாள். என்னைப் பார்த்து இவ என்ன சொல்றா??

மின்ன்லாய் மனதிற்குள் ஒரு இடி.

ஐயோ, தெய்வமே, மனதிற்கு புரியும் விஷயம் நிஜமாக இருக்க கூடாதே, உயிரும் உடலோடு சேர்ந்து நடுங்க கிருபாவின் கண்களைப் பார்த்தாள் வேரி, இப்பொழுதுதான் எது இயல்பாய் இல்லை என்பது புரிகின்றது.

கிருபாவின் அழகிய கண்கள் பார்க்கும் திசை நோக்கி இயல்பாய் சுற்றி வந்தாலும் அதில் பார்வை உணரப்படுதலின் உணர்வு இல்லை. பார்வையற்றவளா கிருபா?

“நீங்க…நீங்க” தடுமாறினாள் வேரி.

ஹோமிற்கு சென்று விசாரித்த கவின் அங்கு தன்னவள் இல்லை என்பதை அறிந்தவன் நொடி நேரம் விரயம் செய்யாமல் அடுத்து யோசித்தது, அடுத்து இங்கிருந்து அவள் செல்ல என்ன வழி என்பதுதான்?

அருகில் மெட்ரோ ஸ்டேஷன், இவர்களது குவார்டஸ் இருக்கும் காவ்யா செல்லும் லைன் 4 ட்ரெய்ன்கள் அங்கு வரும் என்ற தகவல் கிடைக்க,

“ஓ இப்பதான் நோட் பண்ணீங்களா? ஆமா ஃப்யூ இயர்ஸ் முன்னால ப்ரெய்ன் ஃபீவர்ல ஐ சைட்டை லாஸ் பண்ணிட்டேன்” கிருபா இயல்பாய் சொன்னாள்.

அவள் முன் அழக்கூடாது என என்னதான் வேரி எண்ணினாலும் இருந்த அனைத்து உணர்ச்சி குவியல்களின் காரணமாக கண்ணில் இருந்து நீர் அதுவாக வழிய தொடங்குகிறது,

“என்னங்க வேரி”

“ம், அது”

“அழுறீங்களா என்னங்க இது? இவ்ளவு சென்சிடிவ் டைப்பா இருக்கீங்க?”

“அது, அது, என்னாலயே இங்க சமாளிக்க முடியல, நீங்க இவ்வளவு சின்ன வயசில, நீங்க…” எதை சொல்லவென தெரியவில்லை வேரிக்கு.

“பட் உங்களுக்கு இந்த இடம் ரொம்ப நல்லா தெரியும் போல என்ன?” அழுகையை கைவிட பேச்சை மாற்ற விரும்பினாள் வேரி.

“இல்லைங்க, எனக்கும் இடம் புதுசுதான், நான் ஒரு நியூஸ் ஏஜென்சில வொர்க் பண்றேன், ஒலிம்பிக் கவரேஜ்காக இப்பதான் வந்தோம்”

ஆச்சர்யமாகி போனாள் வேரி.

அடுத்த பக்கம்