என்னைத் தந்தேன் வேரோடு 16(10)

“அது எங்க பாட்டியோட வேலை, என்னைப் பேத்தின்னு காமிச்சுகிட்டா பரம்பரை சொத்துனு ஆகி, பின்னால மிர்னாவுக்கும் பங்கு கொடுக்க தேவை வந்துடுமோன்னு பயம் அவங்களுக்கு,

யாரோ அப்படி அவங்களுக்கு சொல்லி கொடுத்ருகாங்க, அதனால இப்படி பதிஞ்சு வச்சிருக்காங்க, பதியப் போனப்ப அட்ரெஸ் ப்ரூஃப் இல்லைனு, அங்கயே அவர் அட்ரஸ்லயே ஒரு பாங்க் அக்வ்ண்ட் ஓபன் செய்து பதிஞ்சு கொடுத்ருக்கார் அந்த லேண்டை என் பாட்டிக்கு வாங்கி கொடுத்தவர்” இவள் குழப்பத்தை விடுவிக்க,

“இப்படித்தான் எதாவது இருக்கும்னு யோசித்தோம், அவரும் இப்ப உயிரோட இல்ல, அவர் மகன்தான் அந்த அட்ரஸ்ல இருக்கார், அப்பா நிறைய பேருக்கு வாங்கி கொடுத்ருப்பார், இது யாருன்னு தெரியலையேன்னு சொல்லிட்டார் அவர்”

“எல்லாம் என் பாட்டி செய்த தப்பு, பொய் மேல பொய், அது இவ்வளவு கஷ்டத்தை கொண்டு வந்துட்டு”

வேரி எவ்வளவுதான் அதை  உரையாடலாக மாற்ற முயன்றாலும், கவின் தகவல் தெரிவிக்கும் தொனியில் இருந்து மாறவே இல்லை.

”அன்னைக்கு ஆஃபீஸ்ல என்ட்ட GM ப்ரச்சனை முடிஞ்சிட்டுன்னு கேள்விபட்டேன்னு சொன்னது, அவர் கேள்விபட்ட ரூமர்னால”

“ஓ, ஓகே”

“என் ஒன்டவுண் ஒருவர் இந்த லேண்ட் ப்ரச்சனை தெரிஞ்ச அவரோட ஒன்டவுண்ஸ்ட்ட, ப்ராப்ளம் சால்வாகிட்டுன்னு சொல்லிருக்கார், அவங்க panic ஆக கூடாதுன்னு இப்படி செய்திருக்கார்,

அதை கேள்விப்பட்ட இந்த GM என்ட்ட அது உண்மைனு நினைச்சு பேச வந்திருக்கார், அப்பதான் அது உன் காதில விழுந்திருக்குது”

“ஓ, புரிஞ்சிட்டுது”

“வேற எதுவும் கேட்கணுமா?”

மொத்த உரையாடலிலுமே, விஷயத்தை சொல்லிவிட்டேன் இதற்கு மேல் நம்புவதும் நம்பாமல் போவதும் உன் கையில் என்றவிதமான ஒரு தொனி  .

விரக்தி??

வருவதை எதிர்கொண்டுதானே ஆகவேண்டும் என்ற மனநிலை, இவள் முந்திய செயல் அவன் இதயத்தில் ஏற்படுத்திய காய ஆழம் அது பறை சாற்றுகிறது.

“நமக்கே தெரியாத இந்த விஷயம்லாம் யாருக்கோ தெரிஞ்சி, நம்மள என்ன பாடு படுத்றாங்க கவிப்பா, அவங்களுக்கு என்னதான் வேணும்?”

தான் அவனை குற்றவாளியாக நினைக்ககூட இல்லை என்பதை தன் ஒவ்வொரு உச்சரிப்பு உடல்மொழி விழிப் பார்வை முக பாவம் எல்லாவற்றிலும் இயல்பாய் வெளிப்படுத்த முனைந்தாள் வேரி.

“தெரியலை குல்ஸ், உண்மையிலேயே என்னதான் எதிர்பார்க்கிறாங்கன்னு, எதாவது தெரிய வந்துச்சுன்னா சொல்றேன்” கவின் சென்றுவிட்டான்.

குல்ஸ்??? அவன் வாயிலிருந்து இந்த நேரம் இப்படி ஒரு வார்த்தையா?!! அப்பொழுதே முடிவு செய்துவிட்டாள் வேரி கடவுளுக்கான பொருத்தனையை உடனே செலுத்த வேண்டும் என.

என்ன செய்யலாம் என்று யோசித்தவளுக்கு ஆர்ஃபனேஜ் எதற்காவது உதவிசெய்யலாம் என தோன்ற, கடவுளுக்கு செய்வதை காலம் தாழ்த்தி செய்ய கூடாது என்பதால், உதவி கேட்ட வியனும் மறுத்ததால் இப்படி ஒரு பயணம்.

ண்ணுக்கும் மனதிற்கும் தோன்றிய திசையிலெல்லாம் கவின் கரை செலுத்திக் கொண்டிருந்தான்.

வேரியின் எண்ணை திரும்ப திரும்ப முயற்சித்துக் கொண்டும் இருந்தான்.

எங்கடா போய்ட்ட?

ஒரு டாக்ஸி அவன் காரை கடந்தது. அதில் வேரியின் மொபைல் ரிங்க் டோன் கேட்பது போல் பிரமை.

சட்டென இவனுக்குப் புரிந்துவிட்டது அவளை எங்கு தேட வேண்டும் என.

வெளியே போக வேண்டும் என்றால் டாக்ஸிதானே புக் செய்திருப்பாள்?

இன்டெர் நெட்டில் ரியோவில் டாக்ஸி புக் செய்ய என்ன செய்ய வேண்டும் என கூகிள் தேடலில் பார்த்தான். முதலில் வந்த டாக்ஸி  நிறுவனத்திற்கு அழைத்தான்.

“என் நேம் கிருபா, உங்க நேம்” அந்தப் பெண் சொல்ல,

“வெ…வெரோனிக்கா, வேரின்னு சொல்லுவாங்க” தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டாள் வேரி.

“குளிருதா உங்களுக்கு, இப்படி வார்த்தை நடுங்குது?”

“ம், ஆமாம்” தன் உடையை ஒரு முறை தடவிக் கொண்டாள் வேரி. நனைந்த காட்டன் ஸ்கர்டும் டாப்ஸும், காற்றுவேறு, குளிராமல் என்ன செய்யும் நினைத்துக் கொண்டாள்.

“இங்கதான் ஸ்டேஷன் என்ட்ரி”

கிருபா சொல்ல,

அடுத்த பக்கம்