என்னைத் தந்தேன் வேரோடு 16

விமான நிலையத்தில் இவர்களை வரவேற்க வியனும் ஒஃபிலியாவும் வந்திருந்தனர்.

பயணம் முழுவதும் மனைவியின் உணவு உடல் நல  தேவைகளை கண்டு கவனித்து நிறைவேற்றிய கவின் அதை தவிர வேறு எதையும் வேரியிடம் காண்பித்துக் கொள்ளவில்லை. அதனால் பெரிதும் மனம் சோர்ந்தாள் வேரி.

“கலக்கிடீங்க அண்ணி, கங்காரு மாதிரி செம க்யூட்டா இருக்கீங்க” இப்படித்தான் அவளை வரவேற்றான் வியன்.

இப்போது ஒருவித உற்சாகம் வேரிக்குள் வந்தது. சுகம் தரும் சொந்தங்களும் உலகில் உண்டு.

“ஆமா குரங்கு கண்ணுக்கு கங்காரு அழகாதான் தெரியும்” வேரி வார

“ஆஹா, இதுதான் வாயும் வயிறுமா இருக்கிறதுங்கறதா? ,டேய் கவின், வாயையும் வயிறையும் நல்லாதான்டா வளத்துவிட்டுருக்க” தம்பி தன் அண்ணனை பாராட்டினான்.

இதில் அருகில் நின்ற கவின் தன் தம்பியின் தோளில் தட்டினான்,

“ம், நாங்கல்லாம் வளத்துவிட்ட பிறகுதான் இங்க இப்படி இருக்குது,உன்னோட உள்நாட்டு நிலவரம் ஏற்கனவே படு கலவரம்னு கேள்விபட்டேனே”

“ஹி ஹி, அது, கலவரத்தை சுயம்வரம் பண்ணி நிலவரத்தை சரி செய்யலாம்னு நினச்சுகிட்டு இருக்கேன்”

“ஆமா அது என்ன அண்ணன் தம்பி ரெண்டு பேரும் கல்யாணத்தை செய்துட்டா பொண்ண கவர் பண்ணிடலாம்னு நினைக்கிறது?” வேரி நிஜமாகவே சற்று கோபமாக கேட்டாள்.

“ஐயோ, அண்ணி உங்களுக்கே இது ஓவரா தெரியலையா? இப்படியா அபாண்டமா பழி போடுவீங்க, அப்பப்ப பப்ளிக்ல அவ கால் விழுறதுக்கு பதிலா, தினமும் நாலுதடவைனாலும் நாலு சுவத்துக்குள்ள விழுந்துகிடலாமேன்னு இப்படி ஒரு திட்டம்போட்டா, இதுக்கு போய்…”

“சரி,சரி, விடுறா, இதல்லாம் போய் அவட்ட சொல்லிகிட்டு, நம்ம ரகசியத்தை நம்மளோட வச்சுகிடணும்” தம்பியின் தோளில் கைபோட்டு அவனை தன்னோடு தள்ளிக் கொண்டு நடந்தான் கவின்.

பார்த்திருந்த வேரிக்கு சிரிப்பும் வந்தது. பூரிப்பாகவும் இருந்தது.

கவினுடன் இவள் கோப பட்டு வீட்டை விட்டு வெளியேறியது வியனுக்கு தெரியவில்லை அல்லது அதன் பின்னும் அவன் இவளை இயல்பாய் ஏற்கிறான் என்பது புரிய சுகம் மனதினுள்.

கவினுமே இவளிடம் விலகி இருந்தாலும் அதை யாரிடமும் காட்டிக் கொள்ள விரும்பவில்லை என்பது தெளிவாக ஒருவித ஆறுதல்.

அப்பொழுதுதான் ஒஃபிலியாவை கவனித்தாள், இவள் தாயுடன் இழைந்து கொண்டிருந்தாள் அவள்.

அம்மாவுக்குள்ள எதாவது ஆவி புகுந்துட்டோ? இல்ல, இது அம்மாவே இல்லையோ, அம்மா மாதிரி சும்மா எதுவோ? என்னாச்சு அம்மாவுக்கு இப்படி மாறிப்போய்டாங்க, காசு வரும், பிஸினஸ் கிடைக்கும்னா மட்டும்தான் முன்னாடிலாம் யார்ட்டயும் பேசவே செய்வாங்க,

ஒஃபிலியா அருகில் சென்றாள் வேரி .

“நீ எங்க ரூமுக்கு வந்துட்டுதான் போகணும், உனக்கு ஆன்டி சிலது கொண்டு வந்துருக்கேன், ரூம்ல வந்து தாரேன் கண்ணு, நீ கண்டிப்பா வரணும், அதோட உன்ட்ட பேச எக்கசெக்க புது விஷயம் இருக்குது” அம்மா ஒஃபிலியாவை கிட்டதட்ட இழுத்துக் கொண்டு இருந்தார்,

“கண்டிப்பா, ஆன்ட்டி”

ஐயையோ, போற போக்க பாத்தா அம்மா இவள் கவின் கூட சண்ட போட்டத மேடை போட்டு முழு உலகத்துக்கும் முழங்கிடுவாங்க போலருக்கே, இவள் பயம் இவளுக்கு.

வேரிக்கு கூட இப்பல்லாம் அப்பப்ப மைன்ட் வாய்ஸ் சவுண்ட் விடுது.

ங்க வேண்டிய ஹோட்டல் வரவேற்பு வளாகத்தில்  நுழைந்தனர்.

“ஒலிம்பிக் முடியுற வரைக்கும் இந்த ஹோட்டல்லதான் ஆன்டி அங்கிள் நீங்க ஸ்டே பண்ண போறீங்க, அம்மா அப்பாவுக்கும் இங்கதான் ரூம்,

மிர்னுக்கு ஒலிம்பிக் வில்லேஜ்ல குவார்டஸ் குடுத்துருக்காங்க, அவ அங்கதான் தங்கணும், அண்ணிக்கும் கவின்க்கும் இங்க ரூம் புக் செய்துருக்கோம்,  பட் அங்க மிர்னு கூட தங்க லேடீஸ் யாரும் இல்லை, அதனால அண்ணி அங்க தங்க வேண்டி இருக்கும்,

ஒஃபிலியாவால அங்க வரமுடியுறப்ப, அவள மிர்னு கூட தங்க சொல்லிட்டு கவினும் அண்ணியும் இங்க வருவாங்க”

வியன் திட்டத்தை விளக்க

“அது ஏன் மாப்ள? மிர்னு கூட வேரி இருக்கட்டும், ஒஃபி வர முடியுறப்ப அவள இங்க வர சொல்லுங்க, கல்யாணம் முடிஞ்ச பிறகு ஒஃபிய இங்க விட்டுடுதான நாங்க ஊருக்கு போகணும், அதுவரைக்கும் அவ எங்க கூட இருக்கட்டுமே”

அம்மா மாலினியின் ஐடியா இது,

ஆங்!!

வேரி ஆச்சர்யம் + அதிர்ச்சி அடைந்து கொண்டிருக்கும்போதே

“அண்ணியர் திலகமே மூன்றே நாளில் தங்கள் அன்னையர் திலகம் தாங்களிடமிருந்து தப்பிக்க வகை தேடும் நிலை இருக்க, ஆவலாய் ஆசையாய்  உங்களை வதுவை செய்த என் தமையனின் நிலையை ஆணாதிக்கம் என்று சொல்வீரோ நீவீர், இல்லை வலிய சென்று அவன் வாங்கி வந்த ஆயுள் தண்டனை என புரிந்து கொள்வீரா இனி நீர்?

வியன் அரசகால தமிழில் கால் வார,

அடுத்த பக்கம்