என்னைத் தந்தேன் வேரோடு 15(11)

அவனைப் பார்த்தவுடன் இவள் உணரும் முன் இவள் முகம் பூவாய் மலர்ந்தது.

“என்ன அத்தை உங்க சின்ன குரங்கு படு ஃபாஸ்ட் போல, மூனு நாள்ல சிரிச்சுட்டு”

இவளைப் பார்த்தவன் இவள் அம்மாவிடம் விசாரித்தான்.

“ஆமா மூனு நாளா எங்கே அவர், என்றே மனம், தேடுதே ஆவலாய்னு புலம்பிட்டு இருந்த குரங்கு இன்னைக்குதான் என் ஆத்துகாரர் எனக்கே எனக்குன்னு வாங்கி கொடுத்த மொபைல்ல கால் பண்ணி கேட்டுபேன்னு சொல்லிச்சு,

அதுக்குள்ள ஃப்ளைட்டுக்குள்ள வந்துட்டோம், பாவம் குரங்கு முகம் சுருங்கி போச்சு, இப்பதான் சிரிச்சிருக்குது” என்றவர்

“மூனு நாளைக்கு உங்க குட்டி குரங்க நான் மேச்சுட்டேன், இனி நீங்களாச்சு உங்க குரங்காச்சு, குரங்காட்டி வித்தை என்னைவிட உங்களுக்குதான் நல்லா வருது நீங்களே சமாளிங்க” என்றுவிட்டு நகர்ந்து போனார்.

இவளுக்கு கவினிடம் பேச ஆவலாக இருந்தது.

எப்ப என்னால உன் உயிருக்கு ஆபத்துன்னு உனக்கு தோணிட்டோ, அப்பவே உன் கூட இதுவரைக்கும் நான் வாழ்ந்த வாழ்க்கைக்கும், நீ என் மேல காமிச்ச அன்புக்கும் அர்த்தமில்லைனு ஆகிபோச்சு,

அவன் சொன்ன வார்த்தைகள் ஞாபகம் வந்து எப்படி பேச ஆரம்பிப்பது என்று தயக்கமும் வந்தது. அவன் முகத்தைப் பார்த்தாள்.

அவனோ அடுத்து செய்ய வேண்டிய வேலைகளை கவனிக்க தொடங்கினான்.

எப்படியும் நீண்ட பயணம் அவனோடு. அப்பொழுது பேசிக்கொள்ளலாம்.

விமானத்திலும் இவள் அருகில் இவளது அம்மா அமர,

“ஐயோ, அம்மா, இதுக்கு மேலயும் என்னால தாங்க முடியாது, எனக்கு கவின்ட்ட பேசணும், தயவு செய்து அவங்கள இங்க வர சொல்லுங்கம்மா”

பதறலில் ஆரம்பித்து கெஞ்சலில் முடித்தாள்.

“அது, மாப்ள சீட் தான் இது, இப்ப வருவார், ஒழுங்க பேசிட்டு வா, எங்கட்ட சிரிச்சு பேசினாலும் அவர் முகம் ஒன்னும் சந்தோஷமா இல்லை”

அம்மா எழுந்து போக, எத்தனையாய் அம்மா மாறிப்போனார் என்ற எண்ணத்துடன் இவள் அம்மாவைப் பார்த்துக்கொண்டிருக்கும் நேரத்தில் அங்கு வந்து சேர்ந்தான் கவின்,

“நான் இங்க உட்காரவா? இல்ல உங்க அம்மாவ கூப்டவா?” முகத்தில் எந்த உணர்வும் இன்றி விசாரித்தான் அவன்.

அவசரமாக தன் இருகைகளால் அவன் கையை பிடித்து இழுத்து தன்னருகில் அமர்த்தினாள் பெண்.

அமர்ந்தவன் இவள் கைகளிலிலிருந்து தன் கையை மெல்ல உருவிக்கொண்டு சீட் பெல்டை போடுவதில் கவனம் செலுத்தினான்.

எம்பி அவன் கன்னத்தில் ஒரு முத்தம் பதித்து அவன் தோளில் சாய்ந்தாள். தன் மன மாற்றத்தை அவனுக்கு காண்பிக்கும் வண்ணமாக.

“தயவுசெய்து இப்பயாவது உணர்ச்சி வசப்பட்டு எந்த முடிவும் எடுக்காத, நல்ல டைம் எடுத்து எல்லாத்தையும் அப்சர்வ் பண்னிட்டு, அப்புறமா ஒரு முடிவுக்கு வா, நான் எங்கயும் போக போறதுல்ல, உன் கூடதான் இருப்பேன்”

நான் உன்னை கொன்னுடுவேன்னு பயந்து வீட்டை விட்டு ஓடிட்டியே நீ”

கடைசி வரியில் அவன் வேதனையின் அளவு புரிய, அதோடு இதே வார்த்தைகளை அவன் முன்பு சொன்ன நிலையும் ஞாபகம் வர திக்கென்றது.

அன்று அவனுடன் வாழ தொடங்க இவள் தன் விருப்பத்தை தெரிவிக்க, அவசரபடாதே என்று மறுத்தானே,

இவளல்லவா அழுது கரைந்து அவனை சம்மதிக்க வைத்தாள்?  இவளை மயக்கி சொத்தை எழுதி வாங்க முயல்கிறவனின் செயலா அது?

ஒரு வேளை இவன் பக்கம் தவறே இல்லையோ? அந்த மெயிலின் மொத்தமும் பொய்யோ? ஃபாக்டரியின் இட ப்ரச்சனை இவள் இடம் சம்பந்தபட்டதே கிடையாதோ?

“கவின், அந்த ஃப்யூல் ஃபாக்டரிய இடம் மாத்தி கட்டிட்டதா சொல்லிகிட்டாங்களே அந்த இஷ்யூ முடிஞ்சிட்டுதா?” பரபரத்தாள்.

இவளை ஒருவிதமாய் திரும்பிப் பார்த்தான் அவன்.

“இல்லை, அந்த லேண்ட் ஓனர இன்னும் ட்ரேஸ் பண்ண முடியலை,  அந்த ப்ரச்சனையை கேள்விபட்டியா? அதுக்கு எதுக்கு நான் உன்னை கொன்னுடுவேன்னு நினைச்சே?”

விக்கித்துப் போனாள் வேரி.

தெய்வமே!! அப்படி என்றால் ஃபாக்டரியின் இட ப்ரச்சனை இவள் இடம் சம்பந்தபட்டதே கிடையாதா?

இவள் இவனை எவ்வளவாய் தவறாய் நினைத்து பாடாய் படுத்திவிட்டாள்??

“எனக்கு ஒருமெயில் வந்துச்சு, அதுல” தனக்கு வந்த அந்த மெயில் செய்திகளை இவள் பேசத் தொடங்க,  சில வரிகளில் நிறுத்த சொன்னான் கவின்.

“வேணாம், இங்க வச்சு இத பேச வேண்டாம், யாராவது நம்ம ஃபாலோ பண்ணலாம், சோ அப்புறமா சொல்லு”

சரி என இவள் தலையாட்ட, அவன் தன் இருக்கையில் சாய்ந்து அமர்ந்தான்.

“இப்ப நான் உங்க கைய பிடிச்சுகிடலாமா?” பரிதாபமாக கேட்டாள் வேரி.

“வேண்டாம், தள்ளியே இரு, என் மேல உள்ள எல்லா சந்தேகமும் ஆதாரத்தோட உனக்கு தீர்ந்த பிறகு பார்த்துகிடலாம்”

“இல்ல, கவிப்பா, இப்ப நான் உங்கள நம்புறேன்” கெஞ்சினாள். அழுகை வரவா வரவா என்றது.

“தெரியுது, முன்ன அந்த மெயிலை நம்புன, நான் கொல்ல வாரேன்னு வீட்டை விட்டு ஓடி என்னை கொல்லாம கொன்னுட்ட, இப்ப என்னை நம்புற, என் கைய பிடிக்க வர, நாளைக்கு திரும்ப எதை நம்புவியோ, என்ன செய்வியோ, அதனால எல்லாம் க்ளியர் ஆகட்டும், அப்புறம் பார்க்கலாம்” இவள் புறம் திரும்பாமலே முடித்துவிட்டான் அவன்.

அப்புறம் என்றால் எப்பொழுது?

தொடரும்…

Leave a Reply