என்னைத் தந்தேன் வேரோடு 14(9)

உடல் நிலையில் துன்பம் இல்லை என்பதால் முன்பு போல் அவள் கவினுடன் மனதிற்குள் சண்டையிட்டு கொண்டு இருக்காவிட்டாலும், ப்ரச்சனை வேறு உரு எடுத்து வந்தது.

ன்று வீட்டிலிருக்க போரடிக்கிறது என்று கவினுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாம் என்ற எண்ணத்துடன் அலுவலகம் கிளம்பிச் சென்றவள் காதில் விழுந்த அந்த தகவல் எல்லாவற்றையும் புரட்டிப் போட்டது.

ஆலையின் நுழைவுப் பகுதியிலும், ஆலையின் இயந்திரங்கள் இயங்கும் பகுதியிலுமாக கவினுக்கு இரு அறைகள் உண்டு.

இவள் அந்த நுழைவுப் பகுதியில் உள்ள அறைக்கு சென்றாள். அவள் எதிர்பார்த்தது போல் கவின் அந்நேரம் உட்பகுதிக்கு சென்றிருந்தான். இன்னும் 10 அல்லது 15 நிமிடங்களில் வந்துவிடுவான்.

அவனது தினசரி நடவடிக்கைகள் அவளுக்கு தெரியுமே,

அவன் வந்து அறையை திறக்கும் போது அவன் எதிர்பாரா வகையில் இவள் உள்ளிருக்க வேண்டும் என்று நினைத்தபடி இவள் வந்த தடயமே இன்றி உள்ளே காத்திருந்தாள்.

அந்த அறைக்கு அடுத்தது ஒரு சிறு கான்ஃபிரன்ஸ் ரூம்.

அங்கிருந்து பேசும் சத்தம் இங்கு புரிந்து கொள்ளும் அளவிற்கு கேட்கும் என்பது அவளுக்கு அன்றுதான் தெரியும்.

காரணம் இருவர் அங்கிருந்து எதை எதையோ பேசிக்கொண்டிருந்தனர்.

இவள் அதை கண்டுகொள்ளவில்லை.

“என்ன இன்னும் MDய காணோம், இப்ப வந்துருவார்தானே?” இருவரில் ஒருவர் கேட்க அடுத்த அறையில் இருந்த வேரியின் கவனம் அவர்கள் பேச்சில் சென்று நின்றது.

பேசுவது கவினைப் பற்றி ஆயிற்றே.

“வருவார், வருவார். வராம எங்க போயிடப் போறார்? அந்த ஃப்யூயல் ஃபாக்டரி இஷ்யூல சார் தலைய பிச்சுகிட்டு இருக்கார், அதான் நம்ம மில்லை கவனிக்கிறதுல கொஞ்சம் டிலே”

“ஆமா, அதுல எதோ ப்ரச்சனைனு சொல்றாங்க, என்னன்னு கேட்டா யாருக்கும் ஒன்னும் தெரியல”

“ஏன் தெரியாம,  எங்க டீம்ல பெரிய தலைங்க எல்லாருக்கும் தெரியும், ஆனா சொல்ல மாட்டோம், சொல்ல கூடாதுன்னு எம்.டி ஆர்டர்”

“அப்ப உங்களுக்கும்தான் தெரிஞ்சிருக்கும், நீங்கதான் பெரியாளாச்சே”

“தெரியும்தான் சார் ஆனால் சொல்ல முடியாது, சொன்னா வேலை போயிடும்”

அடுத்து அவர்கள் பேச்சு வேறு திசை செல்ல வேரிக்குள் சிறு நெரிஞ்சு முள் ஜனனம்.

வேலையை விட்டு எடுத்துடுவேன்னு கவின் தன் ஊழியர்களை மிரட்டும் அளவுக்கு என்ன ப்ரச்சனை? அவ்ளவு பெரிய ப்ரச்சனையை கவின் இவளிடம் ஏன் சொல்லவில்லை?

அப்பொழுது கூட அந்த இ மெயில் விஷயம் உண்மையாக இருக்கும் என்று வேரிக்கு நினைவில் கூட தோன்றவில்லை. ஆனால் கவின் அவளிடம் விஷயத்தை மறைக்கிறான் என்பது மனதிற்கு கஷ்டமாக இருந்தது.

ஒரு மனைவியாக அவன் துன்பத்தில் ஆறுதலாக இருப்பாள் வேரி என்று அவனால் இன்னும் நினைக்க முடியவில்லைதானே. பயந்து போய் அழத்தான் செய்வாள் என்று நினைக்கபோய்தானே கவின் இவளிடம் உண்மையை சொல்லவில்லை?

இன்னும் கூட அவனால் இவளை ஒரு தைரியசாலியான பெண்ணாக நம்ப முடியவில்லைதானே?

வள் அறையின் அட்டாச்ட் வாஷ் ரூமிற்குள் சென்றிருந்த நேரம் கவினும் இன்னும் யாருமோ அந்த அறைக்குள் நுழையும் சத்தம் கேட்டது.

இன்னொருவர் கிளம்பி போகட்டும், இவள் வாஷ்ரூம் அறையை திறந்து கவின் எதிர்பாரா நேரம் முதலில் சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும், பின் மெல்ல ஃபாக்டரியில் என்ன ப்ரச்சனை என்பதை விசாரிக்க வேண்டும்.

ஒஃபிலியா விஷயத்தைப் போல் இதிலும் கவின் மனம் சுகிக்கும் படி நடந்து கொள்ள வேண்டும்.

இதை எண்ணும்போதுதான் அந்த மெயிலில் குறிப்பிட்டிருந்த விஷயமே ஞாபகம் வருகிறது. கூடவே அவள் அம்மா மாலினி முன்பு சொன்ன செய்தியும்.

முன்புவரை அவளுக்கு இப்படி தோன்றியதில்லை, ஆனால் இப்பொழுதோ உண்மையில் அந்த இடம் கவினுக்கு முக்கியமானதாக இருந்திருக்குமோ என்று ஒரு சுரீர் நினைவு.

வெளியே சொன்னால் வேலையை விட்டு தூக்கிவிடுவேன் என கவின் சொல்லி இருப்பதாக அவள் கேள்விபட்ட செய்தியின் தாக்கம் அது.

மனதிற்குள் கசப்பு கரைந்து பரவியது. சே, எவனோ என்னமோ சொன்னான்னு கவினைப் போய், என்ன நினச்சுட்ட நீ? இவள் மனதிற்க்குள் தன்னை கடிந்து கொள்ள தொடங்கிய நொடி அறைக்குள் கவினுடன் வந்திருந்தவன் குரல் இவளை அடி வயிற்றில் குத்தியது

“சார், நம்ம ஃபாக்டரிய மாத்தி கட்டியிருக்கமே அந்த லேண்ட் இஷ்யூ முடிஞ்சிட்டுன்னு சொல்லிக்கிறாங்களே, முடிஞ்சிட்டா சார்? அப்ப நாம…” அந்த நபர் விசாரிக்க,

அதை முடிக்க கூட விடாமல் வந்து விழுகிறது கவினின் உறுமல்.

“ஷட் அப், இதைப் பத்தி இங்க வச்சு பேசாதீங்கன்னு சொல்லியிருக்கேன்ல, பக்கத்துல கான்ஃப்ரென்ஸ் ரூம்,  அதுல யார் இருந்தாலும் அவங்களுக்கு கேட்கும்,

அடுத்த பக்கம்