என்னைத் தந்தேன் வேரோடு 14(7)

மேடையிலிருந்து இறங்கும் போது மேடை ஏறிய பொழுதைவிட இன்னுமாய் நிறைவாய் நிரம்பி இருந்தது வேரியின் மனது.

ஒஃபிலியா தான் மெயில் எழுதியது தவறு என்று சொல்லி இவளிடம் மன்னிப்பு கேட்டுவிட்டதாக இவள் நினைத்தாள்.

ஒஃபிலியா தான் செய்த தவறு என்று குறிப்பிட்டது, கவினை விரும்பி அவனிடம் மனம் ப்ளஸ் மணம் கோரியதை என்று இவளுக்கு புரியவில்லை.

ஒஃபிலியாவிற்கும் இந்த மெயிலுக்கும் சம்பந்தம் இல்லை என்ற விஷயம் வேரிக்கு தெரிந்திருந்தால் ஒஃபிலியா எதை குறிப்பிடுகிறாள் என்பதும் புரிந்திருக்குமாயிருக்கும்.

எது எப்படியோ இப்பொழுது சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருந்தாள் வேரி.

கணவன் கைபிடித்தபடி மேடையிலிருந்து இறங்கியவளை அப்படியே அங்கிருந்த தங்கள் அறைக்கு அழைத்துச்சென்ற கவின், அறையில் நுழைந்ததும் அவளை அணைத்த விதத்தில்  அவனது பாராட்டும் நிம்மதியும் புரிந்தது மனையாளுக்கு.

“ரொம்ப நிம்மதியா இருக்குடி,  I’m blessed to have you, என் பெஸ்ட் ஃப்ரெண்ட் நீ தான்”

ஃபிலியாவின் விழாவிற்கு வியன் வராமலா?

விழாவின் கூட்டம் குறையும் வரை படு பிஸியாக வந்தவர்களை கவனிப்பதில் ஈடுபட்டிருந்தவன், கூட்டம் குறையவும் சற்று ஓய்வாக அமர்ந்திருந்த நீலாவின் அருகில் சென்று அவர் அமர்ந்திருந்த இருக்கைக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்தான்.

கண் மூடி சற்றே சரிந்து அமர்ந்து கால் நீட்டி அவன் இருந்த கோலத்தை சற்று தொலைவில் இருந்து பார்த்த மிர்னாவிற்கு சில விநாடிகள் என்ன செய்யவென்று புரியவில்லை.

இப்படி செய்வதறியாமல் நிற்பது அவளுக்கு சற்றும் அனுபவமில்லாத செயல். மிர்னா ஒருபோதும் சுயநலவாதியாக இருந்தது இல்லை. ஆனாலும் பாசம் குடும்பம் என்ற உணர்வு கட்டுக்குள் பெரிதாக இயைந்து வளர்ந்தவளுமில்லை.

காதல் தோன்றியபின் இவை ஒவ்வொன்றும் அவளுக்குள் புதிய கோணத்தில் புது அனுபவமாய்,

அவசரமாய் அவள் கண்கள் கவினை தேடின. அவனும் வேரியும் கண் கண்ட காட்சியில் மிஸ்ஸிங்.

அவசர அவசரமாக வியனை நோக்கி ஓட்டமும் நடையுமாக சென்றாள்.

வேக வேகமாக வந்து நின்றவள் முகத்தை நிமிர்ந்து பார்த்த நீலா, அவள் முக தவிப்பைக் கண்டவர் ஒன்றுமில்லை என்பது போல் ஆறுதலாக கண் அசைத்து தலையாட்டினார்.

இவள் வரவை எப்படி அறிந்தான் வியன் என்று புரியவில்லை, கண்களை திறக்கவெல்லாம் இல்லை ஆனால் அவன் முன் நின்றிருந்தவள்  இடகையை தன் வலக்கையால் பற்றிக்கொண்டான். கைவிலகாமல் மெல்ல அவன் முன் முழந்தாளிட்டு அமர்ந்தாள் மிர்னா.

இரு நிமிடம் யாரும் பேசிக்கொள்ளவும் இல்லை. அசையவுமில்லை.

ன்று இரவு ஃப்ளைட்டில் கிளம்பிவிட்டனர் வியனும் மிர்னாவும்.

ஒஃபிலியாவிற்கு இதை விட்டால் இப்போதைக்கு ஆன்ட்ரூ குடும்பத்துடன் நேரம் செலவழிக்க, ஆன்ட்ரூவை சந்திக்க வாய்ப்பு இல்லை என்பதால் அவளை வியனின் அம்மா வீட்டில் விட்டுவிட்டு இவர்கள் மாத்திரமாக கிளம்பிவிட்டனர்.

ஏற்கனவே சற்று முன்புதான் மிர்னாவின் பயிற்சிக்கு ஒரு வாரம் விடுமுறை ஆகி இருந்ததால் அதற்கு மேல் தாமதிக்க இவர்களுக்கு வழி இல்லை.

பயணத்தில் மிர்னா மனம் முழுவது ஒரே நினைவு அலை தன்னை பற்றியும் தன் பெற்றோர் பற்றியும்.

என்னவென்று ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை என்றாலும் ஒருவரை ஒருவர் நம்பிக் கொள்வதும் புரிந்து கொள்வதும் வியன் வீட்டில் இவள் காண்கிறாள்.

இப்படி ஒரு பிணைப்பை, பாசத்தை, உறவை இவள் தன் வீட்டில் உணர்ந்ததே இல்லை. காரணம் இவள் பெற்றோருக்கும் வியனின் பெற்றொருக்கும் உள்ள குணவித்தியாசம் என்றாலும்,

இவள் இடத்தில் வியனோ கவினோ இருந்திருந்தால் இவளைப் போலத்தான் நடந்து கொள்வார்களா என்ற கேள்விக்கு அவளால் இப்பொழுது ஆம் என்று ஒப்பமுடியவில்லை.

ஒருவகையில் இவளும் இவள் பேற்றோர் போல்தானோ? என்னைப் போலவே நீ நினைக்க வேண்டும் நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பதில்?

அவர்கள் பக்க தேவை என்ன? அவர்களிடம் தவறே இருந்தாலும் அதன் அடி காரணம் என்ன? அதை சரி செய்ய இவளால் எதாவது முடியுமா என்று இவள் எதையும் யோசித்ததே இல்லையே? இவள் முடிவை அவர்கள் மீது திணித்திருக்கிறாள், அவர்களைப் போலவே.

அன்றைய நிலையில் அவள் வீட்டை விட்டு வந்தது தவறான முடிவு இல்லை என்றாலும், அதன்பின்பு இன்று வரை அவர்கள் இவளை என்ன செய்துவிடுவார்களோ என்று யோசித்திருந்தாலும், அவர்கள் பாவம் என்ன செய்து கொண்டிருக்கிறார்களோ என்று ஒரு நாளும் இவள் நினைத்ததில்லையே?

“என்னாச்சு மிர்னு, அன்யூஷுவலி ரொம்ப அமைதியா இருக்க? வீட்டு ஞாபகம் வந்துட்டா?” விசாரித்தான் வியன்.

இவள் மனதை அவன் புரிந்து கொள்ளாமல் இருந்தால்தான் ஆச்சர்யம்.

அடுத்த பக்கம்