என்னைத் தந்தேன் வேரோடு 14(5)

“கவிப்பா உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ், என் கூட நீங்க வரணும்” இவள் அழைக்க,

கவின் ஏன் எங்கு என்று கேட்காமல் சம்மதிக்க, நீலாவும் மனோகரும் உடன் வர மறுத்துவிட்டார்கள்.

“அவன் பெர்த் டே, நீங்க ரெண்டு பேருமா செலிப்ரேட் செய்யணும், நாங்க எதுக்கு” என்றபடி ஒதுங்கிக் கொண்டனர்.

அவர்களுக்கு இவர்கள் செல்வது ரெஜிஷ்ட்ரேஷனுக்கு என்று தெரியாதே, சாட்சி கையெழுத்திட அவர்கள் வேண்டுமென இவள் எதிர்பார்த்தாள்.

ஆனால் இங்கு வைத்து விஷயத்தை சொன்னால் கவின் வரமாட்டேன் என்றுவிட்டால்,

ஆக அங்கு போய் சமாளித்துக் கொள்ளலாம் என்று நினைத்தவள் கவினுடன் கிளம்பிவிட்டாள்.

காரில் கவின் அவளிடம் கணவனுக்குள்ள உரிமையுடன் அவளை  சீண்டிக் கொண்டே இருந்தான்.

“வர வர உங்க அட்டகாசம் தாங்க முடியலைப்பா”

“இது ஓல்ட் டய்லாக், ஒத்துக்க முடியாது,புதுசா எதாவது சொல்லுடி பொண்டாட்டி”

“மிஸ்டர் .அழகு சுந்தரம் இன்னைக்கு படு குஷி மூட்ல இருக்கார் போல இருக்குது”

“ஆமாண்டி ஆத்துகாரி, டாக்டர் சொன்ன மூனு மாசம் கதை நேத்தோடு முடிஞ்சிட்டு, இது புது டே, இதுக்கு புது நைட்டும் வரும்” கண்சிமிட்டினான்.

“ஷ்ஷ்ஷ்ஷ், இத நான் மறந்தே போய்ட்டேனே, நான் கூட சார் பிறந்த நாள்னு தான் எஞ்ஜாய் பண்ணிகிட்டு இருக்கார்னு நினைச்சேன்”

“அதுவும்தான் என் அன்பான மனைவியே, இது டூ இன் ஒன் செலிப்ரேஷன் ,ஃபர்ஸ்ட் பெர்த் டே வித் மை ஃபர்ஸ்ட் பொண்டாட்டி, அண்ட் ஃபர்ஸ்ட் டே ஆஃப்டர் ஃபர்ஸ்ட் த்ரீ மந்த்ஸ், எப்படி”

“போடா, நீ நல்ல பையன்னு நினச்சு ஏமாந்து போய்ட்டேன்”

“ஹேய், இது நல்ல பையன் வேலை இல்லாம என்னதாம்? என் வைஃப், என் டே, இல்ல இல்ல ,என் வைஃப், என் நைட்”

“நிறுத்துறீங்களா?”

“அதெல்லாம் கிடையாது, இது ஒரு தொடர்கதை, முடிவே கிடையாது”

சட்டென ஒன்று வைத்தாள் அவனுக்கு,

“காரை நிறுத்றீங்களான்னு சொன்னேன்” அவள் சொல்ல சொல்ல காரை செலுத்தி வந்தவன் விழிகளில் அவள் நிறுத்த சொன்ன இடத்தைக் கண்டதும் ஆச்சர்யம் ப்ளஸ் மகிழ்ச்சி.

வேரியின் நிலம் நகர எல்லையை சார்ந்தது இல்லை என்பதால் பத்திரப்பதிவு அலுவலகமும் முறம்பு என்ற ஒரு சிற்றூரில் இருந்தது.

அதன் முன்பு சென்று காரை நிறுத்தவும் கவினுக்கு புரிந்துவிட்டது.

ஆனால் இவள் எதிர்பார்த்தது போல் அவன் மறுப்பு ஏதும் சொல்லவில்லை. ஆனால் பலமாக ஆச்சர்யபட்டான்.

“ஹேய், எப்படி குல்ஸ், உனக்கு இதெல்லாம்” என ஆரம்பித்தவன்

“முட்டகண்ணி, வர வர ஆள கவுத்ற அத்தனை டெக்னிகிலும் எக்ஸ்பெர்ட் ஆகிட்டு இருக்க” என்றபடி அவள் கைபிடித்து அழைத்துப் போனான் உள்ளே,

“அது, நீங்க, ஒத்துக்க மாட்டீங்கன்னு நினச்சேன், என்ட்ட உங்களுக்கு குடுக்க இத தவிர வேற ஒன்னுமில்லை, அதான்”

இவள் சொல்ல அவன் நின்று இவள் முகம் பார்த்தான். முன்பிருந்த முகபாவம் இல்லை.

“ப்ளீஃஸ் கவிப்பா, கெஞ்சி கேட்டுகிறேன் வேண்டாம்னு மட்டும் சொல்லிடாதீங்க, நான் முதல் முதல்ல உங்களுக்குன்னு கொடுக்கிறது”

கனிந்து விட்டது அவன் முக பாவம்.

“நீ தந்து நான் வேண்டாம்னு சொல்வேனா? அதோட, எனக்கே நீ எதையாவது தரணும்னாலும் என் கைய நீ எதிர்பார்க்கிற நிலைலதான் நன் உன்னை வச்சிருக்கேன் என்ன? அது இவ்வளவு நாள் எனக்கு தோணலை, இனி கவனிச்சுகிடலாம்”

அடுத்து அவளை உட்கார வைத்துவிட்டு அவனே செய்ய வேண்டிய வேலைகளை கவனித்தான்.

அதற்குள் அவன் நண்பர்கள் இருவர் வர கையெழுத்திடும் வேலையை மாத்திரம் வேரி செய்யும்படி அனைத்தையும் அவர்களே செய்து முடித்தனர்.

பத்திரபதிவு முடிந்து அலுவலகத்தைவிட்டு இவர்கள் வெளியே வரவும்

ஒரு தனியார் வங்கியிலிருந்து இவளுக்கு அக்கவ்ண்ட் ஓபன் செய்து தரவென ஒரு நபர் வந்து நின்றார்.

“எனக்கு ஏற்கனவே அக்கவ்ண்ட் இருக்குது”

“அது உங்க வீட்ல தந்தது,  இது நான் என் வைஃப்க்கு கொடுக்கிறது”

அவன் குரலின் தொனியை உணர்ந்தவள் அத்தனை பாரங்களிலும் கட கடவென கையெழுத்திட்டாள்.

அன்று இரவு அணை திறந்த வெள்ளமாய் கவின். அவனோடு அவனுடைய அவள்.

அடுத்த பக்கம்