என்னைத் தந்தேன் வேரோடு 14(3)

“ஏய், மெல்லடி, சட்டு சட்டுனு திரும்பாதன்னு சொன்னாங்கல்ல”

முகத்தை இன்னும் உர்ரென வைத்திருந்தாள் வேரி,

“உனக்கு பொறுமை ரொம்ப அதிகம் குல்ஸ், இந்த விஷயத்துல நம்ம பாப்பாவும் உன்னை மாதிரி இருந்தா பத்து மாசம் எப்படி உள்ள வெயிட் பண்ணும்னுதான் தெரியல”

“ஐயோ, என்னங்க இப்படி சொல்லிடீங்க, நான் பொறுமையா இருப்பேன், ம் சொல்லுங்க, அடுத்து யாரு?”

“நல்ல லவ்லாம் நீ வர்றதுக்கு முன்ன அவ்ளவுதான், பட் மத்தது ரெண்டு இருக்கு. நான் யு ஜி படிக்கிறப்ப என் க்லாஸ்மேட் ஒரு பொண்ணு என்னை விரும்புறான்னு எங்க பாய்ஸ்லாம் அடிக்கடி சொல்லிப்பாங்க, ஆனா அந்த பொண்ணு கடைசிவரை ஒரு நாளும் ஒரு வார்த்தை கூட என்ட்ட வந்து பேசுனது கிடையாது”

“பாவம்ல அந்த பொண்ணு, கூப்பிட்டு அட்வைசாவது செய்திருக்கலாமில்லையா?”

“ஏன், அப்பதான் இவனுக்கு என் மேல அக்கறை இருக்குது, ஒரு நாள் என்னை லவ் பண்ணுவான்னு அது நினச்சுகிடுறதுக்கா? அதோட அவ பிஜி க்ளாஸ்மேட்டை லவ் பண்ணி கல்யாணம் செய்துட்டான்னு பின்னால கேள்விப்பட்டேன்”

“ஆங், அடுத்து பிஜில?”

“பிஜி கால்டெக், லாஸ்ஏஞ்சலிஸ், அப்பதான் கொஞ்சம் மனசு உறுத்துற மாதிரி ஒரு இன்சிடென்ட்”

வேரியின் ஆண்டெனா பலமாக உயர்ந்தது.

“என்னாச்சுப்பா”

“எனக்கு எப்பவுமே பொண்ணுங்க கூட ஃப்ரெண்ட்ஷிப் இருந்தது கிடையாது, பட் வியனுக்கு ஸ்கூல் ஜாய்ன் பண்ண நாள்ல இருந்து ஒஃபிலியான்னு ஒரு ஃப்ரெண்ட் உண்டு”

“ம், மிர்னு சொன்னா”

மிர்னா வந்து தங்கி சென்றபின், வேரி அவளை மிர்னு என்பதை கவனித்தான் கவின். மிர்னாவிடம் கூட ஒரு எல்லைக்கு வெளியே நின்று பழகும் வேரியின் சுபாவ மாற்றம் கவினுக்கு மகிழ்ச்சியை தந்தது.

“அந்த ஒஃபிலியா கால்டெக்ல யூஜி சேர்ந்தா நான் பி ஜி செய்துகிட்டு இருக்கிறப்ப”

“அவ இங்க அம்மாவுக்குமே ரொம்ப பெட், அவ அம்மா சின்ன வயசிலேயே இறந்துட்டாங்க,அதோடு எங்க அம்மாவுக்கு பெண்குழந்தை கிடையாது, அது எல்லாம் சேர்ந்து எங்க அம்மாட்ட அவளுக்கு ஸ்பெஷல் ப்ளேஸ்”

“…..”

“என்ன சத்தத்தை காணோம், பிடிக்கலைனா இப்படியே ஸ்டாப் பண்ணிடுறேன்”

“அச்சோ இல்லப்பா, தேவையில்லாம உங்க மனச கஷ்டபடுத்துறனோன்னு ஒரு ஃபீல்”

“சே, இதெல்லாம் நான் யார்ட்டயும் பேசுனதே இல்லை, ஒரு பொண்ண பத்தி இப்படி  ஃப்ரெண்ட்ஸ்ட்ட கூட ஷேர் பண்றது சரின்னு பட்டது இல்ல,

அவ வியனோட ஃப்ரெண்ட் வேற, அதனால அவன்ட்டயும் சொன்னது இல்ல, உன்ட்ட எல்லாத்தையும் பேசிக்கிறது எனக்கு சந்தோஷம்தான்”

அவன் மீது கைபோட்டு அவன் தோளை பிடித்தாள் வேரி.

“ம், சொல்லுங்க”

“அவ  ஜாய்ன் செய்த புதுசுல அம்மாவும் வியனும் கேட்டுகிட்டதால, அவளுக்கு தேவையான ஹெல்ப் எல்லாம் செய்திருக்கேன்,

அப்புறம் ஸ்டடிசிலும் அவ என்ட்ட ஹெல்ப் கேட்டு வர ஆரம்பிச்சா, நானும் என்னால முடிஞ்சத செய்து கொடுப்பேன், அதைத் தாண்டி நாங்க எதையும் பேசிகிட்டோம்னு கூட கிடையாது,

பட் அவளுக்கு ஏன் அப்படி தோணிச்சுன்னு தெரியல, நான் கோர்ஸ் முடிஞ்சு இந்தியா கிளம்புற டைம் வந்து ப்ரபோஸ் பண்ணா, எனக்கு கஷ்டமா இருந்துச்சு”

“பாவம்தான் அவ, நேர்ல கேட்டுடாளே, என்ன சொன்னீங்க?”

“உனக்கே தெரியுமே என்ன சொல்லியிருப்பேன்னு,”

“ம், என்ன சொல்லிருப்பீங்க? எங்க அம்மா அப்பா யாரை செலக்ட்  செய்றாங்களோ அவங்களதான் நான் கல்யாணம் பண்ணுவேன்னு சொல்லி இருப்பீங்க, ஆனா அது மத்த பொண்ணுனா ஓகே, இவளுக்கு அது வேற மாதிரி நம்பிக்கை தராதா?”

“ம், நீ சொல்ற மாதிரிதான், என் அம்மா அப்பா சாய்ஸ்தான்னு சொன்னேன். அவளும் உங்க பேரண்ட்ஸ் சாய்ஸ் நானா இருந்தால்னு கேட்டா, அப்ப என் மனுசுல பேரண்ட்ஸ் முடிவுதான்னு அழுத்தமா இருந்ததால அதை அப்ப பார்க்கலாம்னு சொல்லிட்டேன்.

சிரிச்சுகிட்டே போய்ட்டா, பட் அதுக்கு பிறகு இன்னைக்கு வரைக்கும் அவளை நான் பார்த்ததே இல்ல, நம்ம மேரேஜுக்கு கூட வரலை,

எதோ ஒருவகைல இன்னும் மனசுக்குள் ஒரு உறுத்தல், வியன் மாதிரி எனக்கு பழக தெரியலையோன்னு, அவன்ட்ட வராத சலனம் எதுக்கு என் மேலன்னு”

“அது அவங்க ரெண்டுபேரும் சின்ன வயசுல இருந்து பழகி இருக்காங்க, உங்கட்ட அப்படி இல்லையே, அதான், இதுக்காகல்லாம் ஃபீல் பண்ணாதீங்க, ஆனா அவ உங்க மேல கோபத்துல இருப்பாளோ?

அடுத்த பக்கம்