என்னைத் தந்தேன் வேரோடு 14(11)

க அந்த இடம் இவளிடம் இருந்ததால்தான் இவள் அம்மா சொன்னது போல் இவள் இஷ்டபடி ஆடி இருக்கிறானா கவின்? நடித்து இவளிடம் எழுதி வாங்கவா? அதை அவனுக்கு கொடுத்துவிட்டாளே இனி இவள் கதை எச்சிலையா?

இன்னும் ஏன் உடன் வைத்திருக்கிறான்? மிர்னாவை கொன்றுவிட்டு இவளையும் கொன்று விடுவானோ? இல்லை இதற்குள் ஒன்றிரண்டு கொலை முயற்சி தோல்வி அடைந்து விட்டதா, இவளுக்குத்தான் தெரியவில்லையோ?

குழந்தை வேண்டாம்  என்றானே? வாழ்வது நடிப்பு எனும்போது குழந்தை வேண்டும் என்று எப்படி தோன்றும்?

இவள் மனம் வருந்தினால் இடத்தை எழுதித் தருவதில் தொல்லையாகிவிடும் என பிள்ளைக்கு சம்மதித்துவிட்டான் போலும், அப்படி வந்த பிள்ளை மேல் எப்படி விருப்பு வரும்? அதனால் தான் அசட்டை செய்திருக்கிறான்.

விலகிச் விலகி சென்றவளை வசியம் செய்ய அந்த குழந்தை ஷர்மிலியை  வைத்து நாடகம்.  இவள் கவினிடம் விழுந்த பின்பு அந்த குழந்தை ஷர்மிலி  இறந்த போது கூட  இவன் கண்டு கொள்ளவே இல்லை.

அவன் தாய் தந்தையுடன் சேர்ந்து கொள்ள வேண்டுமாம் இவள், ஆனால் இவள் அம்மா வீட்டோடு சங்கார்த்தமே கூடாதாம். அவர்கள் இவன் நாடகத்தை இவளுக்கு புரிய வைத்துவிடுவார்கள் என்பதால்தானே,

எல்லாவற்றையும் என்னமாய் நம்பினாள்? எப்படியாய் கழுத்தறுத்து விட்டார்கள். கால் ஊனமாய் இருந்தது தவறில்லை, ஆனால் இவள் அறிவு ஊனமாக இருந்திருக்கிறதே,

“எனக்காவது கால்தான்டா ஊனம், உன் குடும்பத்துக்கு மனசு ஊனம், கொலைகாரங்க”

புலம்பிக் கொண்டிருந்தவளுக்கு அப்பொழுதுதான் உறைத்தது,

இங்கிருந்து இவள் இப்படி அழுது கொண்டிருந்தால் கவின் வந்ததும் இவளுக்கு விஷயம் தெரிந்துவிட்டது என்று அவன் கண்டுபிடித்து இவளை தீர்த்துக் கட்டிவிட்டால், மிர்னாவை காப்பாற்றுவது யாராம்?

கவின் வீட்டை அடைந்தபோது வேரி அங்கு இல்லை.

தொடரும்…

Leave a Reply