என்னைத் தந்தேன் வேரோடு 13 (4)

முதலில் மறுப்பாக இரண்டு அடி அவனது தோளில் வைத்த மனைவியோ, அடுத்து அவனுடன் இயைந்து போனாள்.

மீண்டும் அவளை அவன் கண் திறக்க அனுமதித்த போது, அந்த மார்ச்சுவரி வேன் கடந்து சென்றிருந்தது.

“போங்கப்பா, வர வர உங்க அட்டகாசம் தாங்க முடியல, முதல்ல ஆஃபீஸ், இப்ப காரா? உங்க காதல் சாம்ராஜ்ய எல்லை  விரிஞ்சுகிட்டே போகுது”

குறும்பு நகை அவனிடம். “இல்லையே,அது ஒற்றை புள்ளி புயலாய் உன் மேல மட்டுமா குறுகி போய்தானே இருக்குது”

“போடா”

“வாடி” கதவை திறந்துவிட்டான் அவன்.

றங்கி நின்றவள் முகம் பார்த்தவனுக்கு புரிந்து போயிற்று,

“பசிக்குதுதான குல்ஸ், என்ன சாப்டுற?”

“ப்ரெக்னென்டா இருக்கிறவங்க அஜினமோட்டால்லாம் சாப்பிட கூடாதாம், ஹோட்டல் ஃபூட்ல அஜினமோட்டா இருக்கும், அதோட இந்த டைம்ல மொத்ததுக்கு வெளி சாப்பாடே சாப்டாம இருக்கிறதுதான் சரி”

“அது சரிதான், முடிஞ்சவரை அவாய்ட் செய்வோம், பட் இப்ப பசிக்குதே உனக்கு”

“வா” என்று அருகிலிருந்த பழக்கடைக்கு நடத்திக் கொண்டு சென்றவன்,

ஆப்பிள் வாங்கி கழுவி நீட்டினான். :அப்படியே சாப்டு, இப்போதைக்கு பசி தாங்கும்”

ஒரு கையால் அவனது ஒரு கையை பற்றியபடி, மறுகையால் பழத்தை சாப்பிட்டபடி அவள் மருத்துவமனை வந்து சேர்ந்த போது சொன்னாள்.

“நாம ரெண்டு பேரும் மட்டுமா எங்கயாவது ட்ரிப் போய்ட்டு வந்தா நல்லா இருக்கும்தானே, உங்க கூட இப்படி வெளிய வரது ரொம்ப நல்லா இருக்குது”

“எனக்கும் ரொம்பவே ஆசை குல்ஸ், இப்ப நம்ம ஃபாக்டரி இஷ்யூல எதுக்கும் டைம் எடுக்கவே முடியல, அது இன்னும் கொஞ்ச நாள்ல எப்படியும் சால்வ் ஆகிடும், தென் நாம ஒரு சூப்பர் ஹனிமூன் போய்ட்டு வரணும்னு ப்ளான் போட்டுருந்தேன்”

“கண்டிப்பா போவோம்பா” ஆர்வமாக துள்ளல் பார்வையுடன் அவன் முகம் பார்த்தாள்.

“இப்ப எப்படி குல்ஸ்? இந்த ஸ்டேஜ்ல ட்ராவல் செய்ய கூடாது, அதோட இன்னும் கொஞ்சம் ரெஸ்ட்ரிக்க்ஷன்லாம் இருக்கும், ஜென்ரலா இந்த டைம்ல வாமிட்டிங் இருக்கும்னு சொல்வாங்கல்ல,

எனக்கு தெரிஞ்சு இனி நம்ம ஜூனியர் வந்த பின்ன தான் இதெல்லாம் யோசிக்க முடியும்னு நினைக்கிறேன், அதுக்கு பிறகும் பேபி ரொம்ப குட்டியா இருக்கிறப்ப  வெளிய ட்ரிப் கொண்டு போறது சரியா வராதே”

ஆக கவின் ஆசைப்பட்ட ஒரு ஹனிமூனை இல்லை என்று ஆக்கி கொண்டு இந்த குழந்தை வருகிறதோ? வேரி நினைக்கத் தொடங்க, அவர்களை தேடி அந்த நர்ஸ் இவர்கள் கார் நின்றிருந்த இடம்  வந்தாள்.

“நெக்ஸ்ட் உங்க டர்ன், வாங்க” என்றபடி.

டாக்டரைப் பார்த்து அவருக்கு கைனகாலஜி மறந்து போகும் அளவு வேரி வெவ்வேறு வித கேள்விகள் கேட்டு மீண்டும் இவர்கள் அறையைவிட்டு வெளியே வந்தபோது கவின் சொன்னான்

“குல்ஸ் பேபி பிறந்ததும் நீ கைனகாலஜி படிக்ற ஸ்டூடண்ட்ஸுக்கு டெக்ஸ்ட் புக் ஒன்னு எழுதிரலாம், உன் நாலெட்ஜ் எல்லோருக்கும் யூஸ் ஆகும் பாரு, ஆனா இப்ப என் டவ்ட் என்னன்னா…” அவன் இழுக்க

“சீக்கிரம் உள்ள போவோம், அடுத்தவங்க உள்ள போய்ட்டா இன்னும் நாம டாக்டரைப் பார்க்க எவ்ளவு நேரம் வெயிட் பண்ண வேண்டி இருக்குமோ?” அவனை மீண்டுமாக மருத்துவரின் அறைக்குள்ளாக அவசரமாக கைபிடித்து இழுத்தாள்.

“ஏன்டா?” புரியாமல் பார்த்தான் கவின்.

“நீங்க தான உங்களுக்கு எதோ டவ்ட்னு சொன்னீங்க”

வாய்விட்டு சிரித்தான் அவன்.

“என் டவ்ட் என்னன்னா, இன்னைக்கு உன்னை பார்த்த பிறகு இனிமே இந்த டாக்டர் தமிழினி தாமஸ் இந்த ஹாஸ்பிட்டலுக்கு வேலைக்கு வருவாங்களா? இல்ல உன்னை திரும்பவும் பார்க்க பயந்து போய் ஊரை காலி செய்துறுவாங்களாங்கிறதுதான், இந்த டவ்ட்டை அவங்கட்ட போய் க்ளாரிஃபை செய்துட்டு வருவமா?”

முறைத்தாள் வேரி.

“உங்களுக்கு குழந்தை விஷயம் அவ்ளவு கிண்டலா இருக்குது என்ன?” உதடுகளை இழுத்து பழிப்பம் காட்டினாள்.

“வீட்டுக்கு போவமா?” கண்சிமிட்டினான் கவின். அவன் கண்கள் இடவலமாய்  வளைந்தோடிய அவள் இதழ்களில்.

“ஆசை தோசை, இன்னும் ரெண்டு மாசத்துக்கு ஒன்னும் கிடையாது, டாக்டர் சொல்லிருக்காங்க”

அடுத்த பக்கம்

Advertisements