என்னைத் தந்தேன் வேரோடு 13 (2)

“உன்னை ஒரு குழந்தைன்னு நினச்சேன் மிர், ஆனா கண்டிப்பா நான் நினச்ச மாதிரி நீ இல்ல, வெரி டிஃப்ரெண்ட்”

“ஹா, ஹா,நான்,டூ இன் ஒன், குழந்தை அண்ட் கிழவி” கண்சிமிட்டினாள்.

“ஆக மொத்தம் கல்யாண ஸ்டேஜ்ல இல்லைங்கிற”

“கரெக்ட், அது அதுக்குன்னு ஒரு நேரம் இருக்குதுல்ல, அது வர்றப்ப வயசும் மனசும் சரியா இருக்கும்”

அடுத்தநாள் ஒஃபிலியா வியனை சந்திக்கும்போது, மிர்னா சொன்ன அனைத்தையும் வார்த்தை மாறாமல் ஒப்பித்தாள்.

“இன்னொரு தடவை அவ என்ன சொன்னானு என்ட்டயும் நான் என்ன சொல்றேன்னு அவட்டயும் போய் பேசிகிட்டு இருந்தன்னா, உன் வீட்டை தான் அவ காலி செய்ய வேண்டி இருக்கும்” என்றான் அவன்.

“எங்களுக்கு நேருக்கு நேர பேசிக்கிட தெரியாமலா? அவ இப்போதைக்கு அவளா இருக்கட்டும், அவ மனசுக்குள்ள எந்த சலனமும் வேண்டாம்,

அதோட இதெல்லாம் நேர்ல ஒருத்தர்ட்ட ஒருத்தர் பேசி தெரிஞ்சிக்கிற சந்தோஷத்தை எங்களுக்கு விட்டுவையேன், இல்லனா நான் இனிமே உன்னை சின்ன வெங்காயம்னு தான் கூப்பிட வேண்டி இருக்கும்” முடித்துவிட்டான்.

ங்கு வேரியை கைனகாலஜிஸ்டிடம் அழைத்து  வந்திருந்தான் கவின்.

என்னதான் அப்பாய்ன்மென்ட் வாங்கி சென்றாலும் இப்படி மணி கணக்காய் காத்திருக்க நேரும் என்பதெல்லாம் அவனும் வேரியும் அறியாத விஷயம்.

“எங்களுக்கு அப்பாய்ண்மென்ட் 7.30. நாங்க சரியான டைம்க்கு தான வந்திருக்கிறோம், ஸ்டில் 14த் விசிடரா தான் நாங்க  டாக்டரை பார்க்கலாம்னு சொல்றீங்க” கவின் விசாரித்தான்.

“அப்படிதான் சார் அப்பாய்ண்ட்மென்ட் கொடுப்போம், பட் உங்களுக்கு முன்னால வந்து காத்திருக்கவங்கள விட்டுட்டு உங்களை எப்படி அனுப்ப முடியும்? டாக்டர் வர்ற டைம் முன்னபின்ன ஆகிடுதில்லையா? அதனால அட்ஜஸ்ட் செய்துகோங்க” என்றது அந்த ரிஷப்ஷனிலிருந்த சிறு உருவ பெண் அட்டெண்டர்.

திரும்பிப் பார்த்தால் காத்திருக்கும் அனைவரும் கர்பிணிகள். அவர்களுக்கும் வேரியின் நிலைதானே?

அதுவும் பெரும்பாலோர் மேடிட்ட வயிறுடன், உட்கார கஷ்டபட்டு உட்கார்ந்திருப்பதும், அவ்வப்போது அலுத்துக்கொள்வதும் அவர்களது உடல் மன நிலையை காண்பிக்கிறதே,

ஹாஸ்பிட்டல் சீஃப் இவனது நண்பன் மற்றும் உறவினன். ஒரு மொபைல் அழைப்பில் அத்தனை பேரையும் காக்கவைத்துவிட்டு இவர்கள் இப்பொழுதே உள்ளே சென்றுவிடலாம்தான். ஆனால் அது கவின் மனதிற்கு ஒப்பவில்லை,

வந்த உடன் உள்ளே செல்லும் இவர்களை பார்த்து முன்பே காத்திருப்பவகள் மனதிற்குள் நோகமாட்டார்களா?

காத்திருக்கவென முடிவுசெய்தான் கவின்.

ஆயிரம் கேள்வி கேட்ட அபூர்வ வேரி மணி என, வரும் வழியிலேயே மருத்துவமனை நல்ல மருத்துவமனைதானா? மருத்துவர் நம்ப தகுந்தவர்தானா என்பது உட்பட ஆயிரம் கேள்விகள் கேட்டு வந்திருந்த வேரிக்கு காத்திருக்க கவின் சொன்ன காரணம் முதலில் சம்மதமாக தெரிந்தது.

சற்று நேரம் காத்திருப்போர் லாஞ்சில் கவினுடன் அமர்ந்து அவனிடம் தான் இன்டெர் நெட்டில் கருவுற்றிருக்கும் காலத்தை பற்றி கற்றறிந்ததை,

அதனால் அவளுக்குள் வந்திருக்கும் பயங்கள், குழப்பங்கள் எல்லாவற்றையும் சொல்லிக்கொண்டிருந்தவள் தன் முன் ஒருவர் இருமிக்கொண்டு போகவும் டென்ஷனானாள்.

“ப்ரெக்னன்சி டைம்ல எந்த டிசீஸ்க்கும் ட்ரீட்மெண்ட் எடுக்க முடியாதாம், ஏன்னா அந்த மெடிசின் உள்ள இருக்கிற குட்டி பாப்பாவ அஃபெக்ட் செய்துடுமாம்,

அதோட மதர்க்கு எந்த டிசீஸ் வந்தாலும் அது பேபிய ரொம்ப அஃபெக்ட் பண்ணுமாம், அதனால மதர்க்கு இன்ஃபெக்க்ஷன் ஆகாம பார்த்துகிடணும்னு சொல்லி இருந்தாங்க,

இங்க ஹாஸ்பிட்டல்ல இப்படி நிறைய பேஷண்ட் கூட உட்கார்ந்துகிட்டு இருந்தோம்னா அவங்களோடது நமக்கு வந்துடாதா?”

நர்ஸிடம் தங்கள் முறை வரும்போது அழைக்க சொல்லிவிட்டு மருத்துவமனை முகப்பில் இருந்த அந்த பெரிய காலி நிலத்தில் வாக்கிங் என்று அழைத்து வந்தான் கவின். மனைவியின் நிம்மதி முக்கியம்.

வனது கையைப் பிடித்துக் கொண்டு வானம் பார்த்த அந்த திறந்த வெளியில் நடுவிலிருந்த ஃபவ்ண்டனை சுற்றி தென்றல் சூழ சூழ நடப்பது வேரிக்க்கு முதலில் படு இன்பமாய் இருந்தது.

அவனது வேலைப் பளு காரணமாக அவர்களது தம்பதி பொழுதுகள் எல்லாம் அலுவலகத்திலும் தங்கும் வீட்டிலுமாக மட்டும்மாக வேலியிடப் பட்டிருக்க, இந்த நடை பயணமே வேரிக்கு தேன்நிலவாய் தோன்றியது.

அடுத்த பக்கம்

Advertisements