என்னைத் தந்தேன் வேரோடு 13 (11)

எல்லா ப்ரொசிசரும் முடிந்து போர்டிஙகாக காத்திருக்க தொடங்கினார்கள்.

“நான் துபைல இறங்கிருவேன், உனக்கு துபைல இருந்து எதுவும் வேணுமா மிர்?”

மிஹிர் இவளைப் பேச வைக்க முயன்றான். சீண்டினான்.

“மாப்ஸ், நாம மட்டும்தானா? என்ன செய்ய போறோம்?” சண்டைய சரி பண்றேன்னு சொல்லி எங்க மம்ஸ்ட கூட்டி போய் விட்டுடாத, உங்க ஊர் பஞ்சாயத்து எதோ பிழச்சு போன்னு விட்டுடாங்க,

மாலினி பஞ்சாயத்து மாப்பு இல்லா பஞ்சாயத்து, உன்னை மாப்ள ஆக்காம விடாது, உன்னவிட வசதியா யாராவதுசே நினைக்கவே பிடிக்கல

தவிப்போடு வியன் கண்களைப் பார்த்தாள்.

‘உங்க அம்மாட்ட போகல போதுமா’ அவன் கண்விழியின் மொழி புரிந்தது.

அவன் பதில் தேவைக்கும் அதிகமாய் போதுமானதாக இருந்தது.

சிறிது நேரம் சென்றது. தாங்க முடியவில்லை மிர்னாவிற்கு. ஆனாலும் தோற்பதாவது, தன் வாட்சை சுற்றி சுற்றி பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ரொம்ப போரடிக்குதோ மிர்னு?” வியன்தான் கேட்டான். பாவம் பேசாமல் இருக்க அவள் படும் பாடு தாங்க முடியாமல் பேசிவிட்டான் வியன்.

“ஹே, நான் தான் ஜெயிச்சேன் ,நான் தான் ஜெயிச்சேன்” வாய் ஆரவரித்தாலும் மனம் சாக்லேட் பையா, விட்டு கொடுத்து ஜெயிக்க வச்சு தோக்கடிச்சியே, ஐ லவ் யூடா என்று அவனை கொஞ்சியது.

“எங்கே போறோம்னு சொன்னாதான் வருவியா மிர்னு?” கனிந்திருந்தது அவன் முகம்.

இது ஒன்னு, நான் ஆயிரம் வார்த்தை பேசி பண்ற டேமஜை, இவன் ஒரு வார்த்தையில பண்ணிடுவான், மனசுக்கு பண்ற டேமேஜை தான் சொல்றேன், முழிக்கிறதெல்லாம் பி.கே முழி, ஆனால் செய்றதெல்லாம் ஆர்.ஆர் வேலை, ஆர்.ஆர்ன்னா என்னவா?அது சொல்ல வெட்கமா வருதுல்ல, ரொமான்ஸ் ராஜா, தான் ஆர்.ஆர்,

“இதே கேள்விய உங்க சிஸ்ட்டர் ஆர் டாட்டர்ட்ட யாராவது கேட்டா என்ன பதில் சொல்லணும்னு நீங்க எதிர்பார்ப்பீங்க?” தீவிரமாய் முகத்தை வைத்துக் கொண்டு இவள் கேட்க,

திகைப்பு அவன் முகத்தில்.

எப்பவும் நான் சின்ன பாப்புன்னு நினச்சுகிட்டே பேச கூடாதுல்ல, நானும் வளர்கிறேனே மம்மி,

“ஆனால் எனக்காக நீங்க உங்களோட எல்லாத்தையும் விட்டு கொடுத்துருக்கீங்க, யு ஆர் மை கார்டியன், இன்னைக்கு வரைக்கும் என்ட்ட மட்டுமல்ல எந்த பொண்ணுட்டயும் நீங்க பேசுறதுல கூட கண்ணியம் தாண்டுனது கிடையாது, எந்த வகையிலும் எந்த லாவையும் நீங்க ப்ரேக் பண்ணதும் கிடையாது, மாடல் சிட்டிசன், அதனால ஐ ட்ரஸ்ட் யூ அஸ் ஆல்வேஸ்”

ஐ லவ் யூதான சொல்லக் கூடாது, பாரு பாரு நான் அதைச் சொல்லவே இல்ல

மென் புன்னகையுடன் மிருதுவாயிருந்தது அவன் முகம்.

“திருநெல்வேலி போறோம்” வியன் சொல்ல மிர்னாவுக்குள் மகிழ்ச்சி வெள்ளம்.

முன்னமே சொல்லி இருக்கலாமில்லையா, வேரிக்கு Rauchkase  சீஸ் பிடிக்கும், இப்ப வாங்க முடியாதுதான?

“அதெல்லாம் வாங்கி வச்சிருக்கேன், போதுமா?”

விழி விரிய பார்த்தாள்”முன்னால கவின்ட்ட பேசுறப்ப அவன் சொன்னான், நாம ஜெர்மன்ல இருக்கோம்னதும் ஒரு தடவை இதை சொல்லிட்டு இருந்தான்”

மிர்னாவுக்கு மனதிற்குள் நிறைவு. கவினிற்கும் வேரிக்கும் இடையில் இடைவெளிகள் இல்லை இப்பொழுது என்று தோன்றியது அவளுக்கு.

வின் வேரியின் வீட்டிற்கு வெளியே சற்று தொலைவில் டாக்ஸியை நிறுத்தி இறங்கிவிட்டனர் வியனும் மிர்னாவும்.

கேட்டில் செக்யூரிட்டி மேன் வியனை பார்த்ததும் பரபரக்க அவன் வாயை அடைத்துவிட்டு இவர்கள் வீட்டின் வரவேற்பறைக்குள் நுழைந்த நேரம், வரவேற்பறையை அடுத்திருந்த டைனிங் ரூமிலிருந்த வாஷ் பேசினில் வேரி ஓங்கரித்துக் கொண்டிருக்க,

அவளுக்கு பின் நின்று அவள் தலையை இரு கைகளால் பிடித்தபடி அவள் துன்பத்தை குறைக்க உதவிக் கொண்டிருந்தான் கவின்.

சொல்லாமல் கொள்ளாமல் விஷயம் புரிந்துவிட்டது மிர்னாவிற்கு.

பக்கத்திலிருந்த வியனுக்கு ஓங்கி ஒன்று வைத்தாள் அவன் தோளில் ”இத முன்னமே சொல்லி இருக்கலாமே”

“ஏய், எனக்கே இப்பதான் மிர்னு தெரியும்”

அதற்குள் கவினும் வேரியும் இவர்களைப் பார்க்க, அப்புறம் என்ன ஒரே பாச களேபரம் தான்.

அடுத்த பக்கம்

Advertisements