என்னைத் தந்தேன் வேரோடு 13 (10)

வியனின் பிறந்த நாளுக்கு இரு தினங்களுக்கு முன்னதான காலைப் பொழுது. வழக்கம்போல் தன் பயிற்சிக்கென கிளம்பி நின்றாள் மிர்னா. மிஹிர் வந்து அழைத்துச் செல்ல வேண்டும்.

கார் வரவும் உள்ளே பார்த்தால் ஓட்டுனர் இருக்கையில் வியன் இருந்தான். அவ்வப்பொழுது இது நடப்பதுதான். இவள் தன் உடைமைகளூடன் உள்ளே ஏறி அமர்ந்தாள்.

“இன்னும் ஒரு மணி நேரம் யார் பேசாம வர்றாங்களோ அவங்க தான் வின்னர்” இவள் ஏறவும் மிஹிர் அறிவித்தான்.

அடுத்து ஒரு மணி நேரத்திற்குள் வாய் திறந்தால் அது எம் எம் இல்லையே.

இப்பொழுது  டிக்கியில் எதையோ ஏற்றிவிட்டு ஒஃபிலியாவும் ஏறிக்கொண்டாள்.

காலையிலேயே இந்த குச்சி பூச்சி எங்க கிளம்புது?

சொந்த பெயரிலேயே கூப்பிட்டால் போரடிக்குல்ல, அதான் பெட் நேம் வச்சுகிடுறேன்னு பெர்மிஷன் கேட்டு ஒஃபிலியாவுக்கு மிர்னா வைத்திருக்கும் பெயர்தான் இந்த குச்சி பூச்சி, நட்பும் அந்த அளவுக்கு நெருங்கி இருந்ததும் காரணம்.

“சைகை பாஷையில் பேசினாலும் அவங்க லூசர்தான்” அடுத்த சட்டத்தை மிஹிர் அறிவிக்க

மிர்னா கண்களை மூடிகொண்டாள். நல்லவேளை மனசுக்குள்ள பேசிகிட்டாலும் தோத்துட்டனு இவங்க ரூல் போடல, காலையிலேயே விளையாட வேற கேமா கிடைக்கல, இன்னும் ஒரு மணி நேரம் எப்படி மௌத்க்கு சிப் போடுறதாம்?

சற்று நேரம் கழித்து ஓட்டைக் கண்விட்டு பார்த்தாள் மிர்னா. வழக்கமான பாதையில் செல்லாமல் கார் எங்கேயோ சென்றது.

அட மௌன சாமியார்களா யாராவது வாய திறங்களேன், நீங்கல்லாம் சீக்கிரம் தோத்தா தானே நான் வாய திறக்க முடியும், எங்கடாப்பா கடத்திட்டு போறீங்கன்னு கேட்டுக்க முடியும்,

இவளைத் தவிர யாரும் கார் செல்லும் பாதையை கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.

இதுக்கு மேலயும் வேடிக்கை பார்த்தேன்னா முதல்ல பேசின முத்தழகி நானா தன் இருப்பேன், விடு ஜூட், நோ சைட், ஐஸ் க்ளோஸ்,

கண்களை மூடிக் கொண்டாள். எப்படி எம் எம், இந்த நேரத்துல கூட உனக்கு கவிதை வருது? விடு ஜூட், நோ சைட், ஐஸ் க்ளோஸ், எங்கேயோ போய்ட்ட நீ

கார் நிற்பதை உணர்ந்து கண் திறந்து பார்த்தால் ஏர்போர்ட்.

நிஜமாவே கடத்துறீங்களா மௌ.சா க்களா? என்னது மௌ.சா புரியலையா, மௌன சாமியாரின் ஷார்ட் ஃபாம், எப்டீங்க உங்களுக்கெல்லாம் இவ்ளவு நேரம் பேசாம இருக்க முடியுது?

வியன் இவள் கையை பிடித்துக் கொண்டு உள்ளே நுழைய, மிஹிர் பின் தொடர, அவன் ட்ராலியில் டிக்கியிலிருந்து எடுக்கபட்ட இவளது சூட்கேஸும்,

மாண்புமிகு கிட்னாப்பர்ஸ், எப்பப்பா சுட்டீங்க?

“பை கைஸ், சி யூ சூன், நல்லா எஞ்சாய் பண்ணிட்டு வா மிர், பை“ இவளைப் பார்த்து கண்ணடித்து விடை பெற்றாள் ஒஃபிலியா.

ஹே, ஒருத்தங்க அவ்ட், இன்னும் ரெண்டு பேர்தான், ஆனாலும் அதுக்குள்ள கண்டம் விட்டு கண்டம் கடத்திடுவீங்க போலயே,

வந்திருப்பது இன்டெர்நேஷனல் ஏர்போர்ட் ஆயிற்றே.

வீட்டிலிருந்து கிளம்பி இப்பொழுதுதான் கால் மணி நேரமாகிறது. இன்னும் ஃபார்ட்டி ஃபைவ் மினிட்ஸ்,

இவள் எல்லாவற்றையும் இழுத்து சொல்லிப் பார்த்து ஏக்க பெருமூச்சு விடும் போதே செக் இன் கவுண்டரில் மிஹிர் போர்டிங் பாஸ் வாங்கினான் மூவருக்கும்.

நம்பி கொடுத்திருந்த பாஸ்போர்ட்டை வச்சு நாகரீகமா கடத்துறீங்களே, ப்ளான் பண்ணி ப்ளாட் பண்ணி மௌத் வாய்க்கு லாக் பூட்டு வேற, நல்லா வருவீங்க நல்லவங்களே,

புலம்பி முடிக்கும்போது தான் உரைத்தது மிஹிர் கவுண்டரிலிருந்தவரிடம் பேசியிருந்தது,

ஹே, ரெண்டாவது ரெங்குடுவும் rally ல காலி, இனி

நீயும் நானுமா, பி கே நீயும் நானுமா? 

காலம் போயினும், கடுப்பாய் இருப்பினும்,

திருவாய் திறப்பியா?  நீ திருவாய் திறப்பியா? நெவர்,

சும்மாவே நீ மெகா மௌன சாமியார், தேவைக்கு மேல மில்லி மீட்டர் கூட பேச மாட்ட, அதோட

பொதுவாக என் மனசு தங்கம்,

ஒரு போட்டியின்னு வந்து விட்டா சிங்கம்னு,

ஒரு ஈகோ வேற, நீ எப்ப பேசி, நான் எப்ப ஜெயிக்க?  இவ வாய்விட்டு பாடுனா பதில் பாட்டு ப்ளானட் எர்த்ட்ட இருந்து எக்கு தப்பா எகிறி வருமே, அதோட .இப்போ?  போட்டி வேற ஊத்திகிடாதோ? சோ ஒன்லி மனசுக்குள் சிங்கிங்.

அடுத்த பக்கம்

Advertisements