என்னைத் தந்தேன் வேரோடு 12 (6)

மறுத்து அவளை வருத்தவும் இவனுக்கு பிரியமில்லை, மறுக்காமல் ஏற்கவும் இது தருணமில்லை.

ஆக அவளது வால் தனங்களை இந்த விஷயத்தில் இதோடு அவளை நிறுத்த வைத்தாக வேண்டும்.

ஆக அஃபீஷியல் டோனிலேயே அவன் என்ன வேண்டும் மிர்னா என கேட்டான்.

அவன் டோனிலே அவளுக்கு சற்று ஏமாற்றமாக இருந்தாலும் வாய்விட்டே கேட்டாள்.

“இந்த ட்ரஸ் எப்டி இருக்குது?”

இன்று வீட்டின் கதவை திறந்ததும் எதிரில் அந்த குறை ஒளியில், நின்ற அவளைப் முதன் முதலில் பார்த்த கணத்தில் அவன் மனதில் வந்த நினைவு ஞாபகம் வந்தது.

பெண்மையின் மொத்த பதிவாக அப்பொழுது தோன்றியவள் இந்த நிமிடம் முகமெங்கும் ஏக்கமும் ஆவலுமாக பலூன் கேட்கும் பட்டு பாப்பாவின் உடல் மொழியில், மூன்று வயது சிறு குழந்தையின் முக மொழியில்.

எப்படி கட்டுபடுத்துவதாம் இவளை? பெண் என்னும் பேரருவி, பொங்கும் மா கடல், குழந்தையாகி குப்புற தள்ளி, குமரியாகி கோலேச்சும் மாயரூபி,

“இதெல்லாம் லேடீஸ்ட்ட கேளுங்க மிர்னா, நான் என்ன சொல்றது?”  இவன் இப்படியாய் சூழலைக் கையாண்டான்.

“சரி எடுத்து கொடுத்த ஆண்டிட்டிடயே கேட்டுகிறேன், அவங்க மகனை என்னை கல்யணம் செய்ய சொல்லி கேட்டாங்க, கஷ்டபட்டு சமாளிச்சு அனுப்பி வச்சிருக்கேன்,

இப்ப திரும்பவும் அவங்கள பார்த்தேன்னா பழையபடி கல்யாண பேச்சு பலமா எடுப்பங்களே, பேசாம அவங்க சொன்ன ஐடியாவையே கன்சிடர் பண்ணலாம்னு நினைக்கிறேன், வாட் யூ சே?”

அவனது விலகலான பதிலில் நீ மட்டும்தான் சீண்டுவாயா? நானும் செய்து காட்டுகிறேன் பார் என இவள் இப்படிச் சொல்ல,

அவன் அதை வெறும் கிண்டலாக எடுத்துக்கொள்வான் என்று அவள் நினைக்க, ஆனால் அவள் எதிர்பாராத விதமாக அவளது கையைப் பற்றினான் வியன்.

முன்பு அவன் ஊரில் வைத்து இவள் கரம்பிடித்த அந்த உரிமைப் பிடி.

இவள் முகமுமே மாறிற்று, என்னவாயிற்று? இப்பொழுது இதன் அவசியம் என்ன?

அவன் இவளை இழுக்காத குறையாக கூட்டி நடக்க, அந்த நடைக்கு ஈடாக இவள் கால்கள் நடக்க, மனம் மத்தளம்.

பக்கத்திலிருந்த அறைக்குள் சென்று அங்கிருந்த இருக்கையில் இவளை அமர்த்தினான்.

இவள் முகம் பார்த்தபடி இவள் முன் சற்று கால் மடக்கி அமர்ந்தான். எல்லா செயலிலும் ஒருவித ஆளுமை.

“என்னாச்சு வியன்?”

இவள் கண்களை குத்தி கிழித்துக்கொண்டிருந்தது அவனது பார்வை.

“எனக்கு எல்லா நேரமும் சந்தோஷமா ஜாலியா இருக்றது பிடிக்கும், தப்புதான் செய்ய கூடாது,  மத்தபடி எதுலனாலும் விளையாடலாம்“

“ம்”

“அதே மாதிரி விளையாடக் கூடாத இன்னொரு விஷயம் இருக்குது”

“ம்?”

“நம்பிக்கை, ஃபெய்த்”

“…..”

“நம்பிக்கைங்கிறது ஃப்ரீ கிஃப்ட் கிடையாது, அது அதாவே வந்துரும்னு சொல்றதுக்கு, அது நாம ஸ்டெப் பை ஸ்டெப் புல்ட் பண்றது, உனக்கு என் மேல நம்பிக்கையை நான் தான் எழுப்பி கட்டணும், அதே மாதிரி எனக்கு உன் மேல நம்பிக்கையை நீ தான் கட்டணும், அதை கட்றது பல நாள் வேலை, கலைக்கிறது ஒரு நொடி காரியம்”

“சாரி, நான் விளையாட்டுக்கு தான் சொன்னேன்” இவள் குனிந்து கொண்டு முனங்க,

“என்ன விளையாட்டு இது? நீ போட்டிருக்கிறது புது டிரஸ், இங்க வாங்கி இருக்க வழி இல்ல, சோ உன் சமையல்கார ஆன்ட்டி தந்திருக்கணும், அவங்கள மட்டும் தான எனக்கு தெரியாம பார்த்துகிட்டு இருக்க,

அவங்க பையனுக்கு பொண்ணு கேட்டாங்கன்னு சொல்ற, உன் முழியிலேயே தெரியுது அது உண்மைனு, நீ ஏதோ சொல்லி சமாளிச்சு அனுப்பி வச்சிருக்க, எனக்கே தெரியாம என் வீட்டுக்கு வந்து எங்க வீட்டு பொண்ணை பொண்ணு கேட்கிற அளவுக்கு அவங்களுக்கு தைரியம் வந்துட்டு என்ன?

இதுல இத வந்து என்ட்ட ஜோக்குன்னு சொல்லிகிட்டு இருக்க, இதுக்கு நான் சிரிக்கணும்னு வேற எதிர் பார்க்கிற?”

ஐயோ சேம் சைட் கோல் போட்டு, சிங்கிள் ஆப்புனாலும் செல்ஃப் ஆப்பு ஜெய் ஜாண்டிக்கா அடிச்சு வச்சிருக்கனே,

“அது வந்து”

“இன்னொரு தடவ எனக்கு தெரியாம உன்னை அவங்க பார்த்தாங்க, அப்புறம் இருக்குது”

ஆமோதிப்பாக தலை ஆட்டினாள் மிர்னா. பரிதாபமாய் ஒரு பார்வை.

அவள் பார்க்காமல் சிரித்துக் கொண்டான் வியன்.

அடுத்த பக்கம்