என்னைத் தந்தேன் வேரோடு 12 (5)

வியனுமே திடுக்கிட்டுப் போய்தான் இருந்தான்.

“அப்புறம் நேத்துதான் நீங்களும் என்னை மாதிரியே வியனோட வெல்விஷர்னு புரிஞ்சுதா, ஃப்ரெண்ஷிப்தான் இதுக்கு சொலுஷன்னு தெரிஞ்சிட்டு, சாரி, என்னையும் உங்க ஃப்ரெண்டா சேர்த்துகிடுவீங்களா?”

சட்டென எழுந்துவிட்டாள் ஒஃபிலியா,

அவள் கைகளை பிடித்துக்கொண்டாள் மிர்னா.

”பிஸினஸ் நிலவரம் ரொம்ப சேலஞ்சிங்கா போகுதுன்னு எனக்கு புரியுது, இவ்ளவு டைம் கூட உங்களுக்கு போதலைனும் புரியுது, அதனால நான் இப்படி கேட்கிறது தப்போன்னு கூட தோணுது, ஆனா ரொம்ப நேரமெல்லாம் வேண்டாம் ஒரு 15 மின்ஸ் பிஸினஸ் இல்லாத விஷயங்கள் என்ட்ட பேசுவீங்களா?”

.”வெரி சாரி, நான் இதை யோசிக்கவே இல்ல, நீங்க டயர்டா இருப்பீங்க, நான் பிஸியா இருக்கேன்னு, ஐ ஜஸ்ட் மிஸ்ட் த மார்க்” ஒஃபிலியா தவிப்பாய் சொல்ல,

குழந்தைகளைப் போல மனதிலிருப்பதை பேசிவிட வேண்டும் என்று மிர்னா முடிவெடுத்திருந்தாலும், ஃப்ரெண்ட்ஸ் என்று சொல்லிக் கொண்டவுடன் இணைந்து விளையாடிவிடும் குழந்தை மனம் பெரியவர்களுக்கு சாத்தியமா?

ஆனாலும் இதன் பின் நிலை முன்னிலையிலும் இலகுவாக இருக்கும் என்று அங்கிருந்த மூவருமே எண்ணினர்.

அதைப்போல அதன் பின்னாக உணவு மேஜையில் பொழுது பேச்சும் சிரிப்புமாக இலகுவாகவே சென்றது. .

மிர்னா மனம் விட்டு பேசியதும் சற்று குன்றலும் உறுத்தலுமாக முதலில் உணர்ந்த ஒஃபிலியாவுமே மிர்னா நாடுவது நட்பையே என்ற வகையில் சிறிது நேரத்தில் இயல்பிற்கு வந்திருந்தாள்.

உணவு மேஜையிலிருந்து மூவரும் எழும்போது ஒஃபிலியா மிர்னாவிற்கு ஃபில் ஆகி இருந்தாள். மிர்னா அவளுக்கு மிர் ஆகி இருந்தாள். நீ, போ என ஒருமை பேச்சு வழக்கில் வந்திருந்தது.

இரு பெண்களின் மனமுமே இனிமை நிலைக்கும் வந்திருந்தது. அதோடு மிர்னா கோடிட்டு சொல்லாமலே வியனும் ஒஃபிலியாவும் தமிழில் பேசிக்கொள்ள ஆரம்பித்திருந்தனர்.

ரவேற்பறை, டைனிங், கிட்ச்சன் என அனைத்தும் இணைந்து இருந்த அந்த அறையின் ஒரு ஓரத்தில் ப வடிவில் உள்வாங்கி அமைந்திருந்த சிறு லாஞ்சில் இருந்தது கைகழுவும் வாஷ் பேசின்.

முதலில் கைகழுவ சென்றது ஒஃபிலியாதான். அவளை அடுத்து சென்று நின்ற வியனிடம் சொன்னாள்

“சும்மா சொல்ல கூடாது பாம் ஷெல் தான் உன் ஆளு, ரிபண்டன்ஸ் பார்டி எனக்கு,  புரபோஸ் பண்ற பார்டி உனக்கா, இதுக்கு மேல அவ உன்ட்ட என்ன சொல்லணும்னு எதிர் பார்க்கிற? பேசாம ப்ரோபோஸ் பண்ணிடேன் நீயும்”

“ப்ச், அதெல்லாம் டைம் பார்த்து நாங்க பண்ணிப்போம், நீ சும்மா இழுத்துவிடாத, இந்த பார்டிக்கு நான் ஒப்புக்கு சப்பாணினு அவளே தான் சொன்னா”

“அப்டியா, அப்ப என்னை இம்ப்ரெஸ் பண்ணவா இந்த பாவடை தாவணி?”

அப்பொழுதுதான் அங்கு வந்த மிர்னா இருவருக்கும் நடுவில் தலையை மட்டும் நீட்டிக்கொண்டு அவர்களைப் போலவே ரகசியம் பேசும் சிறு குரலில்

“இதுதான் உங்க டவ்ட்டா, என்ட்ட இருக்கிறதுலயே இதுதான் புதூஊஊஊ ட்ரெஸ் அதான் போட்டேன்” சொல்லிவிட்டு இருவருக்கும் இடையில் நுழைந்து வாஷ் பேசினில் சென்று கை கழுவினாள்.

குனிந்து வாய் பொத்தி சிரித்தபடி ஒஃபிலியா கிளம்பிச் செல்ல, கை கழுவி முடித்த மிர்னாவும் திரும்பி நடக்க தொடங்க வியனும் வந்த வேலையை முடித்துவிட்டு திரும்பினால் மிர்னா இன்னும் அங்கு தான் நின்று கொண்டிருந்தாள்.

ந்த உடை அவளுக்கு வாங்கி கொண்டு வந்திருந்தது வியனின் அம்மா நீலா. இன்றுதான் அதை இவள் அணிந்திருந்ததால் அவன் வாயால் அதை பற்றி ஒரு வார்த்தையாவது கேட்டுவிட வேண்டும் என்று ஒரு ஆசை இவளுக்குள்.

“என்ன வேணும் மிர்னா?”

மிர்னாவின் இன்றைய நடத்தையில் மிகவும் மனம் குளிர்ந்து போயிருந்தது யார் என்றால் அது வியன்தான்.

சமீப காலமாக தன்னை விட்டு விலகுகிறாளோ என்றிருந்த அவனின்  அத்தனை தவிப்புகளையும் துடைத்தெறிந்திருந்ததே அவளது நடவடிக்கை.

அதோடு தப்பென்று உணரும் நேரம் அதை உரியவரிடம் மனம்விட்டு நேரடியாக பேசும் அவள் தைரியம், அதை மாற்றிக்கொள்ள வகை தேடும் சுபாவம் எல்லாம் அவனுக்குள் சர்க்கரை பொங்கலும், தேன்மழை சிந்தலும்.

ஆனாலும் மற்ற வகையில் ஒரு ஜாக்கிரதை உணர்வு, கண்ணறிவிப்பாய் மாத்திரம் இருந்த அவள் காதல் அறிவிப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக  வெளியரங்கமாகி, இப்பொழுது இந்த நிலையில் வந்து நிற்கிறது.

இதில் வாய்விட்டு இவனிடம் நேரடியாக அவள் கேட்டேவிட்டால்??

அடுத்த பக்கம்