என்னைத் தந்தேன் வேரோடு 12 (3)

டுத்து அதை ஒரு கொலைமுயற்சி வழக்காக பதிவு செய்தனர் இவர்களது வழக்கின் பேரில்.

.இதுவரை இவள்  மீதான கொலை முயற்ச்சி வழக்கு ரகசியமானதாகவே இருந்து வந்தது. ஏதென்ஸ் காவல் துறை கையாண்ட விதம் அப்படி. ஆனால் இன்றைய இது பத்திரிக்கையில் செய்தியானது.

அந்த ட்ரோலரில் பயணம் செய்த அத்தனை பேரையும் ட்ரேஸ் செய்ய தொடங்கியது காவல்துறை.

அன்று இரவு மிர்னாவும் சின்ன வெங்காயமும் தங்கி இருந்த வீட்டின் அழைப்பு மணி ஒலிக்க, யாரென்று செக்யூரிட்டி கேமிராவில் பார்த்தால் வியனின் அம்மா. கதவை திறந்தால் மனோகரும் நின்றிருந்தார்.

அப்பொழுதுதான் கிளம்பி தன் கணவர் இருந்த பாரீஸுக்கு சென்றிருந்த நீலா, செய்தி கேள்விப்பட்டு தம்பதி சகிதமாக ஓடி வந்திருக்கிறார்.

“இவ்வளவு நடந்திருக்கு, எங்கட்ட ஒரு வார்த்தை நீயும் சொல்லல, கவினும் சொல்லல, இதுக்கு அப்புறமும் நீ ஒரு இடத்துல தனியாவும் சின்னவன் ஒரு இடத்தில தனியாவும் எந்த செக்யூரிட்டியும் இல்லாம இருக்கிறத கண்டிப்பா ஒத்துக்க முடியாது.

ஒன்னு அவனை இப்பவே உன்னை கல்யாணம் செய்துட்டு கூட வந்து இருக்க சொல்லு, கல்யாணதுக்கு அப்புறம் ஒலிம்பிக் ஜெயிக்க முடியாதுன்னு யார் சொன்னது, ஜெயிச்சவங்க இல்லையா? அல்லது  நீ எங்க கூட இரு, நாங்க உன்னை பார்த்துகிறோம்” இதுதான் வியனின் பெற்றோரின் பேச்சின் சாரம்சம்.

இப்பொழுது கல்யாணமா, நினைக்க நினைக்க ஆசையாகத்தான் இருக்கிறது,

இப்படி கண்ணா மூச்சி ஆடாமல், கண்பார்வையில் மட்டுமின்றி மொத்த உயிராலும் உடலாலும் காதல் சொல்லும் உரிமை கொள்வதென்றால், நினைவே அடிவயிற்றிலிருந்து ஆனந்த மத்தாப்பை அள்ளி எரியவில்லையா?

ஆனால் இப்பொழுது திருமணம் என்றால் விளையாட்டின் நிலை என்னவாகும் என்று தெரியவில்லை! இவளது திறமையை நம்பி இப்பொழுது இவள் மட்டும் கனவு விதை தூவவில்லை

வியன் விதைத்திருக்கிறான், மிஹிர் தண்ணீர் பாய்ச்சுகிறான், மின்மினி காத்திருக்கிறாள், அம்மச்சி தொடங்கி ஆயிரமாயிரம் இந்தியர்கள் கனவு காண்கிறார்கள். இதில் இவள் அவசரபடலாமா?

அதோடு இன்றைய நிலையில் இவளுக்கு வியனுடன் திருமணம் என்றால் இப்படி வழி சொல்கிறார்களே அவனது பெற்றோர் அவர்களே அதைக் காண வரமுடியுமா? தெரியவில்லை.

ஆனால் அப்படி நடக்ககூடாது வியனின் திருமணம்.

மாறாக இவர்களுடன் மிர்னா தங்க சம்மதித்தால் வியன் இவளைவிட்டு விலகி நிற்க நேராதா? இவளுக்காக அனைத்தையும் விட்டுவந்தவனை விலக்கி நிறுத்தி இவள் ஜெயிக்கவா? அது அவளால் கூடுமா? அதோடு முதியவர்களை இவளது ஆபத்து சூழலுக்குள் இழுப்பது சரியாகுமா?

டெல்லியில் இருந்தது போல், ஏதென்ஸில் இருந்தது போல் தங்களுடன் வேறு சிலரையும் வைத்துக்கொண்டு சேர்ந்து ஒரேவீட்டில் இருக்க முயலுகிறோம் என்று எதையெல்லாமோ சொல்லி சமாதனபடுத்தி அவர்களை அனுப்பி வைக்கும் முன் மிர்னாவிற்கே மூச்சு வாங்கிபோனது.

ஆனால் மனம் மகிழ்ந்திருந்தது.

வர்கள் கிளம்பிச் செல்லவும் ஒஃபிலியா சொன்னாள்

”அம்மா அப்பா வந்துட்டு போனத வியன்ட்ட சொல்லாத, இப்பவே அவன் அவங்கள மிஸ் பண்றான், அவங்க இவ்வளவு பக்கத்துல வந்தும் அவனால பார்க்க முடியலையேன்னு ரொம்பவும் ஃபீல் பண்ணுவான்”

அந்த நிமிஷம் சின்னவெங்காயத்தை மனதுக்குள் பிடிக்க தொடங்கியது மிர்னாவிற்கு.

காரணாம் அதே காரணத்திற்காக அவளும் வியனுக்கு இந்த விஷயம் செல்லக் கூடாதே ஒஃபிலியாவிடம் எப்படி கோர என்றுதான் யோசித்துக்கொண்டிருந்தாள்.

வியனின் நலத்தை இவளைப்போல் விரும்பும் இன்னொரு உயிர். மனதிற்குள் நட்பு மழை.

அதுவரை அவளைப் பார்க்கும் போது வரும் சின்ன வெங்காய உணர்விற்கு பெயரும் சட்டென புரிந்து போனது – பொறாமை.

சே, இத்தனைக்கும் வியனுக்கும் ஒஃபிலியாவிற்கும் இடையில் கண்ணிய குறைவாக உணரும் வகையில் ஒரு வார்த்தை ப்ரயோகமோ, விளையாட்டுகளோ எதுவும் கிடையாது.

எத்தனைதான் ஒருமையில் குறிப்பிட்டாலும், வியனும் ஒஃபிலியாவும் ஒருவரை ஒருவர் தொட்டு பேசும் வழக்கம் கூட இல்லாதவர்கள்.

இத்தனைக்கும் ப்ரிகேஜி யிலிருந்து பள்ளி இறுதிவரை ஒரே வகுப்பில் படித்தவர்களாம். அழகான அங்கீகரிகப்பட்ட நட்பு அவர்களுடையது.

ஒஃபிலியாவின் உடை முறையும், உடல் மொழியும் கண்ணிய எல்லையை தாண்டியதே கிடையாது, வியனின் கண்ணியத்திற்கு இவளுக்கு சாட்சி தேவையில்லை.

மேலும் இவளுக்கும் வியனுக்குமான உரிமை எல்லைகளில் ஒஃபிலியா மூக்கை நுழைத்ததும் இல்லை. அவர்கள் நட்பின் கற்பின் மீது இவளுக்கு சந்தேகமில்லை. ஆனாலும் ஏனிந்த பொறாமை?

கம்பெனி விவகாரம்தான் காரணமெனினும் வியன் இவளைவிட அதிக நேரம் அவளுடன் செலவிட்டதாலா?

எம் எம் வரவர நீ இந்த பெரியாள்கள் மாதிரி பொறாம பொடலங்கான்னு கெட்ட பிள்ளையாகிட்டு போற, ஒழுங்கா வழக்கம்போல சின்ன பிள்ளையாவே இரு, சின்னவெங்காயம் போட்டாதான் குழம்பு டேஸ்டா இருக்கும் நீலாம்மா சொல்லி கொடுத்தாங்களே, சின்னவெங்காயம் இஃஸ் த பெஸ்ட் டேஸ்ட் மேக்கர் யூ நோ,

அடுத்த பக்கம்