என்னைத் தந்தேன் வேரோடு 12 (2)

மிர்னாவிற்கு நன்றாக புரிந்தது தன்னை யாரோ வேண்டுமென்று தள்ளிவிட்டார்கள் என. ஆனால் யார்? ஏன்?

நம்மளபோய் இந்த ரேஞ்சுக்கு தேடி தேடி வந்து லவ் பண்றது யாருப்பா? மூஞ்ச கொஞ்சம் காமிங்களேன், க்யூரியாசிட்டி தாங்க முடியல பாருங்க, நம்ம பாட்ட கேட்ட யாராவதா இருப்பாங்களோ?

விழுந்து கொண்டிருந்தபோது அவளது நினைவு இப்படித்தான் இருந்தது.

அதற்க்குள் நீர் தொட்டது அவள் தேகம்.

ஓராயிரம் ஊசி குத்தல்கள் ஒரே நேரத்தில். சட்டென மூச்சு நின்றுவிடுவது போல் ஓர் நெஞ்சடைப்பு. உடல் உதறத்தொடங்கியது. படுவேகமாக அவள் உடலின் உயிர்பிடிப்பை, உறுதியை, சக்தியை உறிஞ்சியது கொடுங் குளிர் நீர்.

நீரும் ஆறும் அவளுக்கு புதிதல்லதான். ஆனால் இந்த குளிர்ந்த நீர் அவள் நினைவிற்கும் மேலாய் கொடூரமாய்!

நீந்த முடியும் என்று தோன்றவில்லை. ஃப்ளோட்டிங் ஜாக்கெட் என்னவாயிற்று? இவளை மிதக்க வைக்க வேண்டிய அது அவளுடன் மூழ்க மும்முரபடுவது எதனால்?

கைகால்கள் மரத்துபோக தொடங்க, அருகில் வந்திருந்தான் மிஹிர்.

மிர்னா நிச்சயமாக வியனை எதிர்பார்த்திருந்தாள்.

“ ஜ…ஜஸ்ட் ஹோ…ஹோல்ட் ஆ…ஆன் மி…மிர், வி…வியன் எ…எப்டியும் வ…வந்துடுவார்” அவன் உதடுகளும் குளிருடன் கூத்தாடிக்கொண்டு இருக்க,  இவள் மூழ்காதவாறு மரக்க தொடங்கி இருந்த இவளது கையைப் பிடித்த மிஹிர்,

“ஃப், ஃப்ளோட்டிங் ஜா…ஜாக்கெட்??” என்றவன் இவளை தன் முழுபலம் கொண்ட மட்டும் இரு கைகளால் தூக்கி தன் தலைக்கு மேல் பிடித்தான்.

அது எத்தனை அசாத்தியம் என்பது மிர்னாவிற்கு நன்றாக புரிகிறது.

காரணம் குளிர் நீர் மனு தேகத்தின் அத்தனை வல்லமைகளையும் எத்தனை இலகுவாய் கொள்ளையாடி விடுகிறது என்பதை அவளும் உணர்ந்து கொண்டிருக்கிறாள்தானே,

மிஹிர் செயல் முழுவதும் ஆன்ம பலம், உள்ளத்தின் உறுதி.

கமான் எம் எம், bug up, you can do it,

“வி…விடுங்க மி…மிஹிர்  I… I can m…manage,  உ…உங்களுக்கும், க…கஷ்டம்”

“you have to survive, தண்ணியவிட்டு வெளிய இருந்தாதான் பாடில இருந்து ஹீட் லாஸ் ஆகுறது குறையும்”

அவன் சொன்ன விதத்தில் அதைப் பற்றி பேசுவது ப்ரயோஜனமற்றது என்று தோன்றிவிட்டது மிர்னாவிற்கு.

இது ஒன்று விளையாட்டு வீர்ர்களின் இந்த போர்குணம், இயற்கையை கூட வென்றுவிடும் வல்லமை கொண்டது, அல்லது அப்படிப்பட்ட அசாத்தியர்கள்தான் விளையாட்டில் ஜொலிக்கிறார்களோ?

“எ…என் பா…பாட்டுக்கு ப…பயந்துபோய் வி…வியன் உ…உங்கள த…தள்ளிவிட்டுட்டு த…தப்பிச்சுகிட்டார் போல” இவள் சிரிக்க

“இப்படி எல்லா நேரமும் சிரிச்சுகிட்டு குழந்தையாவே இ…இருக்கிற உ…உன்ன போய்,சே” என்ற மிஹிரின் முகத்தில் கோப வலி எப்படி இருக்கும் என்று பார்க்காமலே உணர முடிந்தது மிர்னாவால்

“ஹ..ஹலோ பாஸ் பாட்டு பா…பாடிடுவேன்னு பயந்து போய், அடி விழுறதுக்கு மு…முன்னாடியே அழுற பா…பாப்பா மா…மாதிரி சீன் போடாதீங்க,

சி…சிரிச்ச முகமாவே இருங்க, பா…பாருங்க போட்டோலாம் எடுக்காங்க , நாளைக்கு பே…பேப்பர்ல அழகான பொண்ணுக்கு அழுவினி கோ…கோச்னு நியூஸ் போடுவாங்க”

“தெய்வமே” நொந்துகொண்டான் மிஹிர்.

தற்குள் லைஃப் போட்டை கழற்றி நீருக்குள் போட்டு, அதில் இவர்களை நெருங்கி இருந்தான் வியன். வரும்போதே கையில் கிடைத்த முரட்டு துணிகள் சிலதை அள்ளி வந்திருந்தான்.,

முதலில் மிர்னாவை லைஃப்போட்டில் போட்ட மிஹிர், அடுத்து தானும் ஏற,  அவனுக்கு ஏற உதவினான் வியன்.

“முதல்ல மி…மிர்ர வ்… வ்ராப் பண்ணுங்க, அவ உ…உடம்புல fat ரொ…ரொம்ப கம்மி, ஹைபோதெர்மியாவாகிட கூடாது”

அவளுக்கு தேவையான அத்தனை முதலுதவிகளையும் செய்து, ட்ரோலரிலிருந்தவர்கள் உதவியுடன் கரையேறி, மருத்துவமனை சென்று எல்லாம் இயல்புக்கு வரும் வரையுமே வியன் மிர்னாவை சுவாசமென சுமந்தான்.

ஆனால் எல்லாம் முடிந்து அவள் முழுபாதுக்காப்பும் உறுதியான பின்பு “என்ன மிர்னு இப்படியா விளையாடுவ? கவனமா இருக்கமாட்டியா?” என கடிந்து கொண்டான். கவனமின்றி இவள் விழுந்துவிட்டாள் என்றுதான் அவன் நினைத்திருந்தான்.

“ஆமா யாரோ பிடிச்சு தள்ளிவிட்டாங்களா, சரி விழுந்துதான் பாப்போமேன்னு விழுந்துட்டேன், தள்ளுனவங்களுக்கும் ஏமாற்றம இருக்க கூடாது பாருங்க, அதோட நாளைக்கு என் போட்டோலாம் பேப்பர்ல வரும்தானே, எப்படி இருப்பேன்? நல்லா இருப்பேனா? இல்ல நனஞ்ச பல்லி மாதிரியா? அந்த டிரஸ் எப்படி? ஃபோட்டாக்கு சூட் ஆகுமா?”

பேச்சின்றி அவளை ஒரு பார்வை பார்த்தான் வியன்.

இத என்ன லுக்குன்னு எடுத்துகிறதாம்? எதுனாலும் சொல்லிட்டு முழிங்கப்பா, புரிய மாட்டேங்கிதுல்ல, எம் எம் சில விஷயத்துல சின்ன பாப்பு தெரியுமுல்ல,

அடுத்த பக்கம்