என்னைத் தந்தேன் வேரோடு 11 (2)

“இது என் வாழ்க்கை ப்ரச்சனை வியன் சார், வேண்டாம்னு சொல்லிடாதீங்க ப்ளீஸ் ப்ளீஸ், போறதுக்கு தயவு செய்து பெர்மிஷன் தாங்க”

“என்ன மிர்னா பெர்மிஷன் அது இதுன்னு சொல்லிகிட்டு, எப்ப ஜாய்ன் செய்யனும்னு சொல்லுங்க, இந்த நேரத்துல இப்படி ஒரு டைவர்ஷன் தேவையான்னு தான் யோசிக்கிறேன்”

“எக்ஸாட்லி வியன் சார், எப்பவும் ட்ரெய்னிங், ட்ரெய்னிங், ட்ரெய்னிங், மத்தபடி எனக்கு சும்மா பேச கூட ஆள் கிடையாது, மின்னி அம்மச்சி இருந்தப்பவாவது பரவாயில்ல, இப்ப ஒருத்தரும் இல்ல,

ஊர்ல ஃப்ரெண்ட்ஸ்ட்ட சாட் பண்ணலாம்னா நம்ம் டைமிங் செட் ஆகல, ப்ரேக்கே இல்லாம ஒர்க் பண்ணா ப்ரேக் டவ்ன் ஆகிட மாட்டனா? அதான் இந்த குக்கிங், ஜஸ்ட் ஒரு டைவர்ஷன்”

இவள் இத்தனைக் கெஞ்ச, அதற்கு மேலும் மறுத்தால் அது வியன் கிடையாதே!

ன்று முதல் நாள் சமையல் வகுப்பு.

விளையாட்டு பயிற்சி முடிந்த மாலை நேரம் சமையல் வகுப்பு என ஷெட்யூல் செய்யப்பட்டிருந்தது.

“வியன் அவங்க ஜென்ட்ஸ் யாரும் வீட்டுக்குள்ள வர கூடாதுன்னு சொல்லிட்டாங்க”

“பத்திரமா இரு மிர்னு, முன்ன பின்ன தெரியாதவங்கள எப்படிதான் நீ இப்படி நம்புறியோ? மதுரைக்கார லேடின்னா மட்டும் நம்பலாமா?

முன்னால ஒரு தடவதான் பார்த்துருக்கேன்ற, ஆனா நம்பலாம்கிற, இங்கயே கார்லதான் இருப்பேன், எதுனாலும் ஒரு சத்தம் குடு உடனே வந்துருவேன், மொபைல்ல சார்ஜ் இருக்குல்ல, கைலயே வச்சுக்கோ, அவங்க எது கொடுத்தாலும் சாப்டாத,  குடிக்காத”

அவன் முகத்தையே பார்த்திருந்தாள் மிர்னா.

போடா, நீ என்னை லவ்பண்ற அளவ பார்த்து எனக்கே என் மேல பொறாமை வந்துடும் போல இருக்கு,

“உத்தரவுங்க மகராஜா! நீங்க சரின்னு சொல்ற வரைக்கும் அவங்க தரும் எதையும் சாப்டல குடிக்கல ஓ கே”

“நான் ஒரு நாளும் சரின்னு”

சட்டென அவன் வாயை தன் கரத்தினால் மூடினாள் மிர்னா.

“ப்ளீஸ் அப்படி சொல்லாதீங்க” அவனை தொட்டு பேசும் பழக்கமில்லாத அவள் செயலின்  கெஞ்சல் புரிந்தவன் அவள் கையை மெல்ல விலக்கினான்.

ஹையோ கண்டு பிடிச்சுட்டானோ? ப்ளீஸ்டா தயவு செய்து கண்டு பிடிச்சுடாத, என் திட்டமெல்லாம் டங்கு டிங்காயிடும்,.

“போய்ட்டு வாங்க மிர்னா மேடம், எல்லாம் உங்க வருங்கால ஹஸ்பண்டுக்காக செய்றீங்க,. ஆல் த பெஸ்ட்”

அவனை திரும்பி பார்த்துக்கொண்டே சென்று அந்த வீட்டின் காலிங் பெல்லை அழுத்தினாள் மிர்னா, திறந்த சிறு இடைவெளியில் உட் புகுந்தவள் அடுத்த நிமிடம் அன்பான அணைப்பில் இருந்தாள். வியனின் அம்மா நீலா.

“வா வா மிர்னு குட்டி, வாசல்ல வச்சு சார் பயங்கர அட்வைஸ் போல, இதுலெல்லாம் ரெண்டு பசங்களும் அப்படியே அவங்க அப்பா மாதிரி”

“கண்டு பிடிச்சுட்டாங்களோன்னு டென்ஷனா இருக்குதும்மா, முதல்லெல்லாம் தேச பாதுக்காப்பு ரேஞ்சுக்கு பேசுனவங்க கடைசில கிண்டலா பேசின மாதிரி இருந்துது”

“அதுல்லாம் இவனுங்க இப்படிதான் மிர்னு, ஒன்னுமே தெரியலைனாலும் எல்லாம் தெரிஞ்ச மாதிரி முகத்த வச்சுப்பாங்க, அப்படியே நாம ஏமாந்து எல்லாத்தையும் உளறிருவோம்னு நம்ம பத்தி அவ்ளவு நல்ல நம்பிக்கை”

“இவ்ளவு தூரம் வந்து, இப்பவும்  அவங்க இப்படி வாசல்ல இருக்காங்க, உங்களுக்கு அவங்கள மீட் பண்ண முடியலையேன்னு வருத்தமா இல்லையாம்மா?”

“அப்படில்லாம் இல்லாம இருந்தா நான் அம்மாவே கிடையாது, அன்னைக்கு ஊர்காரங்கட்ட  வியன் எங்க கார் ஆக்சிடெண்டாகிட்டு, அதனால மாட்டிகிட்டோம்னு சொல்லி இருந்தா, ஊர்கட்டுபாடுங்கிற பேர்ல இப்படில்லாம் ஒரு நிலை வந்தே இருக்காது, ஆனா அவன் மனசுல எதோ ஒரு முடிவோட இதெல்லாம் செய்துட்டு இருக்கான், அதுக்கு என்னால முடிஞ்ச சப்போர்ட் இது”

“…..”

“அதோட எனக்கு கவலைபட பிடிக்காது. வாட் நெக்ஸ்ட்னுதான் யோசிப்பேன், நீ என் கூட இருக்கிற நேரத்துல நான் சோக பாட்டெல்லாம் பாட தயாரா இல்லை”

வியன் தன்னை ஏன் தன் அம்மா போல் என கவினிடம் சொன்னான் எனப் புரிய தொடங்கியது மிர்னாவிற்கு.

“அம்மா சமையல் க்ளாஸ்னு சொல்லிட்டு வந்திருக்கேன், தினமும் எதாவது சொல்லி தாங்க, இல்லனா அவங்கட்ட பொய் சொன்ன மாதிரி ஆயிடும், ஆனா முதல்லயே சொல்லிட்டேன் எனக்கு நீங்க க்ளாஸை ஸ்டவ் எப்படி பத்த வைக்கணும்கிறதுல இருந்து தான் ஸ்டார்ட் செய்யணும், அந்த அளவுக்கு நான் சமையல்ல எக்ஸ்பெர்ட்”

சரியாக ஒன்றரை மணி நேரம் முடிய இவள் மொபைல் சிணுங்கியது.

“டைம் ஆகிட்டு நீ வெளிய வா” வியன்தான் அழைத்தான்.

“தெரியுதா? நீ என்னை மீட் செய்ய வந்திருக்கன்னு தெரிஞ்சா இப்படி வா வான்னு பறக்க மாட்டான்”

சமாதானமாக விடை பெற்றாள் மிர்னா.

அடுத்த பக்கம்