என்னைத் தந்தேன் வேரோடு 11

றுநாள் காலை இவளை பயிற்சிக்கு அழைத்துப்போக வந்த மிஹிருடன் வியனும் வந்தான். அது வழக்கமான நிகழ்வுதான். ஆனால் கிளம்பும்போது சின்னவெங்காயத்தையும் அவன் பயிற்சிக்கு உடன் அழைத்து வந்ததுதான் மிர்னா எதிர்பாராத ஒன்று.

அது மாத்திரமல்ல மிஹிருடன் இவளுக்கு காரில் பின்னிருக்கை. சின்ன வெங்காயத்துடன் அவன் முன் பகுதியை பகிர்ந்தான்.

எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, டனக் டன் டன்”

மிர்னா பாட தொடங்க க்ரீச்சிட்டு நின்றது கார்.

ஹ ஹ ஹா கார் ப்ரேக்டவுனாகி நம்ம பாடல் திறமையை நிரூபிச்சுட்டு

அதற்குள் வியனோ ஒஃபிலியாவிடம் எதோ சொன்னவன், இவளை முன்னிருக்கைக்கு வருமாறு அழைத்தான். ஒஃபிலியா பின்னால் வந்தாள்.

ஆங், இன்னைக்கு நம்ம பாட்டை கேட்டு ஒன்னுமே நடக்கலயே, ஆஹா நாம பாட போறோம்  பூமி ஆட கூடாதுன்னு நேத்து ப்ரேயர் பண்ணமே, அதுக்கப்புறம் இப்பதான பாடுறோம், ஓ ப்ரேயர் எஃபெக்ட், சர்வவல்ல தேவனுக்கே சகல மஹிமையும்,

முன்னிருக்கைக்கு மாறினாள்.

கரிசனை நிறைந்த மென்குரலில் வியன் பேசத் தொடங்கினான்.

“என்னாச்சு மிர்னு, என்ன ப்ரச்சனை? எதுவும் ஸ்டெரெஸ்ஸா இருந்தாதான் பாடுவேன்னு சொல்லிவியே”

அவன் எப்பொழுது ஒருமைக்கு வருகிறான் எப்பொழுது மரியாதை பன்மைக்கு தாவுகிறான் என சட்டென புரிந்தது மிர்னாவிற்கு.

இவள் மனதிற்குள் ப்ரச்சனைகளை உணரும் ஒவ்வொரு தருணமும் நான் இருக்கிறேன் என்ற விதமாக ஒருமைக்கு மாறுகிறது அவன் பேச்சு. மற்ற நேரம் மரியாதை பன்மை.

செல்ல சாக்லேட் பையா, நீ ச்ச்சோ ச்சுவீட், ஆனா இதுக்காகெல்லாம் எம் எம் ஃப்ரெண்ட்ல வச்ச லெக்கை பேக்ல வைக்றதுல்ல,

“ஆமா வியன் எனக்கு ரொம்ப ஸ்டெரெஸ்ஸா இருக்குது”

“என்னாச்சுமா?” உருகியது அவன் குரல்.

“இல்ல, நேத்து நைட்தான் ரொம்ப தீவிரமா யோசிச்சேன்”

“ம்?”

“எப்படியும் சீக்கிரம் ஒலிம்பிக் முடிஞ்சிடும்”

“ம்,முடிஞ்சிடும்?”

“அது வந்து, அடுத்து என்ன? எப்படியும் கல்யாணம் தான?”

அவன் முகத்தில் வந்துதித்த இதம், அவன் உணர்வுகளை முகத்தில் ப்ரதிபலிக்காமல் இருக்க எடுக்கும் முயற்சிகள் எல்லாம் இப்பொழுதுதான் அவளுக்கு புரிகின்றது.

 ஐயையோ, ப்படிலாம் பார்த்த என் ப்ளான நானே ட்ராப் பண்ணிடுவேன் போலயே,. நோ, நோ, ஒன்லி ஆக்கே,. நோ பீச்சே, ஹி,.ஹி, எனக்கும் ஹிந்தி தெரியுமாங்கும்,

“எப்படியும் எனக்கு சீக்கிரம் கல்யாணம் ஆக போகுது, ஆனா எனக்கு சமையலே தெரியாது, யோசிக்கிறப்ப ரொம்ப ஸ்டெரெஸ்ஸா இருக்குது”

இவளை ஒரு விதமாய் பார்த்தவன்

”இதெல்லாம் உனக்கு ஏன் இப்ப ஞாபகம் வருது, ஒழுங்கா ட்ரெய்னிங்க மட்டும் கவனி மிர்னு“ என்றான்.

அவன் விழிகள் அவள் உள்மனதை படிக்க முயல்வது புரிந்தது. ஒருமையில் பேசினாலும் அவன் குரலில் சிறு கட்டளை தொனி?!!”

“அதெப்படி வியன், ஒரு வருஷத்துல முடியப்போற ஒலிம்பிக்ஸுக்கு இவ்ளவு ட்ரெய்னிங்னா வாழ்க்கை முழுக்க வாழப்போற மேரேஜுக்கு எவ்வளவு ட்ரெய்னிங் தேவை,

அதுவும் எனக்கு வரபோறவன் எப்படி இருப்பானோ? பொதுவாவே ஜென்ட்ஸுக்கு சாப்பாடு விஷயம் ரொம்ப முக்கியம்னு கேள்விபட்டிருக்கேன்”

“அதுக்கெல்லாம் ஆள் வச்சுகலாம் மிர்னு”

“அதெல்லாம் உங்களுக்கு முடியும் வியன் சார், ஆனா எனக்கு அவ்ளவு வசதி வாய்ப்பு இல்லையே”

ஹை, இப்ப என்ன சொல்வீங்க? இப்ப என்ன சொல்வீங்க?

“உங்க வீட்டால என் கனவு கலஞ்சதுன்னு இருக்க கூடாதுன்னு இவ்வளவும் செய்றீங்க, ஆனா அப்றம்?

அடுத்து நான் ஜெயிச்சதும் எனக்கு கவர்மென்ட் ஜாப் கிடைக்கும், அந்த சம்பளத்துக்கு ஏத்த ஒருத்தர கல்யாணம் செய்துட்டு அதுக்குட்பட்ட வாழ்க்கைதான நான் வாழணும், இனியும் என் அம்மாட்டல்லாம் திரும்ப போய் காசுக்காக என்னால நிக்க முடியாது வியன் சார்”

“அதுக்கு??”

“அதனால நான் குக்கிங் க்ளாஸ்ல சேரலாம்னு இருக்கேன், இங்கயே ஒரு 15 டேஸ் கோர்ஸ், மதுரைக்காரங்க எங்க ஊர் சமையல் சொல்லி கொடுக்காங்களாம்”

அவள் முகத்தை ஆழ பார்த்தான் வியன்.

அடுத்த பக்கம்