என்னைத் தந்தேன் வேரோடு 1 (4)

“இங்கே ஒரு சின்ன லேக் இருக்குது….ஒரு ரவுண்ட் போய்ட்டு போகலாம்…..ஒரு மணி நேரம் போயிரும்…

உங்க ஃபேமிலி வெஹிக்கில்ஸ் முன்னால நம்மை கடந்து போயிடும். அவங்களுக்கு பின்னால நாம மெயின் ரோட்டில் திரும்பவும் போய் சேந்துகிடலாம்”

வியன் விளக்கம் சொன்னான் அவளுக்கு.

ஏரில எருமை குளிக்றதை பார்கிறதுக்கு ஒரு பயபுள்ள ஃபாரின்ல இருந்து பறந்து வந்திருக்குது….மனதிற்குள் அவள் செய்தி வாசிக்க

“என்னங்க ஒன்னும் சொல்லலை…?” டென்ஷனாக கேட்டான் வியன்.

“அதான் முடிவு பண்ணி வேற ரூட் திருப்பிடீங்கல்ல, அப்புறமென்ன…?” விருப்புக்கும் வெறுப்புக்கும் இடையில் ஒலித்தது அவள் குரல்.

எம்.எம் டா நான், இப்படித்தான் சம்மதம் சொல்ல முடியும். இதுக்காகல்லாம் மனச மாத்தி மண்டபத்துக்கு கொண்டு போயிடாதே, எனக்கு டயலாக் ரிகர்சல் செய்ய டைம் வேணும்.

கேட்கிற கேள்வியில உன் குடும்பமே அலறனுமில்ல, வர்றேண்டா வடிவழகா, கவின் கத்தரிக்கா வாழ்க்கைக்கும் கல்யாணமே வேண்டாம்னு கதறிட்டு ஓட வைக்கேன் உன்னை

 மனதிற்குள் வியனிடம் மன்றாட தொடங்கி கவினை நோக்கி மானசீகமாக கொம்புசீவினாள்.

வியனோ இவளை வருத்திவிட்டதாக நினைத்து “சாரிங்க…ஒன்லி டுடே…” என மன்னிப்பு கேட்டான்.

நானும்தான்டா…கெக்கேபிக்கே இன்னொரு நாள் நீ கூப்பிட்டாலும் உன் கூட வருவனா? மனதிற்குள் மாத்திரம் பதில் சொல்லிக்கொண்டாள்.

தொடர்ந்தது மௌனம்.

இவள் டென்ஷனாக இருப்பதாக நினைத்து சூழ்நிலையை இலகுவாக்கவென வியன்தான் பேசினான்.

“உங்க கூட யாராவது வருவாங்க…..எப்படி சமாளிக்கிறதுன்னு ரொம்ப யோசிச்சேன், இப்படி சப்புன்னு போய்ட்டுது” சிறு சிரிப்புடன் அவன் சொல்ல

“காப்பாத்துங்க….காப்பாத்துங்க…..யாராவது காப்பாத்துங்க….” அவள் அலறிய அலறலில் டயர் தேய நின்றது அந்த ஜாகுவார்.

“என்ன பண்றீங்க நீங்க….” உச்சத்தில் பதறினான் அவன்.

“நீங்கதான சப்புனு போய்ட்டுன்னீங்க, அதான் த்ரில்லிங் எஃபெக்ட் கொடுத்தேன், எப்பூடி?” முகமெங்கும் குறும்பு குடியிருந்தது அவளிடம்.

இதற்குள் சற்று வியர்த்திருந்தது வியனுக்கு. மீண்டும் வாகனத்தை செலுத்த தொடங்கியபடி கேட்டான்.

“ஒரு நிமிஷத்தில் கதி கலங்க வச்சுடீங்க, இப்படியா டென்ஷன் பண்ணுவீங்க, யாராவது கேட்டால் என்ன ஆகும்?”

இது கள்ளாட்டம் கள்ளாட்டம், மனம் அலற

“நீங்க மட்டும் கடத்தலாம் நாங்க மட்டும் கத்தகூடாதோ?” என தலை சரித்து கேட்டாள் மிர்னா. கண்கள் முழுவதும் கிண்டல்.

“இது பிடிக்கலைனா முதல்லயே சொல்லி இருக்கலாமே நீங்க…” பரிதாபமாக கேட்டான் வியன். காரை கொடைக்கானல் பாதைக்கு திருப்பிக்கொண்டிருந்தான் அவன்.

“பிடிக்கலைனு சொல்லிட்டா….?”

அவள் குரலில் எதோ விபரீதம் புரிய, அனிச்சையாய் அதிர்ச்சியாய் திரும்பி அவளை பார்த்தான். “என்னாச்சு மிர்னா?”

“இந்த கல்யாணம் பிடிக்கலைனு சொல்லத்தான் போய்கிட்டு இருக்கேன்….” விழி அசையாமல் முகம் மலராமல் அவள் சொன்ன விதத்தில் அது மொத்தமும் சுத்த உண்மை என வியனுக்குப் புரிய

ஏற்கனவே குறுகலான பாதையில் திரும்ப முயன்று கொண்டிருந்த பெரிய கார், இவன் அதிர்ச்சியில் தாறு மாறாய் சுழன்ற ஸ்டியரிங் வீலின் உபயத்தில் பாதையைவிட்டு விலகி இடபுறமிருந்த பள்ளத்தாக்கை நோக்கி படுவேகமாக உருளத் தொடங்கியது.

ஹேய்…கெக்கேபிக்கே…என்னடா நீ…..அலறிய மிர்னாவின் மனது நினைவிழந்தது.

தொடரும்..

Advertisements

2 comments

  1. கரும்பு திண்ணக் கூலியா…. மிர்னா மைன்ட் வாய்சு தான் highlight of the story…..

Leave a Reply