என்னைத் தந்தேன் வேரோடு 1 (2)

கெக்கேபிக்கே புத்திசாலிடா நீ! உனக்கு இதுல ஃபுல் மார்க்…உன்னை யாராவது என்ட்ட இருந்து காப்பாத்தனுமே அதுக்கு கண்டிப்பா ஆள் தேவைனு தெரிஞ்சிவச்சிருக்கியே!

வழக்கம் போல மனதிற்குள் பேசியபடியே வெளியே பார்வையால் தன் தங்கயைத் தேடினாள்.

“அம்மா…” இவள் தன் அம்மா மாலினியைவை கேள்வியாய் அழைக்க அவரோ

“அதெல்லாம் வேண்டாம் மிர்னிமா…வெயில் கசங்கிடும்….சின்ன மாப்பிள்ள நீங்க கிளம்புங்க…நாங்க வந்துடுறோம்…”

வாயெல்லாம் பல்லாக தேனொழுகும் குரலில் அந்த யோசனையை நிராகரித்தார் அவளது அம்மா மாலினி.

வெயில் கசங்கும் என்றதும் ‘இதுக்கும் மேலயுமா…?’ என ஆராய்ச்சி பார்வை ஒன்றை அருகில் கண்றாவியாக கசங்கி கிடந்த வெயிலுக்கு தந்தவள்,

சின்ன மாப்பிள்ள என்ற பதத்தில் தூக்கிவாரிப்போட திரும்பி தன் அம்மா முகத்தைப் பார்த்தாள்.

அடுத்து அவசரமாக அவனைப் பார்த்தாள்.

டேய்! பி.கே…இங்க உன்னை பதியாக்க பெரும் சதியே நடக்குதுன்னு பட்சி சொல்லுது……எங்கம்மாவுக்கு  மருமகனா வர்றதுக்கு பதிலா நீ கொடைகானல்ல குச்சி ஐஸ் வித்து பிழச்சுகிடலாம்,

பெரிய மனுஷி சொல்லிட்டேன்…புத்திசாலியா புரிஞ்சி நடந்துக்கோ…

மிர்னா அவனுக்கு மானசீகமாக அறிவுரை வழங்க, அவள் வீட்டு போர்டிகோவிலிருந்து அந்தக் கார் கிளம்பியது.

துரையிலிருந்து கொடைக்கானல் நோக்கிப் பயணம்.

அங்குதான் மிர்னாவுக்கும் கவினுக்கும் திருமண ஏற்பாடு வெகு விமரிசையாக செய்யப்பட்டிருந்தது.

அண்ணனுக்கான மணப்பெண்ணை அழைத்துச் செல்ல அவனது தம்பியே வந்திருந்தான்.

சிறிது நேரம் மௌனம் காரில். மனதிற்குள் பல கணக்குகளைப் போட்டுக் கொண்டிருந்தாள் மிர்னா.

நிச்சயமாக இந்த அளவுக்கு செல்லும் இத்திருமண ஏற்பாடு என மிர்னா முதலில் நினைக்கவே இல்லை.

அவளது அம்மா மாலினிதான் முதலில் இந்த திருமண விஷயம் குறித்து தொடங்கியது.

சர்ச்சில் இவளைப் பார்த்தார்களாம் அந்த கவினின் பெற்றோர். பிடித்துவிட்டதாம்.

தங்கள் மூத்த மகனுக்கு மணம் பேசி வந்தார்களாம், இவள் பெற்றோரும் சம்மதிக்க மணம் நிச்சயமாகி விட்டது என்பதுதான் இவளுக்கு தந்த முதல் தகவலே.

அதோடு அவர்கள் எத்தனை பெரிய கொம்பர்கள், கோடீஸ்வரர்கள், பில்கேட்ஸுக்கே பினான்ஸியர்கள் என்ற ரீதியில் ஒரு அல்டாப்பு பில்டப் வேறு.

ஆனால் இடி மின்னலுக்கே இழுத்து வச்சி ஃப்யூஸ் போடுவாளாங்கும் நம்ம மிர்னி என நட்பு வட்டத்தால் நற்சாட்சி பெற்ற மிர்னி @ எம் எம் இந்த சலசலபுக்கெல்லாம் டென்ஷன் ஆவதாவது.?

அம்மா மாலினி இட்லிய இமய மலைனும், இடியாப்பத்த இன்டியானா ஸ்பின்னிங் மில்னும்  எப்பவும் உயர்வு நவிற்சி அணிக்கே உதறலெடுக்குற அளவுக்கு உதார் காமிக்கிற பார்டினு மிர்னிக்கு தெரியும்ங்கிறதால,

கல்யாணம் நிச்சயமாகி இருக்காதுங்கிற நம்பிக்கையோட, தன் மறுப்பை அம்மாட்டயும் அப்பாட்டயும் சொல்லிப் பார்த்துட்டு,

சாட்சிகாரன் கால்ல விழுறதவிட, சண்டக்காரன் கழுத்த பிடிக்கலாம்னு ஒரு முடிவோட அந்த கவின் கடுகு டப்பா வீட்ல இருந்து பொண்ணு பார்க்க வரட்டும், கவனிக்க வேண்டிய விதத்துல கவனிச்சுகிடலாம்னு கவலையே இல்லாமல்தான் இருந்தாள்.

பாட்டி இறந்த பிறகு, பாட்டி வீட்டிலிருந்து இப்பதான் இவள் வீட்டோடு வந்துவிட்ட இவள் தங்கைட்ட கூட தன் திட்டத்தைச் சொல்லி, சிரிக்கவே தெரியாத அந்த சிந்தனைவாதி சிரியா அழகியை  கூட சிரிக்க வைத்தாளே.

ஆனா ஒருநாள் இவள் ஜிம்மிலிருந்து வீட்டிற்கு வந்து குளிச்சு முடிசுட்டு, கைல கிடச்ச சல்வாரை எடுத்து போட்டுகிட்டு, கீழ இறங்கி வந்தா…. ஹால்ல யாரோ ரெண்டு பேர் உட்கார்ந்து இவ அம்மா அப்பாட்ட பேசிகிட்டு இருக்காங்க.

பார்த்ததும் அவங்க இவ அம்மாவோட அலட்டல் கிளப் ஆள்கள் மாதிரி தெரியலையேன்னு அலர்ட் ஆகியிருக்கனும்னு இப்போ தெரியுது.

அப்போ பாவம் யாரோ நல்லவங்க வயாசனவங்க, இப்படி இவ அம்மாட்ட மாட்டிகிட்டாங்களேன்னு போய் அவங்கட்ட நல்லபடியா பேசி அவங்கள காப்பாத்தி வழியனுப்பி வைக்கதான் தெரிஞ்சிது.

அவங்க போன பிறகுதான் இவளுக்குத் தெரியுது அவங்கதான் மாப்பிள்ள வீட்டுகாரங்க, அவங்க வந்தது இவள பொண்ணு பார்க்கன்னு.

அடுத்து இனி அந்த மாப்பிள்ளை வர்றப்ப தனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லனு தெளிவா, பேசி முடிச்சிடனும்னு இவ இங்க படு கேர்ஃபுல்லா இருக்க, அவன் வரவே இல்லை.

அதுக்கு பதிலா கல்யாணம் மூனு வாரத்திலனு தகவல் வருது.

அடுத்த பக்கம்

Advertisements