என்னைத் தந்தேன் வேரோடு 17(8)

“என் பெர்த் டே அன்னைக்கு, என் பேர்ல இருந்த ப்ராப்பர்டி எல்லாத்தையும் நம்ம பேருக்கு மாத்தினேனே, என் ஃப்ரெண்ட்ஸ் விஜயும் சாமும் கூட வந்திருந்தாங்களே, அப்பதான் இதையும் செய்தேன்”

அதிர்ந்துபோய் நின்றாள் வேரி,

“எப்ப உன்னை கல்யாணம் செய்தேனோ அப்பவே என் வேர் முதலா உன்ட்ட எல்லாத்தையும் கொடுத்திடணும்னு முடிவு செய்ததுதான்”

அன்று டாகுமெண்ட்ஸை படிக்காமல் சைன் செய்தது அவன் மட்டுமல்ல இவளும்தான் என்பது இவளுக்கு இப்பொழுதுதான் புரிகிறது,

ஆக அன்றைய இவனின் ஆனந்தம் எதற்காய் இருந்திருக்கிறது? இவள் அதை என்னவாய் புரிந்துகொண்டு என்னவெல்லாம் செய்துவிட்டாள்??

அவன் மார்பில் சரணடைந்தாள்

“என்னோட வேரும், அது ஓடும் நிலமும் நீங்கதான் கவிப்பா, என் அஸ்திவாரம்”

“இன்டியன் மேரேஜ் என் இஷ்டப்படின்னு சொன்னீங்கள்ல, அப்படின்னா என்னை இப்பவே அங்க கூட்டிட்டு போங்க” மிர்னாவின் திட்டம் புரியாமல் கோரிக்கையை அன்றே  நிறைவேற்றி வைத்தான் அவளது ஆசைக் கணவன்.

சென்னையில் வந்து இறங்கியதும் சொன்னாள். “நம்ம மேரேஜை உங்க ஊர்லயே வைக்கலாம், அப்பதான் அவங்களுக்கும் நல்லா படும்”

“உன் இஷ்டம்”

“இப்பவே பத்திரிக்கை கொடுக்கணும், இன்னும் 15 டேஸ்ல வெட்டிங்”

“சரி”

ஏர்போர்டிலிருந்து நேராக இன்விடேஷன் ஷாப், ப்ரிண்ட் செய்த பத்திரிக்கையை கையில் எடுத்துக்கொண்டுதான் மதுரை ஃப்ளைட்டில் போர்டானாள் மிர்னா.

மதுரையில் இருந்த அம்மா வீட்டில் குளித்து கிளம்ப அரை மணி நேரம்.

“பத்திரிக்கை கொடுக்கிறதுக்கு நானும் அங்க வருவேன், நாம ரெண்டு பேரும் இப்பவே போவோம்”

“நீ எதுக்கு மினு, எதாவது சொல்வாங்க”

அதுதான எனக்கும் வேணும் பி.கே,

“என்னை விட்டுட்டு நீங்க மட்டும் போவீங்களா?” பரிதாபமாய் ஒரு பார்வை,

“சரி வா”

“எனக்காகத்தான் அன்னைக்கு நீங்கல்லாம் பேசுனீங்கன்னு புரியாம பேசிட்டேன், அதான் கல்யாணத்தையே இங்க வைக்கிறோம், எல்லோரும் வந்து நின்னு நடத்தி தரணும்” மிர்னா ஊரில் இருந்த முக்கிய நபரின் வீட்டில் பேசிக்கொண்டிருக்க,

“ம், கல்யாணப் பொண்ணும் மாப்ளையும் சேர்ந்து வந்து பத்திரிக்கை கொடுக்கிறீங்களாங்கும்?” ஒரு பாட்டி ஆரம்பித்தார்.

“அதான் ஏற்கனவே எங்களுக்கு கல்யாணம் நடந்துட்டே பாட்டி” வியன் சமாளித்தான்.

“அது அந்த நாட்டுக்கு பாட்டிமா, நம்ம நாட்டுபடி இனிமதான், இதுதான் எங்களுக்கு முக்கியம்”

பாட்டிமா பிக் அப் பண்ணுங்க பாட்டிமா, இல்லைனா என் ப்ளான் பணால் ஆகிடும்,

“நம்ம நாட்டு முறைல செய்றதுன்னா முறையா செய்ங்க, பொண்ணு வீடுன்னு நம்ம ஜான்சன் வீடதான வச்சிருக்கீங்க, அங்க வைங்க பொண்ண, கல்யாணம் முடிஞ்சதும் கூட்டிட்டு போ, அதுதான் நம்ம ஊர் முறை, மரியாதையும் கூட”

பாட்டி ஆரம்பிக்க அடுத்த அரை மணி நேரத்தில் மிர்னா பேக்டு டூ ஜான்சன் வீடு. வியன் பாடு படு படு சூடு.

அடுத்த ஒரு மணி நேரத்தில் வியன் மிர்னா இருவரின் பெற்றோர் உடன் பிறந்தோர் அத்தனை பேரும் வந்து சேர திருவிழாவாய் ஆரம்பித்தது திருமணம்.

மொபைலில் மிர்னாவை அழைத்தான் வியன் “எனக்கு நல்லா தெரியும் இது உன் ப்ளான்தான?”

”ஸ்மார்ட் பாய் கரெக்டா கண்டு பிடிச்சுட்டியே”

“உன்ன நான் என்னடி செய்தேன்? ஒரே ரூம்ல முழு உரிமையோட இருந்தாலும் ஒரு இம்மிகூட உன் இஷ்டத்துக்கு விரோதமா எதுவும் செய்யாமதான இருந்தேன்? என்னைப் போய் ப்ராப்ளம்னு கழற்றி விட்டுட்டியே”

“நோ நோ இதை கரெக்டா தப்பா புரிஞ்சிகிட்டீங்க, எனக்கு நம்ம ஊர் ஸ்டைல்ல நச்சு பிச்சுன்னு ரொமாண்டிக்கா ஒரு மேரேஜ் வேணும், என்னதான் பர்கர் சாப்டாலும் நம்ம கிராமத்து கோழிகொழம்புக்குன்னு ஒரு ருசி இருக்கதான செய்து?”

“நீ கோழி கொழம்பு சாப்ட ஆசைப் பட்டு என்னை கடுங்காப்பியில காயப்போடுறீயே, இது உனக்கே நல்லா இருக்குதா?”

“டேஸ்ட் செய்து பாக்காமலே புலம்பாதீங்க பி.கே”

“என் பொண்டாட்டிய பார்க்கவிடாம என்னை படை போட்டு தடுத்துவச்சிருக்காங்க எங்க ஊர்காரங்க, பத்தாத பாக்கிக்கு எங்கப்பா வேற நாங்கல்லாம் இப்டிதான்டா கல்யாணம் செய்தோம்னு டென்ஷனாக்கி விட்டுகிட்டு இருக்காங்க”

“என்ஜாய்”

நாள் 2

“மினு இன்னைக்கு கல்யாண புடவை எடுக்க மதுரை போறாங்க, வராம மட்டும் இருந்திடாத”

“நான் வருவேன் மாப்ஸ், நீங்க வர முடியுதான்னு பாருங்க”

அவள் அங்கு ஷோ ரூம் வாசலில் இறங்கும் போது வியனைத் தவிர அனைவரும் மாப்பிள்ளை வீட்டிலிருந்து ஆஜர்.

கடையில் மற்றவர்கள் சேலை தேர்வில் மும்முரமாக இருக்க, சற்று தள்ளிப் போய் போன் செய்தாள்,

“என்ன மாப்ளை சார் என்னை வர சொல்லிட்டு நீங்க மாட்டிகிட்டீங்க போல?”

“பக்கத்துல உள்ள கண்ணாடில உன் முகத்தைப் பாரு உனக்கே இது எவ்ளவு ஓவர்னு தெரியும்”

அருகிலிருந்த கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துக்கொண்டே இவள் “கண்ணாடில பார்த்துகிட்டுதான் இருக்கேன், ஒன்னும் ஓவரா இல்லையே, எல்லாம் அளவா…” இவள் அமர்த்தலாய் அவனை சீண்டிக் கொண்டிருக்க்

சட்டென அந்த கண்ணாடி கதவாக திறக்க, விருட்டென உள்ளிழுத்தான் வியன்.

கண்ணாடி ட்ரையல் ரூம் கதவாயிருந்திருக்கிறது, உள்ளே அவன்,

“அச்சோ, யாராவது பார்த்திர போறாங்க” இவள் பதற

சட்டென கதவை மூடினான்.

“எவ்ளவு நேரமா உள்ளே உனக்காக வெயிட் செய்துட்டு இருக்கேன் தெரியுமா?”.

ஒரு கணம் அவனை ஆவலாய் பார்த்தவள் வாய்விட்டு சிரித்தாள்.

அவனுமே சிரித்துக் கொண்டுதான் இருந்தான்.

“சொன்னேன்ல இது கடுங்காப்பி இல்ல சிக்கன் குழம்பு” கண்சிமிட்டினாள்.

“போடி, நீயும் உன் சிக்கனும், மத்த நேரம் எல்லாம் இது கசப்பு காபி”

“ரெண்டு பேரும் மாத்தி மாத்தி பேசுறது கஸ்டமர் யார் காதுலயாவது விழுந்தாலே கஷ்டமா போயிடும்” இவள் சொல்ல

வேரியை அலை பேசியில் அழைத்தான்.

“அண்ணிதான் வாசல்ல நிக்காங்க, முதல்ல நீ அவங்க கூட போ, அப்புறமா நான் வாரேன்”

கதவை திறந்து கொண்டு வெளியே வந்தாள் மிர்னா.

அன்று இரவு அலைபேசியில் இதைப் பற்றி இருவரும் பேசிச் சிரித்தனர்.

அடுத்த பக்கம்