என்னைத் தந்தேன் வேரோடு 17(7)

“ஹை, நீங்கதான் உலகத்திலேயே சூப்பர் ஹஸ்பண்ட், வைஃப் நினைக்கிறத அப்படியே கண்டுபிடிச்சுடீறீங்களே, நீலாம்மா சொன்னாங்க எதையும் கரெக்டா கண்டுபிடிச்சு விலகிடுவீங்க, துணிஞ்சு ஊத்தலாம்னு”

“ஹான், இனிமே நீ எங்க அம்மா கூட சேராத, எனக்கு ரொம்ப கஷ்டம் போல”

“ஹி, ஹி, அதெப்டியாம், இது தலைமுறையா தொடரும் பாரம்பரியமாம், என்னால தடைபட கூடாது பாருங்க”

“கவின் ஏன் என் ரூம்ல வந்து படுத்தான்னு இப்போதான் எனக்கு புரியுது”

“ஐயோ, முதல்ல வேகமா கிளம்புங்க, அப்புறம் வச்சுகிடலாம் இந்த ஆராய்ச்சிய, மணி 1.30 ஆகுது, எல்லோரும் எதாவது நினச்சுபாங்க” ஞாபகம் வந்தவளாக அவசரப்படுத்தினாள்.

“என்ன நினச்சுபாங்கன்னு முதல்ல சொல்லு, அப்புறமா எல்லோரையும் சமாளிக்கிறது எப்படின்னு சொல்லித்தாரேன்” இவனோ ஒரு மார்க்கமாய் கேட்க,

முகம் சிவந்து வந்தது அவளுக்கு “போடா”

மெல்ல அருகில் வந்தான்.

ஆயிரம் பூக்கள் அவளுக்குள்.

தரை ஆராயும் விழிப் பார்வை.

“அன்னைக்கு ஹாஃப் சேரில செமயா இருந்த”

“ம்”

“அன்னைக்கே ஒரு முடிவுக்கு வந்துட்டேன்”

“ம்?”

“மனம் ஒத்த மனையாளே அதை கண்டுபிடிச்சா சந்தோஷம், upto you”

அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவன் சொல்ல வருவது புரிந்தது. சீக்கிரம் செய்வோம்.

“இப்போ நீ கேட்ட விஷயம், நம்மள மட்டும் இங்க விட்டுட்டு மொத்த குடும்பமும் ஊரை காலி செய்தாச்சு நேத்து நைட்டே”

“ஆன்?”

“கவின் செகண்ட் இன்னிங்ஸ், ஸ்காட்லண்ட் ட்ரிப், நம்ம இன்டியன் மேரேஜ் அரேஞ்ச்மென்ட்க்காக என் மாமனார் குடும்பமும் உன் மாமனார் குடும்பமும் பேக் டு பெவிலியன்,

நாம எப்போ இன்டியா போகணும்? திரும்பி கலோனா ரியோவா? எங்க செட்லாக போறோம்னு நீ தான் டிசைட் செய்யணும், எதாவது ஒரு ஆஃபீஸ் நான் இன்சார்ஜ் எடுக்கணும், அடுத்ததை ஆன்ட்ரூ எடுப்பார்”  வியன் சொல்ல,

அவனது இப்பொழுதைய இந்த பழகுமுறையும் பிடித்திருக்கிறது, இது திரும்ப விரும்பினாலுல் கிடைக்காத ஒன்று. ஆனால் அவன் ஹாஃப் சேரி ஆசை அறிந்த பின் அதை வெகுவாக தள்ளிப் போடவும் விருப்பம் இல்லை என இதையெல்லாம் யோசித்தவள்,

“இன்னைக்கு நைட்டே கிளம்பிடுவமா?” என விசாரித்தாள். அவளுக்குள் ஒரு திட்டம் ஓரளவு உருப் பெற்றிருந்தது.

“என் கூட தனியா இருக்க அவ்வளவு பயமாவா இருக்குது?” அவன் பாவம் போல் பாவத்தில் கேட்டான். கிண்டலுக்குத்தான்.

“ஏன் அங்க போனதும் இனி நம்மை தனித் தனியா பிரிச்சு வச்சிடுவாங்களா என்ன? எப்படியும் நைட் உங்க கூட தனியாதான இருக்கணும்?”

“யாருக்கு தெரியும்?” அவன் விளையாடிக் கொண்டிருக்க,

“ஹை இந்த ஐடியா கூட நல்லா இருக்கே” என்றாள் விஷமமாக இவள். அவள் திட்டத்திற்கு முழு உருவம் கிடைத்தேவிட்டது.

“என்ன நல்லா இருக்குது நோ வே, எதுனாலும் என் பக்கத்துல இருந்துட்டு செய்தா போதும், ஒரு வருஷம் வெய்ட் செய்துருக்கேன், பக்கத்து ரூமுக்கு கூட தனியா விடமாட்டேன்”

அதையும்தான் பார்த்துருவோம் பி.கே, ஜில் ஜில்னு எனக்கு ஒரு ரொமாண்டிக் வெட்டிங் வேணும், இங்கதான் இருந்த டென்ஷன்ல சான்ஸை மிஸ் செய்துட்டேன், அடுத்த சான்ஸையும் விடுறதா இல்லை, உன் ஆசையையும் என் ஆசையையும் ஒரே நேரத்தில நிறைவேத்திடுவோம், ஐ லவ் யூடா

“என்னங்க நீங்க ஆகஸ்டுக்கு இங்கதான் பெஸ்ட்னு சொல்லிட்டு, ரூமைவிட்டு அசைய கூட மாட்டேன்றீங்க, கிளம்புங்க சைட் சீயிங் போலாம்” வேரி கவினை எழுப்பிக்கொண்டு இருந்தாள்.

“இன்னும் சின்ன பிள்ளையாவே இருக்க குல்ஸ், ரூமைவிட்டு என்னை எங்கயும் கிளப்ப முடியாது” திரும்பி படுத்தான் கவின்.

“அதையும்தான் பார்ப்போமே, எனக்கு ஒரு சூப்பர் டெக்னிக் அத்தை இப்பதான் சொல்லி கொடுத்தாங்க, மிர்னுவோட இன்வென்ஷனாம், அது எப்படின்னா கொதிக்க கொதிக்க முதல்ல காஃபிய ஆர்டர் செய்யணுமாம்” வேரி கெத்தாக சொல்ல,

அவசரமாக எழுந்து உட்கார்ந்தான் கவின்.

“நான் உடனே வியன்ட்டயும் என் அப்பாட்டயும் பேசணும், முதல்ல உங்க மூவர் கூட்டணிய கலைச்சாகணும்” அவன் அறிவிக்க,

“அதெல்லாம் நடக்கிற காரியம் கிடையாது, அத்தைக்கு நான்னா ரொம்பவே செல்லம்” வெகு சலுகையாக வேரி சொல்ல,

இதில் கொஞ்சம் சீரியஸானது கவினின் முகம்.

“குல்ஸ் அம்மாவுக்கு நானும் வியனும் ஒன்னுதான், அது மாதிரிதான் நீயும் மிர்னாவும்”

“அதெல்லாம் தெரியுமே, எனக்கு அவங்கட்ட செல்லம் ஜாஸ்தி, அவ கூட சேர்ந்து அவள மாதிரியே அதிகமா குறும்பு செய்வாங்க, இது கூட புரியாம உங்கள மாதிரியா நாங்க 1% அதிகமா பிடிக்கும்னு அடிச்சுப்போம்னு நினச்சீங்க”

“ஹேய் என்ன நினச்சுட்ட நீ? என்னைவிட வியனை எங்கம்மாவுக்கு அதிகமா பிடிக்கணும்னுதான் நானும் நினைப்பேன், அதே மாதிரி வியனும் என்னைதான் அம்மாவுக்கு அதிகமா பிடிக்கணும்னு  நினைப்பான்”

ஒரு கணம் அவனைப் பார்த்தவள்

“தப்பா நினைக்கலை கவிப்பா, ஆனா நிஜமாவே புரியல, இவ்வளவு தூரம் அவங்கள விட்டுகொடுக்காம பேசுற நீங்க  வியன் ஃபினான்ஸியலி கஷ்டப்படுறப்ப அவங்களுக்கு ஏன் ஹெல்ப் பண்ணல?

மிர்னு ஃபினான்ஸியலி கஷ்டப்பட்டோம்னு சொல்றப்ப எனக்கு எவ்ளவு கஷ்டமாயிட்டு தெரியுமா?”

“என்ன நீ இப்படி வேற நினச்சுகிட்டு இருக்கியா? எல்லா பிஸினஸ்ல இருந்தும் ஃபண்டை ஃப்யூயல் ஃபாக்ட்டரிக்கு  டைவர்ட் செய்திருந்ததால ஓவர் ஆல் நம்ம ஃபினான்ஸ் டைட்,

சோ ஸ்பின்னிங் டிபார்ட்மென்ட் MDயா சேலரியை எனக்கு ஏற்கனவே குறச்சிருந்தேன், அந்த சேலரி என்னோடதுங்கிறதுங்கிறதால அதுல இருந்து முடிந்த வரை வியனுக்கு அனுப்புனேன்,

ஆனா அவங்க 3 பேரா ட்ரிப் போகவேண்டிய இருந்தது, அதோட மிஹிர்கான சேலரின்னு,  அந்த அமௌண்ட் அவஙளுக்கு பத்தல, அப்பாவோட எதையும் வாங்க மாட்டேன்னு சொல்லி இருந்தான் வியன், அதான்”

“எனக்கு ரொம்ப குழப்புது கவிப்பா, அப்படின்னா எனக்கு மட்டும் அவ்ளவு அமௌண்ட் என் அக்கவ்ண்ட்ல டிபாசிட் செய்து வச்சிருக்கீங்க?”

“ம், அது நம்ம எல்லா பிஸினஸ்லயும் உன்னை என்னோட  பாட்னரா இன்க்ளூட் செய்திருக்கில்லையா, அதனால வர்ற அமௌண்ட் அது, வியன் அவனோட  பாட்னர்ஷிப்பை தான் டினை செய்திருந்தான், இனி அவன் மிர்னு ரெண்டு பேரும் பார்ட்னர்ஷிப்ல வந்துருவாங்க, எந்த ப்ராப்ளமும் இருக்காது”

“இதை எப்பப்பா செய்தீங்க?“

அடுத்த பக்கம்