என்னைத் தந்தேன் வேரோடு 17(5)

“நீ அவங்களை விலக்கிட்டு வெளிய வந்தது தப்பே கிடையாது மிர்னு, ஆனா அத்தனை வருஷம் உன்னை வளர்த்திருக்காங்க அவங்கட்ட ஒரு மாரியாதைக்கு கூட சொல்லிக்காம நான் எப்படி உன்னை எனக்கே எனக்குன்னு எடுத்துக்க முடியும்? அதான் அவங்கட்ட பேச ஆரம்பிச்சேன்,

ஆரம்பத்துல நீ சொல்ற மாதிரிதான் அவங்க இருந்தாங்க, பணம் இருந்தால் போதும் அதுக்காக என்ன செய்தாலும் சரிதான்னு,

அப்புறம் ஒஃபி(லியா) தான் தான் எவ்வளவு பெரிய ஹாஸ்பிட்டல்ல பிறந்தேன்னும், இருந்தும் டெலிவரில அவங்க அம்மா இறந்துட்டாங்கன்னும் அவ லைஃபை பத்தி கொஞ்சம் கொஞ்சமா பேச, உங்கம்மா கரெக்டான ட்ராக்ல  யோசிக்க ஆரம்பிசுட்டாங்க,

அதோட அவங்களோட அடிப்படை பாசம்தான், ஆனா நியாயத்தோட சேராத பாசம், மிஹிர் சொன்ன மாதிரி அழுகி நாறிட்டு இருந்தது,

இப்ப பரவாயில்லை,  திருந்தி வாழ்றதுங்கிறது ஒரு ஜர்னி, அதுல அவங்க போக வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்குது, அவங்க பலவீனம் நம்மை பாதிக்காத அளவு  தூரத்துல வச்சுகிடுவோம், ஓகே வா“ வியன் விளக்க

ஏதோ ஒரு புள்ளியில் இதை ஒத்துக் கொள்ள முடிகிறது மிர்னாவால்.

“ம்” என சொல்லி வைத்தாள்.

என்னை புரிந்து, என்னை நேசித்து, எனக்காய் வாழும் இவன் என்ற ஒரு நினைவு தோன்ற, நிமிர்ந்து இவனைப் பார்த்தாள்.

என்னவன் என்ற ஒன்று உந்த அவளருகில் இருந்த அவனது கையை மெல்ல பற்றிக் கொண்டாள். அவன் விரல்களும் அவள் கையைப் பின்ன,

அந்நேரம் எதிரில் வந்து நின்றது கார்.

“நாளைக்கு கல்யாணத்தை வச்சுகிட்டு இத்தனை மணி வரை,  அதுவும் கார்ல கூட வராம, அங்க எல்லோரும் தேட ஆரம்பிச்சுடாங்க” என்றபடி கவின் வந்திருந்தான்.

.அடிமனதில் நின்ற அலை கடல் துரும்பு நிலையில், இந்த அம்மா அலையும் ஆரவாரமாய் சேர்ந்திருந்த நிலையில், கவின் வார்த்தை நாளைய கல்யாணத்தை ஞாபகபடுத்த, அதில் வியனின் எதிர்பார்ப்பு ஞாபகம் வர,

வியனின் கையிலிருந்து தன் கையை உருவிக் கொண்டாள் மிர்னா.

கடமையில்தான் ஆரம்பமாகும் போலும் கல்யாண உறவு, காதல் காய் கனியும் என்று தோன்றவில்லை அவளுக்கு.

கல்யாணம் வேண்டும் என்கிறாள்,அதை பற்றி பேசினால் விலகியும் போகிறாள், மனதில் இருத்திக் கொண்டான் வியன். அவள் மனம் எதில் உழல்கிறது என அவனுக்குப் புரிகின்றது.

திருமண நாள்.

வியன் மிர்னாவிடம் திருமணம் கோரும் முன்பாகவே அவர்களின் திருமண ஏற்பாட்டில் படு பிஸியாக இருந்தது வேரிதான்.

உடை முதல் உணவு வரை இப்படி வியன் மிர்னாவிற்கு ஆப்ஷன் கொடுக்கும் அளவிற்கு அத்தனை அடிப்படை வேலைகளும் செய்து கொடுத்தது அவள்தான்.

அப்பொழுதே அப்படி என்றால் இன்று அவள் பிஸியோ பிஸி,

திருமண நிகழ்விடத்தில் அத்தனை ஏற்பாடுகளும் ஒழுங்கும் கிரயமுமாய் நடக்கிறதா என மேற்பார்வை பார்த்திருந்தவள்,

“மிர்னுவுக்கு மேக் அப் செய்ய ஆள் வந்துட்டாங்களாம், நான் அங்க போகணும், கூட்டிட்டு போங்க“ என கவினிடம் வந்து நின்றாள்.

“ஹப்பா காலையில இருந்து கண்லயே படாத பிள்ளபூச்சிக்கு இப்பதான் ஆஸ்தான ட்ரைவர் ஞாபகம் வந்துச்சு போல” காரில் அவளுக்கு கதவை திறந்துவிட்டான் கவின்.

“ஹனிமூன் போகணும்னு சொல்லிட்டு இருந்த என்னை அப்ராட் கூட்டிட்டு வந்தும் அடுத்த ரூம்லவிட்ட அழகுசுந்தரத்தை எதுக்கு தேடணுமாம்?”

“இப்பதான் குல்ஸ் நீ இன்னும் அழகா இருக்க, எப்படி கரெக்டா பாய்ண்டுக்கு வர பாரு, இன்னைக்கு நைட் நமக்கும் ஹனிமூன் சூட் புக் செய்திருக்கேன்”

“அப்டீங்களா, அங்க போய்தான் தனியா தூங்கணும்னு உங்களுக்கு தோணிச்சுன்னா செய்ங்க, உங்க ஆசைய நான் கெடுக்க மாட்டேன், நான் நல்லவ”

“ஹேய் குல்ஸ், நமக்கு நடுவுல யார்டா கொளுத்திப் போட்டது? நீயா இப்படி யோசிக்கவே மாட்டியே”

“கண்டுபிடிச்சிடீங்களே, நல்லவங்க நாலுபேர் சொன்னாங்க, ப்ரெக்னன்டா இருக்கிறப்ப அழவிட்ட ஹஸ்பண்ட் கண்டிப்பா தோப்புகரணம் போடணுமாம்”

காரை சட்டென நிறுத்தினான் கவின்.

“இவ்வளவுதானா? ராஜகுமாரியின் ஆசையை நாலு சுவத்துக்குள்ள என்ன நடுரோட்ல வச்சே கூட நிறைவேத்தி தாரேன்” கார் கதவை திறந்தான்.

“தெரியுமே, எனக்கு தெரியுமே,  தோப்புகரணம்னு சொன்னா இப்படிதான் ஈசியா செய்துட்டு போயிருவீங்கன்னு, அதான் நான் உங்களுக்கு ஏத்தமாதிரி பனிஷ்மென்டை மாத்திட்டேன், எப்பூடி?”

“இதெல்லாம் உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியலையா?.”

“இல்லையே, இல்லவே இல்லையே”

“ப்ளீஸ் ப்ளீஸ் கொஞ்சமே கொஞ்சம் கிரேஸ் காமியேன்”

“ம், இவ்ளவு கெஞ்சுறீங்க, அதனால ஒரு கிரேஸ் லைன் தாரேன்”

“கலக்கல் கண்ணமாவாகிட்டீங்களே, சொல்லுங்க சொல்லுங்க, சீக்கிரமா சொல்லுங்க”

“அது, நாம திருநெல்வேலி போனதும் வித் யுவர் பெர்மிஷன், ஒரு முக்கியமான வேலையை ஆரம்பிக்கணும்னு நினைச்சிருக்கேன், அது என்னதுன்னு நைட்டுகுள்ள சொல்லுங்க, நான் ஹனிமூன் சூட்டுக்கு என்ன ஸ்காட்லண்ட்க்கே கூட வாரேன்”

மாலை ரிசார்டின் கடற்கரைப் பகுதியில் நடந்தேறியது திருமணம். ரிஷப்ஷன் தொடங்கிய சிறிது நேரத்தில் மிர்னாவுடன் கிளம்பிவிட்டான் வியன்.

மேற்கத்திய கலாசாரத்தில், விருந்தினர் அனைவருக்கும் முன்பாக, முதலில்  தம்பதிகள் விடைபெற வேண்டும் என்பதால், இதில் யோசிக்க ஒன்றும் இல்லை என்றாயினும், மிர்னா மனதிற்குள் இறுக்கம் கூடிக் கொண்டே போனது.

எல்லாவற்றிலும் இவன் காட்டும் அவசரம், காதல் என்பது இவ்வளவுதானா? இதற்குத்தானா எல்லாம்?

வேறு எந்த கசந்த, அழுத்தமான சூழ்நிலைகளும்  பாதிக்காத வகையில் இவன் செயல் மட்டும், இவனால் ஏற்படும் ஏமாற்றம் மட்டும் ஏன் இத்தனையாய் இவளால் சாமாளிக்க முடியாததாய் தாக்குகிறது?

வர்களுக்காக ஏற்பாடு செய்திருந்த சூட்டிற்குள் நுழைந்ததும் சொன்னான்,

“மினு ட்ரஸ் மாத்தணும்னா மாத்திக்கோ, உனக்கு எது கம்ஃபர்டஃபிளா இருக்குமோ அது”

இவள் யோசனையாய் முழித்துக் கொண்டிருக்கும்போதே, உள்ளறை சென்ற வியன் இரவு உடைக்கு மாறி வர, இவளும் தனது நைட் டிரஸ்ஸுக்கு மாறி வந்தாள்.

அப்பொழுது சோஃபாவில் இருந்தவன் “வா வா, உனக்குதான் வெயிட்டிங்” சோஃபாவில் இவளுக்கு இடம் காட்ட கடமை பட்டவளாக அதில் உட்கார்ந்தாள், இதோட உள்குத்து என்ன பி.கே

“உனக்காக இது வாங்கினேன்” டிவிடியை ஆன் செய்தான் வியன். டிவி யில் டாம் அண்ட் ஜெர்ரி.

ஹான், பி.கே உன் ப்ளாட் ஒன்னும் புரியலையே, நான் என்னலாமோ நினச்சா, நீ ஏதோ ஒரு ரூட்ல போற,

வாட் நெக்ஸ்ட்? என்று மனதில் ஓட டி.வியை முதலில் முறைத்துக் கொண்டிருந்தவள் மெல்ல மெல்ல அவளது பாணியில் அதை ரசிக்க தொடங்கினாள்.

சூழல் மறந்து சிரித்துக் கொண்டிருந்தவள் மெல்ல உணர்ந்து திரும்பிப் பார்த்தால் இவள் அருகில் ஒரு பில்லோவில் தலை வைத்து சோஃபாவின் ஆர்ம் ரெஸ்டில் கால் வைத்து கண்மூடி சுக லயிப்பில் அவன், காதில் ஐ பாட்,

அன்றொருநாள் அவன் அம்மா அருகில் கண்மூடி ஏக்கமாய் அவன் அமர்ந்திருந்த ஞாபகம்.

மெல்ல அவன் நெற்றியில் கைவைத்தாள். அவன் முன் நெற்றி முடிகளுக்குள் இவள் விரல்கள் பயணம். அன்று செய்ய நினைத்தது, குனிந்து அவன் நெற்றியில் முதல் முத்தம்.

“தப்பா எடுத்துக்காத மினு” என்றபடி இப்போது இவள் மடியில் முகம் புதைத்திருந்தான் அவன்.

அடுத்த பக்கம்