என்னைத் தந்தேன் வேரோடு 17(10)

நாள் 10

மதுரை, வெட்டிங் ஷாப்பிங்.

“ஹையோ நீங்க வருவீங்கன்னு யாருமே சொல்லல” ஆரவரித்தாள் மிர்னா.

“சர்ப்ரைஸா இருக்கட்டுமேன்னுதான் சொல்லாமல் வந்தேன்டா, உன் வெட்டிங் ஜுவல் என் சார்பா எங்க வீட்ல உள்ளவங்க வாங்கணுமாம், என்னை பொறுத்த வரை என் வைஃப்க்கு நான் தான் வாங்கித்தரணும். அதான் வந்துட்டேன், ஸோ இன்னைக்கு ஃபுல் டே நாம ஷாப்பிங் தான்”

“சாக்ல்லேட் பையா, ரொம்பவே உங்களை மிஸ் பண்ணேன்” அவனை துள்ளி அணைக்க துடித்த மனதை சுற்றி இருந்த கூட்டத்தின் காரணமாக கைவிட்டாள்.

“மீ டூ டா, ஹூம், இந்த ஷாப்பிங்க்லாம் எங்கயாவது அப்ராட்ல செய்திருக்கலாம், குறஞ்சபட்சம் மும்பைலயாவது”

“எங்க வாங்குறோம், எதை வாங்குறோம்னுலாம் இல்லை வினு, எப்படி வாங்க்றோம்ங்கிறதுதான் எனக்கு இப்போ முக்கியமா தெரியுது, செமயா இருக்குது”

“இருக்கும், இருக்கும் மனுஷனை இப்படி காய போட்டுட்டு, செமயாதான் இருக்கும்”

நாள் 12

“ஃபிலடெல்ஃபியால இருந்தும் சான்ஃப்ரான்ஸிஸ்கோவில் இருந்தும் அம்மாவோட கசின்ஸ் வந்திருக்காங்க, தாய்மாமா வீட்ல இருந்து செய்ற அரிசி கூட்டதுக்காக, இப்படில்லாம் தூரத்துல இருக்கிறவங்க செய்றது இல்லைனாலும், நீ ஆசைப்பட்ட ட்ரெடிஷனல் மேரேஜ்க்காக வந்துருக்காங்க”

“வரச் சொல்லி இருக்கீங்கன்னு சொல்லுங்க”

“எக்ஸாக்ட்லி, நீ ஆசப்பட்ட ஒன்ன செய்யாம விடலாமா? மாமாஸ்க்கும் இது ஃபன், பைதவே அவங்க பொண்ணைப் பார்க்கன்னு இன்னைக்கு ஈவ்னிங் உங்க வீட்டுக்கு வருவாங்க, கூட அப்படியே நான் வரதுன்னு முடிவு செய்திருக்கேன்”

“அட சி.பி, நீங்க அடுத்த தெருல இருக்கிற பொண்ண பார்க்கிறதுக்கு அவங்கள ஆயிரம் ஆயிரம் கிலோமீட்டர் வரவச்சிருக்கீங்க”

“ஹி, ஹி, வெறும் 14,000km ஒன்லி”

“அட பாவி”

“ம்ஹூம், காதல் அப்பாவி”

நாள் 14

“இன்னைக்கு ஊர் சாப்பாடு, வெளியூர்ல இருந்து வந்திருக்கவங்க, உள்ளூர்காரங்கன்னு அத்தனை பேர் இங்க எங்க வீட்ல, ரியோ கல்யாணம் மொத்த கெஸ்ட்டே இதுல 1/10த் கூட வரமாட்டாங்க போல, செம க்ராண்டா ஃபீல் ஆகுது இது”  வியன் சந்தோஷிப்பிக்க,

“ம், இதுக்கே இப்டியா? அதே அளவு கூட்டம் இங்க எங்க வீட்லயும், இங்கயும் ஊர் சாப்பாடு, நாளைக்கு நம்ம இரெண்டு குடும்பத்துகாரங்களும் சேர்றப்ப கல்யாணம் எப்படி இருக்கும்?”  மிர்னா இன்னுமாய் எடுத்துக் கொடுக்க,

“சூப்பர் தான்”

“என்ன எல்லோரும் வந்திருக்காங்க, அதனால நீ இன்னைக்கு சாரிதான் கட்டணும்னு சொல்லிட்டாங்க, எப்படியோ சமாளிச்சு ஹாஃப் சாரிக்கு பெர்மிஷன் வாங்கி இருக்கேன்” பெண்ணவள் ஒரு விதமாய் சலித்துக் கொள்ள

“…..”

“என்ன வினு, பேசிகிட்டு இருக்கப்பவே காலை கட் செய்துட்டீங்க?”

“பாவம் பாவாடை தாவணினதும் ஸ்பாட்ல ஃப்ளாட் போல பி.கே, செல்லபையா சீக்கிரமே இங்க வருவியாம் நீ”

விருந்தினரில் குழந்தைகளும் வாலிப பெண்களும் சேர்ந்து வீட்டின் பின்னிருந்த அந்த பெரிய திறந்த வெளியில் ஒழிந்து பிடித்து விளையாடிக்கொண்டிருக்க,

கிணற்றின் அருகில் இருந்த துணிதுவைக்கும் கல்லின் மீது அமர்ந்திருந்து வியனிடம் பேசியவள், அவன் இணைப்பை துண்டித்ததும் சிறிது நேரம் அங்கேயே அமர்ந்திருந்தவள் அப்பொழுதுதான் கவனித்தாள்.

இவள் தங்கி இருந்த வீட்டு மாடு ஒன்று அவிழ்த்துக் கொண்டுபோய் தூரத்தில் இருந்த வைக்கோல் போரை மேய்ந்து கொண்டிருந்தது.

வெளிச்சம் குறைவாக இருந்தாலும் போதுமானதாக இருப்பதால் ஒழிந்து பிடித்து விளையாடுவோர் அங்கு மறைய நினைத்து சென்று மாடை பார்த்து மிரளக் கூடும்,

இரண்டு வாரம் தங்கி பழகிவிட்டதால் இந்த மாடு இப்போ MM ஃப்ரெண்ட்.

போய் கயிறை பிடித்து இழுத்தாள்,

“ட்ரி, ட்ரி, இங்க வா, இங்க வா நீ”

மாட்டிடம் பேசிக்கொண்டிருந்தவள் இதை கவனிக்கவில்லை.

வைகோல் போர் பின்னிருந்து வெளிப்பட்ட மீசைகார்ர்கள் இருவரில் ஒருவர் அவள் மேல் வலையை வீச, அடுத்தவர் அவள் வாயைப் பொத்த, கைகாலை அசைக்க முடியாதபடி நொடியில் இவளை வலையில் சுற்றி வைக்கோல் போருக்கு பின்னிருந்த இருட்டிற்குள் தூக்கிக்கிக் கொண்டு சென்றனர் இருவரும்,

மொத்த இருள் ப்ரதேசம்.

ஒருவர் கையில் டார்ச்.

மௌனம், அருகில் ஓடும் நீரோடையின் சத்தம் மட்டும்,

மெல்ல இவளை இறக்கிவிட்டனர்,

ஓடையின் கரையில் மர நிழலில் ஒரு வெண்ணுடை வேஷ்டி உருவம் தெரிகிறது.

“அங்க ஒருத்தர் நிக்றாரே, அவர்ட்ட போய் நீ இப்ப பேசலைனா, வியனுக்கு பெரிய ஆபத்து” தூக்கிப் போன உருவம் சொல்ல

“வியனுக்கு ஆபத்துன்னு இன்னொரு தடவை சொன்ன வாய்லயே அடிப்பேன்” கடத்தப்பட்டு போன மிர்னா எகிறினாள்.

“அது” கடத்தல் வாய்ஸ் பம்ம,

“வாய்ஸை மாத்தி பேசிட்டா வரிகுதிரைய அடையாளம் தெரியாம போய்டுமா?”

தூக்கி வந்தவர்களில் ஒருவரின் காதை பற்றினாள் மிர்னா,

“ஏய் வென்யா வரிகுதிரை, என் கல்யாணத்துக்கு வர்ற நீ முதல்ல என்னைப் பார்க்கதான வந்திருக்கணும்?”

“அது, கல்யாண வீடுன்னதும் டிரைவர் நேரா அண்ணா வீட்லதான் போய்  காரை நிறுத்தினார், அண்ணா வேற ஹெல்ப் வேணும்னு கேட்டாரா, அதான், எப்ப கண்டுபிடிச்ச நீ?”

“ம், வாயைப் பொத்றப்பவே”

“நீ அமைதியா வாரப்பவே எனக்கு சந்தேகம் வந்திருக்கணும்”

“எது எப்டியோ, நீ என் ஆப்போனன்ட் ஆகிட்ட, அதுக்கு பனிஷ்மென்டா, நீ உன்னை அனுப்பினவரை கொஞ்சம் டென்ஷன் ஆக்கணும், ஏய் லிடி உனக்கு வேற தனியா திருகணுமா காதை?”

“வேண்டாம் தாயே, உன் ஆள் இதெல்லாம் அனுபவிக்கணும்னு இருக்கு, அதை யாரு மாத்த? என்ன செய்யணும் சொல்லு? லிடியா நொந்து கொள்ள,

“வேண்டாமே மிர்னு, அண்ணா பாவம், ரொம்ப ஆசையா காத்துகிட்டு இருப்பார், காலம் முழுக்க உன்ட்டதான் மாட்டிகிட்டு முழிக்கப்போறார்ங்கிற காரணத்துக்காகவாவது அவரை இன்னைக்கு  மன்னிச்சு விட்றேன்” வென்யா கெஞ்சினாள்.

“ம், இவ்ளவு சொல்ற அதனால விடுறேன், வந்த வழியே போங்க நம்ம வீடு வந்துடும், இப்ப வந்துடுறேன்”

தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடிப்போயினர் வென்யாவும் லிடியாவும்.

காத்திருந்தவன் கண் நோக்கி இருந்த திசையை தவிர்த்து, அவன் பின்புறமாக பூனை நடையிட்டு சென்றாள்.

அவனோ இவள் வருகையை உணர்ந்தவன் போல், அவன் அருகில் சென்றதும் சட்டென பின்புறமாக கை நீட்டி அவளது கையைப் பிடித்தான் வியன்.

அவனிடம் செய்ய நினைத்த குறும்பு ஒன்றும் ஞாபகமின்றி போனது இவளுக்கு.

“வாங்க மகராணி, உங்கட்ட மாட்டின எலிஸ் காலி போல”

“ம்” மெல்ல உருவிக்கொண்டாள் அவனிடமிருந்து தன் கையை.

அவள் முகம் பார்த்தவன், அவள் முழு உருவத்திலும் பார்வை பதித்தான்.

பெண்மை நதி அவளுள் ப்ராவகம். அவன் மன நிலை உணர்ந்தாள்.

ஆதவனின் பார்வை தன்நிறமாக்கும் நீர்பர்ப்பை, அனுபவத்தில் உணர்ந்தாள்.

அடர் நீல பட்டு பாவாடையில் முழ நீள ஆரஞ்சு வர்ண கட்டி சரிகை, ஆரஞ்சு வர்ண தாவணி, சிறு ஒட்டியாணம்,  தலையில் சரியும் மல்லிகை, காதிலாடும் ஜிமிக்கிகள், ஒற்றையாய் தனியாய் ஒரு சுட்டி நெற்றியில்,

இவன் பார்வை பட பட செந்நிறம் பூசும் அவள் முகம், பின்னணியில் நிலவு, குளிர் இரவு,

“இதை கொடுக்கணும்னு தோணிச்சு” கையில் கொண்டு வந்திருந்தான் மல்லிகை சரங்கள்.

திரும்பி அவனுக்கு தன் பின் தலையை காண்பித்தாள்.

ஏற்கனவே தலையிலிருந்த பூவின் பின்களை எடுத்து இதை வைத்துவிட்டான்.

அவள் தோள் பிடித்து தன் புறமாக திருப்பினான்.

அவன் முகம் நோக்கி உயர மறுத்தன இவள்  இமைகள்.

அவள் உதடுகளை மெல்ல தொட்டவன் அவள் புறமாக குனிந்தான்.

கண் மூடிக்கொண்டாள் மிர்னா. சம்மதம்.

அவன் சுவாசம் உணர்ந்தது அவள் முகம்.

“நாளைக்கு” நினைத்ததை முடிக்காமல் நிமிர்ந்து விட்டான்.

சிறு புன்னகையுடன் அடி உதடை கடித்தபடி தலை குனிந்து கொண்டாள் அவள்.

“ஆனாலும், இதாவது” அவள் கன்னத்தில் வைத்தான் அவனது முதல் அச்சாரத்தை.

இருவருக்குள்ளும் சிறிது நேரம் அங்கு மௌனம்,

“நேரம் ஆகுது கிளம்பு, நாளைல இருந்து எப்பவும் என் கூடதான்”

“ம்” கிளம்பி வந்துவிட்டாள் மிர்னா.

பின் இரவில் அலைபேசியில்

“தூக்கமே வர மாட்டேங்குது மினு”

“எனக்கும்”

“எதாவது பேசேன்”

“வினு, முன்னால ஊருக்கு வாக்கு குடுத்திருக்கேன்னு நீலாம்மாட்ட கூட பேச மாட்டீங்க, இப்போ என்னடான்னா இந்த 14 நாளும், புகுந்து விளையாடிருக்கீங்க?”

“ம், அப்ப நான் ஊருக்கு வாக்கு கொடுத்து இருந்தேன், பட் இப்போ நீ என் பொண்டாட்டிடி, உன்னை பார்க்க கூடாதுன்னு சட்டம் போட ஒருத்தர்க்கும் உரிமை இல்ல, பட் உனக்கு இந்த செட் அப் மேரேஜ் பிடிச்சிருக்குது அதான், உனக்கும் எனக்குமாய் “

“தேங்க்ஸ் பி.கே”

“இன்னும் பி.கே தானா? அதுக்கு மேல ப்ரமோஷன் இன்னும் கிடைக்கலையா எனக்கு?”

“…..”

கள்ளா,பதில் தெரிஞ்சிகிட்டே கேள்வி கேட்கிற நீ, நாளைக்கு இருக்கு உனக்கு

அடுத்த பக்கம்