Forum

Thalli Pogaathey Enaiyum Thalli Poga Sollaadhey -Comments Thread  

Page 9 / 9
  RSS
prama
(@prama)
Trusted Member
Posted by: @divya-ramalingam

ரம்யா டு சூர்யா -தள்ளிப் போகாதே.!எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே..!

ஹீரோ -சூர்யா 
ஹீரோயின்- ரம்யா 
 
சூர்யாவிற்கு ஏற்ற சோதிகா அல்ல  இவள் ஆனால் இந்த சூர்யாவிற்காகவே படைக்கப்பட்ட ரம்யா இவள்!
 
கதையின் ஆரம்பமே சிறப்பான தரமான சம்பவமாக கல்யாணத்தில் தொடங்குகிறது. யாருக்கு கல்யாணம் என்றால் வேறு யாரு எல்லாம் நம்ம சூர்யா ரம்யாவிற்க்கு தான். 
இருவருக்கும் இடையே  படிப்பு  அந்தஸ்து இப்படி பல வேற்றுமைகள் , இருந்தாலும் 'வை ஷூட் கேர்ள்ஸ் ஹேவ் ஆல் தி ஃபன்?'ன்னு சூர்யாவின் பட்டுவேட்டி சரசரக்க, சந்தனம் மணமணக்க, சூர்யா கடுக்கடுக்க ரம்யா கலக்கலக்கன்னு நடந்தேறுகிறது அழகான திருமணம். ஆரம்பத்தில் பிடிக்காமல் கல்யாணம் செய்யும் சூர்யாவிற்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ரம்யாவை பிடிக்க ஆரம்பிக்க, ரம்யாவோ அவன் மேல் எல்லையற்ற காதல் வைத்திருந்தும் தன் தகுதியை நினைத்து, தாழ்வு மனப்பான்மையாலும், தன் அறியாமையாலும் அவனை விட்டு விலக நினைக்க, அதன்பின் பிரிவும் சேர்வும் என்று அழகாக நகரும் கதை. 
 
ரம்யா- அக்மார்க் தமிழ்நாட்டு கிராமத்து பொண்ணு. அடாவடி ,குறும்பு மற்றும்  இவள் கூட்டாளிகளுடன் சேர்ந்து அடிக்கும் அரட்டை என்று மனதை கொள்ளை கொள்ளும் கதாபாத்திரம். 
 
சூர்யா - தரமான  படிப்பு, சிறப்பான வேலை. பணக்கார சிட்டி பையன்.   தனக்கும் ரம்யாவிற்கும்  எந்தவகையிலும்  பொருத்தம் இல்லை,ஏன் ராக்கெட்விட்டாலும்கூட எட்டாத தூரம் என்று ஆரம்பத்தில் நினைத்திருக்க, திருமண வாழ்விற்கு மனப்பொருத்தம் மட்டுமே போதும்  என்பதை தெரிந்து,  தெளிந்து , காதல் என்றால்  என்ன என்று புரிந்து, மனைவி மேல் எல்லையற்ற காதலும், அவள்  பிரிவில் அவன் தவிக்கும் தவிப்பும் என்று  அழகாக வலம் வரும் இனிமையானகதாபாத்திரம். 
மீசை நடராசன் - அவர் பெயரே மீசைன்னே ரிஜிஸ்டர்  ஆயிடுச்சி.  மீசையை முறுக்கிட்டே கெத்தா வலம் வர அவர் நினைச்சா, மற்றவர்கள் தான் இவரை முறுக்கி பிழிவாங்க. பிரகஷ் வீட்டிற்கு வாக்கபட்டு போனது என்னவோ இவருடைய தங்கச்சி மலர் ஆனால் பிராகஷிடம் மாட்டி கொண்டு முழிப்பது என்னவோ இவர். சூர்யா, பிரகாஷ், ரம்யா,  மகேஷ்வரி என்று ஆளுக்கு ஒரு பக்கம் வச்சு செஞ்சாலும் அசால்டா சமாளிக்கும் மீசை சித்தப்பு நடராசன், அசத்தலான கதாபாத்திரம்.
 
பிரகாஷ் - மனைவி இருக்கும் போது  அவர் அருமை தெரியாதவர், அவரின் மனதை புரிந்திராதவர் . அவர் இறந்தபின்பே அவர் அருமை தெரிந்து, அவருடைய டைரி மூலம் அவரின் மனதையும் தெரிந்து கொள்கிறார். தன் மகனின் கல்யாண வாழ்க்கையை மனைவியின்  ஆசைப்படி நிறைவேற்ற ரம்யாவை கட்டி வைக்கும் அழகான கதாபாத்திரம்.
 
மலர்- தனிமையிலே சிக்கி தவித்து, தன் ஆசைகள், கஷ்டங்கள், ஏக்கங்கள்  என்று  எல்லாவற்றையும் டைரியில் வடித்து  தனக்கு தானே ஆறுதல் தேடி கொண்டவர். தன் கஷ்டங்களை சிரித்த படி டைரியில் எழுதிருந்தாலும் அதில் அவர் அனுபவித்த கஷ்டங்களும் வலிகளும் தெள்ள தெளிவாக புரியும். ஒரு சில இடங்களில் நினைவுகளாக வந்தாலும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் கதாபாத்திரம்.
 
அம்சா- அதிக படிப்பறிவும், விவரமும் இல்லாத மகளை பற்றியும், அவள் வாழ்க்கை பற்றியுமே கவலை படும்  எதார்த்த  அம்மா. 
 
ஈஸ்வர பாண்டி- ஆரம்பம் முதலே  அமைதியாகவே வலம் வந்தாலும் தன்  பெண்ணிற்க்கு ஒரு பிரச்சினை  என்றதும் பொங்கும் அப்பா. சிறப்பு.
 
ரம்யாவின் அறியாமையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் வில்லி சுப்ரஜா.
 
ரம்யாவிற்கு அட்வைஸ் வழங்கும் அவள் அக்கா ராஜலட்சுமி,அண்ணி மணிமேகலை, சுண்டெலி சுரேஷ், மகேஷ்வரி என்று மற்ற  பாத்திரங்களும் நன்று.
 
கிளைமாக்ஸ் தான் விரைவாக முடிந்தது போல்  இருந்தது .இன்னும் கொஞ்சம் ரம்யா சூர்யா பேசும் காட்சிகள், அவனை அவள் சமாதானம் செய்யும் காட்சிகள் இருந்திருக்கலாம் சிஸ். குறைந்தபட்சம் அவர்கள் அம்மாவின் டைரியை பற்றிய விளக்கம்,அவர்களுக்காக அவன் அவளை கல்யாணம் செய்யவில்லை என்பதை  தெரிவித்திருக்கலாம். 
 
இறுதியில் ரம்யா தன் தன்னம்பிக்கை  மற்றும் உழைப்பால் முன்னேறும் விதம் அழகு. 
 
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் பிரேமா சிஸ். 

Acho sis.. you made my day sis.. pothuva kathaiyoda pokkil kathapaathiram amaikka thaan enakku vandhirukku,   appadi vadichcha kathapaathiram ivvalavu aluthamaa irundhirukkaa nu ennai viyakka vechitteenga. indha review, enakku..  oru kathaila oru kathapathiraththin kuna athisayangalai strong aa pathikka kathukodukkumnu namburen.

romba stretch pandra maathiri irukkavendamnu short aa mudichitten. Thank you so much sis.  Oru kathaiyai azhagaa vadichirukkomnu theriya varathu Win pandra sandhoshaththukku satrum kuraivillaatha sandhosham sis..Thank you so much sis

ReplyQuote
Posted : 04/11/2019 2:46 pm
Divya Ramalingam
(@divya-ramalingam)
Reputable Member

@prama

Welcome sis 🙂 👍 

ReplyQuote
Posted : 04/11/2019 4:02 pm
prama liked
Page 9 / 9
Share:
Advertisements