Forum

ரோஜா பூந்தோட்டம் கா...
 

ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் - Comments Thread  

Page 8 / 8
  RSS
Sudhar
(@sudha-r)
Reputable Member

ராதிகா முழுதாக மாறிவிட்டாள்.

லோகேஷ் அவளை காயப்படுத்தி கொண்டே இருந்ததுக்கு பொறாமை தான் காரணமா?

செய்யும் காரியம் யாவிலும் துணையாக நிற்கும் ஆண் தான் எத்தனை அழகு!  நல்ல வரிகள். 

ராதிகா லோகேஷிடம் பேசிய விதம் அழகு. 

மறுபடியும் கார் விபத்தா?  இவ்வளோ செக்யூரிட்டி!! என்ன செய்ய போகிறார்கள் என்று தெரிந்து கொள்ள அடுத்த பதிவிற்காக...

கதை நன்று. 

ReplyQuote
Posted : 30/11/2019 5:25 pm
Malli Ravi
(@malli-ravi)
Trusted Member

இருவருக்கும் திருமணம் செய்து வைத்து அழகா கதையை முடித்து விட்டீர்கள் வாழ்த்துக்கள். ஆரம்பத்தில் இருந்த ராதிக்கும் முடிவில் இருக்கும் ராதிக்கும் எவ்வளவு வித்தியாசம். எல்லாம் விஜய்யின் அன்பு தான் காரணம். லோகேஷ் போன்ற ஆண்கள் வாழும் உலகத்தில் தான் விஜய் போன்ற ஆண்களும் வாழ்கிறார்கள். அவன் விரும்பிய பெண்ணை அவள் வாயாலேயே திருமணத்துக்கு சம்மதிக்க வைத்து விட்டானே. நல்ல கதை படித்த திருப்தி.

 

ReplyQuote
Posted : 01/12/2019 6:43 am
jeyakumar131157
(@jeyakumar131157)
Reputable Member

நன்றாக அமைந்துள்ளது கதை. கொஞ்சம் தேவையில்லாத உரையாடல்கள் இடம் பெற்றிருக்கிறது.

வாழ்த்துக்கள்

ReplyQuote
Posted : 01/12/2019 2:04 pm
Sweh liked
Sudhar
(@sudha-r)
Reputable Member

ராதிகாவிற்கு அவளுடைய பாதுகாப்பிற்க்கான காரணம் தெரிந்து விட்டது. 

தந்தையை பற்றி தெரிந்து கொண்டு சௌ கியூ அவளது பாதுகாப்பிற்காக செய்தது,  சொத்துக்களை ராதிகா வேண்டாம் என்றது, 

விஜய் மருத்துவமனை,  அறக்கட்டளை துவங்கியது எல்லாம் உடனுக்குடன் முடிந்தது போல் இருந்தது. 

திருமணமும் முடிந்து என்று கதையை முடித்துள்ளீர்கள். 

இறுதி பகுதியை இன்னும் கொஞ்சம் சுவாரசியமாக கொடுத்து இருந்திருக்கலாம். என்று எனக்கு தோன்றியது. 

நல்ல கதை. 

நன்று. 

ReplyQuote
Posted : 05/12/2019 4:57 pm
Sweh liked
Sweh
 Sweh
(@sweh)
Eminent Member

@sudha-r

😀 😀 nandri.. padithu comment sonnathuku.. 😐

ReplyQuote
Posted : 30/12/2019 5:26 pm
Sweh
 Sweh
(@sweh)
Eminent Member

@jeyakumar131157

🙂 😊 😋 

ReplyQuote
Posted : 30/12/2019 5:27 pm
Sweh
 Sweh
(@sweh)
Eminent Member

@malli-ravi

thank u 😘 😍 

ReplyQuote
Posted : 30/12/2019 5:27 pm
Sweh
 Sweh
(@sweh)
Eminent Member

@kannamma

😊 😊 😊 

ReplyQuote
Posted : 30/12/2019 5:28 pm
jeyakumar131157
(@jeyakumar131157)
Reputable Member

ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம்

 

ராதிகா, பிஸினஸ் அட்மினிஷ்ட்ரேஷன் படித்த, மாங்க்ரோவ் நிறுவனத்தின் இளம் அதிகாரி. அவளுடைய உழைப்பால் அந்நிறுவனம் ஏற்றுமதி செய்கின்ற அளவிற்கு வளர்ச்சியுற்றது. இளகிய மனம் கொண்ட அவள் ஈற்றிங் டிசோடர் என்ற நோயால் பாதிக்கப்பட்டிருந்தாள். அவளுடைய விருப்ப உணவு, ஐஸ்க்ரீம் மற்றும் சாக்லேட். அடிக்கடி இவைகளை சாப்பிடுவதனால் குண்டாக காட்சி அளிப்பாள்.

 

ராதிகாவின் சிநேகிதி ப்ரீத்தி. அவளுடைய அண்ணன், விஜய். அவர்களின் பெற்றோர் விபத்தில் இறந்துவிட, பூபதீஸ் நிறுவனத்தின் அனைத்து பொறுப்புகளும் விஜயின் பொறுப்பில் விழுகிறது. முக்கியப் பதவியில் இருந்து, நிறுவனத்தை நடத்திக் கொண்டிருந்த குருநாதன், விஜயின் பொறுப்பற்ற பேச்சின் காரணமாக நிறுவனத்தை விட்டுச் செல்கிறார். குடும்பத்தை கவனிக்காமல், தொழிலை வளர்ச்சியடைய செய்வதில் முழு மூச்சுடன் இறங்குகிறான்,விஜய். 

 

பெற்றோரின் மரணத்திற்குப் பின் தாய்மாமன் குடும்பம் அவனோடு தங்குகிறது. அவர்களின் மகனை திருமணம் செய்துக்கொள்ள, விஜயின் தங்கை கட்டாயப்படுத்தப் படுகிறாள். அதனால் மனம் உடைந்து, தற்கொலை செய்துக் கொள்ள முயன்ற ப்ரீத்தியை காப்பாற்றி பாதுகாப்பான ஒரு தனி இடத்தில்  தங்க வைக்கிறாள், ராதிகா. விவரம் அறிந்த விஜய் உறவினர்கள் அனைவரையும் வீட்டைவிட்டு அனுப்புகிறான். தங்கைக்கு அவள் விருப்பத்திற்கு ஏற்ற வரனை திருமணம் செய்து வைக்கிறான். 

 

ராதிகா கல்லூரியில் படிக்கையில் லோகேஷ் என்ற தன் சக மாணவனை காதலிக்கிறாள். அவளிடமிருந்து உதவிகளை பெறுகின்ற லோகேஷ் அவளை ஏளனமாக நடத்துவதுடன், அவளை அசிங்கமாக பேசி அழ வைத்துவிடுவான். இருந்தாலும் ராதிகா அவனை மனப்பூர்வமாக காதலித்தாள்.

 

மாங்கரோவ் நிறுவனத்தின் பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் நிறுவனங்களில் ஒன்று, பூபதீஸ். பூபதீஸ் நிறுவனத்திற்கு வியாபார ரீதியாக விஜயம் செய்யும் ராதிகாவை சந்திக்கிறான் விஜய். 

 

பழைய நினைவுகள் மனதில் தோன்ற அவள் மீது காதல் கொள்கிறான். ராதிகா ஈற்றிங் டிசோடரினால் குண்டாகிருப்பதை அறிந்து, அவளை குணப்படுத்த முயற்சிகள் எடுக்கிறான். 

 

ராதிகாவின் தாத்தா சக்திவேல், தளவாய்புரத்தில், பஞ்சு தொழிற்சாலை அதிபர் முத்துவேலின் மகன். முத்துவேலின் பஞ்சு தொழிலில் பல வளர்ச்சியை கொண்டுவந்து வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்கின்ற அளவிற்கு கொண்டுவந்தார், சக்திவேல். அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள், விஜயலட்சுமி, வித்யலட்சுமி. அவர்களை திருமணம் செய்து கொள்பவர்களுக்கே சொத்து என்பதை அறிந்த மாமன் மகன்கள் அவர்களை திருமணம் செய்ய திட்டமிடுகின்றனர்.

 

அந்நிலையில்,மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அழகை  ரசிக்க வந்தான், இளந்தேவன். மலேசியாவில் பினாங்கு மாகாணத்தில் நீண்ட நெடுங்காலமாக வாழும் தமிழ் குடும்பம் சேர்ந்தவன். அவர்கள் தீவில் மக்கள் கொண்டாடும் இளவரசன். 

 

கைதேர்ந்துவரும் மருத்துவன் அவன். சஞ்சீவி மலையிலும் சதுரகிரி மலையிலும் விளையும் மூலிகைச் செடிகளின் மருத்துவகுணம் பிடித்துவிட்டது. அவைகளை ஆராய்ச்சி செய்வதற்காக தளவாய்புரத்தில் தங்கியிருந்தான். அப்பொழுது வாயாடி பெண் விஜயலட்சுமியின் பேச்சில் மயங்கிவிட்டான். பல எதிர்ப்புகளின் மத்தியில் விஜயாவை திருமணம் செய்து கொள்கிறான், இளந்தேவன். அவர்களுடைய மகள்தான் ராதிகா.

 

சொத்துக்கு ஆசைபட்ட விஜயாவின் உறவினர்கள், சக்திவேல் குடும்பத்தினரை விபத்தில் கொன்றுவிட, குழந்தை ராதிகாவுடன் தப்பித்துக் கொள்கிறாள், சித்தி வித்யலட்சுமி. திருமணம் செய்துக் கொள்ளாமல் மகளுக்காக உயிர் வாழ்கிறாள் வித்யா. 

 

இளந்தேவன் இறந்ததை அறிந்த அவன் நண்பன் சௌ க்யு, அவர்களை மலேசியா அழைத்முப்போக வருகிறான். வித்யா அவனுடன் செல்ல மறுக்கிறாள். சௌ க்யு அவர்களின் வாழ்க்கைக்கு தேவையான வசதிகளையும் பாதுகாப்பையும் ஏற்பாடு செய்துவிட்டு மலேசியா செல்கிறான். 

 

வித்யா, உடல்நலம் குன்றிப்போக விஜயிடம் ராதிகாவை ஒப்படைத்துவிட்டு இறந்துவிடுகிறாள். வளர்த்த தாயின் பிரிவில் வாடிய ராதிகாவை அழைத்து வந்து தன னுடன் தங்க வைக்கிறான், விஜய். அவளது மனநிலையையும் உடல் நிலையையும் அறிந்த விஜய் அவைகளிலிருந்து விடுபட பல முயற்சிகள் எடுக்கிறான்.

 

இறுதியாக பல லட்ச ரூபாய் செலவழித்து, சுப்பு என்ற உடற்பயிற்சி நிபுணரின் உதவியுடன் அவளை மெலிய வைத்து உடலளவிலும் மனதளவிலும் அழகான பெண்ணாக மாற்றுகிறான்.

 

முன்னாள் காதலன் லோகேஷின் குணநலன்களை அறிந்து வெறுப்படைந்த ராதிகா, விஜயை திருமணம் செய்கிறாள். இருவரும் இணைந்து பூபதீஸ் நிறுவனத்தை பன்மடங்கு வளர பாடுபடுகிறார்கள். இதுதான் கதை.

 

எழுத்துப்பிழைகள் அதிகம்.

 

குருநாதன் அவர்கள் பிஸினஸிலிருந்து வெளியேறியதற்கான காரணம் அழுத்தம் தரப்படவில்லை . அவரை மீண்டும் சேர்ப்பதற்கான காரணமும் குறிப்பிடப்படவில்லை . விஜய் அழைத்ததும் மனஸ்தாபத்துடன் வெளியேறிய ஒருவர் பெரிய பதவி என்றதும் ஏற்றுக்கொள்வாரா என்பது கேள்வி குறியே! குருநாதன் குறித்த அனைத்தும் திறம்பட கையாளப்படவில்லை என்பது என்னுடைய கருத்து

 

கதைக்கு தேவையற்ற பல நிகழ்வுகளும் உரையாடல்களும் காட்சிகளும் தவர்க்கப்பட்டிருக்கலாம். 

 

வாழ்த்துக்கள்

ReplyQuote
Posted : 03/01/2020 12:11 am
Sharmi Mohanraj
(@sharmi-mohanraj)
Estimable Member

அருமையான கதை.. 

இந்த கதைக்களத்தில் ராதிகாவும் விஜயும் அற்புதமான கதை மாந்தர்கள்..

 

ஈட்டிங் டிசார்டர் அப்படிங்கிறதை மேலோட்டமாக பார்க்கும் போது காமெடியா தெரிஞ்சாலும் ராதிகாவின் உணர்வுகளை இதில் துல்லியமாக புரிஞ்சுக்க முடியுது...

இழப்பு குழப்பம் பயம் என எல்லாவற்றில் இருந்தும் விஜய் அவளை மீட்கரது அற்புதமா இருந்துச்சு...

 

வாழ்த்துக்கள் தோழி...

ReplyQuote
Posted : 06/01/2020 7:56 pm
Divya Ramalingam
(@divya-ramalingam)
Reputable Member

ரோஜா  பூந்தோட்டம் காதல் வாசம் 

ஹீரோ -  விஜய் 
ஹீரோயின் - ராதிகா 

ஈட்டிங் டிஸ்ஸாடர் மற்றும்  உடல் பருமனால் பாதிக்கப்பட்டிருக்கும் ராதிகா. அவள் மேல் காதல் கொண்டுள்ள விஜய், அவளை அதிலிருந்து மீட்பதும், அவர்கள்  இருவரின் காதலும் என்று  இனிமையாக பயணிக்கிறது  கதை. 

ஈட்டிங் டிஸ்ஸாடர் பற்றிய நிறைய விஷயங்கள் தெரிய வந்தது.  ஈட்டிங் டிஸ்ஸாடர் இருந்தால் அவங்க  எப்படி ரியாக்ட் பண்ணுவாங்க,  அவங்க  மனநிலை, உணர்வுகள் எப்படி இருக்கும், அதற்கான தீர்வு என்ன என்று ராதிகா மூலமாக  மிக  அழகாக வெளிப்படுத்தியுள்ளீர்கள் சிஸ். 

அவங்க  அம்மா இறந்தபோது கூட அவள்  அழுதுட்டே மிட்டாய் சாப்பிட்டு கொண்டே, என்னால் மிட்டாய் சாப்பிடாமல் இருக்க முடியலையே என்று சொல்லும் இடம் மனதை தொட்டது. 

சுப்பு, ராதிகாவிற்கு அளிக்கும் பயிற்சிகளும்,அட்வைஸ் செய்ததும் அருமை. 

கதை கரு சூப்பர். ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம்,  ரோஜா பூந்தோட்டம் போல் மிக இனிமையாய்,  அழகாய் இருந்தது சிஸ்.

முதல் எபி படிச்சுட்டு என்ன இந்த ராதிகா இவ்ளோ ஐஸ்கிரீம் சாப்பிட்டே இருக்கா, விஜய் கடை பத்திரம்ன்னு காமெடியா சொல்லிருப்பேன், ஆனால் போக போக தான் கதையின் சிரியஸ்னஸ் தெரிந்தது , ஈட்டிங் டிஸ்ஸாடர் நோயின் தீவிரம் புரிந்தது. நல்ல  அழுத்தமான கதாபாத்திரம் ராதிகாவோடது, வெகு தாக்கத்தை ஏற்படுத்தியது சிறப்பு சிஸ்.

ReplyQuote
Posted : 13/01/2020 8:40 pm
Page 8 / 8
Share:
Advertisements