Forum

ரோஜா பூந்தோட்டம் கா...
 

ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் - Comments Thread  

Page 4 / 5
  RSS
Sudhar
(@sudhar)
Estimable Member

திடீரென்று நிகழ்ந்த தாயின் மரணம் ராதிகாவை நிலைகுலைய செய்துவிட்டது. அதிலும் அவள் மிட்டாய் சாப்பிட்டுக்கொண்டே அனைத்தையும் தனியாக எதிர்கொள்கின்றாள். விஜய் எவ்வாறு அவளை தேற்றப்போகிறான் என்பதை தெரிந்தது கொள்ள அடுத்த எபிசோடுக்காக வெயிட்டிங்.... 

ReplyQuote
Posted : 05/09/2019 3:29 pm
Sweh liked
Nithya Nithya20
(@nithya-nithya20)
Eminent Member

ஸ்வேத்தா இது அழுத்தமான அத்தியாயம் . 

அம்மாவின் மரணம் அது கொடுத்த வலி. இந்த வலியைத் தாங்க /கடக்க அவள் அடைக்கலம் தேடியது இனிப்பிடம். சாப்பாட்டிடம். 😞 

ஒரு வலியைக் கடக்க உணவைத் தேடுவது !இதுதான் அந்த நோயின் உச்சகட்ட வலியாக இருக்கும். காலம் முழுக்க அவளுடனேயே பயணப்படும் விதமான வேதனை.

தன் கஷ்டங்களைத் தனக்குள்ளேயே புதைத்து ஏங்கி ,தாங்கி தனியாளாக நின்று இறுதிக் கடமைகளை முடித்திருக்கிறாள். 

வேதனைகளை கடந்தவள் அவற்றை வெல்லவும் வேண்டும் !

 

 

ReplyQuote
Posted : 05/09/2019 3:54 pm
Sweh liked
Kannamma
(@kannamma)
Trusted Member

ராதிகாவின் மனநிலை தாயின் இறப்பிலும் மிட்டாய் சாப்பிடாமல் இருக்க முடியவில்லை. 

பூட்டிய வீட்டுக்குள் மனப்புழுக்கம் தாங்காமல் அடைந்து கிடக்கும் ராதிகா 😭😭

ReplyQuote
Posted : 05/09/2019 6:26 pm
jeyakumar131157
(@jeyakumar131157)
Trusted Member

பாவம் ராதிகா, அம்மாவை இழந்த சோகம். அந்த துயரத்தை பகிர்ந்து கொள்ள ஆளில்லா தனிமை. துக்கம் இல்லாமலா இருக்கும். அங்கே நடந்தது என்ன என்பதை அறிந்துக் கொள்ள ஆவல் .

எழுத்துப்பிழைகள் இருக்கின்றன. 

“சொல்றதை கேளு கண்ணா. உணக்குன்னு ஒரு குடும்பம், “

புதயல்.... இன்னும் ஒரு சில

கவனம் தேவை. வாழ்த்துக்கள் 

 

ReplyQuote
Posted : 05/09/2019 8:06 pm
Sweh liked
jeyakumar131157
(@jeyakumar131157)
Trusted Member

அம்மாவின் இழப்பில் ராதிகாவின் மனநிலையை அழகாக கூறியுள்ளீர்கள். 

விஜய் அவள் மீது கொண்டுள்ள காதல் அழகாக தொட்டும் தொடாமலும் வெளிப்படுத்தப் பட்டுள்ளது. நன்று. 

எழுத்துப்பிழைகள் இருக்கின்றன. திருத்திக்  கொள்ளுங்கள் 

ரோஜா தோட்டத்தில் பூக்கள் பூக்கட்டும் . நல்ல வாசம் வீசட்டும். வாழ்த்துக்கள் 

ReplyQuote
Posted : 08/09/2019 9:57 pm
Sweh liked
Kannamma
(@kannamma)
Trusted Member

ராதிகா ஈட்டிங் டிஸ்ஸாடர் நோயை வச்சிக்கிட்டு 4 நாள் சாப்பிடாம இருந்திருக்கா😐😐😐

நமக்குத் துணையாக இருக்கும் ஒரு உறவும் இல்லாமல் போவது கொடிதினும் கொடிது.

இறப்பு எதிர்பாராமல் வருவது எவ்வளவு நிதர்சனமான உண்மை. இழப்பின் வலியை அழகாகக் கூறி இருக்கிறீர்கள் தோழி.. 

விஜய் தொழில் நடத்தும் நேர்த்தி 😍😍

 

ReplyQuote
Posted : 10/09/2019 8:55 am
Sweh liked
Sweh
 Sweh
(@sweh)
Eminent Member

@kannamma

நன்றி... 😘🥰

ReplyQuote
Posted : 10/09/2019 4:21 pm
Sweh
 Sweh
(@sweh)
Eminent Member

@jeyakumar131157

உங்க மெயில் ஐடி கொடுங்களேன். ஸ்வீட்டிக்கு அனுப்புவதற்கு முன்னாடி உங்களுக்கு அனுப்புறேன். ஸ்பெல்லிங் செக் செய்து கொடுப்பீங்களாம். 😁

ReplyQuote
Posted : 10/09/2019 4:22 pm
jeyakumar131157
(@jeyakumar131157)
Trusted Member

@sweh

அனுப்புங்கள் . முடிந்த அளவிற்கு உதவுகிறேன். நட்பு என்பது அதுதானே! 

என்னுடைய மின்னஞ்சல் : jeyakumar.lic70n@gmail.com

ஒருநாள் ஆகும் உங்களுக்கு திருப்பி அனுப்ப. வாழ்த்துக்கள் 

ReplyQuote
Posted : 10/09/2019 4:33 pm
Sudhar
(@sudhar)
Estimable Member

ராதிகாவை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, அவளுடைய இழப்பிற்கு ஆறுதல் கூறுகின்றேன் என்று அவளை வருத்தாமல்,  அவளுடைய துக்கத்தை அழுகையாக வெளிக்கொணரவிட்டு ராதிகாவிற்கு துணையாக நிற்கும் விஜய் இன்னும் கூடுதல் அழகு.. 🤗 

விஜய்... ராதிகாவை எப்படித்தான் மாற்ற போகின்றான் என்பதை பார்க்க வேண்டும்... 

ReplyQuote
Posted : 11/09/2019 12:18 am
Sudhar
(@sudhar)
Estimable Member

ராதிகாவின் ஆசைகள் நிஜமாகவே அழகானது 🙂

அவளின் எண்ணவோட்டம்,  அவளது தனிமை பயம் எல்லாமே இயல்பானதே. 

அட என்னமா ராதிகா விஜயை கல்யாணம் செய்து கொண்டு அவன் வீட்டிற்கு செல்வாய் என்று எதிர்பார்த்தால்,  விஜய்க்கு வேறொரு பெண்ணை பார்த்து கல்யாணம் செய்து வைப்பதாக சொல்லி அவன் இதயத்தை  இப்படி  டமால் என்று உடைத்துவிட்டாயே...

யப்பா,  விஜய் இதற்கு பேசாமல் நீ குற்றாலத்தில் குளித்துவிட்டு சந்நியாசமே வாங்கிக்கொள்ளலாம். 😜

Story is nice... 

ReplyQuote
Posted : 12/09/2019 12:02 am
jeyakumar131157
(@jeyakumar131157)
Trusted Member

ராதுவும் விஜயும் ஒரே வீட்டில் தங்குவது நல்ல முடிவே. இக்காலத்தில் அது பெரிய தவறல்லவே.

அவள் அம்மாவின் செயல்பாடுகளையும் அவளுடைய எண்ணங்களின் வண்ணங்களையும் அழகாக கூறியுள்ளீர்கள். நன்று

விஜயின் தனிமையும் அவன் எதிர்ப்பார்ப்புகளையும் நன்றாக கூறியுள்ளீர்கள்

“அவள் முகம் லேசாகச் சிருத்து அவனுக்காகச் சோகமாக மாறியது.”

“சிறுத்து” என்பதே சரி என எண்ணுகிறேன் 

 ஐயோ பாவம் ராதிகா, இப்படி தனியாக ‘நின்றுவிட்டாலே’ என்று அவளை இன்னமும் சோக நிலைக்கு அல்லவா அவர்கள் தள்ளுவார்கள்

‘நின்றுவிட்டாளே’ என்று வந்திருக்க வேண்டும்

ரோஜாப்பூ தோட்டத்தில் நல்ல வாசம் தொடரட்டும் . வாழ்த்துக்கள் 

 

 

ReplyQuote
Posted : 12/09/2019 9:27 am
Kannamma
(@kannamma)
Trusted Member

மனதிற்குப் பிடித்தவரின் இறப்பிலிருந்து மீண்டு வருவதற்குள் எதிர்வரும் வேலைகளை எப்பாடுபட்டாவது செய்ய வேண்டும். விஜய் ராதிகாவின் மனநிலை 😐😐😐

விஜய் ஒரு வழியா ராதிகா கூட  ஒரே வீட்டில் தங்க அனுமதி கேட்டுட்டான். 😂😂

விஜய் யோசித்த அளவுக்குக் கூட ராதிகா யோசிக்கவில்லை. வயதிற்கு மீறிய முதிர்ச்சி ராதிகா ஞானி தான் சந்தேகமே இல்லை..

 

ReplyQuote
Posted : 12/09/2019 5:46 pm
Sweh liked
Sudhar
(@sudhar)
Estimable Member

ராதிகாவிற்கு விஜய் ஏற்படுத்தி கொடுத்திருக்கும் மாற்றம் நல்லது.

அவளே எதிர்பாராத வண்ணம் பாட்டி, ரோஜாவோடு வீட்டில் குடிஅமர்த்திய விதம் நன்று. 😀

ராதிகாவிற்காக ரோஜா வாங்கிவரும் தின்பண்டங்கள் மறக்கமுடியாத தின்பண்டங்கள் என்னாலும்.... 

இறுதியில் விஜயிடம் மாட்டிக்கொண்டு முழிப்பது 😆 

எழுத்து பிழைகள் உள்ளன, அதனை சற்று கவனிக்கவும். 

ReplyQuote
Posted : 13/09/2019 11:40 pm
Sweh liked
jeyakumar131157
(@jeyakumar131157)
Trusted Member

நன்றாக வாசம் வீசுகிறது உங்கள் ரோஜா தோட்டம். 

ஆத்தா ரோஜா இருவரின் புது வரவு புது திருப்பம்தான். 

ஊரார் பேச்சுக்கு உலை மூடி வைத்ததைப் போன்று.

எழுத்துப்பிழைகள் இருக்கின்றன. 

உ.ம்: மறுபக்கம் என்பதற்கு மருபக்கம் என்றும், நாவல் பழத்திற்கு நவ்வா பழம் என்றும் குறிப்பிட்டுள்ளீர்கள். 

வீசட்டும் வாசம், தொடர்ந்து. வாழ்த்துக்கள் 

ReplyQuote
Posted : 14/09/2019 7:09 am
Page 4 / 5
Share:
Advertisements