Forum

Neeye Ninaivaay (NN) - Comments Thread  

Page 7 / 8
  RSS
Divya Ramalingam
(@divya-ramalingam)
Reputable Member

Climax epi's very nice sis .

Nice story . Beautiful message.

தனியார் விலங்குகள் காப்பகம், விலங்குகள் பாதுகாப்பு, நிலச்சோறு போன்ற விஷயங்கள் சிறப்பு. 

காருண்யா மேல் மித்ரன் கொண்ட காதலை அவன் மறந்தாலும், அவன் நினைவில் ஒரு ஓரம் இருந்த அவள் நியாபகமும்,காதலும், திரும்ப அவளை கண்டதும் துளிர்த்து , மீண்டும்  அதே காரணத்திற்காக அவள் மேல் காதல் கொண்டு கல்யாணத்தில் இணைந்து, பிறகு பழையது அவனுக்கு நினைவு வந்து கஷ்டப்பட்ட பின் இறுதியில் சேர்ந்து என்று போராடி ஜெயித்த மித்ரன் காருண்யாவின் காதல்  அருமை. இடையில் வரும் சித்தார்த்  மாளவிகா காதலும் இனிமை. 

இறுதியில் சொன்ன கருத்து சூப்பர் சிஸ். வாழ்த்துக்கள் 👍  

ReplyQuote
Posted : 27/11/2019 9:30 pm
Socrates
(@socrates)
Active Member
Posted by: @annasweety

நீயே நினைவாய் தொடர் பற்றிய கருத்துக்களை இங்கு பதியுங்கள் ஃப்ரென்ட்ஸ் 😍 😍 

காதலும் கலக்கமுமாய் கதையை நகர்த்தும் விதம் மிக அருமை. யானைகளை பற்றிய வாசிப்பில் ஒரு முறை பேராசிரியர் சுப. வீரபாண்டியன் சொன்னது நினைவுக்கு வருகிறது, "யானைகள் பத்திரிகை நடத்துமேயானால், தன் பத்திரிகையில் யானைகள் வாழ்விடத்தில் மனிதர்கள் அட்டகாசம் என்று குறிப்பிடும்".

ReplyQuote
Posted : 29/11/2019 12:35 pm
Socrates
(@socrates)
Active Member
Posted by: @annasweety

நீயே நினைவாய் தொடர் பற்றிய கருத்துக்களை இங்கு பதியுங்கள் ஃப்ரென்ட்ஸ் 😍 😍 

மித்திரன் காதலை வெளிப்படுத்திய விதமும் நேரமும் மிகவும் சரியாகவே அமைந்திருந்தது. எந்த ஒரு அதிகப்படியான வர்ணனை இல்லாமல் காதலை சொன்ன விதம் மிக சிறப்பு.

ReplyQuote
Posted : 29/11/2019 12:45 pm
Socrates
(@socrates)
Active Member
Posted by: @annasweety

நீயே நினைவாய் தொடர் பற்றிய கருத்துக்களை இங்கு பதியுங்கள் ஃப்ரென்ட்ஸ் 😍 😍 

காருண்யாவின் நிலை மிகவும் கலங்கவைக்கிறது. காலை முதல் இரவு வரை தன் காதலுக்காக காத்திருந்த காருண்யாவின் அந்த அப்படி காதலை தாங்கிக்கொண்டு காந்திருந்தவர்களால் நிச்சயமாய் உணரமுடியும். அது ஒரு தவம், ஏக்கம், இன்னும் ஒரு ஐந்து நிமிடம், இன்னும் ஒரு பத்து நிமிடம் என தனக்கு தானே சமாதானம் சொல்லி சொல்லி பல நாட்கள் என்ன... வருடங்கள் கூட காத்திருக்க சொல்லும் அதுதான் காதல்

ReplyQuote
Posted : 29/11/2019 4:18 pm
Socrates
(@socrates)
Active Member

"ஒருத்தி மேலே மீண்டும் மையல் ஆனேன்
தோழியே நீ தூது போடி" என்ற பாடலை நினைவூட்டும் பகுதி.

ReplyQuote
Posted : 06/12/2019 2:56 pm
Socrates
(@socrates)
Active Member
Posted by: @annasweety

நீயே நினைவாய் தொடர் பற்றிய கருத்துக்களை இங்கு பதியுங்கள் ஃப்ரென்ட்ஸ் 😍 😍 

மிகவும் விறுவிறுப்பாக சென்ற பகுதி. பூக்களை அதன் செடியிலேயே ரசிப்பது அழகுதான் அவற்றை மேசையின் மீது வைத்து ரசிப்பதை விட. சில நேரங்களில் பூக்களை கூந்தலிலும், பல வண்ண பூக்களை மொத்தமாக ஒரே கட்டுக்குள்ளும் ரசிப்பது செடிகளில் இருப்பதை விட அழகுதான்.

ReplyQuote
Posted : 06/12/2019 3:17 pm
Socrates
(@socrates)
Active Member
Posted by: @annasweety

நீயே நினைவாய் தொடர் பற்றிய கருத்துக்களை இங்கு பதியுங்கள் ஃப்ரென்ட்ஸ் 😍 😍 

மித்திரனுக்கு என்ன நடந்திருக்கும் என்பதையே மனம் எதிர்பார்த்து ஏதோ ஒரு பதட்டத்துடன் தான் காத்திருக்கிறது.

ReplyQuote
Posted : 06/12/2019 3:30 pm
Socrates
(@socrates)
Active Member
Posted by: @annasweety

நீயே நினைவாய் தொடர் பற்றிய கருத்துக்களை இங்கு பதியுங்கள் ஃப்ரென்ட்ஸ் 😍 😍 

மனித மூளையில் இருந்து நினைவுகளை அழிக்கும் ஒரு மருத்துவம் பற்றி ஒரு சில வரிகள் மட்டுமே கேள்விப்பட்டிருக்கிறேன். இருந்தாலும் மனித மூளை என்பது இயற்கை படிப்படியாக அமைத்த மிகப்பெரிய நெட்ஒர்க். அதை அறிவியலால் எதிர்ப்பதென்பது ஆரம்ப நிலைகளில் சரியாக அமைந்தாலும் அதன் முடிவு அபாயகரமானதாகத்தான் இறக்கும் என்பதில் எனக்கெந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

ReplyQuote
Posted : 06/12/2019 3:53 pm
Socrates
(@socrates)
Active Member
Posted by: @annasweety

நீயே நினைவாய் தொடர் பற்றிய கருத்துக்களை இங்கு பதியுங்கள் ஃப்ரென்ட்ஸ் 😍 😍 

எதிர்பாரா திருப்பங்களுடன் கடந்த நிறைவானப்பகுதி.

ReplyQuote
Posted : 06/12/2019 4:00 pm
Socrates
(@socrates)
Active Member
Posted by: @annasweety

நீயே நினைவாய் தொடர் பற்றிய கருத்துக்களை இங்கு பதியுங்கள் ஃப்ரென்ட்ஸ் 😍 😍 

எல்லாம் மிகவும் அமைதியாக சுமூகமாக நடக்கிறதே என்று கடந்த போது இப்படி ஒரு பேரதிர்ச்சியான எதிர்பார்ப்பா?

ReplyQuote
Posted : 06/12/2019 4:11 pm
Socrates
(@socrates)
Active Member
Posted by: @annasweety

நீயே நினைவாய் தொடர் பற்றிய கருத்துக்களை இங்கு பதியுங்கள் ஃப்ரென்ட்ஸ் 😍 😍 

சுவாரஸ்யமானதொரு கதை கருவை வைத்து கதையை நகர்த்திசென்றுள்ளீர்கள் பாராட்டுக்கள். கதையில் வரும் கதாபாத்திரங்கள் அனைவருக்குமே முக்கியத்துவம் அளித்துள்ளீர்கள். அது மிகச்சிறிய பாத்திரம் என்றாலும், அவர்களுக்கான நேரம் மிக குறைவு என்றாலும் அதை சிறப்பாகவே அமைத்த விதம் அருமை.

மித்திரன் , காரு உரையாடல்கள். காரு, மாளவிகா, மற்றும் சித்து இவர்களின் உரையாடல்களை விட சற்று குறைவாகவே இருந்தது சற்றே ஏமாற்றத்தை அளித்தது. மேலும் கவின் மற்றும் மித்திரன் நட்பின் ஆழத்தை அவர்களின் அதிகமான உரையாடல்கள் மூலம் இன்னும் அதிகமாகவே ஒரு பகுதி முழுவதும் கூறியிருந்தால் கவினின் இழப்பில் இதயம் இன்னும் அதிகமாகவே கசிந்திருக்கும்.

மூளையின் பழைய நினைவுகள் மருத்துவத்தின் உதவியுடன் அழிக்கப்பட்டது என்று சொல்லி கடந்து விடாமல். அந்த சிகிச்சையின் பெயரையும், ஆனால் அது நிரந்தர தீர்வாகாது இயற்கை அதன் வேலையை எப்போது வேண்டுமானாலும் காட்டும் என்று கூறிய விதம் சிறப்பு. பதட்டத்தோடு நகர்ந்த சில பகுதிகளும் பாராட்டக்கூடியதாகவே அமைந்தது.
மேலும் இதை போன்றதொரு வெகு சுவாரஸ்யமான கதையில் மீண்டும் சந்திப்போம் சகோதரி. வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.

ReplyQuote
Posted : 07/12/2019 12:22 pm
jeyakumar131157
(@jeyakumar131157)
Reputable Member

நீயே நினைவாய்

 

மிருகங்களிடமும் அன்பு காட்ட வேண்டும் என்ற கருத்தில் எழுதப்பட்ட கதை என்பதை அறிந்து மகிழ்ச்சி.

 

கதாநாயகன் அறிமுகம் நன்று. மனதிற்கு பிடிக்காத தொழிலை செய்ய மனமில்லாத பணக்காரன். கனவில் தன்னையிழந்து தவிக்கின்றான். 

 

இரண்டு கார்கள் மோதிக் கொள்ளும் மிகப்பெரிய கார் விபத்து , கூர்ந்து நோக்கும் பூனை விழிகள் இரண்டு. 

இரண்டு வருடங்களாக அவன் உறக்கத்தை ஊசலாடவைக்கும் கனவு. தன் கனவை கூறி விளக்கம் கேட்க, நண்பன் கவினைத் தேடும் அவன் உணர்வு, அழகான துவக்கம்.

 

தனியார் மிருக காட்சி சாலை அமைக்க எண்ணும் அவனுக்கு உதவ, கால்நடை மருத்தவரான மாளவிகாவையும் சித்தார்த்தையும் தன்னுடன் பணியில் அமர்த்துகிறான். 

 

அவர்களுடன் இணைந்து பணிபுரிய, தன் காதலன் யுவனைத் தேடி ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தியா வந்திறங்கிய சித்தார்த்தின் சித்தப்பா மகளான காருண்யா அமர்த்தப்படுகிறாள். 

 

காருண்யா தன் தம்பி மகள் என்று தெரிந்திருந்தும் நடிக்கின்ற அப்பா அருமை. அம்மாவின் குணத்தையும் அழகாக காட்டியுள்ளீர்கள். மாளு சித்து இருவரின் காதலையும் வெளிப்பட வைத்துவிட்டீர்கள்

 

காருண்யாவை முதல் முறையாக இந்தியாவில் சந்திக்கும் வேளையில் அவள் பூனை விழிகளைப் பார்த்து திகைக்கிறான், மித்ரன். அவன் மட்டுமா? அவளும்தான். தன் காதலன் தன்னை அடையாளம் கண்டுகொள்ளவில்லையே என்ற ஏக்கத்தில்தான். 

 

அதுமட்டுமல்ல அவனிடம் பேசிக்கொண்டிருக்கையில் அவனை யுவன் என்று அழைக்கிறாள், காருண்யா. யுவமித்ரன் என்ற தன்னுடைய பெயரை, அனைவரும் மித்ரன் என்று அழைக்கின்ற நிலையில் அவள் மட்டும் யுவன் என்று அழைத்தது அவனுக்கு ஆச்சரியமே!

 

அவனுக்குத்தான் ஆஸ்திரேலியாவில் நடந்த கார் விபத்திலிருந்து விடுபட, பழைய நினைவுகளும் அழிக்கப்படுவதற்கான சிகிச்சை நடந்தேறியிருக்கிறதே! அது அவனுக்கெப்படித் தெரியும். அந்த விபத்தில், அவன் நண்பன் கெவின் இறந்துபோனதும் தெரியாது. அங்கே அவன் காதலித்த காருண்யாவையும் தெரியாதே!

 

இந்த உண்மைகளை, மித்ரனின் அப்பா மாளவிகாவிடம் கூறிய பின்னரே விவரம் அனைவருக்கும் தெரியவருகிறது.

 

மித்ரன் தன் பழைய நிகழ்வுகளை மறந்து விட்டாலும் பழைய நினைவுகளுடன் வாழ்கிறான்.

 

மித்ரனின் ஆழ்மனதிற்குள் புதைந்துக் கிடந்த எல்லாவற்றையும் வெளிக் கொணர்ந்து அவனை சுகப்படுத்திய பெருமை காருண்யாவை சாரும் .

 

மணிகண்டன் காருண்யாவைப் பார்த்து வினவிய பின்னர்தான் அனைவருக்கும் அவள் அருமை தெரிந்திருக்கும்.

 

ஆஸ்திரேலியாவில் மித்ரனுக்கு நடந்த நிகழ்வுகள் அனைத்தும் நினைவிலிருந்து அழிக்கப்பட்டன என்பதை ஏற்றுக் கொள்ள கடினமாக இருக்கிறது. மொத்த நிகழ்வுகளும் அழிந்திருந்தால் ஏற்றுக் கொண்டிருக்கலாம்.

 

எழுத்துப்பிழைகள் அதிகம்

 

வாழ்த்துக்கள்

ReplyQuote
Posted : 03/01/2020 12:38 am
Divya Ramalingam
(@divya-ramalingam)
Reputable Member
நீயே நினைவாய்
 
ஹீரோ - மித்ரன் 
ஹீரோயின் - காருண்யா 
 
மித்ரனுக்கு இரண்டு வருடமாக தொடர்ந்து கனவில் பூனை கண் வருகிறது.அவனின் உயிர் நண்பன் கவினையும் இரண்டு வருடமாக காணவில்லை. இதற்கிடையில் தன் காதலனை தேடி ஆஸ்திரேலியாவிலிருந்து  இந்தியா வரும்  காருண்யா, மித்ரனிடம் வேலைக்கு சேருகிறாள். காருண்யாவின்  குணம் மித்ரனுக்கு பிடித்து விட, அவள் மேல் காதலில் விழுகிறான். அவன் காதல் கைக்கூடியதா? மித்ரன் காருண்யா ஒன்று சேர்ந்தார்களா அல்லது தன் தொலைந்த காதலனை கண்டுபிடித்து அவனுடன் சேர்ந்தாளா?
மித்ரன் கனவுக்கு காரணம் என்ன ? அவன் நண்பன் கவின்  என்ன ஆனான்? என்ற கேள்விகளுடன் சுவாரஸ்யமாக  நகர்கிறது கதை. 
 
மித்ரன்,  காருண்யா காதல் பகுதிகள்  அருமை . அழகான ஜோடி.
 
சித்தார்த், மாளவிகா  இனிமையான ஜோடி.  டாம்  அண்ட் ஜெர்ரி போல சண்டை போட்டாலும் ஒருவர் இல்லாமல் மற்றொருவர் இல்லை. 
 
பாட்டி கையால் நிலா சோறு வாங்கி உண்ணும் மூன் லைட் டின்னர் விஷயம் அருமை . ஆனந்தன் தாத்தா, செல்லம்மாள் பாட்டி கதாபாத்திரங்கள்  அழகு.
 
சித்தார்த்தின் பெற்றோர் மற்றும் மித்ரனின் பெற்றோர் கதாபாத்திரங்கள் அருமை  . 
 
விலங்குகள் மற்றும் தாவரங்களை பாதுகாக்க வேண்டும் என்ற கருத்தை  அழகாக கதையில் கொண்டு வந்த விதம்  நன்று . சூப்பர் கான்சப்ட்.
 
தனியார் விலங்குகள் காப்பகம், விலங்குகள் பாதுகாப்பு, நிலச்சோறு போன்ற விஷயங்கள் சிறப்பு. 
 
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் பூர்ணிமா சிஸ் 👍 
This post was modified 3 weeks ago by Divya Ramalingam
ReplyQuote
Posted : 06/01/2020 10:17 pm
Poornima Karthic
(@poornima-karthic)
Active Member

@jeyakumar131157

தங்களின் ஆழ்ந்த விமர்சனத்திற்கு மனமார்ந்த நன்றிகள் சகோ... தமிழில் அவசரமாக தட்டச்சு செய்வதால் நிறைய டைப்பிங் எரர் வந்துவிட்டது சகோ. மன்னித்து விடுங்கள்

ReplyQuote
Posted : 07/01/2020 3:18 pm
Poornima Karthic
(@poornima-karthic)
Active Member

@divya-ramalingam

மனமார்ந்த நன்றிகள் தோழி... ஆரம்பத்தில் இருந்து என்னை ஊக்குவித்து வந்ததற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் மா

ReplyQuote
Posted : 07/01/2020 3:19 pm
Page 7 / 8
Share:
Advertisements