Forum

Garvam azhinthathadi - Comments Thread  

Page 7 / 9
  RSS
Divya Ramalingam
(@divya-ramalingam)
Reputable Member

Epi 13

தெய்வானை - என்ன ஒரு சுயநலம் வாய்ந்த பெண். தனக்காக தன் வாழ்க்கையையே விட்டு கொடுத்த மீனா ஆச்சியின் வாழ்க்கையும் பறித்து கொண்டு,  சிறிதேனும் நன்றி உணர்வு கூட  இல்லாமல்  அவர்களையே தனியாக ஒதுக்கி வைத்துவிட்டார்கள்.

இவை அனைத்தும் பணத்திற்காக , சொத்திற்காகவா நடந்தது.  பணத்தால் இன்று  இந்த குடும்பம் திசைக்கு  ஒன்று பிரிந்திருக்கிறதே. 

விநாயகம் கதாபாத்திரத்தை நினைத்தால் கோவாமாக வருகிறது,  என்ன இந்த மனிதர் இப்படி செய்து வைத்திருக்கிறாரே என்று. அவரின் தவறுகளை  இப்பொழுதாவது உணர்ந்தாரா,  அல்லது இனி தான் உணர்வாரா? அவர் கர்வத்தையும் ஆவணத்தையும் அக்ஷரா அழிப்பாளா? 

அழகாக நகர்கிறது கதை. 

This post was modified 1 month ago by Divya Ramalingam
ReplyQuote
Posted : 12/11/2019 12:31 pm
Divya Ramalingam
(@divya-ramalingam)
Reputable Member

Epi 14,15 very nice 

அமிர்தனின் தங்கை திவ்யா மற்றும் அப்பா நம்பிராஜன் கதாபாத்திரங்கள்  அருமை. 

This post was modified 1 month ago by Divya Ramalingam
ReplyQuote
Posted : 12/11/2019 4:28 pm
Divya Ramalingam
(@divya-ramalingam)
Reputable Member

Epi 16 beautiful.  

அக்ஷராவின்  வீரமும், சத்தியனின் பாசமும்  அருமை. 

அச்சோ,  அவசரபட்டு  இந்த நம்பிக்கு நல்லவர் சர்டிபிகேட் கொடுத்துட்டோமோ! அவர் செயல்ல லைட்டா சந்தேகம் வருதே 🤔 

அழகாக கதை நகர்ந்து கொண்டிருக்கிறது சிஸ்.நன்று. ஒவ்வொரு எபியும் பாடலில் ஆரம்பிக்கும் விதம்  அழகு 👍 

This post was modified 1 month ago 2 times by Divya Ramalingam
ReplyQuote
Posted : 12/11/2019 4:28 pm
Malli Ravi
(@malli-ravi)
Trusted Member

intha update vekamaaka pona maathiri irunthathu. kathai aarampaththil iruntha viruviruppu ippothu illaatha maathiri oru feel. Parasu thaan villan avar patriya sampavankalai just like that solli viddeerkal polullathu 

 

ReplyQuote
Posted : 13/11/2019 8:11 am
Sudhar
(@sudha-r)
Reputable Member

பரசு அந்த நிலத்தை,  அதன் மூலம் வரும் பணத்திற்காக என்னென்ன செய்கிறான்! ஊரைவிட்டே துரத்தும் அளவிற்கு பணம் படுத்துகின்றது.

இந்த நிலையிலும் சத்யனும் சுலோவும் ஒன்றாக இருப்பது அழகு.

தங்களது கதையில் மைநி என்ற வார்த்தை  படிப்பதற்கு நன்றாக உள்ளது. 

அமிர்தன்- ஆராவின் காதல் பயணம் நன்றாக செல்கின்றது. 

கதை நன்று

ReplyQuote
Posted : 13/11/2019 11:40 am
Divya Ramalingam
(@divya-ramalingam)
Reputable Member

Nice epi. அமிர்தன் அக்ஷராவிற்க்கு உணவு ஊட்டிவிட்டது அருமை. Waiting for next ud. 

ReplyQuote
Posted : 13/11/2019 4:24 pm
Malli Ravi
(@malli-ravi)
Trusted Member

super update. rasiththup padiththen nanri. 

ReplyQuote
Posted : 14/11/2019 4:34 am
Sudhar
(@sudha-r)
Reputable Member

அமிர்தன் ஆராவிடம் காதலை சொல்லிய இடத்தின் வர்ணனை அருமை  🤩

இப்படி ஒரு அழகான இடத்தில் வைத்து காதல் சொன்னால் , ஆரா பிரமித்து நிற்காமல் வேறு என்ன செய்வாள்!

நீயே டைம் கொடுத்து தள்ளி போட்டுட்டியே அமிர்தா! 

ஆரா தன் தாத்தாவை கண்டதும் கோபம் கொள்வது,  பாசம்,  அவருடைய பேச்சுக்கு திருப்பி சாட்டையால் அடிப்பது போல் பேசுவது,  நகையை மறுப்பது என அழகாக கதையை நகர்த்தியுள்ளீர்கள். 

கதை நன்று.... 👍 

ReplyQuote
Posted : 14/11/2019 12:49 pm
Malli Ravi
(@malli-ravi)
Trusted Member

nalla update Theivaanai koncham yosikka aarampiththu viddaar. thaththaavum thirunthi viddaar. ini naalai kovilil enna nadakkap pokirathu.

ReplyQuote
Posted : 15/11/2019 4:28 am
jeyakumar131157
(@jeyakumar131157)
Reputable Member

சத்தியனின் பழைய நினைவுகளினூடே குடும்ப பிரச்சினையை அழகாக சொல்லி விட்டீர்கள் . நன்று.

அக்ஷ்ரா அமிர்தன் காதலும் உறுதியாகிவிட்ட நிலை.

கிராமத்தில் நடப்பவைகளை உங்கள் கதையில் நன்றாக ரசிக்க முடிகிறது 

வாழ்த்துக்கள் 

This post was modified 4 weeks ago by jeyakumar131157
ReplyQuote
Posted : 15/11/2019 6:42 pm
Sudhar
(@sudha-r)
Reputable Member

தாத்தாவிற்கு பாடம் சொல்லி கொடுத்துவிட்டாள் பேத்தி.

யாராலையும் அசைக்க முடியாத விநாயகத்தை ஆரா தன் பேச்சால் மாற்றிவிட்டாள். 

தெய்வானை தன் ரத்தம் என்று இப்பொழுது தான் உணருகின்றார்.  சுலோ வெளுத்து வாங்கிவிட்டார். 

தெய்வானையின் இந்த நிலைமைக்கு முழு காரணமும் விநாயகம் தான். அவர் தன் பேச்சு, நடத்தையால் தான் தெய்வானைக்கு பாதுகாப்பின்மை தோன்றியது. அதை பலர் உபயோகப்படுத்தி கொண்டனர். 

ஆரா - அமிர்தன் காதல் இனிதே செல்கின்றது. 

கதை நன்று... 👍 

ReplyQuote
Posted : 15/11/2019 7:27 pm
jeyakumar131157
(@jeyakumar131157)
Reputable Member

அமிர்தனின் பண்ணை வீட்டை அழகாக காட்சிப்படுத்தியுள்ளீர்கள். 

தாத்தா பேத்தியின் உரையாடல் நன்றாக அமைந்துள்ளது.

குடும்பமே அமர்தனுக்கு அக்ஷ்ராவை ப்ரப்போஸ் பண்ண போகிறது என்பது நன்றாக உள்ளது. அவள் உள்ளகிடக்கையை சொல்லிவிட்டீர்கள்.

வாழ்த்துக்கள்

ReplyQuote
Posted : 15/11/2019 8:17 pm
jeyakumar131157
(@jeyakumar131157)
Reputable Member

யக்கோ! கதையை யாரு யாரோ வாய் பொறுப்புல அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம்னு சொல்லிப்புட்டீங்க. ரொம்ப நல்லாத்தான் இருக்கு. 

நாளைக்கு திருவிழாவுல பாக்கலாம் . வாரங்கா

நன்றாக நடை போடுகிறது உங்கள் கதை. பெண்கள் எப்படி இருக்க வேண்டும் எப்படி இருக்க கூடாது என்பதற்கு கதாபாத்திரங்களை உருவாக்கி அழகாக கொண்டு செல்கிறீர்கள் .

வாழ்த்துக்கள்

 

ReplyQuote
Posted : 15/11/2019 9:31 pm
jeyakumar131157
(@jeyakumar131157)
Reputable Member

திவ்யா போட்ட கோலம் அதை பார்த்த அக்ஷ்ராவின் வியப்பு, வரி சோறு, இருவரும் உண்ட விதம் சுடலைமாடன் கோயில் திருவிழா, அக்காமார்களின் அன்பு உரையாடல், பட்டம் கட்டுதல் அனைத்தையும் அழகாக காட்சிப்படுத்தி விட்டீர்கள். 

வினாயகத்தின் என்ட்ரி உணர்ச்சிவசப் பட வைத்துவிட்டது.

மன்னிப்பு கேட்பது என்பது பெரிய மனசு, அதுவும் ஊரார் முன்னிலையில் . மகனிடமும் மன்னிப்பை கேட்க போகிறார். ஊரார் மதிக்கும் பெரியவரின் கௌரவம் அழிந்ததடி.

நன்றாக அமைத்துள்ளது .

வாழ்த்துக்கள்

ReplyQuote
Posted : 16/11/2019 4:03 pm
Sudhar
(@sudha-r)
Reputable Member

கோயில்கொடை,  கறிசோறு, புடவை என அழகாக இருந்தது.

ஒட்டு மொத்த குடும்பமே ஆரா - அமிர்தன் கல்யாணத்திற்காக வெயிட்டிங். 

முப்பது வருடங்கள் கழித்து உற்றார், உறவினர் நலம் விசாரிப்பதும் அதில் சத்யன் நெகிழ்ச்சி அடைவதும் சிறப்பாக இருந்தது. 

விநாயகம் ராஜமீனாவிடம் மன்னிப்பு கேட்டுவிட்டார்.  அடுத்து சத்யன் என்ன செய்யப்போகிறார் என்று பார்ப்போம்?  மனிதனின் கர்வம் அழிகின்றது. 

 

கதை நன்று... 👍 

ReplyQuote
Posted : 16/11/2019 4:39 pm
Page 7 / 9
Share:
Advertisements