Forum

தினம் உனைத் தேடி - ...
 

தினம் உனைத் தேடி - Comments Thread  

Page 9 / 9
  RSS
jeyakumar131157
(@jeyakumar131157)
Reputable Member

போதை பொருள் தயாரித்து பெண்களையும் சிறுவர்களையும் போதைக்கு அடிமையாக்குவதோடு நிறுத்திவிடாமல் போதை பொருள்களை கடத்தல் செய்து பணம் சம்பாதிக்கும் கூட்டத்தை பற்றியும் குழ்ந்தைகளை கடத்தி  தங்கள் போதை பொருளை உடலில் ஏற்றி வதைக்கின்ற செயல் செய்யும் அழகாக கூறியுள்ளீர்கள்.

மயூரி புலனாய்வு  சிறப்பு அதிகாரி . அவளுக்கும் கிருஷ்ணாவிற்கும் இடையிலான காதல் அருமை. இருவரின் வீரதீர செயல்கள் நன்று.

கிருஷ்ணா ஆரண்யா பிணக்கும் அதை தீர்த்துவைக்க சாஹித்தியனும் மயூரியும் படுகிற பாடும் நன்று. வளைகாப்பு நடைபெறும் போது கிருஷ்ணாவோடு சேர்ந்து மயூரியும் ஆரண்யா காலில் விழுந்து ஆசி பெறுவது அருமை.

தன்னுடன் படித்த நண்பர்கள் கிடைக்க பெற்றதில் அனைவருக்கும் மகிழ்ச்சி. 

சாஹித்யனும் மயூரியும் துப்பறிய  நிறைய கஷ்டம் அனுபவித்துள்ளனர்.

குமரன் சுந்தரம் பலே கில்லாடி.

எழுத்துப்பிழைகள் அதிகம். அவசரத்தில் விழுந்திருக்கும் 

வாழ்த்துக்கள்

 

ReplyQuote
Posted : 01/12/2019 11:44 am
Nithya Nithya20
(@nithya-nithya20)
Trusted Member

@sudha-r

நன்றி உங்கட கருத்துகளை உடனே பார்த்தாலும் என்னால அதற்குரிய பதிலை உடனே தர முடியாமல் போய்விட்டது.மன்னிக்கனும்.

கதைய முடிஞ்சவரைக்கும் முடிச்சி வைச்சிட்டன்.படிச்சிட்டு சொல்லுங்க.நன்றி

ReplyQuote
Posted : 01/12/2019 4:27 pm
Sudhar and ManoRamesh liked
Nithya Nithya20
(@nithya-nithya20)
Trusted Member

@jeyakumar131157

நன்றி  இப்ப சில காலமா நான் நிறைய நிறைய கேட்கிற செய்திகளின் தாக்கம்தான் இந்தக் கதை.

ஆண் பெண் நட்பை ஆண் எந்த வகையில் ஏற்றுக்கொள்வானோ அதே மாதிரி அந்த ஆணுக்கு  மனைவியாகப்போறவளும் ஏற்றுக்கொண்டா நல்லாயிருக்கும்ன்டு நினைச்சன்.

ஒரு சின்ன ஆசை காணமல் ஆக்கப்பட்டோர் கடத்தப்பட்டோர் திரும்ப உயிரோட இருந்தா நல்லாயிருக்குமேன்ற எண்ணம். அதனாலதான் அவங்களை உயிரோட கொண்டு வந்தன்.

வெளித்தோற்றத்திற்கு நல்லவனா காட்டிக்கொள்ளுற நிறையபேராட சுயரூபம் உண்மையில இப்படிதான் இருக்கு.சுய நலத்திற்காக அடுத்தவங்க வாழ்க்கையோட விளையாடிப்பார்க்கிற குணம்.

யெஸ் இதெல்லாம் கடைசிநேர அவசரத்தோட எழுதின அத்தியாயங்கள்.அதனாலதான் எழுத்துப்பிழைகள்.வாசிக்கும் போது உங்களுக்கு அது சங்கடத்தை ஏற்படுத்திருந்தா மன்னிக்கனும்.

நீங்க தொடர்ந்து கதைய படித்து உங்கட கருத்தை பகிர்ந்ததிற்கும் உங்கட நேரத்தை என் கதைக்காகவும் செலவிட்டதிற்கும் நன்றிகள்.

ReplyQuote
Posted : 01/12/2019 4:40 pm
Malli Ravi
(@malli-ravi)
Trusted Member

நித்தியா அழகான கதை அசத்தலா முடித்து விட் டீர்கள் போர் முடிந்த நாட்டுச் சூழலை அவ்வளவு விஷயங்களுடனும் கண்முன் கொண்டு வந்தீர்கள். அத்துடன் சகி ஆரண்யா காதல்,கோபம் புரிந்துணர்வு கடைசியில் அவள் வாழ்வை நிறைவாக்கிய இரட்டைத் தேவதைகள் கிருஷ்ணன்,மயூரி காதல்,சாகசம்,இறுதியில் அவர்கள் மலையுச்சியில் செய்து கொண்ட திருமணம்,
யார் குற்றவாளி என்று கடைசிவரை சொல்லாமல் கொண்டு சென்ற தந்திரம் சொல்ல வார்த்தைகள் இல்லை ஒவ்வொரு அத்தியாயமும் ரசித்துப் படிக்க வைத்தீர்கள் நன்றி அத்துடன் வாழ்த்துக்களும்

ReplyQuote
Posted : 01/12/2019 9:20 pm
Sudhar
(@sudha-r)
Reputable Member

ஆரண்யா வயிற்றுக்குள் இருக்கும் குழந்தை வரை போதை மருந்து சென்றிருக்குமே,  நல்ல வேளையாக வாந்தி வந்துவிட்டது.

மயூரி கிருஷ்ணன் துப்பறிய போன இடத்தில் காதல் செய்து கொண்டு இருந்தால் இப்படி தான் தானே போய் மாட்டிக்கொள்ளனும். 

வழி தவறி வந்ததால் மயூரி காப்பாற்றுபட்டுவிட்டாள்.

செம்ம பிளான்.... சாஹித்யன் கிருஷ்ணாவையும், அடிமைகளாக இருந்தவர்களையும் காப்பாற்றிவிட்டான்.

ஆரண்யாவின் நண்பர்கள் சாகவில்லையா!  நல்ல ட்விஸ்ட்.இவர்கள் தான் அன்று ஆரண்யாவிற்கு போன் செய்த நபர்கள் என்றும் இவர்கள் கைக்கு போன் எப்படி வந்தது என்ற புதிருக்கு விடை கிடைத்துவிட்டது.

சாதாரண அந்த கம்பு காணவில்லை என்று கிருஷ்ணன் ஏன் அவ்வளோ கோவப்பட்டான் என்று இப்போது புரிகிறது. 

மயூரி எதற்காக அந்த பட்டையை பத்திரப்படுத்தி வைத்திருந்தாள் என்றும் இப்போது புரிகிறது. 

அனைத்து புதிருக்குமான விடை குமரன் சுந்தரம்.

ஆள்கடத்தலில் தொடங்கி மரக்கடத்தல், போதைப்பொருள் கடத்தல்,  என்று பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றதே. 

அடைத்து வைப்பதற்கு கிணறு, போதை பொருள் கடத்த மரம், அதனை மறைக்க இலவசங்கள் என்று எப்படியெல்லாம் செய்திருக்கின்றான். 

உதயன் தவறை என்ணி தவித்துக்கொண்டு தான் இருந்திருக்கிறான். 

அவனது வீட்டுக்குள் செய்த அழிச்சாட்டியங்கள்,  நந்தன் கடத்தல்,  கடைசியாக வனத்துறை அதிகாரிகளை கொன்று யுத்தத்தில் பயன்படுத்திய ஆயுதத்தை வைத்து பக்காவா பிளான் போட்டு உதயனை சிக்கவைத்துள்ளனர்.

குழந்தைகளை காரணம் காட்டி அவன் வாயில் இருந்து உண்மை வெளிவராமல் செய்துள்ளனர்.

ஓ! சாஹித்யன் பிலிப்பைன்ஸ் சென்றதற்கும், கிருஷ்ணன் உயிர் தப்பியதற்கும் காரணம் தெளிவாயிற்று.

அன்று சாஹித்யனுக்கு வனவிலங்குகள் கொல்வது தொடர்பான புது கேஸ் வந்தது என்று நினைத்தேன் பார்த்தால், இதன் ஆணிவேருமே குமரன்.

பெண் விலங்குகள் இந்த காரணத்திற்காக தான் அதிகம் கொல்லப்பட்டதா! அடப்பாவிங்களா! 

திடீரென்று ஹரீஷை எப்படி சாஹித்யன் பின்தொடர்ந்தான் என்ற சந்தேகம் இருந்தது குமுதினியால் தான் என்று விடை கிடைத்து விட்டது. 

மாயாவிற்கான விடை மயூரி. 

பட்டதில் மைக்ரோ கேமரா, கையில் காப்பு, மொபைல்  GPS நல்ல ஐடியா.

கிருஷ்ணன் ஆரண்யாவின் பாசம், கோபம் அருமையான நட்பு. அவர்களை எட்டி நின்று வேடிக்கை பார்க்கும் சாஹித்யன் மாயா நட்பும் அழகு. 

ஆரம்பத்தில் இருந்து வந்த அத்தனை புதிருக்குமான விடையை திறம்பட கோர்வையாய் சொல்லி முடித்துவிட்டீர்கள்.

கிருஷ்ணனும் மயூரியும் ரிங் மாற்றிக்கொண்ட இடம், அதன் வர்ணனை அருமை.

சாஹித்யன் ஆரண்யா வாழ்வில் புதியதோர் அர்த்தம் கொடுக்க இரண்டு தேவதைகள் வந்துவிட்டார்கள் கதையை முடித்த விதம் நன்று.

அனைத்து கேள்விகளையும் ஒரே புள்ளியில் இணைத்து விடைகொடுத்த விதம் அருமை. 

இலங்கை தமிழில் கதை படிப்பதற்கு வித்தியாசமாகவும் இருந்தது,  நன்றாகவும் இருந்தது. 

நல்ல ஒரு போலீஸின் துப்பறியும் கதையை படித்த உணர்வு. 

தினம் உனைத்தேடி விறுவிறுப்பான கதை. 

. சிறப்பான கதை. 

This post was modified 22 hours ago by Sudhar
ReplyQuote
Posted : 05/12/2019 12:31 am
Page 9 / 9
Share:
Advertisements