Forum

தினம் உனைத் தேடி - ...
 

தினம் உனைத் தேடி - Comments Thread  

Page 7 / 9
  RSS
Sudhar
(@sudha-r)
Reputable Member

சந்திரா ஆரண்யாவிற்கு என்ன தொடர்பு இருக்கும்? எதனால் ஆரண்யாவை பார்த்ததும் குழந்தையை இறுக்கி கொண்டு சந்திரா கோபமாக கத்தினாள்,  என்று இப்பொழுது தான் புரிகின்றது.  நந்தன் தான் காரணம் என்று..... 

குழந்தை இல்லாமல் ஏங்கி தவிக்கும் ஒரு பெண்,  அவள் கையில் ஒரு குழந்தை கிடைத்தால் என்ன செய்வாள் என்பதை ஆரண்யாவின் கதாபாத்திரம் மூலம் விளக்கிய விதம் உணர்வுபூர்வமாக இருந்தது. 

நந்தன், ஆரண்யா, சாஹித்யன் வாழ்விற்குள் வந்ததும்,  அவனை மகனாக ஏற்றுக்கொண்ட அவர்களது வாழ்வு வண்ணமயமாக மாறுகின்றது.

குழந்தையை பிரியும் வேளையில் தவிப்பதும்,  பின்பு இருவரும் ஒருவருக்காக ஒருவரை சமாளித்து வாழும் விதம் அழகு.

சாஹித்யன் குழந்தையை உடனே எடுத்து கொண்டு செல்லாமல் சட்டப்படி அனைத்தையும் செய்வதும் நேர்மை.

இவ்வளவு துயரங்களுக்கு பிறகு தனக்கென்றே ஒரு குழந்தை வர போகின்ற மகிழ்ச்சியில் இருக்கும்போது,  ஆரண்யா ஏன் கிருஷ்ணனை தவிர்க்கின்றாள்?

ஆரண்யாவும் சாஹித்யனும் அப்படி என்ன செய்தார்கள்?

கதை நன்றாக செல்கின்றது.... 

ReplyQuote
Posted : 14/11/2019 9:17 pm
jeyakumar131157
(@jeyakumar131157)
Reputable Member

குழந்தை இல்லாத ஒரு தாயின் உள்ளத்தின் உணர்வுகளை அழகாக காட்டியுள்ளீர்கள். 

குழந்தையை பெற்ற தாய் எடுத்துச் செல்ல வந்த பொழுது ஆரா வின் மனநிலையை நன்றாக காட்சிப்படுத்தியுள்ளீர்கள். 

மருத்தவர் முன்னில் நடந்த உரையாடல்களும் நன்று.

எழுத்துப்பிழைகள்:

கேட்டதது (கேட்டது)

தமதிக்காமல் (தாமதிக்காமல்)

கைப்பேசிப் அது (ப் தேவையில்லை)

எக்காரணம் கொண்டும் சஹியை இழப்பதை நினைத்தும் பார்க்கமுடியாது.’ஆரணியா (சஹியை அல்ல நந்துவை என்று வரவேண்டும் )

ஆரணியாவிற்களைத்து (ஆரணியாவிற்கழைத்து)

மந்துதுக்குள்ள (மந்துக்குள்ள)

அவளுக்கானா மருந்துகளை (அவளுக்கான)

மட்டும்மாகத் (மட்டுமாக)

காப்பாற் முடிந்தது (காப்பாற்ற)

திருத்திக் கொள்ளுங்கள் 

வாழ்த்துக்கள்

ReplyQuote
Posted : 16/11/2019 10:25 pm
jeyakumar131157
(@jeyakumar131157)
Reputable Member

சந்திராவை பார்க்க சென்றதும் நந்தனை அறையில் வைத்து பூட்டிய விதம் பிடித்திருந்தது. 

வெளிநாட்டிற்கு கடத்தப்படுகின்ற மரத்தின் பொருட்களை எடுத்துக்கொண்டு உதயன் வெளிநாடு சென்றானா?

சிறுவன் வாங்கிய சாக்லேட் போதை பொருளா?

அதற்கும் மரத்திற்கும் ஏதாவது தொடர்பு உண்டா?

எழுத்துப்பிழைகள்:

நியாயயத்தின் (நியாயத்தின்)

பொன்னு (பொன்னு என்றால் தங்கம். பொண்ணு என்று வர வேண்டும்)

பஉள்ளுக்குள்( உள்ளுக்குள் )

ஆரணியாவைத் தவிர்த்துப் பேச்சு இருந்தது அங்கு.விசாரணை,கேள்வி பதில் போல இல்லாமல் சாதாரணமாகவே உரையாடலைக் கொண்டு சென்றான் சாஹித்யன். (சந்திராவை சந்தித்த இடத்தில் சாஹித்யன் எப்படி வந்தான். கிருஷ்ணன் என்று வந்திருக்க வேண்டும்)

கவனித்துக் கொள்ளுங்கள் சகோ

வாழ்த்துக்கள்

This post was modified 3 weeks ago by jeyakumar131157
ReplyQuote
Posted : 16/11/2019 11:16 pm
Nithya Nithya20
(@nithya-nithya20)
Trusted Member

@sudha-r

கருத்துப் பகிர்விற்கு நன்றி 

ReplyQuote
Posted : 17/11/2019 10:26 am
Nithya Nithya20
(@nithya-nithya20)
Trusted Member

@kannamma

சரி நான் என்ன செய்யலாம்ன்டு பார்க்குறன்.கருத்துப் பகிர்ந்ததிற்கு நன்றி.அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க.

ReplyQuote
Posted : 17/11/2019 10:30 am
Nithya Nithya20
(@nithya-nithya20)
Trusted Member

@jeyakumar131157

நன்றி

ReplyQuote
Posted : 17/11/2019 10:31 am
Nithya Nithya20
(@nithya-nithya20)
Trusted Member

@evangeline-justus

வைச்சவனா கேளு.என்ன கேட்டா எனக்கு எப்படி தெரியும்? நான் கிருஷ்ணன் நம்பர் வாங்கித் தரவா ? 😋 

ReplyQuote
Posted : 17/11/2019 10:35 am
Nithya Nithya20
(@nithya-nithya20)
Trusted Member

@jeyakumar131157

Yes athu drugsthan.

Illa.aana uthayan velinadu poka edutha mudivukkum pinnala avan ippa jailla irukkathukkum intha avan partha velai oru karanam.

Adutha adutha ep padicha sammantham irukka illaiyandu theriyavarum.

Spelling mistakes athai nan accept pannuran en sidela nadantha pilai.eppavum mistakes varakoodathunduthan niraiya niraiya menakkeduran.aana eppadi ithellam miss aakuthunde theriyala.a aana neenga sollura ovvoru muraium adutha time innumum koormaiya kavanaikka vaikkuthu.thank u.

Aaara haa haa neenga Genius 👍 next i think 15or 16la aaraniyava ippadithan nanum mention panniruppan. Unga cmts parkkavum surprise enaku. Anyway thanks 

Aaru sahiya izhanthida mudiyathundu sollura idam ethu? 

Nanthuva bedla pottuttu aaru pesura scenea? 

Krishnan nanthandra namea sahi munnala sonna pinnalathane antha scene varuthu.koodave aaraniya sahiya kalyanam panna vettula sandai potttatha solluvale athukkellam pinnala vara linea iruntha athu sahithan.

Oru thappa araniya maraikkuratha sollirukkan illaya? Athukkum antha nanthandra perukum oru sammantham iruku.antha payathualathan ava nanthantta(balachandhiran)tta pesina.

Ithu illama vera engaiuma iruntha sollunga. Nan parkkiran.15,16vanthutte irukku. Athai padicha ungaluku vilangumndu ninaikkuran.

 

 

ReplyQuote
Posted : 17/11/2019 10:51 am
Nithya Nithya20
(@nithya-nithya20)
Trusted Member

@sudha-r

Thank u. Ithu nan niraiya niraiya rasichi ezhuthina part.sollappona episode ready aaka muthale thani oru parta ithai nan ezhuthi vaichi piraku episodeoda add pannan. Neenga athai mention pannathuku thanks .

Eppa irunthalum eppadi marachalum  senchi thappu veliya varama irukkathillaiya? Appadi aaru panna oru thappu veliya vanthuttu.athoda vilaivu krishnava thavirkkura. I mean sahiku therinchittu aduthu ithu Krishnakku therincha avan reaction eppadi irukkumddu avalukku therium.appadi avan thannai vilakki vaikkura valiya vida thaane outhungitta athu periya kayama irukkathundrathu ava ennam.

Don't worry prachanai vanthuttu athukku vidaium irukkum.

Thanks

ReplyQuote
Posted : 17/11/2019 10:59 am
Sudhar liked
Kannamma
(@kannamma)
Estimable Member

கதை அருமையாகச் செல்கிறது. 

இலங்கைக் காடுகளின் பசுமைக்குள் சென்று வந்த உணர்வு.. 

கிருஷ்ணன் இயற்கை அழகில் மெய் மறந்து நின்று விட்டான். அந்த நேரத்தில் சிறுத்தை அவனுக்குக் குறிவைத்து விட்டது😱😱

மயூரி குழந்தைத்தனமாய் பட்டம் விட்டது என்ன தெரியாத யாரோ தன்னைத் தீண்டி விட்டார்கள் என்று அறிந்து அவனை அடித்து வீழ்த்தியதென்ன....

ReplyQuote
Posted : 17/11/2019 2:44 pm
Kannamma
(@kannamma)
Estimable Member
Posted by: @nithya-nithya20

@kannamma

சரி நான் என்ன செய்யலாம்ன்டு பார்க்குறன்.கருத்துப் பகிர்ந்ததிற்கு நன்றி.அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க.

தோழி 😁😁

ReplyQuote
Posted : 17/11/2019 2:46 pm
Kannamma
(@kannamma)
Estimable Member

கதாநாயகன் தான் கதாநாயகியை காப்பாற்றுவார். இங்கு கதாநாயகி சிறுத்தையிடமிருந்து கிருஷ்ணனை காபபாற்றுவது😁😁

மயூரி எதற்காக கிருஷ்ணனைக் காண்பதைத் தவிர்த்தாள்.....

 

ReplyQuote
Posted : 17/11/2019 6:23 pm
Sudhar
(@sudha-r)
Reputable Member

உன்னால் மாற்ற முடியாத ஒன்றிற்காக, இப்பொழுது உள்ள தருணத்தை ஏன் வீணடிக்கின்றாய்? 

தீர்வு தினம் உன்னை தேடி வந்துகொண்டு தான் இருக்கின்றது ஆனால்,  அதை கண்டு கொள்வார் தான் இல்லை. 

இந்த வரிகள் எல்லாம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது 🤗

மயூரியின் தம்பி எடுத்து சென்ற பட்டையில் அப்படி என்ன இருக்கும்? 

மயூரியை பிள்ளை பிடிப்பவர்கள் என்று நினைத்து விட்டாளே அந்த சிறுபெண்.  இந்த பாதுகாப்பும் நல்லதற்கே!

சாஹித்யனும் ஆரண்யாவும் உதயன் தூக்கு கயிறு வரை செல்ல எப்படி காரணமாகிப்போனார்கள்?

விலங்குகள் தொடர் மரணம் என்று இன்னொரு கேஸ் சஹியிடம். 

யார் இந்த ஹாரிஸ்?  எதற்காக அவனுக்கு தினமும் மிட்டாய் தருகிறான் ஒருவன்? 

இப்படி பல கேள்விகளின் விடைகளுக்காக தினம் உன்னை தேடி...  அடுத்த பதிவிற்காக...

கதை நன்று... 

ReplyQuote
Posted : 17/11/2019 11:47 pm
jeyakumar131157
(@jeyakumar131157)
Reputable Member

அறியாமையை பயன்படுத்தி ஏமாற்றப்படுபவர்களின் நிலை பரிதாபத்திற்குரியது. உதயனிடம் வெள்ளைத்தாளில் கையொப்பம் வாங்கிவிட்டு அவன் வாழ்க்கையை சீரழித்துவிட்டார்கள் பாவிகள்.

குழந்தை கடத்தப்பட்ட விவரம் கூறிவிட்டீர்கள்

குழந்தைகள் வனகொடுமை செய்வோருக்கு சந்திரா கொடுத்த தண்டனை குறைவுதான்

போதை பொருள்கள் மூலம் குழந்தைகளும் மாணவர்களும் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை கூறியுள்ளீர்கள் நன்று. 

மயக்கம் அடைந்த சிறுவனை எங்கு கொண்டு சென்றார்கள்?

எழுத்துப் பிழைகள் இருக்கின்றன.

வாழ்த்துக்கள்

ReplyQuote
Posted : 19/11/2019 10:42 pm
Sudhar
(@sudha-r)
Reputable Member

உதயனின் ஏழ்மையை பயன்படுத்தி வெளிநாடு செல்ல தவறான பாதை காட்டினர்.

கடனாளியாகி கடனை சமாளிப்பதற்காக தவறான வேலை செய்து மாட்டிக்கொண்டான்.

அந்த மரப்பட்டை,  வீட்டு வேலியில் இருக்கும் செடி இதில் இவ்வளோ இருக்கா.?

சந்தேகித்தது போலவே சிறுவன் மிட்டாயாக உட்கொண்டது போதை மாத்திரை தான்.

சாஹித்யன் கையில் எடுத்துள்ளது போதை கும்பல் கேஸ்,  இது உதயனில் போய் முடியுமோ!

ஆரண்யா எழுதிய அந்த கட்டுரையால் தான் உதயன் மரத்தை பற்றி தெரிந்துகொண்டு தனியாக தொழில் செய்து மாட்டிக்கொண்டானா? 

கதை நன்றாக செல்கின்றது... 

ReplyQuote
Posted : 20/11/2019 6:43 pm
Page 7 / 9
Share:
Advertisements