Forum

[Sticky] Authors Intro  

  RSS
Admin
(@annasweety)
Member Admin

எழுத்தாளர்கள் தங்களை இங்கு அறிமுகப்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Quote
Posted : 04/07/2019 12:22 pm
Rhea moorthy
(@rhea-moorthy)
Estimable Member

ஹாய் செல்லம்ஸ், நான் உங்கள் ரியா மூர்த்தி. காதலில் கரைந்திட வா, நான் உன் அருகினிலே, காதல்காரா காத்திருக்கேன், மாந்த்ரீகன்(ongoing) என் முந்தைய படைப்புகள். யதார்த்த விதிகளை உடைக்கும் கதைகள் மேலேயே எனக்கு எப்போதும் நாட்டம் அதிகம். ஆடுகளம் ஒரு புத்தம் புதிய உலகினுக்கு உங்களை அழைத்து செல்லும்படியான வித்யாசமான கதைக்களம். என்னால முடிஞ்ச வரைக்கும் ஒரு மிகச்சிறந்த கதையை கொடுக்க முயற்சி பண்றேன், வாசகர்களாகிய நீங்கள் நிறை குறைகளை பார்த்து பதமா சொல்லி என்னை வழிநடத்த வாருங்கள்.

ReplyQuote
Posted : 20/07/2019 1:52 am
Chithra V
(@chithra-v)
Eminent Member

வணக்கம் தோழமைகளே, நான் சித்ரா. வெ. இங்கு எத்தனை பேருக்கு என்னை தெரியும் என்று தெரியவில்லை, நான் இதுவரை 8 கதைகள் எழுதியுள்ளேன். அதில் ஆறு முடிந்திருக்கிறது. இரண்டு முடியும் தருவாயில் இருக்கிறது. இந்த தருணத்தில் புதினம்2020 போட்டியில் நானும் பங்கேற்கிறேன். அன்பெனும் ஊஞ்சலிலே எனும் தலைப்போடு உங்களை போட்டிக் கதையில் சந்திக்க வருகிறேன். விரைவில் அத்தியாயங்கள் பகிரப்படும், அதை படித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டும், நன்றி.

ReplyQuote
Posted : 20/07/2019 9:41 am
Admin, Madhu Anjali, Divya Ramalingam and 2 people liked
ManoRamesh
(@manoramesh)
Eminent Member

வணக்கம் மக்களே, நான் மனோ ரமேஷ் நான் பிக்ஷன் கட்டுரைகள் , சில பல எண்ண சிதறல்கள் எழுதிட்டு இருக்கேன். கொஞ்சமா குட்டி கதைகள் எழுதியிருக்கேன். முதல் முறையா ஒரு தொடர்கதை எழுதபோறேன். நான் பொதுவா சுருக்கமா எழுதுவோம்னு இருப்பேன் இப்போ அதை கொஞ்சம் மாத்திக்கலாம்னு யோசிக்கறேன். நீங்க எல்லாம் சொல்றத வெச்சு அப்படியே கொஞ்சம் கொஞ்சமா முன்னேறிடுவேன். அது போக படைப்புன்னா அப்படி இப்படி நானே நெறய பேசி வெச்சிருப்பதால் என்னோட கொள்கைகளுக்கு உட்பட்டு தான் இருக்கும் , அப்படி அதை மீறினாலும் சொல்லுங்க. அப்பறம் வார்த்தை அமைப்பு, காட்சிக்கான விளக்கம் போதாமைலாம் இருந்தா கண்டிப்பா சொல்லுங்க நான் அதெல்லாம் ரொம்பவே ஆரம்பநிலைல இருக்க விஷயங்கள். தொடர்ந்து எழுத முயற்சிக்கறேன். சொல்லபடற முன்னேற்றங்களை அடுத்த அடுத்த அத்தியாங்கள்ல சரி பண்ணப்பாக்கறேன். 

Mano Ramesh

ReplyQuote
Posted : 20/07/2019 10:12 am
Madhu Anjali
(@madhu-anjali)
Trusted Member

வணக்கம் நண்பர்களே..நான் மது அஞ்சலி. "வெளிச்சத்தின் மறுபக்கம் " என்னும் கதையின் மூலம் உங்களை சந்திக்க வந்துள்ளேன். என்னை பற்றி பெரிதாக கூற எதுவும் இல்லை. இது என் புது முயற்சி. இங்கு நான் போடியிற்காக வந்திருக்கிறேன் என்பதை விட புதிதாக கற்று கொள்ள வந்திருக்கிறேன் என்று தான் சொல்ல வேண்டும். கதை எழுதுவதில் நான் இன்னும் கத்துகுட்டியாக தான் இருக்கிறேன்.  அகவே என் கதையில் உள்ள நிறை குறைகளை சுட்டிக்காட்டி நான் அடுத்த படிக்கு முன்னேற எனக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ReplyQuote
Posted : 20/07/2019 1:03 pm
Tamilini
(@tamilini)
New Member

அன்பு தோழமைகளே,

வணக்கம்,

நான் தமிழினி..

புதினம் 2020போட்டியில் பங்கு கொள்கிறேன்..எனது கதையின் பெயர் "மேகவீதியில் வான்நிலா!"

இதுவரை மொத்தம் மூன்று கதைகள் எழுதியுள்ளேன்.. இரண்டு முடிந்துவிட்டது.. மூன்றாவது ஆன் கோயிங் நாவல்..

ஆகஸ்ட் மாதத்தில் இருந்து என் கதையை இங்கு‌ பதிவிடுகிறேன்..படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டு என்னை ஊக்கபடுத்துங்கள்..

நன்றி 😘

அன்புடன்..

  தமிழினி...

 

 

This post was modified 3 months ago by Tamilini
ReplyQuote
Posted : 22/07/2019 9:16 pm
Zara
 Zara
(@zara)
New Member

வணக்கம் நண்பர்களே...

 

நான் Zara (pen name) தான்..

முதல் முறையாக நான் ஒரு போட்டியில் கலந்துகொள்ள போகிறேன்.. ரொம்ப பரபரப்பா இருக்கேன்.. போட்டின்னு சொல்லுறதை விட இங்கே வந்ததே  நிறைய கத்துகிட்டு நல்ல எழுத பழகணும்னு தான்..அதுனால நீங்கள்    எல்லாரும் என்னோட கதை முடிவு வரை பயணித்து நல்ல படியா  நிறை குறை எல்லாம் சொல்லி என்னை வழிநடத்த வேண்டும்.. ok va frnds...

 

Ella authors kum All the best...

 

ReplyQuote
Posted : 22/07/2019 9:25 pm
Annapurani Dhandapani
(@annapurani-dhandapani)
Active Member

வணக்கம் நட்பூக்களே!

 

நான் அன்னபூரணி தண்டபாணி! நான் இந்த தளத்துக்குப் புதிது!

உங்கள் அனைவருடனும் கை கோர்த்துக் கொண்டு எழுத்துலகில் பயணிக்க வந்திருக்கிறேன்!

இது வரை ஆறு புதினங்கள் எழுதியுள்ளேன்! ஆறாவது புதினம் முடியும் தருவாயில் உள்ளது!

நான் புதினம் 2020க்காக, "என்ன சொல்லப் போகிறாய்?" என்ற புதினத்துடன் வந்திருக்கிறேன்!

சும்மா ஜாலியா, யதார்த்த நடையில ஒரு கதை! உங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும்!

உங்கள் பின்னூட்டங்களை அள்ளி வழங்க வேண்டும் என்று அன்புக் கட்டளையிடுகிறேன்!

விரைவில் முதல் பாகத்துடன் வருகிறேன்!

ReplyQuote
Posted : 03/08/2019 7:17 pm
VATHANI PRABHU
(@vathani-prabhu)
Active Member

வணக்கம் ப்ரண்ட்ஸ்...

நான் வதனி... எத்தனை பேருக்கு என்னைத் தெரியும்னு தெரியல.. இருந்தாலும் எல்லாருக்கும் ஒரு ஹாய் சொல்லிக்கிறேன்... என்னோட கதை வரிசையில் அன்பிற்கினியயவளே வும் பயணிக்கிறது... 

ஐந்து நாவல்கள், எட்டு சிறுகதைகளும் எழுதியிருக்கிறேன்... இரண்டு கதைகள் புத்தகமாக வந்திருக்கின்றன.. 

இது என்னுடைய முதல் போட்டிக்கதை.. நானும் இதில் கத்துக்குட்டிதான்.. சோ அன்பான தெய்வங்கள், நல்லது சொல்லி வழிநடத்துங்கள்.. உங்கள் பேராதரவை எதிர்பார்க்கும் வதனி... 

ப்ரியங்களுடன்
வதனி..

ReplyQuote
Posted : 10/08/2019 3:00 pm
ArunaKathir
(@arunakathir)
Active Member

வணக்கம்,
நான் அருணா கதிர்வேல். கதைகள் எழுதத் துவங்கி மூன்று வருடங்கள் ஆகின்றன. சிறுவயது முதலே ஜெயகாந்தன், ஜெயமோகன், இந்துமதி என தேடித் தேடி நாவல்கள் படிக்கும் பழக்கம் கொண்டவள். “இது என்ன எப்பப் பாரு புக்கும் கையுமா?”என கண்டவர் ஏசும் வண்ணம் புக்கதக் கூட்டில் வாழ்ந்து வந்தவள்.
படித்தது என்னவோ பொறியியல். பரபர சென்னையில் 6வருட இயந்திர வாழ்க்கையை செவ்வனே அனுபவித்துவந்தேன்.

திருமணத்திற்குப் பின்னர் குடும்பம், குழந்தை என சீராக சென்றுகொண்டிருக்க, பொழுது போக்கிற்காக இணைய தளங்களில் கதைகள் படிக்கத் துவங்கினேன். கல்லூரியில் விளையாட்டாக சிறுகதை எழுதுவதுண்டு. இணையத்தில் பலர் எழுவதையும் பார்த்து பேராவல் கொண்டு, “எனக்கு எழுத வருமா? இல்லை அப்படி சொல்லி நம்மளை நாமே ஏமாத்திக்கறோமா?”என்ற கேள்விகளை எதிர்கொண்டு, “எழுதி தான் பார்ப்போமே” என விளையாட்டாகத் துவங்கியது இன்று 5 புத்தகங்களாக உருமாறியுள்ளது.
என்னைப் பற்றி போதும் என்று நினைக்கிறேன். கதைக்குள் போகலாமா?

என் கதையின் பெயர்கள் நிட்சயமாக பாடல்வரிகளாக இருக்கப் போவதில்லை என்பதை எழுதத் துவங்கிய தினம் முதல் கடைபிடிக்கிறேன். பாடல் வரிகளின் மேல் கோபம் ஒன்றும் இல்லை. என் கொள்கை… அவ்வளவே…

இது என் 6 வது கதை. இது வரை, நெற்காட்டு ராஜகுமாரி, சந்திராழினி, நட்சத்திரமாய் ஒரு மின்மினி, அனித்ராவின் வெற்றிகள், மாய நதிச்சுழல் என ஐந்தும் புத்தமாக வெளியாகிவிட்டன.

கதையின் பெயர் – நிலவு மட்டும் துணையாக
கதையின் நாயகி – ஆத்யா.

நாயகன் பெயர் கதையின் வாயிலாக தெரிந்து கொள்ளுதல் நலம் ஏனென்றால், இதன் நாயகன் யார் என நீங்கள் தான் முடிவெடுக்க வேண்டும். படிப்பவரின் எண்ணவோட்டத்திற்கேற்ப நாயகன் மாறுபடலாம்.
கதையைப் பற்றி சொல்ல வேண்டுமெனில், என் பிற கதைகளைப் போல் நாயகியைச் சுற்றி இறுக்கமாக பின்னப்பட்ட வலை. நாயகன் நாயகி – இருவருக்கும் என்ன பிரச்சனை? பிரிவினால் என்னவாயினர், எங்கே பிரிந்தனர், எங்கே பிரிக்கப்பட்டனர், சேர்ந்தனரா? சேர்த்துவைக்க வேண்டுமா என பலவாறாக கதையின் ஊடே பயணித்து தெரிந்து கொள்வோம்.

உங்களிடம் நான் வைக்கும் ஒரே கோரிக்கை – கதையினைப் படித்து அவ்வப்போது கருத்து சொல்ல வேண்டுகிறேன். “படித்தவுடன் கிழித்துவிடவும்” பாணியில் படித்ததும் மறந்துவிடாமல் தங்கள் கருத்தை பதிவிக்கவும். இங்கே எழுதும் எல்லோருமே பரிசுக்காக எழுதுவதில்லை. நம் எழுத்து இன்னும் சிலரைப் போய் சேரும் என்ற ஆசையில் மட்டுமே எழுதுகின்றனர். அவர்களுக்கு உங்கள் கருத்துகள் மட்டுமே முக்கியம். தேவையும் கூட.

 

Love,

Aruna Kathir ❤️

Aruna Kathir💖

ReplyQuote
Posted : 23/08/2019 11:08 pm
jeyakumar131157
(@jeyakumar131157)
Estimable Member

என் பெயர் ஜெயக்குமார் சுந்தரம் . இந்த தளத்திற்கு புதியவன். கவிதைகள் எழுதுவதுண்டு.

தொடர்ந்து கவிதைகள் எழுதலாம் என எண்ணியுள்ளேன் . 

படியுங்கள் படித்துவிட்டு கருத்தை எழுதுங்கள் . நிறையை மட்டுமல்ல குறையையும் சுட்டி காட்டுங்கள் . குறைகள் எனது தவறுகளை திருத்த  உதவும்.எழுத்துலகில்   வளர்வதற்கும் எழுந்து நிற்பதற்கும் உதவும் . நன்றி

This post was modified 2 months ago by jeyakumar131157
ReplyQuote
Posted : 26/08/2019 8:49 pm
Share:
Advertisements