Forum

Anbin Raagam - Comments Thread  

Page 4 / 4
  RSS
Kavya
(@kavya)
Active Member

@kannamma

அப்படியே குனிச்சிக்கறேன். தலையில் ஒரு  கொட்டு கொட்டிட்டு போங்க. அப்பதான்  அடுத்த  தடவை தப்பு  பண்ண மாட்டேன். நன்றி சிஸ். 

ReplyQuote
Posted : 04/09/2019 7:06 pm
Kannamma liked
Kavya
(@kavya)
Active Member

@kannamma

கரப்பான்பூச்சிக்கே கத்துவோம். குரங்கை பார்த்து  கத்த மாட்டோமா. . 😀 

This post was modified 2 weeks ago 2 times by Kavya
ReplyQuote
Posted : 04/09/2019 7:07 pm
jeyakumar131157
(@jeyakumar131157)
Trusted Member

ராமின் அன்பு, அம்மாவின் பரிதவிப்பு, அப்பாவின் அடி, விஷாலியின் நட்பு அனைத்தும் (அணைத்தும் என்று மூன்று இடங்களில் குறிப்பிட்டுள்ளீர்கள். தவறு. அணைப்பது என்பது கட்டி அணைப்பது என்று பொருள் படும். திருத்திக் கொள்ளுங்கள்) அருமையாக விவரித்துள்ளீர்கள். நன்று

தொடரட்டும் அன்பின் ராகம் இனிமையாக. வாழ்த்துக்கள் 

ReplyQuote
Posted : 08/09/2019 9:43 pm
Kavya
(@kavya)
Active Member

@jeyakumar131157

நன்றி  சகோ. இனி இந்த  தப்பு  வராமல் பார்த்துக்கறேன்.

ReplyQuote
Posted : 08/09/2019 10:19 pm
Sudhar
(@sudhar)
Estimable Member

குருவை அவன் தந்தை அடித்தது, அம்மாவின் கண்ணீர், தம்பி கேட்டதும் பாசத்துடன் கைப்பேசி வாங்கித்தரும் அண்ணன் என்று அழகான ஒரு குடும்பத்தை காண்பித்து உள்ளீர்கள்.... 🙂 எழுத்துப்பிழைகள் வார்த்தையின் பொருளையே மாற்றிவிடும்... அதில் சற்று கூடுதல் கவனம் செலுத்தவும்...

ReplyQuote
Posted : 11/09/2019 5:16 pm
Kavya
(@kavya)
Active Member

@sudhar

நன்றி  சகோ...கவனமாக இருக்கிறேன். 

ReplyQuote
Posted : 12/09/2019 1:54 pm
jeyakumar131157
(@jeyakumar131157)
Trusted Member

சுமி நவீனகால பெண்மணி. எல்லாவற்றையும் அழகாக யோசித்து பார்க்கின்ற குணம். அம்மா அப்பா தனது திருமணத்தினால் கஷ்டப்படக் கூடாது என்ற நல்ல எண்ணம் பாராட்டுக்குரியது. தன் மனதில் தோன்றியதை முகத்திற்கு நேரே சொல்லுகிற பாங்கு பிடித்திருக்கிறது .

ராம் அவளது குணத்தை அறிந்து கொண்டு அவளுக்கு, தகுந்த பதிலை கொடுக்கிறான்.  அவள் கோபத்தை தணிக்கிறான். குழப்பத்தை முதலில் தீர்த்து விட வேண்டும் என்ற எண்ணம் நன்று.

கதை அருமையாக தொடர்கிறது . 

எழுத்துப்பிழைகள்:

உனக்கு  செய்யாமல் யாருக்கு ‘செய்யாமல்’ போறோம். (செய்ய)

அவர் கூட நீ சேர்த்து ‘நின்றாள்’ பார்க்கவே அவ்வளவு  அழகாக இருக்கு (நின்றால்)

ரூம்பிற்குல் (ரூமிற்குள் அல்லது அறைக்குள்)

 

ப்ளைவுஸ் (ப்ளௌஸ் அல்லது ப்ளவுஸ்)

கோனல் (கோணல் )

தவறாக எண்ண வேண்டாம் . தவிர்ப்பதற்காகவே எழுதுகிறேன் . 

அன்பு ராகம் தொடர்ந்து இணைக்க வாழ்த்துகிறேன் 

This post was modified 1 week ago by jeyakumar131157
ReplyQuote
Posted : 12/09/2019 8:54 pm
Sudhar
(@sudhar)
Estimable Member

சுமித்ராவிற்கு வந்த கோபம் நியாயமானதே....

அதை நேரடியாக ராமிடமே கேட்டது,  அவர்களுக்குள் நடந்த வாக்குவாதம்...

இவற்றில் இருந்து கிடைத்த Message - 

பிரச்சனையை உரியவர்களிடம் கேட்டு தீர்த்துக்கொள்வது நன்று... 👍 

This post was modified 1 week ago by Sudhar
ReplyQuote
Posted : 13/09/2019 12:11 am
Kavya
(@kavya)
Active Member

@jeyakumar131157

நன்றி சகோ.

ReplyQuote
Posted : 13/09/2019 6:26 am
Kavya
(@kavya)
Active Member

@sudhar

நன்றி பா. 

ReplyQuote
Posted : 13/09/2019 6:27 am
Kannamma
(@kannamma)
Trusted Member

சுமித்ரா சரியான சரவெடி. 

பெண் குழந்தைகளைப் பெற்று படிக்க வைத்து  வரதட்சணை வேறு கொடுத்து கல்யாணம் பண்ணிக் கொடுப்பதற்கு கஷ்டப்பட்டு தான் பெண் பிள்ளைகள் பிறந்தாலே ஒரு காலத்தில் கள்ளிப்பால் கொடுத்தார்கள். அன்றிலிருந்து இன்று வரை வரதட்சணை கொடுக்கும் வாங்கும் பழக்கம் மாறவில்லை. தோழிகளே நாமாவது நம் பிள்ளைகளுக்கு வரதட்சணை வாங்காமல் பெண்மையைப் போற்றுவோம்.

சுமித்ரா கோபப்பட்டது சரிதான். அதைவிட ராமின் நிதானம் அழகு. கல்யாணம் கலாட்டாவில் முடியாமல் தடுக்கப்பட்டது ராமின் நிதானத்தால்.

 

ReplyQuote
Posted : 15/09/2019 1:26 pm
Kannamma
(@kannamma)
Trusted Member

தோழி கொட்டு எல்லாம் இல்லை. அருமையான கதைக்கு பாராட்டு மட்டுமே..😍😍😘

ReplyQuote
Posted : 15/09/2019 1:29 pm
jeyakumar131157
(@jeyakumar131157)
Trusted Member

இந்த பகுதியில் குறிப்பிடும் படியாக எதுவும் இல்லை. தொடர்கதையில் முடிக்கும்போது அடுத்து என்ன என்ற எண்ணத்தை வாசகர் மனதில் எழும்படி முடிக்க வேண்டும் . மற்றபடி நன்று.

எழுத்துப்பிழை முதல் வரியிலே ஆரம்பித்து விடுகிறது. சாதாரணமாக எழுதுவது என்றால் பரவாயில்லை , ஆனால் இது போட்டிக்கான புதினம். கொஞ்சம் கவனத்துடன் எழுதுங்கள். உங்கள் புதினம் சிறப்பாக அமையவேண்டும் என்பதனால் இதனை குறிப்பிடுகிறேன் .

அடிக்கம் (அடிக்கும்)

பினும் புறம் (பின் புறம்)

அரை நாளே(அரை நாள் அல்லது அரை நாளு)

பொபைல்(மொபைல்)

தோரனை(தோரணை)

முளையின் (மூளையின் )

வைத்து  கொல்வது(கொள்வது)  கொல்வது என்பது killing என்று பொருள் 

மொத்தத்தையும் களைத்து  தேட… (கலைத்து)

என்பது ஆயிரம்  சேலரி (எண்பது)

கை குழுக்குவதற்காக (குலுக்குவதற்காக)

கவனித்துக் கொள்ளுங்கள் . நிறைகளை எழுதுவதை விட குறைகளை சுட்டிக்காட்டுவதுதான் நம்மை செம்மை படுத்த உறுதுணையாக இருக்கும். 

சிறப்புடன் எழுதுங்கள். ராகம் தொடரட்டும் . வாழ்த்துக்கள் 

ReplyQuote
Posted : 16/09/2019 7:14 pm
Sudhar
(@sudhar)
Estimable Member

குரு புது வேலையில் சேரப்போகிறானா? 

எழுத்து பிழைகள் அதிகமாகவே உள்ளது. படிக்கும் சுவாரசியத்தையே குறைக்கின்றது.... 

ReplyQuote
Posted : 16/09/2019 11:33 pm
Kannamma
(@kannamma)
Trusted Member

குருவோட அட்வென்சர் அருமை. பாம்பு, தேள், யானை எத்தனை மா?

கையில்லாமல் இருந்தாலும் கைபேசி இல்லாமல் இருக்க முடியாத காலத்தில் ஒரு மாதம் கைபேசி இல்லாமலா !குரு எங்கேயோ போய்டப்பா!

அத்தியாயம் பெரிதாக இருந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் தோழி....

ReplyQuote
Posted : 17/09/2019 5:17 pm
Page 4 / 4
Share:
Advertisements