Forum

Anbin Raagam - Comments Thread  

Page 10 / 15
  RSS
Kannamma
(@kannamma)
Estimable Member

சகோதரனின் இழப்பு குருவை அதிகமாக பாதித்திருக்கும் என்பதை சுமித்ரா உணர்ந்து கொண்டாள்.

சுமித்ரா பெற்றோரின் வருகை இருவரின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துமா? 

விஷாலி நண்பன் மீது கொண்ட அக்கறை😍😍

கோகுல் இருவரையும் சேர்க்க அதிரடி நடவடிக்கையில் இறங்குவானா🤔

ReplyQuote
Posted : 20/10/2019 9:42 pm
Sudhar
(@sudha-r)
Reputable Member

குருவின் உளறலிலே அவனை கண்டுகொண்ட சுமித்ரா, விரைவில் மனம்மாறி குருவுடன் சேரப்போகிறாள் என்று தோன்றுகிறது...

விஷாலினி,  கோகுல் போன்ற நண்பர்கள் இருக்கையில் வேறு என்ன வேண்டும்.

கதை நன்று...

ReplyQuote
Posted : 20/10/2019 11:20 pm
jeyakumar131157
(@jeyakumar131157)
Reputable Member

நன்றாக நகர்த்திக் கொண்டு செல்கிறீர்கள். 

எதற்காக அவளுடைய அப்பாவையும் அம்மாவையும் ஒரிரு நாட்களுக்குள் பெங்களூருக்கு அழைத்து வந்தீர்கள்? அதற்கான காரணத்தை தெளிவு படுத்தவில்லை. அவ்களோடு சேர்ந்து வந்திருந்தால் பரவாயில்லை. என்னவோ சொல்ல வந்து சொல்லாமல் விட்டு விட்டீர்களோ?

வாக்கியங்கள் அமைப்பு நிறைய இடங்களில் தடுமாறுகிறது. Complex sentence ல எழுதாமல் simple sentence ல எழுதுங்கள்.அப்படி எழுதினால் சொல்ல வந்ததை திறம்பட தெளிவு படுத்தலாம் என்பது என்னுடைய கருத்து.

எழுத்துப்பிழைகள் இருக்கிறது. ல, ள, ன,ண,ர,ற ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அழகு உண்டு. எழுத்தை மாற்றி போடுவதால் வார்த்தையின் பொருளே மாறிவிடும் .

தோண்றாமல் ( தோன்றாமல் )

தலையனையை (தலையணையை)

ஹாலிற்குல் (ஹாலிற்குள்)

திருத்திக் கொள்ளுங்கள் சகோதரி

வாழ்த்துக்கள்

 

ReplyQuote
Posted : 20/10/2019 11:27 pm
Kavya
(@kavya)
Trusted Member

@jeyakumar131157

அவசரமாக  நடந்த திருமணம்  என்ன  இருந்தாலும் ஒரே பொண்ணு  இல்லையா.  பிடிவாதம் இருக்கும் .நாட்கள்  பிரச்சினை  இல்லை  சகோ பெற்றவங்களுக்கு உடனே பெண்ணை போய் பார்க்கணும்ன்னு தோன்றது இயல்பு தானே. அவளுடைய  உடை கூட அதிகமாக  எடுத்துட்டு வரலை அப்படின்னு தான்  சொல்லி  இருக்கிறேன். நான்  அவ்வளவு தான்  யோசிச்சேன். புதிதாக  அவங்க  சொல்ல  எதுவும்  இல்லை.  எப்படியும்  முதலிலேயே நிறைய அட்வைஸ் பண்ணி தான்  அனுப்பி வச்சு இருப்பாங்க. இந்த  காலத்து பிள்ளைகளுக்கு அடிக்கடி  சொன்னாலும் கோபம் வரும்.

ஸாரி ப்ரோ எழுந்து பிழை தொடர் கதை மாதிரியே தொடருது. மன்னிச்சு.

ReplyQuote
Posted : 21/10/2019 2:34 pm
Kavya
(@kavya)
Trusted Member

@sudha-r

நன்றி சிஸ்டர்.  நண்பர்கள் இருக்கும் போது என்ன  கவலை.

ReplyQuote
Posted : 21/10/2019 2:36 pm
Kavya
(@kavya)
Trusted Member

@kannamma

நன்றி  சகோ. சீக்கிரம்  புரிஞ்சுப்பா.

ReplyQuote
Posted : 21/10/2019 2:37 pm
Kannamma
(@kannamma)
Estimable Member

சுமித்ரா தன் கோபத்தை குருவிடம் காட்டி விடுகிறாள். 

குரு வருந்தும் தாய்க்கு ஆறுதல் கூட சொல்ல முடியாமல் தவிக்கிறான்.. 

சுமித்ரா சுடிதார் போட்டு தலையை ஒழுங்காக பின்னியதற்கே குரு அசந்துட்டான் போல... 

ஒரு வழியா இரண்டு பேரையும் சேர்த்து புகைப்படம் எடுத்தாச்சு..

 

ReplyQuote
Posted : 22/10/2019 5:19 pm
Kavya
(@kavya)
Trusted Member

@kannamma

போட்டோ  எடுத்தாச்சு. நன்றி சிஸ்டர். 

ReplyQuote
Posted : 22/10/2019 5:43 pm
jeyakumar131157
(@jeyakumar131157)
Reputable Member

அம்மா அப்பா வந்ததன் நோக்கம் ?

குரு நண்பர்கள் வந்திருந்த போது நன்றாக நடித்துள்ளாள் சுமி. எதுவும் நம்மிருக்கும் இடையில்  மட்டுமே. என்றது அவளுடைய தன்னம்பிக்கையை காட்டுகிறது. நன்று.

எழுத்துப்பிழைகள்:

உண்டாலா (ளா)

செம்பலுப்பு(ழு)

ஹேர்டைல் (‘ஸ்’ மிஸ்ஸிங்)

பெட்ரூம்பிற்குல்(ள்)

பேசுவது போன்றதல்ல எழுதுவது . கவனித்து எழுதுங்கள் 

வாழ்த்துக்கள

ReplyQuote
Posted : 22/10/2019 9:34 pm
Sudhar
(@sudha-r)
Reputable Member

சுமித்ராவின் மனமாற்றம் விரைவில் நிகழும் என்றே தோன்றுகின்றது. அனைத்தையும் இயல்பாக ஏற்றுக்கொள்ளும் குருவின் கதாபாத்திரம் நன்று... 👍 

ReplyQuote
Posted : 22/10/2019 11:15 pm
Kavya
(@kavya)
Trusted Member

@jeyakumar131157

நன்றி சகோ.

ReplyQuote
Posted : 23/10/2019 9:56 am
Kavya
(@kavya)
Trusted Member

@sudha-r

நன்றி சிஸ்டர்.  மனமாற்றம் சீக்கிரமே நடக்கும். 

ReplyQuote
Posted : 23/10/2019 10:24 am
jeyakumar131157
(@jeyakumar131157)
Reputable Member

பேசாத சுமியை பேச வைத்துவிட்டீர்கள். அதற்கு உதவிய புகைப்படங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். அவளுக்கும் இயற்கையும் அதன் அழகும் பிடிக்கும் என்று அறிந்துக் கொண்ட குரு இனி மகிழ்ச்சியில் துள்ளாட்டம் போடப்போகிறான். நன்று

வாழ்த்துக்கள்

This post was modified 3 weeks ago by jeyakumar131157
ReplyQuote
Posted : 25/10/2019 6:24 am
jeyakumar131157
(@jeyakumar131157)
Reputable Member

கதையை மட்டுமல்ல சுமியையும் நன்றாக நகர்த்துகிறீர்கள்.

கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்தி பார்க் மால் கம்ப்யூட்டர் அனிமேஷன் அப்படி இப்படி என்று நெருங்குகின்ற அளவிற்கு கொண்டு வந்து விட்டீர்கள்.

இனி விரைவில் முடிந்துவிடும் என நம்புகிறேன். 

ராகம் இசைக்கட்டும் தொடர்ந்து. 

வாழ்த்துக்கள்

ReplyQuote
Posted : 25/10/2019 7:52 pm
Kavya
(@kavya)
Trusted Member

@jeyakumar131157

நன்றி சகோ.
Spoiler
ReplyQuote
Posted : 25/10/2019 8:47 pm
Page 10 / 15
Share:
Advertisements