Forum

Aahiri (Ah) - Comments Thread  

Page 6 / 6
  RSS
jeyakumar131157
(@jeyakumar131157)
Reputable Member

நிறைய விஷயங்களில் தெளிவு கிடைக்கவில்லை. 

“சென்றிருந்தாள், சுட்டிருந்தாள், நடந்திருந்தாள்..,,” என்பதற்கு சென்றாள், சுட்டாள், நடந்தாள் என்று எழுதியிருக்கலாமே!

எழுத்துப்பிழைகள் இருக்கின்றன 

பயண்படுத்தியது (பயன்படுத்தியது)

கண் சிமிட்டிக் கொண்டிருந்து அந்த  அந்த வீடு. (கொண்டிருந்தது அந்த வீடு)

உள்ளை (உள்ளே)

காவல் துரையினர் (துறையினர்)

அந்ந ஆளரவமற்ற இடத்தில்..(அந்த)

வாழ்த்துக்கள்

ReplyQuote
Posted : 23/11/2019 1:48 pm
Sudhar
(@sudha-r)
Reputable Member

ஆஹிரி அதற்க்குள் நிறைவு பகுதி வந்துவிட்டதா?  என்று நினைத்து கொண்டே படித்தேன்... 

கதையில் இருந்த அத்தனை புதிர்களுக்கு விடையளித்து விட்டீர்கள். 

கடைசியில் பார்த்தால் ஆஹிரியின் சித்தப்பா தான் அனைத்திற்கும் காரணமா!

அவர் செயல்களுக்கு இப்படி ஒரு காரணமா!  நல்லது செய்ததற்காக குடும்பம் மொத்தத்தையும் பழி வாங்கிவிட்டாரே!

ஆஹிரியின் கனவுக்கான அர்த்தம் இப்போது புரிந்தது. 

கடைசிப்பகுதியில் அரணின் பெயர் நவயுகன் என்று சொல்லிய விதம் அழகு. 

துஜா கிடைத்துவிட்டாள், சாத்வதனுடன் சேர்ந்துவிட்டாள். 

ஆஹிரியும் யுகனுடன் சேர்ந்துவிட்டாள் என்று நிறைவு பகுதியை நன்றாக நிறைவு செய்துள்ளீர்கள். 

ஆஹிரி அழகான கவிதையாக இருந்தது. 

நன்று. 👍 

ReplyQuote
Posted : 24/11/2019 12:10 am
jeyakumar131157
(@jeyakumar131157)
Reputable Member

          ஆஹிரி 

ஜே ஜே க்ரூப் கம்பெனி உரிமையாளர்கள், ஜனார்த்தனன், ஜீவரத்தினம். ஜனார்த்தனன் மனைவி நிரூபா. ஜீவரத்தினம் மனைவி வகுளா.  ஜனார்த்தனனின் மகள் ஆஹிரி ஜீவரத்தினம் மகள் துளஜா.

துளஜா போட்டிங் போக ஆசைபடுவதாக சொன்னதும், ஜனார்த்தனன் ஆஹிரியையும் உடன் அழைத்துக் கொண்டு காரில் செல்கிறார். வழியில் அவர்கள் சென்ற வண்டி விபத்துக்குள்ளாகிறது. அதில் ஜனார்த்தனன் கோமாவிற்கு சென்றுவிடுகிறார். ஓட்டுனர் செல்வமும் துளஜாவும் இறந்துவிட்டதாகவும்  துளஜாவின் உடல் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. ஆஹிரி பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வீடு திரும்புகிறாள். 

 நிரூபாவின் வேண்டுகோளின்படி நிலவூர் என்ற கிராமத்தில் வாழ்ந்து வரும் நவயுகன் என்ற அரண் என்பவனை வரன் காண நிரூபாவும் ஜீவரத்தினமும் ஆஹிரியை அழைத்துச் செல்கின்றனர். அங்கு அரணால் ஆஹிரி கடத்தப்படுகிறாள். 

வனமொன்றில்  மரம் மீது அமைத்திருக்கும் மரவீட்டில் மறைத்து வைக்கப்படுகிறாள். அரண் தனிமையில் இருக்கும் ஆஹிரியிடம் கண்ணியத்துடன் அன்பு காட்டுகிறான்.

துளஜாவின் மரணச்செய்தி அறிந்து உண்மையை அறிந்துக்கொள்ள அவள் காதலன் டாக்டர் சாத்வதன், நவயுகனின் தம்பி ஆஹிரியின் மீது சந்தேகம் கொண்டு அவளைத் தேடி காட்டிற்கு வருகிறான். அவன் அறியாது அவனை தொடர்ந்து வருகின்ற கூலிப்படை ஆஹிரியை கொல்ல முயற்சிக்கிறது. அதிலிருந்து அரண் அவளை காப்பாற்றுகிறான்.

ஒருநாள் சாத்வதனின் துணையுடன், காவலாக இருந்த அரணுக்கு மருந்து கலந்த பானத்தைக் கொடுத்து சாத்வதனுடன், அங்கிருந்த காரை எடுத்துக் கொண்டு தப்பிச் செல்கிறாள். வழியில் ஓட்டுனர் செல்வத்தின் தங்கையை கண்டு அவளை தொடர்ந்து சென்று அவன் வீட்டை கண்டுப்பிடிக்கிறார்கள். செல்வம் கால் துண்டிக்கப்பட்ட நிலையில் படுக்கையில் கிடக்கிறான். நிரூபா பணம் கொடுத்து ஊரைவிட்டு சென்றுவிட கூறியதால் ஒதுக்குப்புறமாக ஒரு வீட்டில் ஒதுங்கி வாழ்வதாகக் கூறுகிறான். அடையாளம் தெரியாத பிணத்தை வைத்து அவன் இறந்து போனதாக செய்தி வெளியாகிறது. அதை யார் செய்தார் என்பதை கண்டுப்பிடிக்க அம்மாவை தொடர்பு கொள்கிறாள்.

ஃபார்ம் ஹவுஸில் இருக்கும் அம்மாவை காணச் செல்கிறாள். அங்கு அம்மா தலையில் இரத்தம் வடிய ஓரறையில் கிடக்கிறாள். அவள் அருகில் சென்ற ஆஹிரியும் தலையில் தாக்கப்படுகிறாள். இறுதியில் அங்கு வருகின்ற அரண் அவர்களை குற்றவாளி ஜீவரத்தினத்திடமிருந்து காப்பாற்றுகிறான்.  

போலிஸ் வருகிறது. ஜீவரத்தினம் கைது செய்யப்படுகிறார். மற்றவர்கள் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

துளஜா மரணமடையவில்லை, அஸைலம் வைக்கப்பட்டுள்ளால் என்பதை அறிந்து அங்கு செல்கிறார்கள். 

இறுதியில் காதலர்கள் சாத்வதன், துளஜாவும், ஆஹிரி அரணும் ஒன்று சேர்கிறார்கள்

ஜீவரத்தினம் இவைகளையெல்லாம் செய்வதற்கு கூறப்படுகின்ற காரணம், அவர் ஒரு ஸைக்கோபாத். துளஜா அவருடைய சொந்த மகள் இல்லை என்பதை நிரூபா டைரியிலிருந்து தெரிந்துக் கொள்கிறார். 

ஒரே நாளில் பிரசவத்திற்கு செல்லும் நிரூபாவிற்கு இரட்டை குழந்தைகள் பிறக்கிறது. வகுளாவிற்கு குழந்தை இறந்து பிறக்கிறது.

பல முறை குழந்தைகள் இறந்து பிறந்ததால், வகுளா மயக்கம் தெளிந்ததும் உண்மை அறிந்தால் வேதனை அடைவாள் என்பதை உணர்ந்த நிரூபா தன்னுடைய மகள் துளஜாவை, கணவன் ஜனார்த்தனன் ஒப்புதலுடன் வகுளாவின் மகளாக மாற்றிவிடுகிறாள்.

சொத்துக்காக தான் வஞ்சகமாக பழிவாங்கப்பட்டதாக எண்ணிய ஜீவரத்தினம் அண்ணன் குடும்பத்தை பழி தீர்த்துக் கொள்வதாக கதை செல்கிறது.

ஒவ்வொரு பகுதியின் ஆரம்பத்தில் எழுதப்பட்டுள்ள கவிதை ஒவ்வொன்றும் அழகு.

இயற்கையை வர்ணனை செய்துள்ள விதம் வியக்க வைக்கிறது.

அவள் தங்கியிருந்த அறையையும்  அது அமைக்கப்பட்டிருந்த அழகையும் அங்கு வைக்கப்பட்டுருந்த பொருட்களையும் உடைகளையும் இயற்கை அழகையும் வனத்தின் வனப்பையும் அரணின் செயல்களையும் அவன் நடைமுறைகளையும் பண்பையும் பாவனைகளையும் ஆஹிரியின் செயல்களையும் அவள் சிந்தனை ஓட்டத்தையும்  அவளது கற்பனைகளையும் கனவுகளையும் அழகு தமிழில் அருமையாக வர்ணனை செய்துள்ளார். காட்சிப்படுத்துவதிலும் வெற்றி கண்டுள்ளார், ஆசிரியர்.

 

ஒரு சாதாரண வாசகனாக முதல் முறை படித்த பொழுது கதை முழுமையாக புரியவில்லை. நிகழ்ந்துக் கொண்டிருப்பவைகளையும் நினைவில் இருப்பவைகளையும் மாற்றி மாற்றி எழுதியிருப்பதனால், எனக்கு புரிந்துக் கொள்ள முடியவில்லையோ என்று நானறியேன்.

முதல் பகுதியில் ஆஹிரி உச்சரித்த பெயரான நிஷ்சி, காட்சிப்படுத்தப்படுவதோ கடைசி இரண்டு பகுதிகளில்.

ஒவ்வொரு நிகழ்வுகளும் ஆங்காங்கே துண்டு துண்டாக செருகப்பட்டுள்ளன. ஒருவேளை காணொளி மூலமாக பதிவிடப்பட்டிருந்தால் புரிந்திருக்குமோ?

என்னைப் பொருத்தவரை அதிகமான ஃபிளாஷ் பேக், கதையின் தொடர்ச்சியை சிதறடித்து விட்டதோ என எண்ணத் தோன்றுகிறது. 

குறிப்பாக பகுதி 3(4) பக்கத்திலிருந்து பகுதி 3(5) க்கு செல்லும் பொழுது தொடர்பில்லாமல் நிரூபா, வகுளா என்ற இரு கதாபாத்திரங்கள் வருகின்றன. அவர்கள் யார் என்று முன்னரே வெளிப்படுத்தப்படவில்லை. அதனால் ஒன்றும் புரியாமல் குழப்பம் ஏற்படுகிறது. அவர்களைப் பற்றிய குறிப்பு ஆறாவது பகுதியில் வருகிறது. 

நிகழ்வுகளுக்குள் கதை நகர்ந்துக் கொண்டிருக்கையில் திடீரென ஓரிரண்டு பாராக்களில் நினைவுகளில் கலந்தவைகளை குறிப்பிடுவதால், கதையை தொடர்வதில் எனக்கு மிகுந்த குழப்பம். 

என்னுடைய கருத்தை எழுதுவதற்காக மீண்டும் ஒருமுறை படிக்க வேண்டியதாயிற்று. நான் எத்தனையோ கதைகளை படித்திருக்கிறேன். கதையை புரிந்துக் கொள்வதற்காக மீண்டும் படித்தது, ஆஹிரியைத்தான்.

ஒருவேளை புதினத்திற்கு பதிலாக தொலைக்காட்சி தொடராக இருந்திருந்தால் அசத்தலாக இருந்திருக்கும். விஷூவலில் சிறப்பாக அமைந்திருக்கும் என்று எண்ணுகிறேன்.

அது போன்று, “ என்றுவிட”, “வந்திருந்தாள், ஓடியிருந்தாள், சென்றிருந்தாள்.....” போன்ற சொற்கள் எல்லா வாக்கியங்களிலும் வருகின்றன. சில இடங்களில் அழகாக தோன்றினாலும் தொடர்ந்து வாசிக்கும் போது ஏதோ மாதிரி தெரிகிறது.

”என்று கூறிட” “வந்தாள், ஓடினாள், சென்றாள்....” என்று எழுதியிருக்கலாம் என்பது என்னுடைய கருத்து.

அலங்காரமான வார்த்தைகள், அழகான வாசகங்கள், நல்ல உவமேயங்கள், அருமையான கற்பனைகள் எழுத்தின் வனப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.

எழுத்துப்பிழைகள் ஆங்காங்கே தெளிவாக தெரிகிறது.

ஆஹிரி பதினெட்டு ஆண்டுகளாக இரத்ததானம் செய்கிறாள் என்றால் அவளுக்கு எத்தனை வயது? இருபது வயது என்று கூறப்பட்டுள்ளது. அப்படியானால் இரண்டுவயதிலிருந்தே இரத்த தானம் செய்கிறாளா?

ஆடைகளை நிறங்களோடு வர்ணிப்பதிலாகட்டும் இயற்கையை எடுத்துரைக்கும் மொழியிலாகட்டும் உங்கள் ஸ்டைல் தனிமையானது.

ஜனார்த்தனன் என்ன ஆனார்?

என்னைப் போன்ற சாதரண வாசகனுக்கு இந்த புதினத்தை ஒரு முறை படித்து புரிந்து கொள்வது கடினம்.

வாழ்த்துக்கள்

         - ஜெயக்குமார் சுந்தரம்

ReplyQuote
Posted : 25/11/2019 1:50 pm
Divya Ramalingam
(@divya-ramalingam)
Reputable Member

Epi 2,3 nice . 

முரணாய் ஒரு அரண்!  அவன் அரண் தானா இல்லை வேற யாராவதா?  அவளை எதற்காக கடத்தினான்?போன்ற கேள்விகளோடு நகர்கிறது கதை.  அவன் செயல், அவள் செயல் இரண்டும் வித்தியாசமாய். 

ReplyQuote
Posted : 28/11/2019 6:17 pm
Subha_Durainayagam
(@subha_durainayagam)
New Member

என் அன்பு மகள் ப்ரீத்திக்கு, (சொல்லலாம் தானே???)

ஆஹிரி...
தலைப்பிற்கு பஞ்சம் நிலவும் காலத்தில் அருமையான கவிதை போன்ற தலைப்பு வைத்து எதிர்பார்பை அதிகமாக்கியதே முதல் பெரிய வெற்றி. எழுத்து நடை அதற்கு கூடுதலாய் பலம் சேர்த்தது இரண்டாம் வெற்றி. அருமையான கதை களம், குறைவான கதை மாந்தர்கள், விறு விறுப்பான கதை நகர்வு என அமைத்தது அடுத்தடுத்த வெற்றிகள். உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள், என் கண்ணம்மா...

இதை சொல்லியே ஆக வேண்டும் ... கதை வாசிப்பதை இடையில் நிறுத்தவே தோன்றாத அளவு சம்பவங்ளை கோர்த்த விதம் மிகவும் அருமை. 2 ஆம் பகுதியில் இருந்து 10 ஆம் பகுதி வரை தொடர்ந்து வாசித்து முடித்தேன். என்ன ஒரு கதை நகர்வு... உனது முதல் கதைக்கும் ஆஹிரிக்கும் மிகப் பெரிய வித்தியாசத்தை உணர்கிறேன். வார்த்தை பிரயோகம், முன், பின் கதை நகர்வில் தெளிவு, எழுத்து நடை எல்லாமே மெருகேறி இருக்கிறது. மிக்க மகிழ்ச்சி. என் உள்ளத்தில் பெருமை பொங்க அனைத்தும் சொல்லிவிட்டேன் என்றே நினைக்கிறேன்.

இத்துடன் ஒரு சிறு திருத்தத்தையும் சொல்லாம் தானே. கோபப்பட மாட்டாய் என்ற நம்பிக்கையில் சொல்கிறேன். எழுத்துப் பிழைகள் பல இடங்களில் பார்க்க முடிகிறது கண்ணம்மா. அதை முடிந்த வரை குறைத்துக் கொள்ள வேண்டும் என்பதை கோரிக்கையாக மட்டுமே கேட்டுக் கொள்கிறேன். பெரிய காரியங்களை எல்லாம் சாதாரணமாக செய்து விட்டு சாதாரணமான காரியத்தில் பின் தங்கி விட கூடாதே என்ற பதற்றத்தில் மட்டுமே இதை சொல்கிறேன். உனது அடுத்த கதையில் எழுத்துப்பிழை உள்ளதா என்று பூதக்கண்ணாடி வைத்து பார்ப்பேன். அதிகம் தவறு இருக்காது என்றே நம்புகிறேன். (கோபப்படாதே மா)

நல்ல ஒரு கதையை எழுதி முடித்தாகி விட்டது. பலரும் பல விதமாக பாராட்டி புகழ்ந்து கருத்துகளை பகிர்ந்து கொள்வார்கள். சந்தோஷமான ஒன்று தான். ஆனால், இனி தான் பொறுப்பும் அதிகரிக்கும். எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் முன்பை விட அழுத்தமாக வைத்தால் மட்டுமே தடம் பதிக்க முடியும். நீ யாருடனும் போட்டியிட்டு வெல்ல வேண்டியதில்லை. உனக்கு நீயே போட்டியாளர் என்பதை மட்டும் எண்ணதில் கொள். உனது ஒவ்வொரு படைப்பையும் அடுத்த படைப்பால் வெற்றிக்கொள்.

மேலும் மேலும் உனது திறமைகள் மெருகேறி எழுத்தாளர்கள் உலகில் உனக்கென தனியிடம் பெற்று உன் வாழ்வு மேன்மையுற வாழ்த்துக்கள், எழுத்தாளர் யஞ்ஞா.

This post was modified 5 days ago by Subha_Durainayagam
ReplyQuote
Posted : 30/11/2019 11:20 pm
Divya Ramalingam
(@divya-ramalingam)
Reputable Member

Epi 4,5,6 nice. 

Thuji character was so cute. சாத்வதன் கதாபாத்திரமும்  அருமை. துஜி உயிருடன் இருக்கிறாளா?அவளுக்கு என்ன  ஆனது என்ற கேள்விகளுடன் நகர்கிறது கதை. 

ReplyQuote
Posted : 02/12/2019 2:24 pm
Divya Ramalingam
(@divya-ramalingam)
Reputable Member

எபி 7,8,9 நைஸ். 

சாத்வதன் துஜி இருவருக்குமான உறவு அருமை. அவர்கள் முதல் சந்திப்பும் அவர்கள் நட்பான விதமும் நன்று .

சாத்வதனும் அரணும் சகோரதரர்கள் என்பது நைஸ் ட்விஸ்ட் .

ஆஹிரி  உயிருக்கு ஆபத்து,  அவளை காப்பாற்றவே அரண் அவளை கடத்தியிருக்கிறான் என்றும்,அவளுக்கு பழைய விஷயங்கள் சிலது நினைவில் இல்லை என்றும் தெரிகிறது. அவளுக்கு யாரால் ஆபத்து?  அவளின் இந்த நிலைக்கு யார் காரணம்,துஜி என்ன ஆனாள் போன்ற கேள்விகளோடு பரபரப்பாக நகர்கிறது கதை. 

This post was modified 3 days ago by Divya Ramalingam
ReplyQuote
Posted : 02/12/2019 3:07 pm
Divya Ramalingam
(@divya-ramalingam)
Reputable Member

Epi 10,11,12 nice sis. 

ஆஹரியே தன் முயற்சியால் குற்றவாளியை கண்டுபிடித்ததும், அவள் நினைவுகளை மீட்டதும், அவளுக்கு துணையாய் அரணும் (நவனும்), வதனும்  உதவியது நன்று. 

எல்லா முடிச்சிற்க்கும் தெளிவு கடைசி எபியில் கிடைத்தது. நன்று. 

 

ReplyQuote
Posted : 02/12/2019 8:03 pm
Page 6 / 6
Share:
Advertisements