அதில் நாயகன் பேர் எழுது 27

வீட்டிற்கு வரவும் வெகு நேரம் விவன் மடியில் தலைவைத்து சுருண்டு கிடந்தாள் ரியா. இவளும் எதுவும் பேசவில்லை, அவனும் எதுவும் கேட்கவில்லை. இவள் தலை மீதிருந்த அவன் கையே ஏதோ கோட்டையும் அரணுமாய் ஒரு பாதுகாப்பு உணர்வை இவளுக்குள் உண்டு செய்ய, அசையக் கூட இல்லை இவள்.

எவ்வளவு நேரம் சென்றதோ, ஒரு கட்டத்தில் மெல்ல தலை நிமிர்ந்து அவனைப் பார்த்தவள், “என் மேல கோபமே இல்லையாப்பா?” என முகமும் குரலும் மன்னிப்பு யாசகத்தில் பொங்கி வழிய கேட்டாள்.

அவளுக்கும் நன்றாகவே தெரியும் அவனுக்கு துளியும் அவள் மீது கோபமில்லை என. ஆனால் அது எப்படி கோபமில்லாமல் இருக்கிறான் எனதான் புரியவில்லை.

பதிலேதும் சொல்லாமல் குனிந்து இவள் பக்கவாட்டு நெற்றியில் இதழ் ஒற்றியவனிடம் மீண்டும் மௌனம். இவள் கண்ணிலிருந்த கேள்வியை இவளும் நீக்குவதாய் இல்லை.

“எதுக்கு கோபப்படனும்?” என அதற்கு ஒரு விதமாய் பதில் கொடுத்தவன்,

“நீ செய்ததை சரின்னு சொல்ல மாட்டேன், ஒருத்தரா விஷயத்தை எதிர்கொள்றதவிட எப்பவுமே ரெண்டு பேரா செய்றது மேல். மேரேஜ் லைஃபோட அடிப்படையே அதானே!

ஆனா குழந்தை எப்படி வந்துச்சுன்னு தெரியாம நீ ஃபர்ஸ்ட் நைட் அப்ப எப்படி அழுத! அப்ப கூட எனக்கு எல்லாம் தெரிஞ்சும் அதை சொல்லாமதானே நின்னேன். அதாவே உனக்கு ஞாபகம் வர்றதுதான் நல்லதுன்னு யோசிக்கறப்ப விஷயத்த மறச்சுட்டேன்தானே. அது போல எனக்கும் குழந்தைக்கும் இது நல்லதுன்னு உனக்கு தோனி இருக்கும்” இவளை புரிந்தே பேசினான் அவன். அவனுக்காக இவள் என்ன தொலைவு போவாள் என புரியும் போது அவனும்தான் என்ன செய்வான்?

“அதுவும் இதுவும் ஒன்னா? அது மெடிக்கல் அப்ரோச்” ரியாவுக்கு அவன் சொல்வதை ஏற்க முடியவில்லை. அவன்கிட்ட முதல்லயே சொல்லி இருக்க வேண்டும் என இவளுக்கு இப்போது ரொம்பவும் தோன்றுகிறது.

“இது உன் இளகின மனசோட அப்ரோச்” அவன் அவளை அவளிடமேகூட விட்டுக் கொடுக்க தயாராயில்லை.

“அப்படின்னா நிதான மனநிலை இல்லாதவங்களால இப்படித்தான் யோசிக்க முடியும்னு நினச்சுட்டீங்க என்னப்பா?” அதையும் இப்படித்தான் பார்த்தாள் மனையாள்.

இப்போது இவளை முகம் சுண்ட பார்த்தான் அவன்.

மெல்ல எழுந்து அவன் மார்பில் உரிமையாய் சாய்ந்து கொண்டாள் அவள்.

“என்ன சொல்லுங்க ஜெரோம், இந்த ஆதவனார் தாத்தாவை நான் கனவில்தான் முதல்ல பார்த்தேன், அதோட அந்த கனவு நிஜம், அப்படின்னா மானகவசர் கனவும் நிஜம்தானே, முதல்ல பேபி விஷயத்தில் மறதி அடுத்து அதா ஞாபகம் வந்துட்டு, இப்ப இந்த வினோதமான கனவுகள், இதோட சில எமோஷனல் டிஸ்டர்பன்ஸ், இதல்லாம் ஒன்னும் நார்மல் விஷயம் இல்லையே, ஏதோ சம்திங் இருக்கு.

நான் நீங்க சொல்ற தெபோரா மேமை நேர்ல பார்க்கட்டுமாப்பா? என்னால ப்ரதீபன்கிட்ட எப்படியும் ஒரு லிமிட்டோதான் பேச முடியும். எப்படி ஒரு மேல் டாக்டர இதுக்கு செலக்ட் செய்தேன்னே தெரியலை. பட் லேடி டாக்டர் வேண்டாம்னு அப்ப அப்படி ஒரு ஃபீல் இருந்துது”

விவன் முகத்தில் இப்போது ஆறுதல் புன்னகை. அவனாக அவளை திருமதி. தெபோராவிடம் செல்ல சொல்ல அவனுக்கு விருப்பம் இல்லை. ஆனால் இது அவள் மனதுக்கு நன்மை செய்யும் என ஒரு நம்பிக்கை அவனுக்கு. இப்ப அவளாக கேட்கவும் சந்தோஷம்.

“உனக்கு முழு சம்மதம்னா சொல்லு. தெபோரா மேம் இங்க திருநெல்வேலி வர்றாங்களாம். இங்கயே அப்பாய்ன்ட்மென்ட் கேட்கலாம்” அவனின் கேள்விக்கு சம்மதமாக மண்டையை உருட்டினாள் அவனவள்.

டுத்த வாரம் ஒரு நாள், அந்த தெபோரா அம்மையார் முன் அமர்ந்திருந்தனர் இருவரும். தினமும் சில மணி நேர பேச்சு வார்த்தை, சில தினங்களாய் இது தொடர, முடிவில் அன்று ஃபைனல் ரிப்போர்ட் என வர சொல்லி இருந்தார் அவர்.

அது அவரது மகளின் வீடு போலும். சென்னை வாசியான அவர் பேரப்பிள்ளைகளுக்கு விடுமுறை என வந்திருந்தார். இன்று குட்டீஸ் ஸ்கூலில் ஓபன் டேயாம், வீட்டிலிருந்த எல்லோரும் அதற்கு சென்றிருக்க, ரியாவை வீட்டிற்கே வர சொல்லி இருந்தார் அவர்.

விவனை வரவேற்பறையில் காத்திருக்க சொல்லிவிட்டு, அந்த தெபோராவை சந்திக்க அருகிலிருந்த அறைக்கு போன ரியாவை சில மணி நேரங்களாய் ஆளைக் காணோம். பொழுது போவதற்காக ஒரு பி.எச்.டி தீசிஸ் அளவிற்கு பராக்கிரமரையும் காகதீய வரலாறையும் பற்றி இவன் ப்ரௌஸ் செய்து முடித்த போது கதவை திறந்து கொண்டு வெளியில் வந்தாள் இவனது மனையாள்.

எப்போதிருந்தென தெரியாது, ஆனால் எப்போது அவள் முகத்தைப் பார்க்கவும் இவனுக்குள் துள்ளலாய் ஒரு மலர்ச்சிப் பூக்கும். அதுவும் மேரேஜுக்கு பிறகு இத்தனை மணி நேரம் தொடர்ந்து அவன் அவளைப் பார்க்காதிருந்தது இதுவே முதல் முறை, ஆக அந்த மலர்ச்சி இப்போது ஆயிரம் வாட்சில் இவனில் அழகாய் பூக்க,

இவனைவிடவும் இன்னுமாய் பூரிப்பும் உற்சாகமுமாய் வெளி வந்த அவளோ, இவன் எழும்பி நிற்கும் முன் இவனிடம் வந்திருந்தவள், ஒரு கையால் இவனை பிடிக்க முயன்றபடி எம்பி அவள் இதழுக்கு எட்டிய இடத்தில் இவன் மீது தடம் பதித்தாள். “ஹாய் மை செல்ல ஜெர்ரி பையா!” என்றபடி.

“ஹேய், அடுத்தவங்க வீட்ல” என இவன் ஏதோ சொல்ல வர,

அடுத்த பக்கம்

Advertisements