அதில் நாயகன் பேர் எழுது 23

ரியாவுக்கு அந்த பாயும் நீர் பரப்பும், அதன் சலசலப்பும், காற்றோட்டமும், இயற்கையும், இவளோடு இவளவன் மட்டும் என்ற நிலையும், ஏதோ தனி தீவில் அவனோடு குடி போய் விட்டது போன்று ஒரு விடுதலை உணர்வை உண்டு செய்ய,

இருந்த ரம்மியத்தில், இதுவரை எங்கோ எதற்கோ பயந்து அடைபட்டு கிடந்த கடந்த நாட்களின் கட்டு காயங்கள் சட்டென மறைந்து போக,

வந்த ஆபத்தும் வருத்தங்களும் அவளவனை அவளுக்கே அவளுக்காய் விட்டுகொடுத்துவிட்டு விலகிக் கொண்டது போல ஒரு மாயை பிறக்க,

அதைத்தான் அவள் அத்தனையாய் இதழ்களால் அவன் மீது இறக்கினாள்.

அவனும் மறுப்போ பதில் செயலோ இல்லாமல் அவளை அவளாக இருக்க அனுமதிக்க, சின்னவள் செயலை மட்டுமாக சுகிக்க,

செலவழிந்து கொண்டிருந்த இரண்டாம் நிமிடம், அவன் தாடை கழுத்து என இவள் களம் கண்டு கொண்டிருந்த நேரம்,

எங்கோ ஞாபகம் வருகிறது இவளது சிறு வயது நிகழ்வொன்று. இவள் அம்மா அப்பா தவறிய பிறகு இவள் பூர்விக்கா வீட்டிற்கு குடி போன சில மாதங்களில் நடந்திருக்குமாயிருக்கும்.

ஆறு வயசா இருக்கும் இவளுக்கு. பூர்விக்கா, ஆனந்தப்பா, அதுக்கு முன்ன இவளோட அம்மா, அப்பா எல்லோருமே இவ படம் வரையுறது ரொம்ப நல்லா இருக்குதுன்னு எப்பவும் சொல்வாங்க. அதில் அன்னைக்கு பூர்விக்கா ரெக்கார்ட் நோட்ல எதையோ வரைய ட்ரை பண்ணிட்டு வர மாட்டேங்குதுன்னு ஃபீல் பண்ணிட்டு இருந்தா.

இப்ப யோசிக்கிறப்ப ரெக்கார்ட் நோட்டுனா அது எவ்வளவு முக்கியம்னு தெரியுது. அந்த வயதில் அக்காவுக்கு ஹெல்ப் பண்ணனுமேன்னு, இவளுக்குத்தான் ட்ராயிங் நல்லா வருதுன்னு எல்லோரும் சொல்றாங்களே, அந்த நோட்டை எடுத்து க்ரேயான் வச்சு வரஞ்சு வச்சுட்டா.

வரஞ்சு முடிக்கிறப்பதான் அக்கா வந்து பார்த்தாளா, அவ இருந்த ஷாக், டென்ஷன்ல, ஒரு அடி இவளுக்கு. அடுத்து அவ ஒரே அழுகை, அவளும் அப்ப ஸ்கூல் ஸ்டூடன்ட்தானே. +2 ரெக்கார்ட் வொர்க்ல கிறுக்கி வச்சா அவ நிலைமையும்தான் என்னவாகும்னு இப்ப தெரியுது.

ஆனா அன்னைக்கு அவ அடிப்பான்னே இவ எதிர்பார்க்கல. அடுத்து அவ அழ வேற செய்ய, ஆனந்தப்பா வர, அவங்க ரியா குழந்தைதான, தெரியாம செய்துட்டானு சொன்னாலும் அடுத்து இவளைப் பார்க்காம அவங்களும் அந்த நோட்டையே குடைய,

ஒரு வகையில் இவள் உள்ளுக்குள் மிரண்டு போனாள். அதுக்கு முன்னால யாராவது திட்டினாலே அம்மாட்ட ஓடிடுவா. இப்ப?

புதினம் 2020 – The Contest ரூ50,000 வரை பரிசுகள்!! நாவலாசிரியர்களும் வாசகர்களும் கலந்து கொள்ள வாய்ப்பு!

ஆனா இந்த நிகழ்ச்சி அடுத்து அவளுக்கு எப்ப மறந்துச்சுனு தெரியல. இப்பதான் ஞாபகம் வருது.

அதோட இன்னொன்னும் கூட ஞாபகம் வருது. அப்ப இவ செவென்த் படிச்சுட்டு இருந்திருப்பாளா இருக்கும். அன்னைக்கு ஸ்கூல்ல ஆண்டுவிழா ரிகர்சல். வீட்டுக்கு வரவே ஆறு மணி கிட்ட ஆகிட்டு. மதியம் லன்ச் சாப்டதோட சரி, முழுக்க ரிகர்சல் வேறயா, செம பசி.

நேர கிட்சனுக்கு போனா, அங்க ஒரு தட்டில் ரெண்டு போளி. சாயந்தரம் பொதுவா பூர்விக்கா காலேஜ்ல இருந்து வர்றப்ப எதாவது இப்படித்தான் இவளுக்கு வாங்கிட்டு வருவா. ஆக எடுத்து சாப்பிட ஆரம்பிக்க, அப்பத்தான் அங்கு வந்த அக்கா,

“என்ன ரியா இப்படி செய்துட்ட?” என பல்லை கடித்து கோபத்தை அடக்கி ஆரம்பிக்கவுமே இவளுக்கு உயிர் பாதி போய்விட்டதென்றால், “லீலா அத்தை வந்திருக்காங்க. கொடுக்க இது மட்டும்தான் இருக்கு. எதுவும் கொடுக்கலைனா” என அவள் தொடரும் போதே, வீட்ல எந்த பக்கம் நின்றதோ அந்த லீலா அத்தை,

“ஆமாண்டி அம்மா! இதத்தான் சொல்றது, எதையோ கொண்டு வந்து எங்கயோ வைக்கிறதுன்னு. ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரிய விரட்டிச்சாம். இன்னைக்கு எனக்குனு வச்சத எடுத்து தின்னாச்சு. நாளைக்கு உனக்குனு உங்கப்பன் வச்சுட்டுப்போறத பிடுங்கிட்டு விடப்போறா. பார்த்துகிட்டே இரு, உன்ன இந்த பிச்சக்காரி தெருவுல தான் நிறுத்துவா” என பொரிய,

ரியாவுக்கு தீ மழை!

ஆனா பூர்விக்கா இப்ப இவளுக்காக பேசினா. “அத்த சும்மா இப்படில்லாம் பேசிட்டு இருக்காதீங்க. நீங்க இங்க கெஸ்ட். அவ இந்த வீட்டுப் பொண்ணு. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”

அவ்வளவுதான் அந்த லீலா அத்தை, ‘தை, தை’ என ஆடிவிட்டது ஆடி.

“ஆமா, நீ ஏன் சொல்ல மாட்ட? மக்கு கழுத! எனக்கு பணக்கஷ்டம் கொஞ்சம் உதவி செய்யேன்னு சொன்னா கைல பணம் எதுவும் இல்லைனு சொல்றான் உங்கப்பன். ஆனா இந்த அனாத கழுதய தூக்கி வச்சு கூத்தாடுறான்.

சோறு போட்டு வேலக்காரியா கூட வைக்கல. படிக்க பள்ளிக்கூடம் வேற கேட்குது இவளுக்கு. அதுக்கு மட்டும் உங்கப்பனுக்கு காசு இருக்கு என்ன? இவ அடுத்த வீட்டு பிள்ளையா? இல்ல அவன் பிள்ளையேதானா? உன் அம்மா வேற செத்து ரொம்ப நாளாச்சு. அதான் பக்கத்து வீட்டுகாரிய”

அடுத்த பக்கம்

Advertisements