அதில் நாயகன் பேர் எழுது 21

விவன் அவளை கைப் பிடித்துக் கூட்டிக் கொண்டு வந்த விதமாகட்டும், அவன் இவளை இழுத்து அணைத்த விதமாகட்டும், அடுத்து அவன் கேட்ட, “உரிமை கொடுக்கலைன்னு சொல்லிட்டல்ல” என்ற கேள்வி ஆகட்டும்,

ரியாவின் அறிவுக்கு அவன் கோபத்திலுமிருக்கிறான் என்று புரிவிக்கின்றனதான். நியாயப்படி அவள் பதிலுக்கு படு பயங்கரமாய் கோபப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவளுக்குள் பரவுவது நிம்மதியும் இளைப்பாறுதலுமே அதில். அவனது, ‘வேற எதில் நான் உன்னை மனைவியா நடத்தல?” என்ற கேள்வியில்,

‘ஆமாதானே!’ என ஜால்ரா போடத்தான் தோன்றுதே தவிர இவள் மனம் குழம்ப காரணமான எதுவும் ஞாபகம் கூட வரமாட்டேங்குது.

அதற்குள் அவன், “ஐ லவ் யூ சொன்னாதான் எல்லாமா?” என கேட்ட கேள்வியில் எல்லா எல்லைகளையும் தாண்டிவிட்ட விடுதலைக்குள் இவள்.

அதே நேரம் சற்றே குனிந்து இவளை அணைத்திருந்தவன் கொஞ்சமாய் திரும்பி இதழ் பதிக்க, இலக்கற்ற அது அவள் காது மடலில் எங்கோ களமிறங்க, இவளது முதல் உணர்வு, செபின் கூட கம்பேர் செய்ததால் இவன் ப்ரோவோக் ஆகி இப்படி செய்கிறான் என்பதே!

‘டெலிவரிக்கு அப்பறம்னு இப்பதான சொல்லிட்டு இருந்தான்?’ சுர் என மீண்டும் தன்மானத்தை அது சுட, ஆனால் நொடிக்கும் குறைவான நேரத்தில் இவளுக்கு புரிந்தும் போனது.

ஆயிரம் வார்த்தைகள் தோற்குமிடத்திலும் தன்னவனின் அணைப்பு அவன் எண்ணத்தை ஒரு பெண்ணுக்கு சொல்லிவிடாதாமா என்ன?

இதுவரை அவள் அவனைவிட்டு விலகிவிடக் கூடாதென இறுகி இருந்த அவனது அணைப்பின் மொழி மாறி, கைக்கு கிடைத்துவிட்ட பொக்கிஷத்தை கொண்டாடும், ஆராதிக்கும் ஆறுதலூட்டம் வகை செயலிது. கொஞ்சமே கொஞ்சம் குற்ற உணர்ச்சியும் இதில் கலந்தே இருக்கின்றது.

மெல்ல நிமிர்ந்து நெற்றி சுருக்கி முழு கண்ணையும் திறந்து பரிதாபமாக அவனைப் பார்த்தாள். இப்ப இவன் எதுக்கு ஃபீல் பண்றானாம்?

அவனோ இப்போது இவள் தோளில் முகம் புதைத்திருந்தவன், “தப்பு என் பேர்லயும் இருக்குது ரியூ. உனக்கு அப்பா மாதிரி அப்பா, அக்கா போல அக்கா, ஃபேமிலி போல ஃபேமிலி! இதில் இப்ப நானும் ஹஸ்பண்ட் மாதிரிதானே நடந்துக்கிட்டேன், ஹஸ்பண்டா இல்லயே. அது உனக்கு எவ்வளவு டிஸ்டர்ப் ஆகி இருக்கும்னு நானும் யோசிச்சிருக்கணும்”

முன்பு இதை இவன் சொல்லி இருந்தால் இவள் எப்படி உணர்ந்திருப்பாளோ? ஆனால் கழுத்தில் விழுந்தாலும் அரவணைப்பின் அடையாளமாகவே வந்து சேர்ந்த அவன் அதரங்களின் அடுத்த ஒற்றுதலுக்கு அந்நேரம் கண் மூடிக் கொண்டவளுக்கு மனக் கண்ணில் சட்டென வந்து சேர்கிறது அந்த காட்சிகள்.

பூர்விக்கா காலேஜ் போற வரைக்குமே ஆனந்தப்பாட்ட அப்பப்ப மடியில போய் உட்கார்ந்து பேசுவா, எப்பவுமே அப்பா பக்கத்தில் உட்காந்தாலே அவங்க கழுத்த கட்டிகிட்டுதான் இருப்பா.

ரியாவுக்கு இதெல்லாம் பார்க்கும் போது எப்படியோ தவிப்பாகும். என்னதான் ஆனந்தப்பா இவட்ட க்ளோஸ்னாலும், பாசம்னாலும் இப்படியெல்லாம் இவளால் முடியாதே.

பிறந்ததிலிருந்தே இவள் ஆனந்தப்பாவிடம் வளர்ந்திருந்தால் ஒருவேளை முடிந்திருக்குமாயிருக்கும். இடையில் போய் சேரும் போது? அதுவும் நம் கலாச்சார பிண்ணனியில் வளரும் போது?

பாசத்தில் ஒரு குறை வைக்காத போதும், அப்பாவும் அப்படி வந்து பழகுவதும் கிடையாது. ரொம்ப உணர்ச்சிகரமான நேரத்தில் இவளை கன்னத்தில் செல்லமாக தட்டுவார், அதுதான் எல்லை.

முதலில் ஒவ்வொரு முறையும் அக்காவை அப்படி பார்க்கும் போதெல்லாம் வெகு ஏக்கமாக, தன்னை ரெண்டாம் பட்சமாக உணர்ந்த இவளுக்கு அடுத்து அப்படி நிகழ்வுகள் ஞாபகமே இல்லை. இவளோட ‘லிப்’ தியரி காரணமாய் இருக்கலாம்.

இப்ப அது ஞாபகம் வர, விவனின், ‘அப்பா போல அப்பா, அக்கா போல அக்கா’ என்ற வார்த்தைகளில் வர வேண்டிய கோபமோ மறுப்போ எதுவும் வரவில்லை இவளுக்கு.

‘என்ன பார்த்து இரக்கமா படுற?’ என்ற எகிறலும் எட்டிப் பார்க்கவில்லை. மழலையின் பசி உணரும் அன்னையாய், அவன் இவளை உணர்ந்து பேசிக் கொண்டிருப்பது மட்டுமே புரிகின்றது.

இதற்குள் அவனே அவசர அவசரமாக, “உன் அக்கா அப்பாவெல்லாம் தப்பா சொல்றேன்னு நினச்சுடாத ரியு. பாதியில இன்னொரு வீட்ல போய் சேர்றப்ப சில இடைவெளி இருக்கும்தானே அதை சொல்றேன்மா” என விளக்கம் கொடுக்க,

அவனும் இப்படி அடுத்த வீட்டில் இதையெல்லாம் அனுபவித்திருப்பான் என்ற புரிதலிலும், அவனது வார்த்தைகளை இவள் சரியாகவே எடுத்துக் கொள்கிறாள் என உணர்த்திவிடும் வேகத்திலும்,

அவன் மீது தன் முகம் புதைந்திருந்த இடத்தில் முழு உணர்வுடன் முதல் முத்தம் வைத்தாள், பின் அடுத்ததாய், அடுத்தும் அடுத்ததாய்,

அதோடு அப்படியே அவனுக்குள் சுருண்டும் கொண்டாள். அவனை தன் கைகளால் சூழ்ந்தும் கொண்டாள்.

அடுத்த பக்கம்

Advertisements