அதில் நாயகன் பேர் எழுது 20

ரியாவுக்கு அந்த நொடி இருந்தது பெரும் பயம். விவன் முன்னிலையில் குளிக்க போனவள் எப்போதோ குளித்து முடித்து வெளி வந்திருக்க வேண்டும். ஆனால் அவள் குளிக்கத் தொடங்கிய சில நிமிடங்களிலெல்லாம் மானகவசரின் குரல் எங்கிருந்தோ கேட்க தொடங்கியது.

“ருயம்மா!”

ரியா இப்போது துள்ளிக் குதித்து அவசரமாய் ஓடிப் போய் கையில் கிடைத்த டவலை எடுத்து தன்னை சுற்றிக் கொண்டாள்.

விவன் குரல்தானே அது! இவ குளிக்கிற இடத்துல அவன் என்ன செய்றானாம்?

“ருயம்மா!”

“இ, இங்க பாருங்க வி, விவன், எனக்கு செம கோபம் வ, வரும் இப்படில்லாம் வி, விளையாடினீங்கன்னா”

“தேவி! என்னை தெரியவில்லையா தேவி?” அந்த குரல் சற்று விதமாய் பிசிற தொடங்க,

இவளுக்குள் கிலி பரவ தொடங்குகிறது, ‘விவனுக்கு இந்த கனவு பத்தி தெரியாதுதான? இல்ல தெரியுமா?’

“அங்கு விந்தவனத்தில் நான் ஆண்டாண்டு காலமாய் தன்னந்தனியே ஓய்ந்திருக்கிறேன் தேவி!”

“அடுத்த ரூம்ல இப்ப வரை கூட இருந்தீங்க நீங்க”

‘சே! இந்த விவன் சேட்டைக்கு பயந்தால் வாழ்நாளுக்கும் ஓட்டுவானா இருக்கும்’ தைரியம் போல் ஒரு கெத்து லுக்கோடு பதில் கொடுத்தாள் இவள்.

“விவன் என்பது என் சரீரமும் ஆன்மாவும். ஆனால் எனது ஆவியோ செண்பகபொழில் விந்தவனத்தில் இளைப்பாறுகிறது”

இப்போழுது ரியா வேக வேகமாக கதவைப் பார்த்துப் ஓட்டமும் நடையுமாய் சென்றாள். ‘அத திறந்து வெளிய போயிடணும்!’ அதுதான் இப்போ இவளோட ஒரே நினைவு.

அவள் கதவை நெருங்கும் முன் அதன் தாழ்ப்பாள் அதாக கடகடவென திறந்து திறந்து மூடுகிறது. இவ எதைப் பிடிச்சு திறக்கவாம்? அரண்டு போனாள் பெண்.

“விவன்ன்ன்ன்ன்ன்ன், ப்ளீஸ் என்ன பயங்காட்டாதீங்க விவன், என்ன விளையாட்டு இது!” இவள் கெஞ்சலாக அலற தொடங்கினாள்.

“அங்கு என் தமையன் உறைவிடத்தை புதையலென எண்ணி சிலர் தொல்லைக்குள்ளாக்குகின்றனர்”

இப்பொழுது வேறு ஒரு குரல் காதில் விழுகிறது. தமையன் என்றால்? பேசுவது வரதுங்கரா?

“சில தீய ஆவிகளை ஏவி

உங்களை கட்டுப்படுத்தி

அதன் மூலம்

என் தமையனை,

தன் உறைவிடத்தை திறக்க,

அனுமதிக்க செய்ய வேண்டும் என

ஒரு கூட்டம் சதி செய்கிறது இளவரசியாரே.

அவர்கள் உண்டாக்கியதுதான் இந்த மாயக்குழந்தையும்”

என்னவெல்லாமோ வரதுங்கர் குரல் சொல்லிக் கொண்டு போக, இவள் கடுமையாக மிரண்டு போய் சுவரோடு சுவராக ஒண்டிப்போனாள். திறந்திருந்த ஷவரில் நனைகின்றோம் என்ற ப்ரஞை கூட இல்லை, விவன் இப்படி இவள படுத்தவே மாட்டான்.

“அங்கு வாருங்கள் இளவரசியாரே!

அவர்களால் எம் தமையனோடு ஒரு காலமும் நேரடியாக மோத இயலாது.

ஒரு முறை வந்துவிட்டு வந்து விடுங்கள்.

அதன் பின் உங்களையும் அவர்கள் துன்புறுத்த இயலாது”

இப்பொழுது அந்த தாழ்ப்பாள் நிலையாக நிற்க, இவள் வேக வேகமாகப் போய் அதை திறந்து, அதற்கு அடுத்த கதவையும் திறந்து தனது அறைக்குள் வெறி பிடித்தவள் போல் வரும் போதுதான் விவன் அங்கு வந்து கொண்டிருந்தான்.

வந்தவன் இவளைப் பார்த்து ஓடிவரவும், இவள் அவனோடு போய் அப்பவும், நிச்சயமாக அந்த நொடி அவன் இவளை விலக்கித் தள்ளுவான் என அவள் கற்பனையில் கூட எதிர்பார்த்திருக்கவில்லை.

அடுத்த பக்கம்

Advertisements